RightClick

உதிரம் சிந்தியேனும் உத்திரம் அதை கைவிடேல் - சகஸ்ரவடுகர்

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!


பங்குனி உத்தரம்:
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.
பங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அன்று பிறப்பவர்களும், இறப்பவர்களும் தெய்வம்சம் கொண்டவர்கள்.
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
பங்குனி மாதத்தின் சிறப்பு:முருகப்பெருமான்:
பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் எலியாக மாறி கிரவுஞ்சன் மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.  

கல்யாணசுந்தர விரதம்:சிவனுக்கும் , பார்வதிக்கும் சோமசுந்தரர்  என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.


இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து,மணவறையில்,அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள்  ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி 
வைப்பார்கள்.பங்குனிஉத்தரக்கல்யாணத்திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
பங்குனி உத்தர வழிபாடு முறை:
உத்திரம் என்றதும் நம் நினைவுக்கு வருவது முருகன் தான், ஆனால் அதையெல்லாம் விட குல தெய்வ வழிபாடு செய்து மிக சிறப்பானது. குல தெய்வம் தெரியாத ஆன்மிக அன்பர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.வரும் பங்குனி உத்திரத்தில் , வெள்ளிக்கிழமை அதிகாலையில் 7.00 மணி முதல் 7.30  மணிக்குள் உங்கள் குல தெய்வம் அல்லது உங்களின் இஷ்ட தெய்வத்தை அர்ச்சனை செய்து வணக்க வேண்டும். பின்பு இறைவனை நினைத்து, உங்களின் நியமான கோரிக்கைகள் மனதில் நினைத்து தியானம் செய்து அவரவர் வீட்டுக்கு வர வேண்டும்.
இவ்வாறு வழிபாடு செய்தால் நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை நாம் குலதெய்வ வழிபாடு செய்த பலனையும், குலதெய்வத்தின் அருளை உடனடியாகப் பெறலாம். பித்ருகடன் நிவர்த்தி, மாணவர்கள் நல்ல தேர்ச்சி, பதவி உயர்வு , நீண்ட கால குடும்ப பிரச்சினகளுக்கும் தீர்வு ஏற்படும். நாம் வாழ்வில் செல்வ வளம் பெருகும், நமக்கு இருக்கும் தடை விலகும் , நமக்கு வரவிருக்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். மேலும் நமக்கு கிடைக்கும் நியானமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


ஓம்   சிவசிவ   ஓம்!

ஓம்   சிவசிவ   ஓம்!!

ஓம்   சிவசிவ  ஓம்!!!