தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
ஓம் ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரணம் .
ஸ்ரீ சிவயோக சச்சிதானந்த ஸ்ரீ ஸ்ரீ
மாதாவானந்த ஸ்வாமிகள், அய்யா
அவர்களை பற்றி நம் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். இன்றும் அய்யா ஸ்ரீ
மாதாவானந்தர் அவர்களின் ஆசியை பெரும் பொருட்டு இந்த பதிப்பு நம் வலைத்தளத்தில்
வலம் வருகிறது.
அய்யா அவர்கள் வாசி யோகத்தில் வித்துவான் என்றால் அது மிகையல்ல. பொதுவாகவே சித்த பெருமக்கள் தாங்கள்
எவ்வளவு பெரிய அல்லது அரிய சக்திகளை வைத்திருந்தாலும் மிக எளிமையாகவும் ஏதும்
அறியாத குழந்தைகளைப்போலவே இருப்பார்கள்.
தன்னை நாடி வருபவன் யார் ? எதற்காக வந்திருக்கிறான் ? அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ?
அது எந்த பிறவியில் தொடங்கியது, எப்பொழுது முழுமை பெறும் என்பது வரை
அவர்கள் நன்கு அறிவார்கள், அறிந்திருந்தும்
விதியின் பொருட்டு அதை யாரிடமும் உரைக்காமல் சிவார்ப்பணம் என்ற கொள்கைப்படி
வாழ்வினை மேற்கொண்டவர்கள் மேலும் நமக்கு இறை வழிகாட்டிகளும் அவர்களே.
சித்தர்கள் ரூபத்தில் அதாவது சரீரத்தினால் வேறுபட்டாலும்
அவர்கள் ஒருவரே அன்றி வேறில்லை.
அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்
சரீரத்தோடு இருந்தபோதிலும்,
தன் ஜீவனை அடக்கி ஜீவசமாதியாக சிவத்தில்
ஐக்கியமான பின்னும் சர்வ வல்லமை பொருந்தியவராக இந்த வளிமண்டலத்தில் உலா
வருகின்றார்.ஆம்
அன்பர்களே தன்னை நாடி வருபர்களின் இன்னல்களை களைந்து சுபிக்ட்ஷம் அளித்துவருகிறார்கள். மேலும் அன்பர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்நின்று நிறைவேறுகிறார் அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்.
அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமி அவர்களின் ஜீவசமாதி நிறைவடைந்து
வரும் தை 29 ம் தேதியில் கும்பாபிஷேகம் மற்றும்
அன்னதானமும் நடைபெறவுள்ளது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா
ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்களின் அருளாசியும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று
கேட்டுக்கொள்கிறோம் .
அய்யா ஸ்ரீ
மாதாவானந்த ஸ்வாமி அவர்களின்
ஜீவசமாதி கட்டிட வேலைக்கு உதவிய அனைத்து ஆன்மிக அன்பர்களுக்கும் , அய்யா சகஸ்கரவடுகர் சார்பாகவும்,
ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வரும் வழி:
ஓம் சிவசிவ ஓம்!
ஓம் சிவசிவ ஓம்!!
ஓம் சிவசிவ ஓம்!!!