RightClick

ஸ்ரீ சொர்ணகார்ஷ்ண கிரிவலம் -2016 மிகவும் நிறைவுற்றது

அன்புள்ள ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு வலைப்பதிவு வாசகர்கள் மற்றும் கிரிவலத்தில் கலந்துகொண்டு சிறப்பித்து நமது குருநாதரின் ஆசிர்வாதத்தையும் நேரடியாக வந்து பெற்று சென்ற நமது அன்பர்களுக்கும், அந்த அண்ணாமலையாரின் அருளையும் பெற்று சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் மற்றும் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு குழுமம் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.  தவிர்க்க இயலாத காரணத்தால் கிரிவலத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் வீண்கவலைகொள்ள வேண்டாம். நிச்சயம் நமது குருவின் ஆசிர்வாதமும்,  அண்ணாமலையாரின் ஆசீர்வாதமும்,  இந்த பதிவை  வாசிக்கும் போது உங்களை  வந்தும் சேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.


கிரிவலம் நிகழ்ச்சி


நேரம் சரியாக 6.௦௦am மணி முதலே நமது அன்பர்கள் சரியாக நமது வலை தளத்தில் உள்ளது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பலரும், பின்னும் பலரும், இரட்டை பிள்ளையார்கோவிலை வந்து சேர ஆரம்பித்துவிட்டார்கள்., நமக்கும் நம்மை சுற்றி இருந்த பொதுமக்களுக்கும் மிகவும் வியப்பாகவும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அங்கு இருந்த நமது ஆன்மீக அன்பர்களின் அனைவரின் பார்வையும் குருநாதரை நோக்கியே இருந்ததால் நாமும் காத்திருந்தோம். சரியாக 7.௦௦ am மணியளவில் அண்ணாமலையாரின் கோவில் வாசலின் முன் பகுதியை கடந்து நமது குருநாதரின் வருகையை நம் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டு அந்த இடத்தை அவர்கள் ஆரவாரத்தில் மூழ்கடித்தனர். எங்களின் ஆவல்களை புரிந்தகொண்டு எங்கள் அனைவரையும் சற்று பார்த்துவிட்டு, நின்று பின் அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு அருகே இருந்த இரட்டை பிள்ளயார்கோவிலுனுள் நுழைந்து அந்த பிள்ளையாரின் ஆசிர்வாதத்தை நமக்கும் நமது அன்பர்களுக்கும் அளித்துவிட்டு பின் அனைவருக்கும் திருநீர் பிரசாதம் வழங்கிய பின், கிரிவலத்தை குருநாதர் முன்நின்று நடத்தி செல்ல நாமும் நமது அன்பர்களும் ஐயாவின் பின் தொடர்ந்தோம்.
 
 
தேரடி முனீஸ்வரர் ஆலயம்
 
 
 

நமது ஆன்மீக அன்பர்களுக்கு  தேரடி முனீஸ்வரரின் அருளையும், ஆசியைப் பெற்றுக்கொண்டு கிரிவலப் பயணம் சிறப்பாகத்  தொடங்கியது.


இந்திர லிங்கம்
குருநாதரின் பாதத்தை தொடர்ந்த நமக்கு முதலில், கிட்டியது ‘’மன இயந்திரத்தையும் உலக இயந்திரத்தையும் ஆட்கொண்டுள்ள அண்ணாமலையார் முதல் அம்சமாக அமர்ந்திருக்கும் இந்தரலிங்கம் ஸ்தலம்-சகஸ்ரவடுகர்அங்கு நமது நன்மைக்காக நமது குரு அவர்கள் நமது அவர்கள் சிறிது நேரம் வேண்டி கொண்டு., நம்மையும் வேண்டிக்கொள்ள சொன்னார். பின் நமது அனைவருக்கும் அங்கு விசேஷசமாக செய்யப்பட்ட பூஜையில் இருந்து செய்யப்பட்ட திருநீரை அன்பர்கள் அனைவருக்கும் குருநாதர் தமது கையாலேயே வழங்கினார். பின் நாம் குருநாதரை பின் தொடர்ந்தோம்.
அக்னிலிங்கம்

இந்த இடமானது, நினைவில் மட்டும் அல்ல நெருப்பிலும் தமது இருப்பிடத்தை இடத்தை உலகிற்கு உணரவைப்பதர்காகவே தமது அமைவிட சிம்மாசனமாகப் பெற்றுள்ளார் ஆடல் அரசன்- சகஸ்ரவடுகர். .,

