RightClick

நமது கஷ்டத்தை நாமே துடைத்திடலாம் , குருவருள் இருந்தால் .. !! குருவின் அருள்மொழி இதோ !!!


ஓம் சிவசிவ ஓம் ஓம் ஈஸ்வரபட்டாயா நமஹ 

"" குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ
 குரு சாட்சாத் பரப்பிரம்ம தாத்மாய்ஸ்ரீ குருவே நமோ நமஹ  ""!!! 

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு வணக்கம்.


இந்த பதிவு அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் தங்களின் ஆன்மீக பயணத்தின் வாயிலாக, சித்தர்களின் வழிகாட்டுதலின்படி ஆராய்யப்பட்டு, ஆராய்ச்சியின் முடிவுகளை அவர்தம் குருவின் அருளாசிப்படி , இன்று நம்முடன் பகிர்கின்றார்கள்.. ஓம்அன்னதானம் :

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று நாம் நன்கு அறிவோம். அன்னதானம் என்றாலே அற்புதமான செயல். நாம் , ஒருவர்க்கு எதை எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று எண்ணாமல் , பொருட்களின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக அதிகமாக சேமித்துக்கொண்டே செல்வர் ஆனால் " அன்னம் " அப்படி செய்ய இயலாது.


போதும் என்ற எண்ணமே தலைசிறந்த மருந்து ,..என்பதுபோல போதும் என்ற எண்ணம் இங்கு தான் ஏற்படுகிறது.


யார் யாருக்கு அன்னதானம் செய்யலாம் ? 

யாவர்க்கும் செய்யலாம் . ஆனால்  சில நிபந்தனைகள் உள்ளன,. ஆம் அன்பர்களே ,  

1.யார் உண்மையில் அன்னத்திற்காக ஏங்குகின்றனரோ ;
2.யாரால் தங்களால் தங்களை கவனித்துக்கொள்ள முடியாதோ 
3.உடல் ஊனமுற்றோர் 
4.வயது முதிர்த்தோர் 
5.உழைத்து உண்ண வாய்ப்பு இல்லாதோர் 
6.ஓர் உயிர் முதல் அனைத்து உயிர்களுக்கும் 

இப்படி இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வதே உதவி , அதுவே உண்மை தானம் .

இவை அல்லது பகட்டு வாழ்க்கைக்காக , பிறந்தநாள் / மணநாள் /அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கொடுக்கப்படும் உணவு விருந்து "" அன்னதானம் "" ஆகாது . நினைவில் கொள்க .


இந்த பதிவின் முக்கிய நோக்கம் : 

 மக்களின் வாழ்க்கை மேம்பட ( பொருளாதார ரீதியில் , மனரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் )


யாருக்காக இந்த பதிவு :

1.தொழில் நஷ்டமானவர்கள்,(அதிக கடன்சுமை உள்ளவர்கள் )
2.இயற்கைக்கு முரணாக மக்களுக்கு வழிகாட்டும் அன்பர்கள்  ( ஜோதிடர்கள், அருள்வாக்கு சொல்பவர்கள், )
3.ரிஷி சாபம் உடையவர்கள் 
4. குரு சாபம் / குரு கோபத்திற்கு ஆளானவர்கள் 
5.தொழில் ரீதியாக சவால்களை சமாளிக்க இயலாதவர்கள் 
6.மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் 
7.எதிர்பார்ப்பில் இருந்து மீளவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் 
8.ஆன்மீகத்தில் ஏற்றம் பெற துடிக்கும் அன்பர்கள் 


என்ன செய்ய வேண்டும் ?

செய்யவேண்டியது ஒன்னு ஒன்று மட்டும்தான், "" அன்னதானம் ""

பிரதிபலன் எதிர்பாராமல் முடிந்த அளவு, அனைத்து உயிர்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.

அதில் மிக முக்கியமான ஒரு உயிர் , ஸ்ரீ கணபதியின் திருஉருவம் கொண்ட " களிறு (அ ) யானை . 
ஆமாம் அன்பு வாசகர்களே , யானைக்கு உணவு வழங்கிவர உங்கள் அனைத்துவித பாவங்களும் தூள் தூளாகிவிடும் . உடனே அல்ல படிப்படியாக .

 எத்தனை நாட்கள் அல்லது எப்படி தானம் செய்ய வேண்டும்?

பொறுத்தார் பூமி ஆள்வார் , என்பது இணங்க

 குறைந்தது ஆறு வாரம் (6 வாரம் )

வாரத்தில் ஏதாவது ஒரு நாள்

 ( குறிப்பாக குரு சாபம் / ரிஷி சாபம் / ஜோதிடர் / அருள்வாக்கு சொல்பவர்கள் ) ஒவ்வொரு வியாழக்கிழமையும் யானைக்கு அன்னதானம் செய்ய வேண்டும் குறைந்தது ஆறு வியாழக்கிழமை செய்ய வேண்டும் ,. அவ்வாறு செய்துவர விரைவில் வாழ்வில் ஏற்றம் பெறுவீர்கள் .


மற்றவர்கள் தங்களுக்கு இஷ்டமான நாளில் ஆரம்பித்து , அதே கிழமைகள் முறையே தொடர்ந்து ஆறு வாரங்கள் யானைக்கு அன்னதானம் செய்துவர பாவங்கள் விலகி நல்லவை நடந்தே தீரும் .


யானைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ? 

1. கரும்பு 
2.தென்னங்கிலை 
3.பழங்கள் (வாழை )
4.சாதஉருண்டை

( உணவு தானம் கோவில் யானைக்கு கொடுக்கும் பொழுது , முறையாக கோவில் நிர்வாகம் அல்லது யானை பாகனிடம் அனுமதி வாங்கியபின் கொடுக்கவும் )


எந்த நேரத்தில் தானம் செய்ய வேண்டும் ? 

எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் . காலையில் செய்வது சிறப்பு .


தொடர்ச்சியாக ஆறு வாரம் செய்ய வேண்டுமா ?

ஆம் .

 இடையில் தவறினால் பிழையில்லை . ஆனால் பலன்களில் சற்று தாமதம் ஏற்படலாம் .அறிய கருத்துக்களைநம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு

 அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை , ஆன்மீகக்கடல்/ ஆன்மீக அரசு சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம் . ஓம் !!

உங்களது ஆன்மீகம் குறித்த சந்தேகங்கள் , தெளிவு பெற எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் . அய்யா  இருந்து உரிய நேரத்தில் பதில்களை பெற்று உங்களுக்கு அனுப்புவோம்.


மேலும் மிகவிரைவில் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க ஆன்மீகக்கடல் குழுமம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் . இடம், தேதி,  குருதட்சணை விரைவில் அறிவிக்கப்படும். ஆன்மீகக்கடல் அலைபேசி எண்ணும் விரைவில் நமது வலைதளத்தில் இடம் பெறும் . 


விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் .. 

நன்றி.. 

வணக்கம் ... 

ஓம் சிவசிவ ஓம்..  ஓம் சிவசிவ ஓம்.. ஓம் சிவசிவ ஓம்..  ஓம் சிவசிவ ஓம்..அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் குருமொழி இதோ !!!


ஓம் சிவசிவ ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மாதா 
பிதா
 குரு,
 குரு காட்டிய தெய்வம் ... 

அன்பர்களே,

நமது செயல்கள் நன்முறையில் வெற்றியடைய, இறைபலம் நமக்கு அவசியம் . அந்த இறைபலம் , நமது கர்மவினையை பொறுத்தே நமக்கு கிட்டும் என்பதில் ஐயம் இல்லை.

நமது கர்ம பலனையே மற்றும் உரிமை நமது ( அவரவர் ) குருநாதருக்கு உண்டு. 

சிலர் எந்த வேலையை செய்ய நினைத்தாலும் ,அது தடை பட்டுக்கொண்டே போகும்.சிலர் செயலை செய்ய எண்ணுவர் ஆனால் செய்யாமல் தனது சோம்பேறி குணத்தால் காலம் தாழ்த்துவர்.சிலர் வெற்றியின் அருகில் சென்று அவர்தம் கர்மவினையால் தோல்வியை தழுவுவர் . சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு வராமல் தள்ளிப்போதல். உழைப்பிற்கு ஏற்ற பலன் இல்லாமை. இப்படி காரியத்தடைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 


 ஏற்படும் காரியத்தடைகளை இறையருளால் தகர்த்து ஏறிய தினமும் நாம் செய்யவேண்டியது குறித்து அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் குருமொழி இதோ , 


காரியத்திற்கு முதலானவர் அய்யன் விநாயக பெருமானின் அருளாசியை பெற்றால் எப்பேற்பட்ட இடரும் நீங்கும்.

இந்தமுறை சித்தர்களால் அறியப்பட்டு , ராஜகுருக்களால் மன்னர்களுக்கு , போர்ப்படை தளபதிகளுக்கு உபதேசிக்கப்பட்டு ரகசியமாக பின்பற்றப்பட்டு வந்த மிக முக்கியமான, எளிய முறை, நம் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் வழிநின்று இதோ, 


1. அருகம்புல் மாலை ( உங்கள் கைகளால் கோர்த்தால் - மிகச்சிறப்பு )
 2. தேங்காய் - 1


இந்த இரண்டையும் வீட்டின் ஈசான்ய மூலையில் மாலை நேரம் வைத்துவிடவும் . அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து பின்

 அருகில் உள்ள  விநாயகப்பெருமான் ஆலயம் சென்று

 


( கையில் அந்த அருகம்புல் மாலை மற்றும் தேங்காய் வைத்துக்கொள்ளவும் ) , வலது பக்கமாக ( கடிகார முள்  விதமாக ) ஒரு முறை வலம் வந்து ( சுற்றும் பொழுது மனதில் " சித்தியாக வேண்டிய காரியத்தை மட்டும் நினைவில்" கொண்டு )

பிறகு அருகம்புல் மாலையை ஸ்ரீ விநாயகருக்கு சாத்தும்படி அர்த்தகரிடம் கொடுத்து வழிபாட்டு பின் அந்த தேங்காயை ஆலயத்தில் விடலை போடும் இடத்தில் காரியத்தடை நீங்க  என்று எண்ணியவாறே " விடல் " போடவும் .


இதை முழுமனதுடன் , குருமொழியாக கொண்டு வாழ்வில் ஏற்றம் கண்டவர்கள் ஏராளம்.


" குருவின்  பணிந்து கூடுவோர் அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் "


ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !!