RightClick

தமிழ் வருடபிறப்பு - ஹெவிளம்பி :

ஓம் சிவசிவ ஓம் 

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

குருவின் திருவருளுடன் 
இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழும், 
ஆன்மீக கடல் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அன்பர்கள் அனைவருக்கும் ,
நம் குரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் 


நமது வளைதளம்/ ஆன்மீகக்கடல் வழியாக பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .

இந்த தமிழ் வருடம் அனைவரது நேர்மையான கோரிக்கைகள் யாவும் நிறைவேறி நற்பேறு பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாமான இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறோம் . 

மேலும் இன்றைய தினம், வாழும் தெய்வமான / வாழ்ந்த தெய்வங்களான,  நம் தாய் தந்தை  அவர்களை மனதார எண்ணி துதித்து அவர்ளின் அன்பிற்கு பாத்தியமாகி பின் நம் குருவினை மானசீகமாக எண்ணி அருளாசி பெற்று அதற்கு பின்பு 

குல தெய்வ வழிபாடோ (அ) இஷ்ட தெய்வ வழிபாடோ செய்து வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டி பிரார்த்தனை செய்ய எல்லாம் வல்ல இறையருள் கிட்டும் என்பதில் ஐயமில்லை... 

மேலும் " தன்னலம் பேணாது பொதுநலன் கருதுதல் இறை நம்பிக்கைக்கு பாத்தியமாகும் வழி" என்று அய்யா  கூறுவார்கள்.

" ஜீவகாருண்யமும் ஏழை எளியவர்களுக்கு  அன்னதானமும்" நம் தலையாய கடமை என்பதை மறவமை வேண்டும் ..

மீண்டும் ஒருமுறை தமிழ்  புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் ...


ஓம் சிவசிவ ஓம்                                        ஓம் சிவசிவ ஓம்                               ஓம் சிவசிவ ஓம் மனநிறைவே பேரின்பம் - அய்யா சகஸ்ரவடுகர்

 ஓம்ஸ்ரீ அம்பிகையின் அருளுடன் ஆன்மீகக் கடல் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். .

நம் வாழ்வில் நலமுடன் வளமுடன் வாழ இதோ ஒரு எளிய வழி ! 


அன்பையும் பொறுமை என்னும் கருவியை கையில் வைத்த நமக்கு திரு. சகஸ்ரவடுகர் அய்யா அவர்கள் கூறியது என்னவென்றால்  இன்று  10.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் காலை 10.54 முதல் நாளை 11.04.2017 காலை 11.45 குள் இறைவழிபாடு மற்றும் முடிந்த அளவுக்கு அன்னதானம்  செய்து குருவின் அருள் மற்றும் இறையருள் பெற்று வாழ்வில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்கள் நம் அய்யா சகஸ்ரவடுகர். 
 


.. 


தங்கள் அருகில் உள்ள சிவாலயம்  அல்லது ஜீவசமாதி சென்று தங்களது குடும்பத்திற்கு அர்ச்சனை செய்து  15 முதல் 20 நிமிடம்  எந்தவித  வேண்டுதல் இல்லாமல் " மனநிறைவு " மட்டும்தான் தேவை என்ற நிலையில் " தியானம் " செய்து  இறையருளிற்கு பாத்தியமாவோம் .


வழிபாடு செய்து பின் ஏழை எளியவர்கள் மற்றும்  உடல்நிலை சரியில்லாமல் / உறுப்புகளை இழந்து  ஆதரவினை நாடும் அன்பு  உள்ளங்களுக்கு  " அன்னதானம்  " செய்து அவரவர் இல்லம் செல்ல வேண்டும்.  

இப்படி செய்ய வேண்டியது விரைவில் உங்களை வந்து சேரும்.                                                                                                                   
 
" ஓம் சிவ சிவ ஓம்"   "ஓம் சிவசக்தி ஓம்"                                      

சர்வம் சக்திமயம் - அன்பர்களின் ஆதரவுடன் அய்யா சகஸ்ரவடுகரின் வழியில் !

கோவிலின் பூக்குழித்திருவிழா

மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது துர்முகி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திரயோதசி  திதியும் பூராட்டாதி  நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்(26.03.17) தொடங்கி சரியாக 06.04.17 அன்று சிறப்பாக முடிந்தது.


அன்னதானம்
இந்த வருடத்தின் முக்கிய சிறப்பாக எந்த வருடமும் இல்லாதது போல் இந்த வருடம் நமது குருநாதர் தொடர்ந்து பத்து நாட்கள் அன்னதானம் நடந்தது.


ஆடைதானம்


நமது குருவின்  கைகளால் விரதமிருந்த தீமித்திக்க இருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் ஆடைதனாம் நடைபெற்றது.உற்சவ ஊர்வலம்
முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு ஊர்வலத்தை அவர்களும் பின் தொடர்ந்தனர்.                                                    
பூ மிதித்தல்
 வலம் வந்ததன் முடிவாக,மாலை 4.30 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினர்.

 மொளப்பாரி
 பக்தர்கள் தங்கள் வேண்டுதலினால் வளர்த்த மொளப்பாரிகளை விரதமிருந்து எடுத்து சென்று குளத்தில் கரைத்தனர்.

கடந்த 50 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 50 ஆம் வருடத்தில் சுமாராக 900 பேர்கள் பூ இறங்கி முத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்.


நன்றி


இந்த அன்னதானத்தில் குருநாதரின் கரங்களோடு கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும்  தங்களையும் இணைத்துக்கொண்ட நம் வலைதள அன்பர்களுக்கு, நமது குருநாதர் சகஸ்ரவடுகர்  அவர்கள் சார்பாகவும் ஆன்மீ கக்கடல் மற்றும் அன்மீகஅரசு குழுமம் சார்பாக மிக்கநன்றி.