மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது துர்முகி வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதியும் பூராட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்(26.03.17) காலை 4 மணிக்குத் துவங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்க இருக்கிறோம்.
20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இங்கு தீ மிதித்து பூ இறங்குவார்கள்.
முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்., முளைப்பாரியும் வளர்த்து தங்களது பிரார்த்தனைகளுக்காக அம்மனை வழிபடுவார்கள்.
தொடக்கம்
"ஓம் சிவ சிவ ஓம்" " ஓம் சிவசக்தி ஓம்"