ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ !
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
மூன்று
நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதியும் உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (08.04.18) மாலை 06 மணிக்குத் துவங்குகிறது.
இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர்
அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது
ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்க
இருக்கிறோம்.
20 கிராமங்களைச்
சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள்
விரதம் இருந்து இங்கு தீ மிதித்து பூ இறங்குவார்கள்.
முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ
ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்., முளைப்பாரியும் வளர்த்து தங்களது பிரார்த்தனைகளுக்காக அம்மனை வழிபடுவார்கள்.
தொடக்கம்:
கடந்த 49 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 50 ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்க முத்துமாரியம்மனின் அருளைப் பெற இருக்கிறார்கள் இந்த வைபவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதை நமது குருநாதர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நமது ஆன்மீகக்கடல் குழுமம் சார்பாக பத்து நாட்களும் (30.04.18 -07.04.18) அன்னதானம் நடக்க இருக்கிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிற அன்பர்கள் நமது வலைதள மின்அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.
ஓம் சிவசிவ ஓம்!
ஓம் சிவசிவ ஓம்!!
ஓம் சிவசிவ ஓம்!!!