RightClick

தைப்பூச ஜோதியும் , திருவருட்பிரகாச வள்ளலாரும்


ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
வள்ளலார்:

 "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன்என்று பாடியவர்,
வள்ளலார் பக்தி நெறி நின்றாலும் உலக வாழ்வில் மக்கள் சிறந்து வாழும் பக்குவநெறியும் கண்டவர்ஏழை பணக்காரன்மேல்சாதி கீழ்சாதிமுறைகளை வன்மையாகக் கண்டித்தவர்.
சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய் எதிர்த்தார்மக்கள் 
வாழப் பயன்படும் நெறியே நன்னெறி எனப் போற்றினார்.
இவர் சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக
சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்வள்ளலாருக்கு 
எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.
இவருக்கு இராமலிங்க அடிகள்திருவருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் 
இராமலிங்க அடிகள் என பல்வேறு சிறப்பு பெயர்களைக் கொண்டவர்.

வாழ்க்கை வரலாறு:

 இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்  இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்பெற்றோர் இராமையாபிள்ளைசின்னம்மையார்இவரோடு சபாபதிபரசுராமன்உண்ணாமுலைசுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்பின்னர் சென்னையில்  ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார்அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

இராமலிங்கருக்குச் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது திருக்காட்சி இளமையிலேயே கிடைத்ததுமக்கட் பிறவியினரையே குருவாகப் பெறும் மானிடர் உலகில்மறைமுதல்வனின் மகனான முருகப்பெருமானையே குருவாய் ஏற்றதால்இராமலிங்கர் செந்தமிழும் வடமொழியும் ஆகிய இருபெரும் மொழிகளையும் ஓதி உணரும் பெரு ஞானம் கைவரப் பெற்றார்

 உலகியல் முறைக்கேற்பக் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரையும்சகோதரர் சபாபதிப் பிள்ளையையும் ஆசான்களாகப் பெற்றார்சபாபதிப் பிள்ளையின் அன்பினும் அவர் மனைவியாரின் அரவணைப்பிலுமே வளர்ந்தார் 

கருவிலே திருவுடையவராக அவர் தோன்றியமையால்இளம்போதிலேயே கவி எழுதும் பேராற்றலைப் பெற்றார்இராமலிங்கர் பல்வேறு ஆற்றல்களின் உறைவிடமாக விளங்கினார்.

 இளமையில் முருகப்பெருமானைக் கடவுளாகவும்திருஞான சம்பந்தரைக் குருவாகவும்திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டார்பின்னர் ஒற்றியூரில் வாழும் இறைவனின் இணையற்ற பக்தராகவும்பின் தில்லையம்பல நாதரின் பக்தராகவும் விளங்கினார்முடிவில் அருட்பெருஞ்சோதி அடியவராகத் திகழ்ந்தார்.
அவர் புலவராககவிஞராகசொற்பொழிவாளராகஉரைநடை எழுத்தாளராகநூலாசிரியராகஉரையாசிரியராகஞானாசிரியராகபோதகாசிரியராகமருத்துவராகஇவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாகஞானியாகசித்தராகக் காட்சி தந்தார்.


சத்திய தரும சாலை - சத்திய ஞான சபை: 

  உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கி வரும் முழுமுதற் பொருள்களான கடவுள்அனைவர் உள்ளங்களிலும் சோதி வடிவாகத் திகழ்கின்றார்அத்தகைய அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையே உலக உயிர்களையெல்லாம் வாழ வைக்கிறதென்றும் கண்டார்.

பொருளை வாரி வழங்கியவர்கள் பொருள் வள்ளல்கள்அருளை வாரி வழங்கியோர் அருள் வள்ளல்கள்அருள் வள்ளல்களில் ஒருவராகி அதேபொழுதுதம் தனிப்பண்பாலும் ஒருவராகிவள்ளல் என்ற தனிப் பெயரையே பெற்றுத் திகழும் வெற்றிபெற்றவர் நம் இராமலிங்கர் 
மரணமில்லாப் பெருவாழ்வு எனச் சாகாக்கலையை உலகிற்கு உணர்த்தியவர் வள்ளலார்அவர் பொன் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார் 
இவ்வுண்மையினை மனத்திற் கொண்டுசாதிமத வேறுபாடின்றிஎல்லா உயிர்களிடத்திலும் இரக்கமுடையவராய் வாழும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை நல்கும் சீவகாருண்ய ஒழுக்கமே உலகில் உயர்ந்தது என அறிந்து தெளிந்தார்.

