RightClick

சொர்ணபைரவய நமஹ - சிறப்பாக நிறைவுற்றது கிரிவலம் -2018

  ஓம் சொர்ணகர்ஷ்ண பைரவாய  நமஹ ! 


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!


ஓம் திரு அண்ணாமலையாரே போற்றி ! 

      
ஓம் தவத்திரு உண்ணாமலை தாயே போற்றி !இரட்டை விநாயகர் சன்னதி : 

அன்பர்கள் நமது அய்யாவின் வருகையினை எதிர் பார்த்து ' இரட்டை விநாயகர் கோவில்' அருகில் காத்துக்கொண்டு இருந்தனர். அய்யாவின் வந்தவுடன்., எல்லோரையும் வணங்கி விட்டு நமக்காக ஏற்பாடு செய்யப்ட்டிருந்த பூஜையை நடத்தி அந்த திருநீரை அனைவருக்கும் வழங்கிவிட்டு நமது கிரிவலம் தொடங்கியது.


விநாயக பெருமான் ஆசி வாங்கி  தந்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களும் ஆசிர்வதித்து விபூதி மற்றும் பிரசாதம் வழங்கி "சொர்ண ஆகர்ஷண கிரிவலத்தினை தலைமை பொறுப்பேற்று வைத்தார். இப்படி இனிதே தொடங்கியது நமது கிரிவல நிகழ்ச்சி. 


"ஓம் சிவசிவ ஓம்" என்னும் பிரணவத்துடன் கூடிய லோக சூட்சும மந்திரம்ம் சத்தத்துடன்  கிரிவலம்  தொடங்கியது. அன்பர்கள் இயற்கையின் தன்மைக்கு ஏற்றார் போல தம்மை மாற்றிக்கொண்டு நமது அய்யாவின் திருவடி தொடர  ஆரம்பித்தனர்.


தேரடி முனீஸ்வரர் அய்யா ஆலயம் : 

திரு அண்ணாமலையில் எங்கும் நமது மஞ்சள் நிற வேஷ்டி - சேலைகள் தெரிய ஆரம்பித்தது. மக்கள் நம் கூட்டதை உற்று நோக்க ஆரம்பித்தனர். ஓம் சிவ சிவா ஓம் முழக்கத்துடன் நாங்கள் ஆலயத்தை அடைந்தவுடன் ., அங்கும் நமக்கு சிறப்பு செய்யப்பட்டு நமக்கு திருநீரு வழங்கி நம் கிரிவலத்தை தொடர வைத்தார் நம் குருநாதர்.


இந்திர லிங்கம் :
இந்திர லிங்கத்தில் அய்யா ஆசி வழங்க. நாங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினோம். எங்களது பயணம் தொடர ஆரம்பித்தது. அக்னி லிங்கம் : 


இங்கு நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களை தீயில் போட்டு எரிக்கும் வண்ணம் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அக்னி லிங்க ஆசி வழங்கினார்கள். சில சூட்சுமங்களை நாம் நமது வலைத்தளத்தில் எழுத இயலாது . இருந்தாலும் அய்யா சொல்லிற்கு இனங்கி  இந்த குறிப்பு சொல்லப்பட்டது. வந்தவர்கள் யாவரும் பாக்கியவான்களே. இதன் அர்த்தம் பின் வரும் காலங்களில் கட்டாயம் புரியும் என்பது அய்யாவின் சொல் .    
 "ஓம் சிவசிவ ஓம் !! .குறிப்பு 

நம் குருநாதர் கடந்து சில மாதங்களாக உடல் நல குறைவினால் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்ததது. அதனாலயே நமது வலைத்தளமும்., உங்களுக்கான சரியான தகவலை தெரிவிக்க இயலவில்லை. இது சில தவறான புரிதல்களை தவிர்பதற்காகவும், சரியான தொடர்பு நமக்குள் இல்லாது போனது உண்மை., மன்னிக்கவும். இருப்பினும் உங்கள் அன்பாலும் மற்றும் இறைவன் அருளாலும் நம் குருநாதர் நமக்காக நலம் பெற்று வந்து ., இந்த கிரிவலம் நடந்தது. அதனாலேயே நமது வற்புறுத்தலின் காரணமாகவே நமது அய்யா அக்னி லிங்கத்திலிருந்து ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டார். எம லிங்கம் :


நம் மனதில் வரும் வீண் மரண பயம் மற்றும் நம் மனதில் இருக்கும் அர்த்தமற்ற எமன் போன்ற தீவினைகளையும் நீக்கி அருள்வார் இந்த லிங்கபகவான்.

நிருதி லிங்கம் :

கிரிவல பாதையில் உள்ள நான்காம் லிங்கம் ஆகும். நற்பேறு-புகழ் மற்றும் நல்ல உடல் நலம் தருவது என்பதால் இவை யாவும் நாம் பெற  வேண்டும்.