என்று நமக்கு நமது குருநாதர் விளக்கி உள்ளார். அந்த அற்புத இடத்தை நாம் வெறும் சில மணி துளிகளில் அடைந்துவிட்டோம். அங்கு நமது குருநாதர் அனைவரையும் வழிபடும் முறையை தனது செயல் மொழி மூலமாகவே விளக்கி நம்மை வழிபட வைத்தார். அங்கு சில நிமிடங்கள் தொலை தூரத்தில் (மலேசியா, ஹைதாராபாத், டெல்லி,பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற ஊர்களில்) இருந்து வந்திருந்த நமது ஆன்மீக அன்பர்கள் பலபேருக்காக நின்று ஆசி வழங்கி பின், சாலையோரத்தில் உள்ள சிவனடியார்களுக்கு குருநாதர் உணவு பொட்டலங்களை வழங்கினார் பின் , சிவனின் அணிகலன்களில் ஒன்றான உருத்திராட்ச்சத்தை வழங்கினார் நம் குருநாதர். இதன் பின்னர்தான்  பயணம் மேலும் வேகம் கண்டது.

எமலிங்கம்

“உயிர்களின் இயக்கத்தையும், செயல்களையும் தமது விரல் நுனியில் கொண்டுள்ள அந்த சிவபெருமான், உயிரின் துன்பங்களை உண்மையான பக்தி மற்றும் பிரார்த்தனை  மூலமாகவும் நாம் விடுப்பட்டு நன்மையைப்  பெற்றுக்கொள்ளலாம்-சகஸ்ரவடுகர்”  இதையும் நாம் நமது குருவுடன் கடந்து சென்றோம்.
நிருதி லிங்கம்

"சிவனின் நான்காவது அம்சமாக மட்டும் அல்லாது சிவ ஆசிர்வாத சின்னமாகவே அமைந்து உள்ள இந்த அமைவிடம் தான் சிவ அடியார்களை சந்திந்து நாம் நமது கஷ்டங்களை நீக்கி கொள்ள உதவும் சிவகணங்கள் போன்று உள்ள ஒரு இடம்-சஸ்ரவடுகர்" என்று நமது குருநாதர் சொன்ன நம் நினைவிற்கு வந்ததது. இவ்வளவு சக்திவாய்ந்த அந்த சிவ அம்சமும் நமது பயணத்தை சிறப்பித்தது.


வருணலிங்கம்

"இந்த கலியுகத்தில் நம்மை போன்றோரின் பாவத்தை இந்த நிலத்திலும் தொடரவிடாதபடி வருண அம்ச அடையாளத்துடன் இங்கு வீற்று இருக்கும் நம் சிவன்- சகஸ்ரவடுகர்".  நாம் இந்த லிங்கவடிவத்தை அடையும் பொது நமது நமது ஆன்மீக அன்பர்கள் சிலர் நம்முடன் வந்து இணைந்து கொண்டனர்.

வாயு லிங்கம்
"உலகில்  சிவனின் இருப்பிடத்தையும், இறைவனின் இருப்பிடத்தை உணரும் கருவியே வாயு அம்சம்.- சகஸ்ரவடுகர்". இந்த லிங்கவடிவத்தை  நாம் கடக்கும்போது, நாம் நமது உடலில் வாயுவை முதலில் முறைப்படுத்துதல்தான் சிவத்தை அடைய நாம் எடுக்கும் முதல் படி  என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதையும் நாம் மெதுவாக கடந்து  சென்றோம்.


 பொதுவாக இது போன்று கிரிவல நேரங்களில்தான், நாம் நடமாடும் சித்தர்களின் அன்பையும், ஆசிர்வத்தையும் நாம் பெறமுடியும். இங்கு உள்ள சிவனின் சிவ அம்சத்தின் பார்வையிலும், செவிகளிலும் நமது பிரார்த்தனைகள் சென்றடைந்தால் நாம் வாழ்வில் நிலையான மற்றும் நேர்மையான பலன்களை அடைந்துகொள்ளலாம். இங்கும் நமது குருவின் கைகளாலேயே நாங்கள் அனைவரும் திருநீறும், உருத்திராட்சங்ளைப் பெற்றுக் கொண்டோம்.குபேரலிங்கம்

