RightClick

தினமலர் தூத்துக்குடி பதிப்பில் வெளியான கழுகுமலை ஆடி அமாவசை கிரிவலம்

கழுகுமலையில் ஆடி அமாவசை கிரிவலம் 23/07/17 சுமார் ஏழு மணியளவில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மேலவாசல் நமது குருநாதர் தலைமையில் ஆடி அமாவசை கிரிவலம் துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த  பக்தர்கள் பைகளில் நவதானியங்களைக் கொண்டு வந்தனர்.

அவர்கள் கிரிவலம் சென்றபோது கிரிவலப்பாதையின் இருபுறமும் தானியங்களை உயிரினங்களுக்கு விதைத்தவாறும், ஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தை உச்சரித்தவாறும் சென்றனர். முன்னதாக மலைக்குன்றின் மேற்குப்பகுதியிலுள்ள ஆறுமுக நகரிலுள்ள மிளகாய் பழச்சித்தர் ஜீவசமாதிக்குச் சென்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. கிரிவலத்தில் தமிழகத்தின் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, சென்னை, பாண்டிச்சேரி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சிவகங்கை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சூட்சமமாக நிறைவடைந்த கழுகுமலை கிரிவலமும், ஆடி அமாவசை அன்னதானமும்

வணக்கம்:








காலை சரியாக ஏழு மணி அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின்  சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக ஓன்பது மணி அளவில்  நமது கழுகாசமூர்த்தியின்   சன்னதியை வந்தடைந்தார். பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது.













பின் கோவிலின் தெற்கு  வாசல் பகுதிக்கு வந்த நமது குருநாதர், வந்த அனைத்து மக்களையும் அமர வைத்துஇந்த கிரிவல நோக்கம் என்ன? மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதனை வந்தவர்களுக்கு கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். பின் பத்து அளவில் நமது கிரிவலம், சன்னதியின்  தெற்கு   வாசலில் இருந்து தொடங்கியது.



மிளகாய்ப்பழ சித்தர்:



கழுகுமலை மக்களின் அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்ததது, அங்கு அனைவருக்கும் நமது குருநாதர்ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். பின் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.


கிரிவலத்தில் சூட்சமமாக கலந்து கொண்ட 
சித்த பெருமான்கள்:

 மக்களின் அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்ததது, அங்கு அனைவருக்கும் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு தியானம் நடைபெற்றது. பின்பு நமது குருநாதர்ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். அப்போது நமது குருநாதர் அவர்களைச் சூட்சமாக சித்த பெருமான்கள் சிறு சிறு வெள்ளை நிற பௌர்ணமி ஓளியைப் போல வந்து கிரிவலத்தில் கலந்து கொண்டனர்.

                 

                 



தர்ப்பணம்:









மிளகாய்ப்பழச்சித்தர் ஜீவசமதியில்  இருந்து தொடர்ந்த கிரிவலம் நேராக மலையின் பின் பகுதியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆம்பல் ஊரணியை அடைந்தது. அங்கு குருநாதர்கள் அவர்கள், தர்பை மூலம் தர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக தங்கள் முன்னோர்களை மனதில்  நினைத்து, தர்ப்பணம் செய்தனர்.


அன்னதானம்:






அன்பர்கள் அனைவரும்  குருவை தொடர்ந்தபடி சரியாக பனிரெண்டு மணி அளவில் சன்னதியின் தெற்கு வாசலை அடைந்தனர். பின் கழுகுமலை  ஊர்மக்கள் அனைவரும், நமது குருநாதரை வந்து சந்தித்து ஆசி பெற்று, பின் அனைவருக்கும், நமது குருநாதர் தமது கைகளால் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேலும் கிரிவலம் மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நமது குருநாதர், காசி உட்பட 108 சிவா ஆலயங்களில் வைத்து விஷேச பூஜை செய்யப்பட்ட சொர்ணநாணயங்கள் வழங்கப்பட்டது.


நன்றி:

இந்த கிரிவலம் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் ஆசியாலும்,கழுகாசமூர்த்தியின் அருளாலும் கிரிவலம் இனிதாக நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து  அன்பர்களுக்கும், அனுமதி அளித்து உறுதுணையாக இருந்த கலுகாசமூர்த்தி ஆலய நிர்வாகத்தினர்,கழுகுமலை காவல்துறை ஆய்வாளர், தூத்துக்குடி மாவட்ட ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கழுகுமலை பொதுமக்களுக்கும் ஆன்மிகஅரசுமற்றும் ஆன்மிகக்கடல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

ஓம் சிவ சிவ ஓம்! 
ஓம் சிவ சிவ ஓம்!!
ஓம் சிவ சிவ ஓம்!!!