ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ !
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
“செய்யும் தொழிலேத் தெய்வம்” என்ற பழமொழி நம்மில் பலருக்கும் தெரியும், அப்படி
இருக்க நாம் வணங்கும் தெய்வங்கள் கூட அவர்களுடைய தொழிலைச் சிறப்பாக செய்கிறார்கள் . பிரம்மா
படைத்தல் தொழிலும், விஷ்ணு
அழித்தல் தொழிலும், சிவன்
காத்தல் தொழிலையும் செய்கிறார்கள்.
அதில்
சிவ
பெருமானே ஆதியும் அந்தமும் இல்லாத
முதல்
கடவுள்
ஆவார்.
பல
சித்தர்களும் , ரிஷிகளும் முனிவர்களும், தேவர்களும், நமசிவாய என்ற
நாமத்தால் சிவ
பெருமானேப் போற்றி
வழிபட்டனர். நமசிவாய எனும்
மந்திரம் ஐந்து
தத்துவத்தையும் , ஐந்து
பஞ்சபூதங்களைக் குறிக்கும். அப்பஞ்சபூதங்கள் அடிப்படையில் சிவ
பெருமான் சில
நிகழ்ச்சிகளை நடத்தி,
பின்பு
சிவ
பெருமான் தோன்றி
தலங்களாக வளர்ந்து மனிதர்களுக்கு அருள்
பாலிக்கிறார்.
சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்ளான
நிலம்
- காஞ்சி, திருவாரூர் (புவித்
தலம்)
நீர்
- திருவாணைக்கால் (நீர்த்
தலம்)
வாயு
- ஸ்ரீ
காளஹஸ்தி (வாயுத்
தலம்),
அக்னி
–திருவண்ணாமலை
ஆகாயம்- சிதம்பரம் (ஆகாயம்)
இம்மாதம் கார்த்திகை மாதம்
என்பதால் முதலில் இந்த சமயத்தில் அக்னித் தலமான திருவண்ணாமலை தலத்தின்
அருமைகளை நாம் அறிந்து கொள்வது
அவசியமாகிறது.பின்வரும் கட்டுரையில் மற்ற
பஞ்ச
பூதங்கள் சிவ தலங்களைக் காண்போம்.
திருவண்ணாமலை:
நினைத்த மாத்திரத்திலேயே முக்தி அளிக்கக்கூடிய திருத்தலம் இது. சிவபெருமானின்பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவண்ணாமலையிலுள்ள மலையானது கோடி ஆண்டுகள் பழமையானது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே
கிருதா
யுகத்தில் அக்னி
மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர
யுகத்தில் பொன்
மலையாகவும், கலியுகத்தில் கல்
மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு:
மகா சிவராத்திரி:
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும்காக்கும் கடவுளாகிய திருமாலும்இருவருமே பெரியவர்கள் என்று
தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று
தம்மில் யார்
பெரியவர் எனக்
கேட்க,
சிவபெருமான் தனது
அடியை
அல்லது
முடியை
உங்களில் யார்
கண்டு
வருகிறீர்களோ அவர்
தான்
பெரியவர் எனக்கூற திருமால் வராக
( பன்றி)
அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண
இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப்
பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண
உயரப்
பறந்து
சென்றார். முடியைக் காண
இயலாமல் தயங்கி
பறக்கும்போது சிவன்
தலை
முடியில் இருந்து தாழம்பூ கீழே
இறங்கி
வந்ததை
கண்டு,
அதனிடம் சிவன்
முடியை
காண
எவ்வளவு தூரம்
உள்ளது
என்று
கேட்க,
தாழம்பூ தான்
சிவனாரின் சடையில் இருந்து நழுவி
நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ்
நோக்கி
வந்து
கொண்டு
இருக்கிறேன் என்று
கூற,
பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு
பொய்
சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன்
முடியை
பிரம்மன் கண்டதாக சாட்சி
சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
தாழம்பூ சாட்சி
சொல்ல,
பொய்
சொன்ன
பிரம்ம
தேவனுக்கு பூலோகத்தில் தனி
ஆலயம்
அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன
தாழம்பூ சிவ
பூசைக்கு உதவாது
என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான்
என்ற
அகந்தை
நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி
பிழம்பாக நின்ற
இடம்
திருவண்ணாமலை. சிவபெருமானை அமைதி
பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற
சிவபெருமான், ஓர்
மலையாய் அடங்கி
சிறிய
ஜோதியாய் அதன்
உச்சியில் தென்பட,
அனைவரும் வணங்கினர். அந்த
நாளே
மகா
சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
லிங்கோத்பவர்:
சிவனை
அக்னி
வடிவிலும், விஷ்ணு
அவருடைய காலடியில் வராக
அவதாரத்திலும், பிரம்மனை அன்னம்
வடிவத்திலும் மேலிருந்து விழும்
தாழம்பூவுடன் வடிக்கப்பட்ட சிலை
உருவையே லிங்கோத்பவர் என்று
அழைக்கின்றோம். சிவனின் எந்தக்
கோயிலிற்குச் சென்றாலும் லிங்கம் வீற்றிருக்கும் அந்தக்
கருவறைச் சுவற்றின் பின்புறத்தில் லிங்கோத்பவர் சிலை
பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த
வடிவம்
தோன்றிய இடம்
இந்த
புனிதத் திருத்தலமே.
அர்த்தநாரீஸ்வர்:
அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின்
புறம்
ஐம்பொன் சிலை
உள்ளது)
நின்ற
பெருமைக்கு உரிய
தலம்
இத்தலம். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி"
அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.
