கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்
RightClick
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது !!! ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரணம் .
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வராக குரு சாட்சாத் பிரப்ரம்ம தத்ம ஸ்ரீ குருவே நமோ நமஹ !!
அன்புடைய ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீகக்கடலின் அன்பான வணக்கங்கள்.
மாதா பிதா குரு குரு காட்டிய தெய்வம்.
இப்படி குரு அவர்களை பற்றி நாம் நமது வலைத்தளத்தில் ஒவ்வொரு முறையும் பார்த்தும் கற்றும் வருகின்றோம். ஏழைகளுக்கு உதவுவது எப்படி இறைவனை சேர்க்கிறதோ அதே போல தான் குரு அவர்களுக்கு நாம் செய்வும் பணிவிடைகளும் இறைவனையே அதாவது அந்த பரமாத்மாவையே சென்று சேர்க்கிறது...
ஓம் நமசிவாய
ஸ்ரீ சிவயோக சச்சிதானந்த ஸ்ரீ ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள், அய்யா அவர்களை பற்றி நம் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். இன்றும் அய்யா ஸ்ரீ மாதாவானந்தர் அவர்களின் ஆசியை பெரும் பொருட்டு இந்த பதிப்பு நம் வலைத்தளத்தில் வலம் வருகிறது. ஓம் சிவ சிவ ஓம்.
அய்யா அவர்கள் வாசி யோகத்தில் வித்துவான் என்றால் அது மிகையல்ல. பொதுவாகவே சித்த பெருமக்கள் தாங்கள் எவ்வளவு பெரிய அல்லது அரிய சக்திகளை வைத்திருந்தாலும் மிக எளிமையாகவும் ஏதும் அறியாத குழந்தைகளைப்போலவே இருப்பார்கள்.
தன்னை நாடி வருபவன் யார் ? எதற்காக வந்திருக்கிறான் ? அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ? அது எந்த பிறவியில் தொடங்கியது, எப்பொழுது முழுமை பெறும் என்பது வரை அவர்கள் நன்கு அறிவார்கள், அறிந்திருந்தும் விதியின் பொருட்டு அதை யாரிடமும் உரைக்காமல் சிவார்ப்பணம் என்ற கொள்கைப்படி வாழ்வினை மேற்கொண்டவர்கள் மேலும் நமக்கு இறை வழிகாட்டிகளும் அவர்களே.
சித்தர்கள் ரூபத்தில் அதாவது சரீரத்தினால் வேறுபட்டாலும் அவர்கள் ஒருவரே அன்றி வேறில்லை.
அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரீரத்தோடு இருந்தபோதிலும், தன் ஜீவனை அடக்கி ஜீவசமாதியாக சிவத்தில் ஐக்கியமான பின்னும் சர்வ வல்லமை பொருந்தியவராக இந்த வளிமண்டலத்தில் உலா வருகின்றார்.ஆம் அன்பர்களே தன்னை நாடி வருபர்களின் இன்னல்களை களைந்து சுபிக்ட்ஷம் அளித்துவருகிறார்கள். மேலும் அன்பர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்நின்று நிறைவேறுகிறார் அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்.
அய்யா அவர்களின் ஜீவசமாதி நிறைவடையும் தருவாயில் அன்பர்களாகிய நமது உதவிக்கரம் நீட்ட என்று சொல்வதைவிட நம் கடமை அல்லது அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகளுக்கு கைங்கரியம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டியது என்றே சொல்ல விரும்புகிறேன்.
அய்யா அவர்களின் ஜீவசமாதி கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கு அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி அதாவது சிமெண்ட் மூடைகள் அல்லது செங்கல், அன்பர்கள் பலர் ஒன்றாக இணைந்து மணல், இரும்பு கம்பிகள் ( கட்டிட வேலைக்கு தேவைப்படும் ) இப்படி ஏதாவது வகையில் உதவும்படியும் இல்லையேல் பணமாகவோ காசோலையாகவோ அனுப்பும் படி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பில்ஆன்மீகக்கடல் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நேரில் வந்து உதவுவதாக இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி.
அன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உதவும் படியும் அய்யா ஸ்ரீமாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்களின் அருளாசியும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்
அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் சமாதி பற்றிய சில புகைப்படங்கள் இதோ ,
இருப்பிடம் செல்லும் வழி பற்றிய குறிப்புக்கள் :
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.
பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.
இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு ஶ்ரீ மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.