ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ !
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
சனிபகவான்:
30 ஆண்டு வாழ்ந்தாரும் இல்லை; 30 ஆண்டு வீழ்ந்தாரும் இல்லை; என்பது ஜோதிடப் பழமொழி! ஒரு ராசியில் இருந்து பெயர்ச்சி ஆன சனி மீண்டும் அந்த ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும்;ஒரு ராசியை இரண்டரை ஆண்டுகளில் சனி கடக்கிறார்;12 ராசியைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகிறது;இந்த ஜோதிட விளக்கமே ஜோதிடப்பழமொழியாக பரிணமித்திருக்கிறது;
சனியின் ஆதிக்கம்:
நவீன மருத்துவம் நமது உடல் ஆரோக்கியம் பற்றிகூறுவது என்னவெனில்,சாப்பிடும் அளவு குறையும் போதும்,வேளாவேளைக்குச் சாப்பிடாமல் இருக்கும் போதும் நமது உடலானது ‘அவசரத் தேவை’க்கு சேமித்து வைத்திருக்கும் கொழுப்பு சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறது;அதன் மூலமாக நாம் மெலிந்தாலும் பரிபூரணமான ஆரோக்கியத்தைப்பெறுகிறோம்;இதையே நமது முன்னோர்கள் உபவாசம் என்ற மரபினைத் தோற்றுவித்தனர்;தமிழ் மாதத்தில் அமாவாசை,ஏகாதசி,சதுர்த்தி,சஷ்டி,பவுர்ணமி வரும் நாட்களில் ஒருவேளை மட்டும் உண்டு(பல நாட்களில் நீராகாரம் மட்டும் அருந்தி) அந்த நாள் முழுவதும் உரிய கடவுளின் மந்திரம் ஜபித்து வந்தனர்;30 நாட்களில் வெவ்வேறு ஐந்து நாட்களில் இப்படி எதுவும் சாப்பிடாமல் இருப்பதன் மூலமாக நமது உடல் உறுப்புகள் ஓய்வு எடுத்துக் கொண்டன;இதனால் தான் நமது முன்னோர்களில் பெரும்பாலானவர்கள் 100 வயது வரை வாழ்ந்தனர்;
ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி என்று சனிபகவான் ஒருவருடைய 30 வருட ஆயுளில் 20 வருடங்களை கபளீகரம் செய்துவிடுகிறார்;எனவே,ஒரு மனிதனால் ஒவ்வொரு 30 வருடங்களிலும் வெறும் 10 வருடம் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்;இந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வரையிலும் சனியின் தாக்கத்தால் பல்வேறு சிக்கல்கள்,பிரச்னைகள்,வேதனைகள் வந்து சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் போய்விடுகிறது;இதை முன் கூட்டியே உணர்ந்த நம்முடைய சைவ முன்னோர்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் வரையிலும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் வழக்கத்தை உருவாக்கினர்;இதன் மூலமாக 20 வருட சனியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஆத்மபலத்தைப் பெற்றனர்;
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசினார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.
இக்காலங்களில் இவர் 3 முறை வக்ரம் ஆகிய பின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
பங்குனி 24ம் தேதி (06.04.2017) வியாழக்கிழமை வக்ரமாகி, ஆவணி 9 ம் தேதி (25.08.2017) வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன் பின்
சித்திரை 6ம்தேதி (18.04.2018) புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி ஆவணி 21 ம்தேதி (06.09.2018) வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்
சித்திரை 17ம்தேதி (30.04.2019) செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார்.
இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 2017-ம்
ஆண்டு டிசம்பர் 19ம் நாள் அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஸ்ரீகாலபைரவர் :
மிருகண்டு மகரிஷிக்கு அவரது பிறந்த நட்சத்திரப்படியும்,ராசிப்படியும் ஏழரை ஆரம்பமானது;எனவே,அவரை சிக்கலில் மாட்டிவிட்டார் சனி.