ஞானிகளும் துறவிகளும்:
இத்தலம் சித்தர்களின்சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
அண்ணாமலை சுவாமிகள்,அப்பைய
தீட்சிதர்,அம்மணி
அம்மாள்,அருணகிரிநாதர்,அழகானந்த அடிகள்,ஆதி சிவ பிரகாச
சாமிகள்,இசக்கி
சாமியார்,இடைக்காட்டுச் சித்தர்,இரமண
மகரிசி,இறை சுவாமிகள்,ஈசான்ய
ஞானதேசிகர்,கண்ணாடி சாமியார்,காவ்யகண்ட கணபதி
சாத்திரி,குகை
நமச்சிவாயர்,குரு
நமச்சிவாயர்,குருசாமி பண்டாரம்,சடைச்
சாமிகள்,சடைச்சி அம்மாள்,சற்குரு சுவாமிகள்,சேசாத்திரி சாமிகள்,சைவ
எல்லாப்ப நாவலர்,சோணாசலத் தேவர்,ஞான தேசிகர்,தட்சிணாமூர்த்தி சாமிகள்,தம்பிரான் சுவாமிகள்,தெய்வசிகாமணி சித்தர்,பத்ராச்சல சுவாமி,பழனி சுவாமிகள்,பாணி
பத்தர்,மங்கையர்கரசியார்,ராதாபாய் அம்மை,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,விசிறி
சாமியார்,விருபாட்சி முனிவர்,வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ஆகிய
சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர்
அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில
சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.
தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.
கிரிவலம்:
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு அண்ணாமலையாரை சுற்றி
வெறும்
காலுடன் கிரிவலம் செய்கின்றனர். அண்ணாமலையாரை சுற்றிவரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி
லிங்கம், எம
லிங்கம், நிருதி
லிங்கம், வருண
லிங்கம், வாயு
லிங்கம், குபேர
லிங்கம், ஈசானிய
லிங்கம் என்று
எட்டு லிங்கங்களை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.
இத்திருமலையை காலணி
ஏதுமின்றி கிரிவலம் வருவோர் எல்லா
பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, பந்த,
பாசம்,
பற்று
எனும்
தடைகளில் இருந்து விடுபட்டு முக்தி
பெறுவர் என்று
கூறப்படுகிறது.
கார்த்திகை தீபம்:
கார்த்திகை தீப
நாளை
ஒட்டி
கார்த்திகை தீப
பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில்
பத்து
நாட்கள் முதல்
பத்து
நாட்கள் உற்வர்களின் ஊர்வங்களும், மூன்று
நாள்
தெப்ப
திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன்
கார்த்திகை மாத
கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி
வடிவமாக காட்சி
தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று
அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு
தீபம்
ஏற்றி,
அதன்
மூலம்
மேலும்
ஐந்து
தீபங்கள் ஏற்றி
பூஜிப்பர். பின்பு
அந்த
தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து
விடுவர். இதனை,
‘ஏகன்
அநேகனாகி அநேகன்
ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே,
பல
வடிவங்களாக அருளுகிறார் என்பதே
இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
பரணி தீபம்:
பத்தாம் நாளான இன்று அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர்
கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி
ஒளி
ஏற்றி,
தீபாராதனை காட்டி,
அதில்
ஒற்றை
தீபம்
ஏற்றுவார்கள். இந்த
ஒற்றை
நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து
பெரிய
அகல்
விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன்
சந்நிதியிலும் ஐந்து
பெரிய
அகல்
விளக்கில் தீபம்
ஏற்றுவார்கள். இந்த
பரணிதீபம் காலையில் நடக்கும்.
பரணி
தீபம்
ஏற்றப்பட்ட பிறகு,
அதைக்
கொண்டு
பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி
தீபத்தினை இறுதியாக பைரவர்
சன்னதியில் வைக்கின்றனர்.
மகாதீபம்:
இன்று மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப
மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்ததநாரீசுவரர் உற்வச
கோலம்
தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர்
முன்பு
அகண்ட
தீபம்
ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே
நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இருக்குமிடமே திருஅண்ணாமலை :
இவ்வாறு திருவண்ணாமலை செல்ல முடியாதவர்களுக்கு , நமது குரு திரு சகஸ்கரவடுகர் அய்யா கூறிய வழிபாட்டு முறையானது,
தங்கள்
அருகில் இருக்கும் மிக
பழைமையான சிவ
பெருமான் திருக்கோயிலுக்கு செல்லலாம். ஓம்
சிவ
சிவ
ஓம்
மந்திரத்தினை ஜெபித்துக் கொண்டே
கோவிலை
வலம்
வர
வேண்டும்,பின்பு
கோவிலின் வெளிப்புறம், உட்புறத்தைச் சுற்றி
வலம்
வந்த
பிறகு
சிவ
பெருமானையும் , அம்பிகையும் அர்ச்சனை எதுவும் செய்யாமல் வழிபட
வேண்டும். பின்னர் உங்களின் நேர்மையான கோரிக்கை அனைத்தையும் நினைத்து தியானம் செய்ய
வேண்டும். மேலும்
அக்கோவிலில் ஏற்றும் தீபத்தினைத் தரிசித்தாலேப் போதும்
திருவண்ணாமலை சென்றால் கிடைக்கும் நன்மைகளும், அருளும் நமக்கு
கிடைக்கும். நமது
கர்ம
வினைகள் அனைத்தும் எரிந்து , நம்
அனைவரின் வாழ்க்கை அல்லல்
இல்லா அருட்பெருஞ்சோதியாக ஒளிரும்.
ஓம் சிவசிவ ஓம்!!
ஓம் சிவசிவ ஓம்!!!