 "யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கனியன் பூங்குன்றனார் அவர்களின் கூற்றுப்படி அன்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவரையும் தம்மை போல எண்ணி செல்லும் பொருட்டு  நம் கிரிவலம் நடந்தது. .வீதிகள் தோறும் சிவ முழக்கங்கள், 

"ஓம் சிவசிவ ஓம்" 

"ஓம் சிவசிவ ஓம்"

"ஓம் சிவசிவ ஓம் " 
வருண லிங்கம் :

ஆத்ம தாகம் தீர்க்கும் வண்ணம் வருணனை வரவழைத்து நம்மை ஆட்கொள்ளும் பண்பின் பிரதிபலிப்புதான் இந்த  லிங்கம். இங்கு உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் செல்வ மழைவந்து உங்கள் துயர் மறையும். 
அண்ணாமலையாரின் ஆசிகள் பலவாறு செய்து எம்மை ஆட்கொண்டமைக்கு நன்றி - சிவசிவ சிவசிவா


வாயு லிங்கம் : 

வாயு - காற்று ;  நம்மை சுற்றிலும் நிறைத்த அந்த காற்றின் அரசன் தான் இந்த சிவலிங்கம் ;  நமது உடலில் மேலும் சக்திகளை கிரகித்து வைத்துக்கொள்ள காற்றாகிய சிவனின் சொரூபம்தான் இது.


 'நம்பிக்கையே நல்ல மருந்து' - சகஸ்ரவடுகர்


குபேர லிங்கம் :

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் அல்லது குபேர கிரிவலம் இந்த லிங்கத்திடமே கோரிக்கையாக வைக்கப்பட்டது. இங்கு தான் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நிகழ்ந்தது ஆம் அன்பர்களே. கிரிவலத்திற்கு வந்தவர்கள் நிச்சயம் பேறு பெற்றவர்கள் தாம். 

ஈஸான்ய லிங்கம் : 


அஷ்ட லிங்கங்களுள் எட்டாவது, ஈசன்யத்தில் அமைத்தது - பற்று அற்ற நிலையினை எய்தும் பொருட்டு இந்த சிவனின் வடிவம் .

அம்மணி அம்மாள் ஜீவசமாதி 


நமது அன்பர்களுள் ஒருவர் "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்து அந்த சொர்ணங்களை கொண்டு அண்ணாமலைக்கு வந்தார்கள். மேலும் இந்த பைரவ தளம் சைவ சமய நால்வர்களால் போற்றி பாடப்பட்ட இடம் என்பது குறிப்படத்தக்கது. சகஸ்ரவடுகர் அவர்கள் ., ஆலய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று அங்கு நடக்கவிருந்த நமது குருநாதரின் சிறப்புறை ஈசான லிங்க பெருமானின் அருகில் எதிரே உள்ள அம்மணி அம்மாள் அவர்களின் ஜீவா சமாதியில் நடத்த வேண்டியதாயிற்று.  இங்கு இந்த கிரிவலத்தின் சிறப்பு பற்றியும் நமது அன்பர்களுக்கு நமது விளக்கினார். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார் நம் குருநாதர். இங்கு சித்தர் பெருமாரின் படங்களும், சொர்ண நாணயமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதன் முடிவாக நமது அன்பர்களுக்கு லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.


பூதநாராயணபெருமாள் சன்னதி 

கிரிவலத்தின் இறுதி பலனாக நமது குருவின் வழிநடத்தின் படி நமது கிரிவலம் பூதநாராயணனின் ஆலய தரிசனத்தோடு நமது கிரிவலம் முடிந்தது. 

நன்றி 


 நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூற்று படி குறித்த நாளில் குறித்த நேரத்தில் திரு அண்ணாமலையில் "  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " சொர்ண ஆகர்ஷண கிரிவலம் (05-12-2018) மிக சிறப்பாக நடைபெற்றது. என்ன வழக்கத்துக்கு மாறாக ஈசனின் சோதனை வருண வடிவில் நம்மை சோதித்தது. குருவுடன் செல்கையில் குரு காட்டிய தெய்வம் நம்மை ஏது செய்ய இயலும்.வருகை தந்து விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும், ஒத்துழைப்பு தந்த காவல்துறை நண்பர்கள் மற்றும் அம்மணி அம்மாள் ஜீவசமாதி நிர்வாகத்தினர் அவர்களுக்கும் , திருவண்ணாமலை ஊர் பொதுமக்கள் மற்றும் இதில் சில அன்பர்களின் பொருள் உதவிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி  நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பாகவும், ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு சார்பில் நன்றிகள் !!
"ஓம் சிவசிவ ஓம் !