RightClick

இனிதாக நிறைவடைந்து கழுகுமலை கிரிவலமும், ஆடி அமாவசை அன்னதானமும்-2018


காலை (31.07.19) சரியாக ஏழு மணி அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின்  சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக 08.00 மணி அளவில்  நமது கழுகாசமூர்த்தியின்   சன்னதியை வந்தடைந்தார். அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது.








பின் கோவிலின் கல்மண்டபம்  பகுதிக்கு வந்த நமது குருநாதர், வந்த அனைத்து மக்களையும் அமர வைத்து,  இந்த கிரிவல நோக்கம் என்ன? மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதனை வந்தவர்களுக்கு கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். நமது கிரிவலம், சன்னதியின்  தெற்கு   வாசலில் இருந்து தொடங்கியது. 






மிளகாய்ப்பழ சித்தர்:




கழுகுமலை மக்களின் அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு அனைவருக்கும் நமது குருநாதர்,  மிளகாய்ப்பழ சித்தர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார்.  தமது கைகளினால் திருநீர் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். பின் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

தர்ப்பணம்:









மிளகாய்ப்பழச்சித்தர் ஜீவசமதியில்  இருந்து தொடர்ந்த கிரிவலம் நேராக மலையின் பின் பகுதியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆம்பல் ஊரணியை அடைந்தது. அங்கு குருநாதர்கள் அவர்கள், தர்பை மூலம் தர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக தங்கள் முன்னோர்களை மனதில்  நினைத்து, தர்ப்பணம் செய்தனர்.


அன்னதானம்:






அன்பர்கள் அனைவரும்  குருவை தொடர்ந்தபடி சரியாக பனிரெண்டு மணி அளவில் சன்னதியின் தெற்கு வாசலை அடைந்தனர். பின் கழுகுமலை  ஊர்மக்கள் அனைவரும், நமது குருநாதரை வந்து சந்தித்து ஆசி பெற்றனர் , பின் அனைவருக்கும், நமது குருநாதர் தமது கைகளால் அன்னதானத்தை நடத்திவைத்தார்.





நன்றி:



இந்த கிரிவலம் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் ஆசியாலும்,கழுகாசமூர்த்தியின் அருளாலும் கிரிவலம் இனிதாக நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து  அன்பர்களுக்கும், அனுமதி அளித்து உறுதுணையாக இருந்த கலுகாசமூர்த்தி ஆலய நிர்வாகத்தினர்,கழுகுமலை காவல்துறை ஆய்வாளர், தூத்துக்குடி மாவட்ட ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கழுகுமலை பொதுமக்களுக்கும் ஆன்மிகஅரசுமற்றும் ஆன்மிகக்கடல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.







ஓம் சிவ சிவ ஓம்!



ஓம் சிவ சிவ ஓம்!!



ஓம் சிவ சிவ ஓம்!!!




கழுகுமலை கிரிவலம் (31.07.2019) : அய்யா சகஸ்ரவடுகர்அவர்களுடன் :

                                          ஓம் சிவ சிவ ஓம் !!!  ஓம் சிவசக்தி ஓம் "




                                                                       

ஆன்மீகக் கடல்  அன்பர்களுக்கு வணக்கம் .  தவிர்க்க முடியாத சில காரணங்களால்   நாம் தொடர்புகொள்ள முடியவில்லை., கடந்த நிகழ்வு தொடர்ந்தே நிறைய இடர்களை கடக்க வேண்டி இருக்கும் என நமது குருநாதர் நம்மிடம் நினைவுபடுத்தியிருந்தார். அவர்களின் வழிகாட்டுதலினால் அதை நாம் வென்றுவிட்டோம்., அதனால் யாரும் கலக்கம் கொள்ள வேண்டாம் . நமது பயணமும் இனி சிறப்பாக நடைபெறுவதற்கான உத்வேமாக நாம் எடுத்துக்கொள்வோம். இதன் தொடக்கமாகவே நமது மகரிஷி ஈஸ்வரப்பட்டார் ஆசியோடு நாம் பயணப்படுவோம்.


