ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீகக்கடலின் வணக்கங்கள் !
எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனைகளை சுமந்தவாறே சுற்றி திரியும் மனிதர்களின் சுமைகளை குறைத்து, சுகங்களை அனுபவித்து எந்த நிலையினையும் ஏற்று சமாளிக்கும் திறமையை வளர்க்கவே ஆன்மிகம் என்னும் ஞான பாடம் உள்ளது.

இந்த பாடத்தில் வரும் உட்தலைப்புகள் எல்லாம் இறைவனின் அவதாரங்களை பற்றி, திருவிளையாடல்கள் பற்றி மேலும் மீண்டுவர உதவும்
பரிகாரங்களை பற்றியதே.
ஆம் அன்பர்களே, நமது குறிக்கோள் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பது மேலும் இறைவனை அடைய பரிகாரங்களை கருவியாக பயன்படுத்துவதே.
இங்கு இறைவன் யார் என்ற கேள்வி தோன்றுவது இயல்பு ! அகத்திலும் புறத்திலும் இருப்பவன் அவனே ( இறைவன் ) என்ற உணர்வினை எட்டும்வரை ஆன்மீகப்பயணம்தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்த பயணத்தில் ஒரு முக்கியமான நேரம் தான் இது.
புரியவில்லையா ??
கார்த்திகை பிறந்துவிட்டது நம்
கவலைகளுக்கு ஒரு முற்று புள்ளியும் வந்துவிட்டது.
இது கார்த்திகையம்மா
காலனை துரத்தும் காலம்மம்மா
கவலைகளை போக்க - நம்
காலபைரவர் அவதரிதாரம்மா !!!
நம் ஸ்ரீ காலபைரவரை பற்றி பல கட்டுரைகளை நமது வலைதளத்தில் பகிர்ந்து வந்துள்ளோம், நமது ஆசான் திரு சகஸ்ரவடுகர் அய்யா அவர்கள்.
கார்த்திகை மாதத்தில் வரும் கிருஷ்ணா பட்ச/ தேய்பிறை அஷ்டமியே " ஸ்ரீ காலபைரவாஷ்டமி " அல்லது ருத்ராஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இந்த வருடம் வருகின்ற 22.11.2016 அங்காரக நாளாம் செவ்வாய் கிழமை அன்று மகம் நட்சத்திரத்தன்று வருகின்றது.
அன்பர்களே உண்மையில் இந்த நன்னாளில் ஏதோ ஒரு சக்தி வரையறுக்க முடியாது அளவு சக்தி உள்ளது என்பது ஆராய்ச்சியின் வெற்றி தன்மை.
எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் எல்லோரையும் பாதுகாத்து பாவ விமோச்சனம் கொடுத்து அருள்வது அவரே( ஶ்ரீ கால பைரவர்) என்றால், அது மிகை ஆகாது.
காலபைரவாஷ்டமி தினத்தன்று நாம்செய்ய வேண்டியது இதுவே,
அதிகாலையில் எழுந்து நீராடி பின் அவரவர் இல்லத்தில் பூஜை அறையில் குலதெய்வத்தினை எண்ணி ஆசிபெற்று பின் அருகில் உள்ள சிவாலயம் சென்று ஸ்ரீ காலபைரவரின் அபிஷேக ஆராதனைகளை கண் குளிர கண்டு, நெஞ்சுருகி வேண்டினால் வேண்டியவாரே தந்திடுவான் நம் காலபைரவன் ( நேர்மையான கோரிக்கைகள் )
இந்த நாளில் அபிஷேக பொருட்களை அதாவது,
அத்தர்
சந்தனாதி தைலம்
புனுகு
செவ்வரளி மாலை
ஜவ்வாது
வெற்றிலை - பாக்கு
ஊது பத்தி
அர்த்தகரிடம் கொடுத்து தங்கள் குடும்பத்திற்கு அர்ச்சனை செய்து காலபைரவர் துதி படவேண்டி, 15நிமிடம் தியானம் செய்து வர, சகல சம்பத்துகளும் கிடைக்கும்.
எதிரிகள் விலகுவர். செய்யும் தொழிலில் நிச்சயம் ஏற்றம் உண்டு. இப்படி பலவாறு கூறிக்கொண்டே போகலாம்.
நம்பிக்கையை அருள்பவர் காலபைரவர் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

வாழ்க வளமுடன் என்றும் நாவில் பைரவர் நாமத்துடன் !!!