RightClick

விதியை வென்றிடலாம் வாங்க - அய்யா சகஸ்ரவடுகர் .

ஓம் சிவசிவ ஓம் 
தென்னாடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா பே ாற்றி

ஆன்மீகபெருமக்களே !!

நம் விதியை வெல்ல,  இதே ா நம் அய்யா திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்  ஈசனது அனுகிரகத்தால் ஸ்ரீஸ்ரீ பைரவப் பெருமானின் வழிபாடே மிகச்சிறந்தது  என்றும் ஓலைச்சுவடியில்  குறிப்பிட்டுள்ள தினங்களை மக்களுக்கு நலம் பெறும் பெ ாருட்டு சித்தர்கள் வழியில் செப்பியதாகும் கூறியிருந்தார்கள் . 

21.6.17-புதன் , 19.7.17-புதன் ,15.8.17-செவ்வாய் ,11.9.17-திங்கள் ,9.10.17-திங்கள் , 5.11.17-ஞாயிறு , 2.12.17-ஞாயிறு. 

அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து 
தாய் தந்தையரை வணங்கி பின் குலதெய்வத்தை எண்ணி முழு முதற்கடவுளை : ஸ்ரீ விநாயகரை வணங்கி  ஓம் ஸ்ரீ பைரவர் ஆலயம்   சென்று  கீழ்கண்ட பூசை முறையை மேற்கெ ாள்ள வேண்டும். 

செவ்வரளி மாலை 
அத்தர் 
புனுகு 
சந்தநாதி தைலம் 
வாழைப்பழம்
வெற்றிலை பாக்கு 
நிவேத்யமாக, தயிர் சாதம் மற்றும் மிளகு கலந்த உளுந்து வடை வைத்து பைரவர் கவசம் மனமுருகி பாடி, வேண்ட நம் விதியை அவரே மாற்றி,  வேண்டியதை வேண்டியவாறு அருளிடுவார் என்பதில் ஐயமில்லை! 

ஓம்சிவசிவஓம்  
ஓம் சிவசக்தி ஓம் 


பைரவ சஷ்டி கவசம்

பயன்பாட்டு முறை!!!


யார் முந்தைய மூன்று பிறவிகளில் ஒருபிறவியிலாவது பழுத்த சிவனடியாராகவோ,சித்தர் ஒருவரின் சீடராகவோ இருந்தார்களோ அவரே இந்த பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடுகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுவார் என்பது சித்தர்களின் உலகில் புழங்கும் அனுபவ மொழி ஆகும்.கலியுகம் பிறந்து 5000 ஆண்டுகளை கடந்த  இந்த சூழ்நிலையில்,நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பணம் சார்ந்த பிரச்னைகள்தான் இருக்கின்றன.அதை சரி செய்யாமல்,ஆன்மீக வாழ்க்கைபற்றி சிந்திக்க முடியுமா?


பணம் நேர்மையான முறையில் சம்பாதித்தால் மட்டுமே நிலைக்கும்; இந்த சூழ்நிலையில் நாம் பார்க்கும் வேலை அல்லது தொழில் மூலமாகவே நேர்மையாக செல்வ வளம் சேர வழி என்ன? என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகரிடம் வேண்டிய போது அவர் நமக்கு பைரவ சஷ்டி கவசத்தை பாடச் சொல்லி வலியுறுத்தினார்.உடனே,அதை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டுவிட்டோம்;பைரவ சஷ்டிக் கவசத்தை யாரெல்லாம் பாடலாம்? அதன் மூலமாக பைரவப்பெருமானின் அருளைப் பெறுவது எப்படி? 


யாருக்கெல்லாம் பண நெருக்கடி,கடுமையான கடன்கள்,பணம் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றனவோ அவர்களெல்லாம் கீழே குறிப்பிட்டுள்ள தினங்களில், ஸ்ரீகால பைரவரின் சன்னதி முன்பாக ஒரு மஞ்சள் துண்டின்(வசதியிருந்தால் மஞ்சள் பட்டுத்துண்டு) மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;ஸ்ரீகால பைரவரை நோக்கி அமரக் கூடாது;இந்த பைரவ சஷ்டிக் கவசத்தை பாட வேண்டும்;ஜபிக்கவும் செய்யலாம்;அவ்வாறு பாடுபவர்கள்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகவும்,முழுமையாகவும் கைவிட்டிருக்க வேண்டும்;அவர்களின் குடும்பத்தார் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டிய அவசியமில்லை;


