RightClick

ஆன்மீகம் என்பது அமைதியே அன்றி போர்களம் அன்று !!!

ஓம் சிவசிவ ஓம் !!! 

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

எங்கும் நிறைத்திருக்கும் என் அப்பன் ஈசன் அருள் யாவர்க்கும் கிட்டிடும் ! 

ஓம் சிவசிவ ஓம் .. 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வாதம் - விவாதம் இரண்டுமே கூடாது என்பர் சான்றோர். 

அமைதியை ஆயுதமாக கொண்டு அன்பு என்னும் வீரர்களுடன் யான் ( தற்பொழுது ஆன்மீகக்கடல்)  இருக்கும் வரை என் மீது தொடுக்கப்படும் அத்தனை அம்புகளும் " சாதனை பூக்களே " அன்றி வேறொன்றும் இல்லை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். 

கலியுகத்தின் தன்மை என்னன்ன பிரச்சனைகள் எந்தெந்த ரூபத்தில் வரும் என்று ஆன்மீகப்பெரியோர்களே அறிந்திராத நிலையில் நம் ஆன்மீக அன்பர்கள் - னால உள்ளம் கொண்ட இறை உள்ளங்கள் நன்மை அடையும் பொருட்டும் அன்றாட வழிந்த இன்னல்கள் களைந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ மேலும்   பிறவி பிணி என்னும் கொடிய நோயில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது வரை நம் அய்யா வழிகாட்டிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், நேரடியாக நம்மை சமாளிக்கமுடியாமல் அப்பாவி ஆன்மீக அன்பர்களை சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து கால் பந்தாடுகின்றனர். 

சிவசித்தர்கள் வழியில் ஆன்மீக ஆராய்ச்சி மூலமாகவும் நற்பல குருமார்களின் ஆசியுடனும் ஆன்மீகவழியில் பயணிக்கும் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை சித்தர்கள் கூறிய ரகசிய வழிபாடு வழிமுறைகளை பின்பற்றியும் வந்தோம். 

இன்று பல பொய்யான போலியான ஆன்மீக வழிகாட்டுதல் என்ற பெயரில் பலர் மக்களை பல வகையான அல்லலுக்கு ஆளாக்குகின்றனர். உதாரணமாக ஆன்மீக அன்பர்களின் நேரம், பணம் மன சோர்விற்கு ஆளாக்குவதோடு மட்டும் அல்லாமல் அன்பர்களின் ஆன்மீகம் என்ற எண்ணம் அழியும் படி சில நடவடிக்கையில் இறங்குகின்றனர்.  

மேலும் நம் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் என்னும் மகத்தான  கிரிவலத்தினை அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில், நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் பொருட்டு ஆன்மீக பயணத்தில் பயணித்தோம். இன்று பல் வலைத்தளங்கள் ஆன்மிகம் என்னும் பெயரில் தவறான தகவல்களை மேற்கோள் காட்டி 27.11.2016 அன்று0 தான் ஸ்ரீ கிரிவலம் -  இன்னும் வேறு ஏதோ தேதி என்றெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள். அதுவல்ல உண்மை. 

நம் வலைத்தளத்தில் அய்யாவின் ஆன்மீக வழிகாட்டுதலின் படி 11.12.2016 அன்று வருவதே செல்வங்களை ஆகர்ஷிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் ஆகும் . 

மேலும் அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் இன்று தீர்கமாக எடுத்த முடிவு என்னவென்றால் இந்த ஆண்டோடுஅதாவது 11.12.2016 நடைபெற போகும்  ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் ( திரு அண்ணாமலையில் ஆண்டுதோறும் சித்தர்கள் குறிப்பின் பொருட்டு அய்யா அவர்களால் தலைமை ஏற்று  நடத்தப்பட்டு வந்த )  இறுதியாக தலைமையேற்று நடத்த போவதாகவும் இதற்கு பின் இந்த மாதிரியான கிரிவலத்தினை நடத்த போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்கள. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியினையும் அழித்தது. 

அய்யாவிடம் இது குறித்து வினவியபோது, கலி யாரையும் விட்டுவைக்காது மேலும் இந்த முடிவு பல ஆன்மீக போர்வையில் உலவும் போலிகளுக்கு ஒரு சாட்டையடி என்றும் பைரவ பயணத்தினை விளையாடி பார்த்தவர்களுக்கு கிடைக்கப்போகும் உண்மை சன்மானம் என்றார்கள். 

குறித்த நேரத்தில் நம் அய்யா அவர்களின் வழுக்காட்டுதலோடு நம் ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் தொடங்கும் என்றும், அய்யா தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் ஆன்மீகக்கடலோ அல்லது அய்யா அவர்களோ யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம். இறைவனை தேடுபவர்களுக்கு உண்மையான கோரிக்கையை நிறைவேற்ற துடிப்பவர்களும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம். கட்டாயம் இல்லை. 

ஆன்மீகம் என்பது அமைதியின் வடிவமே அன்றி போர்க்களம் அன்று .... 

ஒரு உறையில் ஒரு வாள் வைப்பது சாலச்சிறந்தது....... 

ஓம் சிவசிவ ஓம் ! 

திருச்சிற்றம்பலம்