கழுகுமலை 



   கழுகுமலையில்  ' மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் ' நினைவாக பதிமூன்றாம்  ஆண்டு  "   கிரிவலம் மற்றும்  அன்னதானம்   நமது குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் " தலைமையில்நடைபெற இருக்கிறது..





    கிரிவலம் சரியாக 31.07.2019 புதன் கிழமை  புனர்பூசம் நட்சத்திரத்தன்று சரியாக காலை 7 am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.





  கிரிவலம் முடிந்த பின்  நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வாழ்வை வளமாக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு  உள்ளது.



மகாரிஷி அய்யா ஈஸ்வரபட்டர் 




ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் அவர்கள் கன்னட பிராமனர்  குலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று,  ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக  தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள்  பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில்  ஜீவ ஒளி  வடிவமாகி  48 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்ஷடானம் அமைந்துள்ளது..
                வாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் " ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ " என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் அவர்கள் " சூட்சுமமாக " நம்மை சீர்படுத்துவார்கள்.


கிரிவலம்


   கழுகாசமூர்த்தியின் சன்னதி




வருகிற ஆடி அமாவாசை (31.07.2019) புதன் கிழமை அன்று நடைபெற இருக்கிறது.


          நாம்  நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ  நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது,  ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு  குருமார்களால்   கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும்  எல்லாவித  பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும்  அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மகரிஷி  ஈஸ்வரபட்டர்  அவர்கள். அவர்தம் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும். வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றும். 


              இந்து சமயம்  மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர், தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை  தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில்  அமாவாசையின் பொழுது  பூமி எண்ணற்ற நற்கதிர்களை ஈர்க்கும்,.அப்போது  நாம் செய்யும்  நமது பித்ரு சாபவிமோச்சன வழிபாடு வெற்றி பெறும் மேலும் நம் மனதில் இருக்கும்  இருள் நீங்கி அருள் என்னும் வெளிச்சம் பெற அமாவாசை தினங்களே மிகவும் சரியான நாள். 

தர்ப்பணம்




பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு  நினைவாக  தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால்   நமது  சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்காக உருவாக்கி  இருக்கிறார்கள். அதை   குருநாதர்  நமக்காக  விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார்.  நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.



                                           பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி  ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே,  ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது  சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணிய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல்  பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும்.   அவர்களை வரவேற்கவே  ஆடி அமாவாசையில் இந்த கிரிவலத்தினை நமது ஆன்மீக வழிகாட்டி குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இறையருளால் நடத்தி வருகின்றார்கள்.





                                           குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர்






கழுகுமலை வரும் வழி




குறிப்பு


1.கிரிவலத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து அன்பர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் கழுகாசமூர்த்தியின்  சன்னதியின் முன்பாக சரியாக 31.07.2019 அன்று காலை 07.00 அளவில் வந்து சேறுமாறு கனிவன்புடன்  கேட்டுக்கொள்கிறோம் .



2.இந்த அன்னதானத்தில் தங்களை இணைத்துகொள்ள நினைக்கும் அனைவரும் தங்களால் இயன்றதை கொடுங்கள் விருப்பம் உள்ளர்வர்கள் மின்னஞ்சலில் (aanmigakkdal@gmail.com) தொடர்புகொள்ளவும். இது நினைவூட்டல் மட்டுமே கட்டாயம் கிடையாது.



3.கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்கள் வருகையை  மின்னஞ்சல்   மூலம் உறுதி படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.





குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மற்றும் ஆன்மிகக்கடல் - ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.



                                     நலம் உண்டாகட்டும்.







ஓம் சிவ சிவ ஓம் !!  ஓம் ஈஸ்வரப்பட்டாய நமஹ   ஓம் சிவசக்தி ஓம் "

அருள்மிகு முத்துமாரியம்மன் பூக்குழி-04.04.19 - 15.04.19 - நன்றி நவிழ்தல்





மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழாஇந்த ஆண்டு  பங்குனி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திரிதியை திதியும்  பரணி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (07.04.19) மாலை 06 மணிக்குத் துவங்குகியது .20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து  பூக்குழி இறங்கினார்கள். இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த எட்டு  வருடங்களாக நமது

                 குருநாதர் சகஸ்ரவடுகர்  அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல், ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக பக்தர்களுக்கு  அன்னதானமும், ஆடை தானமும்  வழங்கப்பட்டது.