ஒருவேளை வெளிநாடுகளில் ஸ்ரீகால பைரவ சன்னதி இல்லாவிட்டால்,தமது வீடுகளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் போட்டோ./கணினி/மடிக்கணினி வால்பேப்பரின் முன்பாக பாடலாம்;அதுவும் இல்லாதவர்கள்,தமது வீட்டின் தெற்குச் சுவற்றில் ஒரு எலுமிச்சை பழத்தால்(அறுத்து) அதன் சாற்றினால்,ஒரு சூலாயுதம் வரைந்து கொள்ள வேண்டும்;எலுமிச்சை பழம் இல்லாவிட்டால்,மஞ்சள் நிறத்தால் வரைந்து கொண்டு,அதன் மையப்புள்ளியை நோக்கியவாறு,கிழக்கு நோக்கி அமர்ந்து பைரவ சஷ்டிக் கவசம் பாடலாம்;ஜபிக்கலாம்;

கடுமையானசோகங்கள்,கர்மவினைகள்,துயரங்கள்,சிக்கல்கள்,அவமானங்களுடன் வாழ்ந்து வருபவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள ஜபித்து வர வேண்டும்;


பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகத் தாக்குதல்,பேய் பிசாசுத் தொல்லை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஜபிக்கவேண்டும்;

ஆளில்லாத ஆலயங்கள் அல்லது குலதெய்வக்கோவில் அல்லது ஆளரவமற்ற பைரவ சன்னதிகளில் பைரவ சஷ்டிக் கவசம் பாடும் சந்தர்ப்பம் அமைந்தால்,வில்வ இலைகள்,செவ்வரளி மலர்களால் சுயமாகவே அர்ச்சித்துக்கொண்டு பைரவ சஷ்டிக் கவசம் பாடலாம்;அவ்வாறு செய்தால்,வெகு விரைவாகவே ஸ்ரீகால பைரவர் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிவைப்பார்;ஆனால்,ஒரு போதும் ஸ்ரீகாலபைரவருக்கு மல்லிகைப்பூக்களையோ,துளுக்க சாமந்திப்பூக்களையோ அர்ச்சனைக்குப் பயன்படுத்தக் கூடாது;


வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்

நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி

சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்

சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்

வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக

பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக

காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக

கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக

அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக

வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக

நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக

சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்

இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்

எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்

தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே

மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே

ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்

தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே

கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே

மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை

வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே

எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே

பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்

எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே

இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு

கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ

மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.

அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்

மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.

முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே

எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்

காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே

அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்

தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே

எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே

தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க

செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க

கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க

விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க

தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க

இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி

உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி

ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி

விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி

உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி

நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி

கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி

பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி

சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக

கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக

சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக

தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக

கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக

அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக

காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக

கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக

அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக

ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக

குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக

லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக

பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக

கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக

பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக

வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக

பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக

பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்

பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்

வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்

சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

குறிப்பு : 
தேதிகளை நன்கு கவனத்தில் கெ ாள்க 

21.6.17-புதன் , 19.7.17-புதன் ,15.8.17-செவ்வாய் ,11.9.17-திங்கள் ,9.10.17-திங்கள் , 5.11.17-ஞாயிறு , 2.12.17-ஞாயிறு. 


இறைவன் அருள் 
குருவின் திருவருள் 

 - சகஸ்ரவடுகர்

நம் விதியையே மாற்றும் நேரம் இதோ

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவசக்தி ஓம்

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது அய்யா திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் வழிகாட்டுதலின் அடுத்த இமயம் அடுத்த கட்டுரையில் வெளியாகும்.

ஆம்.

நமது முன் ஜன்ம கர்மா காரணமாக நாம் அனுபவித்துவரும் இந்த ஜன்ம காரியங்களையே மாற்றி நன்மை பல அருளும் மிகச்சிறந்த வழிபாட்டு முறையும் அதனை மேற்கொள்ள வேண்டிய நாட்கள்  மற்றும் கிழமைகளும் அடுத்த பதிவில் வெளியட அய்யா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

திருவள்ளுவர் கூற்றுப்படி ,

காலம் கருதி செய்யும் செயல் நிச்சயம் ஞாலத்தை  உலகம்  திரும்பி பார்க்க வைக்கும் என்பதை நினைவுபடுத்தும் வகையில்,

அய்யா அவர்கள் சித்த பெருமக்களின் ஆசியோடு ஓலைச்சுவடியின் துணை கொண்டு அந்த கால அட்டவணையை, வழிபட வேண்டிய நாட்களை நமக்கு அருளியிருக்கிறார்கள்.

அடுத்த பதிவின் வழி நின்று நம் விதியை வெல்வோம் .

ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவசக்தி ஓம்

அட்ட வீரட்டானம் : அய்யன் பைரவர் வழிபாடு


பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர்.பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்பதால் இவை இந்தப் பெயர் பெற்றன.இந்த அட்ட வீரட்டானங்களுக்குச் சென்று பைரவரை முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே பைரவரின் திரு அருள் முழுமையாக ஒருவருக்குக் கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பைரவ ரகசியங்களுள் ஒன்று !!!

தேவாரம் அருளிய நால்வரில் ஒருவராம் என்னப்பர் அப்பர் பெருமான் தேவாரத்தில் அட்ட வீரட்டானத்தின் பெருமையை விவரிக்கிறார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்

கடவூர் வீரட்டானம்,காமருஞ்சீர் அதிகை

மேவீய வீரட்டானம்,வழுவை வீரட்டம்

வியன்பறியல் வீரட்டம்,விடையூர் திக்கிடமாம்

கோவல்நகர் வீரட்டம்,குறுக்கை வீரட்டம்

கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி

நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்

நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!

திருக்கண்டியூர், திருக்கடவூர்,திருவதிகை,வழுவூர்,திருப்பறியலூர்,திருக்கோவிலூர்,திருக்குறுக்கை,திருவிற்குடி ஆகிய தலங்களில் சென்று சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கும் பைரவப் பெருமானை வழிபடும் அன்பர்களை எமன் எக்காலமும் நெருங்கிடான்.இவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்கள் என எமன் இவர்களைக் கண்டு அஞ்சி வணங்கி ஒதுங்குவான்.

1.திருக்கண்டியூர்

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.

இறைவனின் திருநாமம்  பிரமசிர கண்டீஸ்வரர்.பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த இடம்.இத் தலத்திற்கு வந்து பக்தியோடு வழிபாடு செய்தால்,மறுபிறவியில்லை;திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.இந்தக் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.

ஞாயிறு,செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.இந்த நாட்களில் இலுப்பையெண்ணெய்,புங்கெண்ணெய்,நல்லெண்ணைய் கலந்து 8 விளக்கேற்றி மூலவருக்கு அர்ச்சனை,அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும்.

திரு மூலப்பெருமானும்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.இதுவே நான்முகனின் தலையை கொய்த வரலாற்றோடு தொடர்புடையது ஆகும்.

சுவாதிஷ்டமாகிய சக்கரத்திலிருந்து விந்து நாதம் செய்து கொண்டிருந்த அலையும் மனமாகிய நான்முகனை(மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு முகம்) ,விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து,சுத்தக்கினியால் இறையருளால் விந்து சக்தியை நிலைப்படுத்தி,மனதின் உலகச் செயல்களை செயல்படுமாறு செய்து குறும்பை,அகங்காரத்தை நசுக்கிக் காத்து அருள் செய்தார் பைரவர்.

2.திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம்,திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி.அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி.

ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.ஞாயிறு,வெள்ளி,வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்பு.

இங்குள்ள மஹாகணபதி சன்னதியில் தான் ஸ்ரீமஹா கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வையார் விநாயகர் அகவலை அருளினார்.