இதனால் சமரச சன்மார்க்க நெறியைக் கைக்கொண்டார் 
தம் நெறிதழைக்க இறைவன் கருணைதனைப் பெற்றார்பயிர்கள் வாடுவதையே பார்க்கப் பொறுக்காத இராமலிங்கர்பசியால் வாடும் மக்களின் துயர் துடைக்க முன்வந்தார்வடலூரில் சன்மார்க்க சங்கம் - என்னும் மூன்று அருள் நெறி காக்கும் அமைப்புகளை நிறுவினார்அப்பெருமான் தனிக்கொள்கையைதனிக்கொடியைதனிச்சபையைதனிமார்க்கத்தைதனி மந்திரத்தைவழிபாட்டைக் கண்டார்.


சத்திய ஞானசபை:

 தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர்நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார்அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில்  சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும்தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
இங்கு பொற்சபை, சிற்சபை என இரு சபைகள் உள்ளன. மொத்தம் ஏழு கதவுகள் கொண்ட தனித்தனி அறைகள் உள்ளன, அதில் ஜோதி சொருபம்மா வள்ளலார் ஜோதி வடிவமாக கொண்டு ஒவ்வாரு அறைக்கும் ஒரு விளக்கினைவைத்து வழிபாடுகள் நடைபெறுகிறது.
இங்கு தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 மணிவரை முதலாவது அறையை திறக்கப்பட்டு  வள்ளலார் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார், அந்தவேளையில் அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி!! தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி!!! என மந்தரத்தை ஜெபிக்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும்  தைப்பூசத் திருவிழாவில், ஏழு கதவுகள் கொண்ட தனித்தனி அறைகள் திறக்கப்பட்டு வள்ளலார் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார்.தருமசாலை:

 இராமலிங்க அடிகள் 2351867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார்இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறதுவடலூரில் தலைமை இடம் இருந்தாலும்உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

மேலும் இங்கு வள்ளலார் அவர்களால் ஏற்றப்பட்ட ஆணைய அடுப்பு உள்ளது. இது அன்று முதல் இன்று வரையிலும் அணையாமல் உள்ளது. பருப்பு தான உண்டியல் உள்ளது, அன்னதானத்தை அடுத்து இங்கு பருப்பு தானம் அதிகமாக பக்கதர்களால் வழங்கபடுகிறது.

வள்ளலார் நடத்திய அதிசயங்கள்:

 வள்ளலார்தோன்றிய காலம் தொட்டே பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார் 

அப்பெருமகனார் ஓராண்டுப் பருவத்தினராக இருந்தபோதே தில்லையம்பலநாதர் சந்நிதித் திரைச்சீலை தானே தூக்கப்பெற்று தரிசித்தார்.

ஒருமுறை திண்ணையிலிருந்து கீழே விழுந்தபோது இறைவி வந்து காப்பாற்றினார்.

ஒருநாள் பட்டினியோடு படுத்திருந்தபோது அவர் அண்ணியார் வடிவில் இறைவி காப்பாற்றினார்.

இளமையில் அண்ணன் சொற்பொழிவுகளுக்கு ஏடு படிக்கத் தொடங்கினார்ஒரு முறை அவர் நோய்வாய்ப் பட்டமையால் தாமே சொற்பொழிவு செய்யத் தொடங்கி நாடறிந்த பெருமகன் ஆனார் 

தண்ணீரில் விளக்கெரியச் செய்தார்இந்நிகழ்ச்சி நினைவாக சிதம்பரம் நடராச்சர் கோவிலில் தண்ணீரில் விளக்கெரியச் செய்யும் நிகழ்ச்சி இன்றும் நடைபெற்றுவருகிறது.

ஒரே இரவில் 1596 வரிகளை உடைய அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தார்.

