RightClick

மாணவர்களுக்கு - கல்வி உபகரணங்கள் வழங்குதல்-2018


நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் இந்த  வருடமும் ,20 பள்ளிகளுக்கு அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரண உதவி  செய்து வருகிறார்.கடந்த 32 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு நமது ஆன்மிகக்கடல் அறக்கட்டளை வாயிலாக  நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.







இந்த வருடம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் புடைசூழ 27.08.2018 வெள்ளிக்கிழமை  அன்று  அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பான விழாவின் தொடக்கமாக இப்பள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறார்., நம் குருநாதர் அடையாள அட்டைகள்(ID CARD) மாணவர்களுக்கு அணிவித்து ஆரம்பித்து வைத்தார் நம் குருநாதர். 










குருநாதரின் உரை :






கல்வி என்பதை வள்ளுவரின் குரல் கொண்டு சொல்லவேண்டுமானால் .,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள் : ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

கல்வி நமக்கு  அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பாண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. உடல்,உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை, ஆகிய ஆன்மிக ஆகிய சிந்தனைகளை வளர்ப்பதில் கல்வி முதன்மையாக உள்ளது. ஒரு தனிமனிதனின் அறிவு, படைப்பாற்றல், மனவெழுச்சி,பேச்சுவார்த்தை ஆகிய குணங்களை வழிகாட்டியாக இருந்து வளர்ப்பது தேவையாகிறது.பள்ளி வழிகாட்டியாக இருப்பதால்தான் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், குறிக்கோள்களை அமைக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவிகளைப் புரிகிறது. வாழ்கையில் குறிக்கோள்களை அடைய, அவர்களின் சக்தியையும், செயலையும் வழிப்படுத்தும் மனிதனின் அறிவு, படைப்பாற்றல் பிரதிபலிப்பு சக்தி போன்றவைகளைப் பெற கல்வி வழிகாட்டியாக உள்ளது. எனவே., மாணவ கண்மணிகளே நல்ல சிந்தனைகளும், படைப்பாற்றலும் உங்களை  மேம்படுத்த இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி - சகஸ்ரவடுகர்.

                                        "ஓம் சிவ சிவ ஓம்"    " ஓம் சிவ சக்தி ஓம்"



கழுகுமலை கிரிவலம் (11.08.2018) : அய்யா சகஸ்ரவடுகர்அவர்களுடன் :

ஓம் சிவ சிவ ஓம் !!!  ஓம் சிவசக்தி ஓம் "


ஓம் அண்ணாமலையாரே போற்றி !!

ஓம் உண்ணாமலை தாயே போற்றி போற்றி
!!



ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் .  ஒரு சிறிய இடைவெளிதான் நமக்கு  அதனால் யாரும் கலக்கம் கொள்ள வேண்டாம் . நமது பயணமும் இனி சிறப்பாக நடைபெறுவதற்கான உத்வேமாக நாம் எடுத்துக்கொள்வோம். இதன் தொடக்கமாகவே நமது மகரிஷி ஈஸ்வரப்பட்டார் ஆசியோடு நாம் பயணப்படுவோம்.



    கழுகுமலையில்  ' மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் ' நினைவாக பனிரெண்டாம் ஆண்டு  "   கிரிவலம் மற்றும்  அன்னதானம்   நமது குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் " தலைமையில்நடைபெறுகிறது.


    கிரிவலம் சரியாக 11.8.2018 சனிக்கிழமை அன்று சரியாக காலை 8am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.


    கிரிவலம் முடிந்த பின்  நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வாழ்வை வளமாக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு  உள்ளது.




மகாரிஷி அய்யா ஈஸ்வரபட்டர் 

ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் அவர்கள் கன்னட பிராமனர்  குலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று,  ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக  தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள்  பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில்  ஜீவ ஒளி  வடிவமாகி  48 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்ஷடானம் அமைந்துள்ளது.


                       வாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் " ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ " என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் அவர்கள் " சூட்சுமமாக " நம்மை சீர்படுத்துவார்கள்.

கிரிவலம்

          கழுகாசமூர்த்தியின் சன்னதி




வருகிற ஆடி அமாவாசை (11.08.2018) சனிக்கிழமை  அன்று நடைபெற இருக்கிறது.


  நாம்  நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ  நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது,  ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு  குருமார்களால்   கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும்  எல்லாவித  பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும்  அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மகரிஷி  ஈஸ்வரபட்டர்  அவர்கள். அவர்தம் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும். வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றும். 


இந்து சமயம்  மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர், தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை  தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில்  அமாவாசையின் பொழுது  பூமி எண்ணற்ற நற்கதிர்களை ஈர்க்கும்,.அப்போது  நாம் செய்யும்  நமது பித்ரு சாபவிமோச்சன வழிபாடு வெற்றி பெறும் மேலும் நம் மனதில் இருக்கும்  இருள் நீங்கி அருள் என்னும் வெளிச்சம் பெற அமாவாசை தினங்களே மிகவும் சரியான நாள். 

தர்ப்பணம்


பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு  நினைவாக  தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால்   நமது  சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்காக உருவாக்கி  இருக்கிறார்கள். அதை   குருநாதர்  நமக்காக  விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார்.  நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.

                                                    பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி  ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே,  ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது  சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணிய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல்  பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும்.   அவர்களை வரவேற்கவே  ஆடி அமாவாசையில் இந்த கிரிவலத்தினை நமது ஆன்மீக வழிகாட்டி குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இறையருளால் நடத்தி வருகின்றார்கள்.

          குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர்



கழுகுமலை வரும் வழி

 குறிப்பு


1.கிரிவலத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து அன்பர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் கழுகாசமூர்த்தியின்  சன்னதியின் முன்பாக சரியாக 11.08.2016 அன்று காலை 07.30 அளவில் வந்து சேறுமாறு கனிவன்புடன்  கேட்டுக்கொள்கிறோம் .

2.இந்த அன்னதானத்தில் தங்களை இணைத்துகொள்ள நினைக்கும் அனைவரும் தங்களால் இயன்றதை கொடுங்கள் விருப்பம் உள்ளர்வர்கள் மின்னஞ்சலில் (aanmigakkdal@gmail.com) தொடர்புகொள்ளவும். இது நினைவூட்டல் மட்டுமே கட்டாயம் கிடையாது.

3.கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்கள் வருகையை  மின்னஞ்சல்   மூலம் உறுதி படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மற்றும் ஆன்மிகக்கடல் - ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.

                                     நலம் உண்டாகட்டும்.



ஓம் சிவ சிவ ஓம் !!!                            ஓம் ஈஸ்வரப்பட்டாய நமஹ                              ஓம் சிவசக்தி ஓம் "