இத்தலத்தில் அபிஷேகம் செய்தால்,நல்ல குருவின் திருவருள் முழுமையாக அமையும்.சோழச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது!!! ஸ்ரீராஜராஜசோழன்        ஸ்ரீகருவூரார் சித்தரின் அருளின் படி பைரவரை வணங்கி ஈடில்லாத புகழ் பெற்றார்.அவரது சாம்ராஜ்ஜியம் ஆசியா முழுவதும்,ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்தது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்

வருத்தஞ் செய்தானென்று வானவர் வேண்டக்

குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே= திருமூலரின் திருமந்திரம் 339

(மனதில் பொறாமை,காமம் முதலான தீய எண்ணங்கள் இறை வழிபாடு விடாமல் செய்து வரும்போதுதான் எழுச்சி பெறும்;அவ்வாறு எழுச்சி பெற்று நம்மை ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும்;இப்படி காம,பொறாமை எண்ணங்கள் தோன்றிடக் காரணம் நான் என்ற அகங்காரம் தான்!!!இந்த எண்ணங்களை முறியடிக்க நாம் பைரவரை விடாமல் தொழுதால்,மனதில் மெய்ஞான எண்ணங்களை தோற்றுவித்து,நமது மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களை அழித்து,நல்லெண்ணத்தால் மெய் இறைஞான நிலையை பைரவரே உருவாக்கிவிடுவார்.

3.திருவதிகை

பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர்.ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்.திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது.வெள்ளி,புதன் கிழமைகளில் இங்கு வழிபடுவது சிறப்பாகும்.தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது.சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.உடல் நோய்களும்,பிறவி நோய்களும் நீங்கும் இடம் இதுவே! நமது கர்மத்தடைகளை நீக்கி,யோக மற்றும் ஞான நிலைகளை வழங்கும் திருத்தலமும் இதுவே தான்!!!

அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்

முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமூலரின் திருமந்திரம் 343)

காமம்(உடல் இச்சை மட்டும் காமம் அல்ல;பேராசை;பணத்தாசை;பொன்னாசையும் தான்!), கோபம்,தாபம்(நீண்ட கால ஏக்கம்) ஆகிய மும்மலங்களை(நம்மை ஆன்மீக வாழ்க்கையில் வளரவிடாமல் தடுக்கும் கழிவுகள் அனைத்தும் மலம் ஆகும்)எரித்து நமது மூலாக்கினியை ஞானக்கினியால் சேர்த்து யோக சித்தி,ஞான சித்தி அருளும் சிறப்பான திருத்தலமே இந்த திருவதிகை ஆகும்.

4.திருப்பறியலூர்

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது.

சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது.தட்சன் யாகம் செய்த இடமே  தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.இங்கு வந்து வழிபட்டால்,தீராத கடன்கள் தீரும்;பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட சாபங்கள்,தோஷங்கள்  ஆகியவற்றை நீக்கி,நல்வாழ்வு தருமிடம் இதுவே!!!

5.திருவிற்குடி

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.

மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி.

திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும்,சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.எனவே,இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.இங்கு திருமால் தனது தேவியான லட்சுமியோடு இருக்கிறார்.

பெரும் வறுமை நீங்கிட அல்லது மகத்தான செல்வ வளம் வேண்டுவோர்,இங்கு 16 வெள்ளிக்கிழமைகளுக்கு வர வேண்டும்.வந்து விநாயகர்,சுவாமி,அம்பாள்,இலக்குமி,பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்ய வேண்டும்;இதைச் செய்ய இயலாத அளவுக்கு பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருப்போர் அர்ச்சனை செய்தால் போதும்.இவ்வாறு செய்து முடித்தால், வறுமை நீங்கும்;செல்வ வளம் பெருகும்.

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் 27 செவ்வாய்க்கிழமைகளுக்கு மேற்கூறியவாறு வழிபாடுகள் செய்து விட்டால்,தடைகள் எதுவாக இருந்தாலும் அவை நீங்கி புத்திரபாக்கியம் பெறுவது நிச்சயம்.

திருமணமாகாதவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தங்கக் காசுகளை சுவாமிக்கு காணிக்கையாக வேண்டி ஒன்பது மாதங்கள்(வெள்ளி அல்லது தேய்பிறை அஷ்டமியன்று) வேண்டிக்கொள்ள ,நல்ல முறையில் திருமணம் நடக்கும்.

தொழிலில் நசிந்தோர்கள்,இலாபமில்லாதவர்கள் இங்கு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவர அற்புதமான பலன்களை அனுபவத்தில் உணரமுடியும்.நீங்கள் இவ்வாறு வழிபாடுகள் செய்து வர,நாய்கள் உங்களைத் தொடர்ந்து வருவதையும் அனுபவத்தில் காணலாம்.

எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்

தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற

அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமூலரின் திருமந்திரம் 341)

6.வழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்றதும்,வலப்புறம் திரும்ப வேண்டும்.அங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.

இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார்.

அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து,திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.

ஸ்ரீஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே!!! எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்;தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள்,இங்கு வருகைதந்து,இறைவனை வழிபட வேண்டும்.மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;இவ்வாறு செய்வதால்,அவர்களின் தியானம் சித்திக்கும்;கூடவே இறைவனின் திருவருட்காட்சியும்(தரிசனம்!!!) பெற்று இறைமார்க்கத்தில் முன்னேறமுடியும்.

இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்து வந்தால், ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தமே’ என்னும் வாக்கினை அனுபவபூர்வமாக உணரலாம்.

இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்த அஷ்டமச்சனி(4 ஆம் இடத்துச்சனி),சனி திசையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 சனிக்கிழமைகளுக்கு இங்கு வர வேண்டும்;அவ்வாறு வந்து,இவரது சன்னிதியில் 8 தீபம் நல்லெண்ணெய் ஊற்றி,ஏற்ற வேண்டும்.அதன்பிறகு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும்;முடியாதவர்கள் அர்ச்சனை செய்து வர சனிக்கிரகத்தின் பாதிப்புகள்,தொல்லைகள் நீங்கி,எல்லையில்லாத மனநிம்மதியைப் பெறலாம்.

7.திருக்குறுக்கை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும்,பிரிந்து செல்ல வேண்டும்.அங்கிருந்து 3 கி.மீ.சென்றால் திருக்குறுக்கை வரும்.

இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர்.இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும்.காமனை எரித்த இடம் இதுவே!!!

தியானம் செய்பவர்கள்,இறை நெறி செல்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுழுமுனை கூடி,வாக்கு சித்தியும் தவ உயர்வும் பெறமுடியும்.

குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து 8 வியாழன் அல்லது 8 செவ்வாய்க்கிழமை அல்லது மாதாந்திர வியாழன் அல்லது மாதந்திர செவ்வாய்க்கிழமை என்று  8 முறை வழிபட்டு,அன்னதானம் ஒவ்வொரு தடவையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மழலைச் செல்வம் பெறுவார்கள்.

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியதுபோக்கி

திருந்திய காமன் செயலழித்தங்கண்

அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமூலரின் திருமந்திரம் 346)

இந்தக் கோவிலுக்கு வந்துவிட்டு,வீடு சென்றவர்களுக்கு கனவில் பைரவர் அல்லது கூட்டமாக நாய்களையோ காண்பார்கள்.ஸ்ரீபைரவரின் திருவருளுக்கு இது ஒரு சான்று ஆகும்.

8.திருக்கடவூர்

திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.

அமிர்தகடேஸ்வரர்,அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர்.எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே!!!

இதய நோயில் வருந்துவோர்கள்,ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன்பிறகு தியானம் செய்ய வேண்டும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகளுக்குச் செய்து வந்தால்,மரண பயம் அகன்று நீடூழி வாழலாம்.

பிரம்ம தேவருக்கு உபதேசம் செய்த இடம் இது.

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று

காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமூலரின் திருமந்திரம் 345)

இது சித்தர்கள் தவம் செய்த பூமி ஆகும்.இங்கு ஈசான மூலையில் அமர்ந்திருக்கும் பைரவரை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்  8 நாட்களுக்கு தவம் செய்து,வில்வம் மற்றும் செண்பகப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால்,அஷ்டமாசித்திக்குச் செல்ல நமக்கு நல்ல குருவை,சித்தரை அடையாளம் காட்டும்.இந்த ஊருக்கு 2 கி.மீ.தொலைவில் திருக்கடவூர் மயானம் என்னும் இடத்துக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரர்,மலர்க்குழல் மின்னம்மை தம்பதியராக இருக்கும் அருள்ஞான பெற்றோர்களை வழிபட,மெய்ஞானம் கைகூடும்.

கொன்றாய் காலனை; உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,

மான் கன்றாருங் காவாக்கடவூர் திருவீரட்டத்துள்

என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே என்பது சுந்தரரின் தேவாரப்பாடல் ஆகும்.

நன்றி:பைரவ ரகசியம்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