சித்தர்கள்,ரிஷிகள்,மஹான்கள்,சாதுக்கள் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தியானம்,தவம்,பிராணயாமம் என்று இருந்து வருபவர்கள்;இவர்களுக்கு என்று எந்தவித ஆசாபாசமும் கிடையாது;ஆசையின் மூலமாகவே சனி நமது நல்ல நேரத்தின் போது தவறுகளைச் செய்ய வைக்கிறார்;பிறகு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி வரும் போது அந்தத் தவறுக்குரிய தண்டனையைத் தரும் விதமாகச் செயல்படுகிறார்;இந்த விதியெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கே பொருந்தும்;
சனியின் இந்த செயல்பாட்டினால் மிருகண்டு மகரிஷி அவமானப்படும் சூழலை அடைந்தார்;இதற்கு யார் காரணம் என்று தனது தவ ஆற்றல் மூலம் நினைத்தார்;சனிதான் காரணம் என்று அறிந்ததும்,சனிக்கு வாதநோய் வரக் கடவது என்று சாபம் விட்டார்;முனிசாபம் உடனே செயல்படும் என்பதற்கிணங்க,சனிக்கு உடனே வாதநோய் வந்துவிட்டது;
சனியின் வேதனையை உணர்ந்த அவரது அன்னை சாயாதேவி, சனியை பைரவ வழிபாடு செய்யும் படி போதனை செய்தார்;அதன்படி,சனி பைரவ வழிபாடு பல கோடி ஆண்டுகளாக செய்து வந்தார்;பைரவப்பெருமானின் அருளால் மிருகண்டமகரிஷியின் சாபம் நிவர்த்தியானது;சனியின் வாதநோய் விலகியது;இதனால் அகமகிழ்ந்த சனி, ஸ்ரீகாலபைரவப்பெருமானிடம் தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்;
ஸ்ரீகாலபைரவப் பெருமானும் அவரை சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஏராளமான தெய்வீக உபதேசங்களை போதித்தார்;அதன்படி,மீண்டும் சனி ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்து வந்தார்;இதன் மூலமாக ஸ்ரீகாலபைரவப் பெருமானால் ;நவக்கிரகப் பதவி’ பெற்றார்;
பூமியில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருடைய தொழில்/வேலை மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவப்பெருமான் சனியிடம் ஒப்படைத்தார்;
‘யார் என்னை தொடர்ந்து வழிபடுகிறார்களோ, அவர்களை நீ ஒருபோதும் துன்புறுத்தக் கூடாது’ என்று சனியிடம் ஸ்ரீகாலபைரவர் சத்தியம் வாங்கியப் பின்னரே நவக்கிரகமாகச் செயல்பட அனுமதித்தார்;
இந்த சம்பவம் தஞ்சை,திருவாரூர் மாவட்டப்பகுதியில் நடைபெற்றிருப்பதால்,இந்தப்பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான கோவில்களில் ஒரே சன்னதியில் ஸ்ரீகாலபைரவருடன் சனி இருப்பதைக் காணலாம்;(ஸ்ரீகாலபைரவருக்கு சனி கட்டுப்பட்டவர் என்பது இதன் தாத்பர்யம்!!!)
தாக்கத்தைத் தகர்க்கும் பைரவ வழிபாடுமுறை:
நாம்
சனிப்பெயர்ச்சி இன்னல்களை நம் நமது குருவின் வழிகாட்டுதலை நாடினோம், இதோ அதற்கான சிறப்பு வழிபாடு ஒன்று நமது
வலைப்பூ அன்பர்களுக்காக,
ஒரு சனிக்கிழமை
நாளில் ஒரு காப்பர் தட்டை வாங்கிக்கொள்ளவும், அதில் குறைந்த அளவு நல்லெண்ணையை
உற்றிகொள்ளவும், பின்
குடும்பத்தில் சனியின் பாதிப்பில் உள்ள இராசிகார்கள் முதலில் தனது முகத்தைப்
பார்க்கவும், அதை
அதற்குப் பிறகு குடும்பத்தார் ஒவ்வொருவரும் அதில் தங்கள் முகத்தைப் பார்த்த
முடித்து (ஒருவர் ஒரு முறை மட்டுமே பார்க்கவேண்டும்) பின் , அந்த எண்ணையை ஒரு பைரவரின் முன் உள்ள எரியும் தீபத்தின் முன்
உற்றிவிடவும்.
இப்படியாக
தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்தால் முழுமையான நன்மையை, முன்னேற்றத்தையும் எட்ட முடியும். இதை
யாரும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பயர்க்கும் இரகசியம் காத்தாலே நன்மையை பயர்க்கும்.
மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 04:30 முதல் 06:00க்குள்,
ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியை அவரது சன்னதியில் பாடலாம்;வசதியிருந்தால் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் அரகஜா கொண்டு அபிஷேகம் செய்து கொண்டே ஸ்ரீகாலபைரவர் 108 போற்றியைப் பாடலாம்;நிறைய ஓய்வு நேரம் இருந்தால் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றியைப் பாடலாம்;
மேலும்
தினமும் நாம் சமைத்த சாதத்தினை எடுத்துவைத்து (பழையசோறு) பின்பு மறுநாள் காலையில் அந்த சாதத்துடன் சிறிதளவு எள்
சேர்த்து காகத்திற்கு வைக்கவேண்டும் இவ்வாறு தினமும் செய்தால் நல்லது, அப்படி செய்ய முடியாதவர்கள் சனிக்கிழமையாது செய்வது
உத்தமம் .
இந்த வழிபாட்டுமுறை பின்பற்றினால் போதும் திருநள்ளார் கூட செல்லாமல், சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள நமது குரு ஒரு சுலபமான வழியைக் காட்டியிருக்கிறார்; நம் நன்மைக்காக அவரது ஆராய்ச்சிக் குறிப்பை நம்மிடம் பகிர்ந்து கொண்ட நம் குருநாதர் சகஸ்ரவடுகர் அய்யா அவர்களுக்கு ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சிவசிவ ஓம்!
ஓம் சிவசிவ ஓம்!!
ஓம் சிவசிவ ஓம்!!!