உற்சவ ஊர்வலம்: 



முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு உற்சவ ஊர்வலத்துடன் கிராம வலம் வந்தனர்.





ஆடைதானம்: 



நமது குருவின் சொற்பொழிவிற்குப்  பின்., விரதமிருந்து பூவிறங்கும் அனைத்து அடியார்களுக்கு,  ஆடை தானமும்  பிறகு அன்றுமுதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு (04.04.19 - 15.04.19) ஊர் பொதுமக்களுக்கும் அன்னதானனும் கொடுக்கப்பட்டது.


அன்னதானம்:







பூ மிதித்தல்: 




 வலம் வந்ததன் முடிவாக,மாலை 06:00 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினார்கள்.முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி, முத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்.


நன்றி:



இந்த அன்னதானத்தில் நமது குருநாதர்  சகஸ்ரவடுகர்  அய்யாவின் கரங்களோடு தங்களையும் இணைத்துக்கொண்ட நம் தன்னார்வத்தொண்டர்களுக்கு ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக மிக்கநன்றி.  அனைவரும் மன்னிக்கவும் ., சில தவிர்த்தாக்கமுடியாத காரணங்களால் தாமதமான பதிவுக்கு. நன்றி 



ஓம்   சிவசிவ   ஓம்!



ஓம்   சிவசிவ   ஓம்!!



ஓம்   சிவசிவ  ஓம்!!!












ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா - 2019




ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!







ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்













மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது விளம்பி  வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திரிதியை திதியும்  பரணி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (07.04.19) மாலை 06 மணிக்குத் துவங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த எட்டு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓன்பது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு  அன்னதானமும்ஆடை தானமும்  வழங்க இருக்கிறோம். 
















 20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இங்கு  தீ மிதித்து பூ இறங்குவார்கள்.

முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்.முளைப்பாரியும் வளர்த்து  தங்களது பிரார்த்தனைகளுக்காக  அம்மனை   வழிபடுவார்கள்.




தொடக்கம்:













கடந்த 50 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டுவிரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 51  ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்க முத்துமாரியம்மனின் அருளைப் பெற இருக்கிறார்கள் இந்த வைபவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதை நமது குருநாதர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நமது ஆன்மீகக்கடல் குழுமம் சார்பாக வருகின்ற வியாழக்கிழமை (04.04.19)  அன்னதானம் நடக்க இருக்கிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிற அன்பர்கள் நமது வலைதள மின்அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.







ஓம்   சிவசிவ   ஓம்!

ஓம்   சிவசிவ   ஓம்!!

ஓம்   சிவசிவ  ஓம்!!!



நினைத்ததை நிறைவேற்றும் - மந்திர விபூதி




ஓம் ஹம் கணபதியே நமஹ 









திருநீறு (விபூதி) :


நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும் 






மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. 


திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. 

விபூதி தத்துவம்:








எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தைஉணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது 


ஐந்து வகை திருநீறு:





1. இரட்சை 

2. சாரம் 

3. பஸ்மம் 

4. பசிதம் 

5. விபூதி 




இரட்சை:


சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.



சாரம்:


சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.



பஸ்மம்:


சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.



பசிதம்:


பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.



விபூதி:


தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது. 







திருநீறினைத் தயார் செய்யும் முறை:




ஆரோக்கியமான பசு சாணத்தை சுத்தமான இடத்தில் வைத்து அதனுடன் பசும் பால், தயிர், நெய், பன்னீர், கோமியம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கைகளால் பிசைய வேண்டும். 