தி்ருவருட்பா:

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஆகிய அனைவரும் ஒருமை உள்ளவராகி உலகில் வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடு வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய செந்தமிழ்த் திருப்பாடல்களின் தொகுதியே திருவருட்பா என்னும் கருவூலமாகும் 

அருளாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருட்பாக்களேஆனால் திரு சேர்ந்து அப் பெயருடனேயே விளங்கும் அருட்பாவள்ளல் பெருமான் பாடிய பாடல்களின் தொகுதியே யாகும் 

ஆறு திருமுறைப் பகுதிகள் கொண்டு விளங்குகின்றது. 399 பதிகங்களையும் 5818 பாடல்களையும் கொண்டதுஎல்லாப் பாடல்களும் இறைவனை முன்னிறுத்திப் பாடப்பெற்றவையேஇது பக்திப்பா உலகில் ஒரு புதுமைதமிழ்மொழிக்கு மற்றொரு பெருமை 

ஆண்டவனை அனைவரும் நாள்தோறும் வேண்டிப் போற்றும் நிலையில் உரைநடை வேண்டுகோளாக அமைந்தவைசுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறு விண்ணப்பம்சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம்சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம் என்பனவாகும்.

ஜீவ சமாதி:

வடலூரில் வள்ளலாரின் சீடரான கல்பட்டு அய்யா ஜீவ சாமதியும், கல்பட்டு அய்யாவின் மூன்று சீடர்கள் ஜீவ சாமதியும் சேர்த்து, மொத்தம் இங்கு நான்கு ஜீவ சாமதிகள் அமைத்துள்ளது.மேட்டுக்குப்பம்:சத்திய ஞானசபை இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் மேட்டுக்குப்பம் அமைந்துள்ளது.இறைநெறியை ஆன்மநேயப் பெருநெறி ஆக்கிய வள்ளல் பெருமான் தைப்பூச நன்னாளில் மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகை  உள்ள சித்திவளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவினை மூடிக்கொண்டு அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து சோதி வடிவானார்அவர் சித்தி அடைந்த நாள் 30-1-1874 ஆகும்

தைப்பூச ஜோதி தரிசன விழா:

ஆறுமுக நாவலர் ஆன இவர் தைப்பூச நன்னாளில் (31.01.18) அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து 
சோதி வடிவானார்.
ஆண்டுதோறும் வடலுாரில்வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில்தைப்பூச ஜோதி தரிசன விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்இதன் தொடர்ச்சியாகவள்ளலார் சித்தி பெற்றதிருமாளிகையில்திருஅறை தரிசனமும், பின்பு தரும சாலையில் இருந்துவள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை பல்லக்கில் வைத்துமீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.


வழியில்வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி இல்லம்அவர் வணங்கிய பெருமாள்பிள்ளையார் கோவில்கள்தீ சுவை ஓடை பகுதிகளில்பொதுமக்கள் பழத்தட்டுடன் ஆரத்தி எடுத்துவரவேற்பு அளித்தனர்பல்லக்கைமேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில்வள்ளலார் மறைந்த அறை முன் வைத்து,  திருஅறை திறக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து.வள்ளலாரின் அருளைப் பெறுகின்றனர்.


வள்ளலாரின் போதனைகள்: 

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக்கூடாது.
எந்த உயிரையும் கொள்ளக்கூடாது.
சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கூடாது.
இறந்தவர்களை எரிக்கக்கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே, அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.
மதவெறி கூடாது.என வள்ளல் பெருமானின் கொள்கைகள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றது 
வாழ்கையில் ஒருமுறையாவது வடலூர் சென்று வள்ளல் பெருமானின் அருள்திறத்தையும்ஆன்மநேய ஒருமைப்பாட்டின் உயர்வையும்அறிந்து தெளிந்து திருவருட்பாக்களை நாளும் ஓதி நல் வாழ்வு பெறுவோமாக.
அருட்பெரும்ஜோதி!
அருட்பெரும்ஜோதி!!
தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி!!!

ஓம்   சிவசிவ   ஓம்!

ஓம்   சிவசிவ   ஓம்!!

ஓம்   சிவசிவ  ஓம்!!!