   
நமது அன்பர்களுக்காக  முக்கியமான அம்சமாக சிறப்பு பூஜை ஒன்று நமக்காகவே  செய்யப்பட்டிருந்தது, அதில்  நாம் நமது குருவோடு அமர்ந்து கலந்துகொண்டோம். பிறகு நமது குருநாதரின் கரங்களாலே நமது அன்பர்களுக்கும்,பொதுமக்களுக்கும் சொர்ணத்தின் அடையாளமாக விஷேச விபூதியும், சொர்ண நாணயமும் வழங்கப்பட்டது. இதில் இன்னும் சிறப்பானதாக்க அகஸ்திய மகரிஷி, தன்வந்திரி பகவான் மற்றும் இடைக்காடரின் படத்தையும் வழங்கப்பட்டது.
   
  
    இந்த கிரிவலத்தின் போது நாம் பெற்ற இந்த உருத்திராட்சமும், சொர்ணநாணயங்களும் மற்றும் நம்மை முனேற்றபாதைக்கு எடுத்து செல்லும் காரணிகள் ஆகும். இதனை என்றும் நாம் தவரவிடக்கூடாதவை என்று நினைவு படுத்தினார் நம் குருநாதர். இவைதான் சொர்ணங்களை நேர்மையான வழியில் கொண்டு வந்து சேர்க்கும் வலிமை படைத்தது. எனவே இதனை பெற்று சென்ற அனைவரும், அந்த சொர்ண நாணயத்தை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பெட்டியிலோ அல்லது பீரோ போன்ற இடத்தில் பத்திரமாக வைக்கவும். வியாபாரம் செய்பவர்கள் அந்த நாணயத்தை நீங்கள் உங்கள் அலுவகத்தில் பணம் வைத்து பயன்படுத்தும் கல்லாவிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொள்ளலாம். இது போன்ற சூழ்நிலை இல்லாதவர்கள் தங்கள் மணிபர்ஸில் வைத்துக்கொள்ளலாம். அங்கு வந்த சில அன்பர்கள் தங்களுக்கும்,
 
 
 
 

 
 
 
 

 
 

இதனை செயல் முறை மூலமாகவே நாம் உணரத்தான் இந்த சொர்ணாகர்ஷ்ண கிரிவலம் ஏற்படுத்தபட்டது என்ற உண்மை நம்மிடம் விளக்கினார் நம் குருநாதர்.


ஈசான லிங்கம்

கிரிவலம் பயணத்தில் சிவனின் எட்டாவது அம்சமாகவும் அங்கம் வகித்தாலும், நம் வேண்டுதலின் பயனை இவர்தான் நிறைவு செய்வதோடு நாம் எந்த இடையூறு இல்லாமல் பயணத்தை முடிப்பதற்கு துணை இருந்தவர். இங்கு நாம் குருவின் துணையுடன் இந்த இடைத்தை அடைந்தவுடன், ஐயா அவர்கள்  அபிஷேகசொர்ண நாணயங்களை., பின் தங்கி வந்த அன்பர்களுக்காக நின்று ஐயா தன் கையாலேயே விநியோகம் செய்தார்.

நிகழ்ச்சி நிறைவு
ஈசான லிங்கத்தை அடுத்து நாம் பூதநாராயண பெருமாள் ஆலயத்தை அடைந்து சரியாக 03.30pm அளவில் அடைந்தோம். அங்கு நமக்காக முன்னே சென்று காதிருந்து நமது குருநாதர் அனைவரையும் நல்லாசியுடன் வழியனுப்பி வைத்தார்.
 
 
நன்றி
 
 
எங்களுடன் ஒத்துழைப்பு தந்த அனைத்து திருவண்ணாமலை மக்களுக்கும், ஊடக மற்றும் திருவண்ணாமலை காவல்துறையினர்களுக்கும் மற்றும் நமது ஆன்மீகஅன்பர்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் சார்பாகவும் மற்றும் ஆன்மீககடல் & ஆன்மீகஅரசு சார்பாக மீண்டும்  எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 "ஓம் சிவ சிவ ஓம்"  "ஓம் சிவ சக்தி ஓம்"

ஆன்மீகக்கடல் மற்றும்  ஆன்மீகஅரசு குழுமம்