RightClick

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் நினைவூட்டல்:













ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!


 

 

 

திருஅண்ணாமலை கிரிவலம் :






நீங்கள் திருஅண்ணாமலை கிரிவலம் செல்வது உங்களைப்பொறுத்தவரையில் சாதாரண சம்பவம்;ஆனால்,உங்களை வரவழைப்பதற்காக உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த தெய்வீக நல்வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளனர்.


நமக்கு ஒரு ஆன்மீககுரு இந்தப்பிறவியில் அமைந்துவிட்டால்,நமது 3000 முந்தைய மனிதப்பிறவிகளாக சிறிதுசிறிதாக புண்ணியம் செய்திருக்கிறோம் என்றே பொருள்.இந்தப்பிறவியிலேயே நமக்கு குரு அமைய வேண்டும் எனில்,வியாழக்கிழமைகளில் கிரிவலம் சென்று கொண்டேஇருக்க வேண்டும். கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நாட்கள் பவுர்ணமி என நம்புகிறோம். அதைவிடவும் அமாவாசையும்,அதைவிடவும் மாத சிவராத்திரியும் மிகச்சிறந்ததாகும்.












முதன்முறையாக திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும்போது சிலருக்கு நடைபயணம் கடுமையாக இருக்கும்;பலருக்கு நடைபயணம் சுலபமாக இருக்கும்.கிரிவலத்தின்போது எக்காரணம் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள்;அந்தப்பாவத்தை எங்கேயும் கொண்டுபோய் கரைக்க முடியாது.


 

 

 சொர்ண ஆகர்ஷண கிரிவலம் :

 

 

 





எந்த வித பக்தியும் இல்லாமல்,சும்மா ஒருமுறை கிரிவலம் சென்றுவிட்டு அண்ணாமலை கோவிலுக்குள் செல்லாமல் நேராக நமது வீட்டுக்குச் சென்றாலே கிரிவலம் சென்றதற்கான புண்ணியம் கிடைத்துவிடுகிறது. அப்படி இருக்க அண்ணாமலையில் சொர்ணமே மழையாக பொழிந்த நாளில் நாம் கிரிவலம் சென்றால் எவ்வளவு சிறப்புடையது. அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் நாம் ஒவ்வாரு ஆண்டும் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் செல்கிறோம்.இந்த வருடம் பத்தாம் ஆண்டாகும்.












 அதுவும் இந்த பத்தாம் ஆண்டு மிகவும் அதிகமான சிறப்புடையது. ஏனென்றால் இந்த முறை வியாழக்கிழமை யில்  கிரிவலம் செல்கிறோம் , அதுவும் நமது குருநாதர் திரு சகஸ்கரவடுகர் அய்யாவுடன் முன்னிலையில் கிரிவலம் செல்கிறோம்.













குருவிற்கு உகந்த நாளன வியாழக்கிழமை யில் குருவுடன் கிரிவலம் செல்லும் பாக்கியம் எவ்வளவு புண்ணியம் தெரியுமா? ஆம் யாரெல்லம் முந்தைய சொர்ண ஆகர்ஷண கிரிவலம் தொடர்ச்சியாக வரமுடியாமலும், முதல் முறை இந்த வருடம் வரும் வியாழக்கிழமையில் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் வருவர்களுக்கும் , கடந்த ஒன்பது வருடம் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் சென்று வந்த புண்ணிய பலன்கள் அனைத்தும் மொத்தமாக இந்த கிரிவலத்தில் உங்களுக்கு கிடைக்கும்.மேலும் சொர்ண ஆகர்ஷண கிரிவலம் பற்றியும் ,அதன் பலன்களைப் பற்றியும், முந்தைய கட்டுரையில் நாம் விரிவாகப் பார்த்தோம்.


 

 

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் நினைவூட்டல்:














ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் !!! பொருள் : திருஅண்ணாமலை கிரிவலம் தொடர்பான நினைவூட்டும் பொருட்டு சொர்ணாகர்ஷண கிரிவலம் : (சொர்ணம் - செல்வம் ) = இறைவழியில் அவன் அருளால் நேர்மையான முறையில் செல்வம் ஈட்டுவது என்பது விளக்கம். கிரிவலம் ((14.12.17)வியாழக்கிழமை) சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.30am அளவில் ஒன்று திரள்வோம். அன்பர்களே, நமது அய்யா அவர்கள் கூறியபடி குறித்த நேரத்தில் கிரிவல வைபவம் நடைபெறும் - இதில் எந்த மாற்றமும் இல்லை . ஆன்மீக வாசக,வாசகிகள் அனைவரும் வருக அய்யன் அருள் பெருக







ஓம்   சிவசிவ   ஓம்!

ஓம்   சிவசிவ   ஓம்!!

ஓம்   சிவசிவ  ஓம்!!!