பின் உருண்டைகளாக திரட்டி ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு உருண்டையிலும் சிறிய பள்ளத்தை உண்டாக்க வேண்டும்.இவ்வுருண்டைகளுக்கு முட்டகம் என்று பெயர். 







பின்னர் வயல்வெளியில் சம்பா நெற்பதரைக் கொட்டி அதனுள் முட்டகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேலும் நெற்பதரை பரப்பி நெருப்பு வைக்க வேண்டும். 

















இவ்விதம் வைக்கப்பட்ட நெருப்பானது மூண்டு கொண்டே இருக்கும். ஒரு வாரம் சென்ற பார்த்தால் முட்டகங்கள் எல்லாம் நன்றாக வெந்து வெண்மைநிற உருண்டைகளாக இருக்கும். 








பின் வெண்மையாகி விடும், முட்டகங்களை பொடி செய்ய வேண்டும். பொடி செய்யப்பட்ட திருநீறினை சல்லடையில் இட்டு சலித்து பின் அதனை வெள்ளைத் துணியில் போட்டு சலித்து எடுக்க வேண்டும்.இதனை பன்னீர் தெளித்து காற்றாட விடவேண்டும். இத்துடன் உலர்ந்த மல்லிகை, பாதிரி, பிச்சி போன்ற மலர்களைப் போட்டு வைக்கவும். 








 மந்திர விபூதி:









"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும். 



மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். 

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.


 






மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். 



இவ்விளவு நன்மை தரும் விபூதியை ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு அதற்குரிய மந்திரத்தை ஜபித்து அதன் சக்திகளை இன்னும் பன்மடங்கு அதிகரித்து தருவது தான் மந்திர விபூதியாகும். இந்த மந்திர விபூதி தான் நம்முடைய குருநாதர் அய்யா சகஸ்கரவடுகர் அவர்களை சந்திக்கும் பொது நமக்கு வழங்கப்படும் மந்திர விபூதியாகும் .இதன் மூலம் நம் குருநாதரை சந்தித்தவர்கள் எல்லாம் வாழ்வில் நல்ல பயனடைந்து வாழ்வில் மூன்னேற்றம் அடைந்துள்ளனர்.








இப்படி சக்திவாய்ந்த மந்திர விபூதி நம்மை சந்தித்தவர்களுக்கு மட்டும் அல்லது அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்றும் பயனடைய வேண்டும் நமது குருநாதரின் விருப்பமாகும். மந்திர விபூதி வேண்டும் என்கிற நம் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் நமது வலைதள மின் அஞ்சலுக்கு உங்கள் நட்சத்திரம், முழுமுகவரி மற்றும் தொலை பேசி எண்ணையும் (aanmigakkadal@gmail.com)மின் அஞ்சல் செய்யுங்கள். முந்துங்கள் முதல் சுற்று 27 நட்சத்திரங்களின் மந்திர விபூதி மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. 









பயன்படுத்தும் முறைகள் :


இந்த மந்திர விபூதியை வீட்டில் தாமிர பாத்திரம் அல்லது தட்டு , காந்தமில்லாத வெள்ளி பாத்திரம் அல்லது தட்டில் வைக்கலாம் . 






வெளிஊறு செல்லப்பவர்கள் பட்டுத்துணியில் எடுத்து வைத்து செல்லாம்.

வெளியில் செல்பவர்கள் தங்கள் காரியம் சித்தியடைய மந்திர விபூதியை நெற்றியில் பூசிவிட்டு பின் பட்டர் தாளில் வைத்து எடுத்து செல்லலாம். 

இந்த மந்திர விபூதியை நீங்களும் உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் , வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது.







கிடைக்கும் பலன்கள்:








தங்களின் நேர்மையான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும் . 



வேலை இல்லாதார்களுக்கு வேலைகிடைக்கும் 



திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும் 



உங்களின் அனைத்து விதமான நோய்களும் குணமாகும் 



காரிய சித்தியாகும் 



தீய சக்திகள் உங்களை நெருங்காது. 








திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். 

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். 

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். 

இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார். 



கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே! 


திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், 

திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. 








ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன. இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும். 




ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம்