ஓம் சிவ சிவ ஓம்
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க ...,

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாளை (14-11-016) திங்கட்கிழமை 33 ஆண்டிற்கொருமுறை இந்த நன்நாள் மீண்டும் வந்திருப்பது சிறப்பு.
அன்பர்களே சோமநாதனுக்கு உகந்த சோமதினத்தில் ( திங்கட்கிழமை ) பரணி நட்சத்திரத்தில் சிவனக்கட்டும் சிவசித்தர்களை வணங்கினால் சகலமும் கைகூடும்.
ஆம் அன்பர்களே, நம் சிவபெருமானின் அருளை பெற சிவசித்தர்களே நம் வழி .. இந்த தினம் நம் பெற்றோரை வணங்கி பின் நமது குருவிடம் ஆசி பெற்று தங்கள் இருப்பிடம் அருகில் உள்ள " ஜீவசமாதி " ( சித்தர்கள் அடங்கிய இடம் ) சென்று கீழ்கண்ட பூஜை பொருட்கள் வைத்து வணங்கி, குறைந்தது 15 நிமிடம் தியானம் செய்திட - எண்ணிய நற்காரியங்கள் ( நேர்மையான கோரிக்கைகள் ) தங்கு தடையின்றி நிறைவேறும்.
பன்னீர் ரோசா மாலை
டைமோண்ட் கற்கண்டு
பன்னீர் திராட்சை
ஊது பத்தி
வாழைப்பழம்
வெற்றிலை - பாக்கு
தட்சணை - உங்களால் இயன்றது ₹1 முதல் ~ ( ஆலய மேம்பாட்டிற்கு )
இந்த வழிபாட்டு முறை நம் முன்னோர்களால் ரகசியமாகவும் உண்மையில் சிரமப்படுபவர்களுக்கு உரைக்கப்பட்டும்,பின்பற்றப்பட்டும் வந்தது.
பரிகார மேற்குறிப்பு :
1.அருகில் உள்ள ஜீவசமாதி
2.14-11-2016 / திங்கட்கிழமை
3.பன்னீர் ரோசா மாலை
4.டைமோண்ட் கற்கண்டு
5.பன்னீர் திராட்சை
6.ஊது பத்தி
7.வாழைப்பழம்
8.வெற்றிலை - பாக்கு
9.தட்சணை - உங்களால் இயன்றது ₹1 முதல் ~ ( ஆலய மேம்பாட்டிற்கு )
10. 15 நிமிடம் தியானம்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
- திருக்குறள்.

மக்களின் கலியுக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண உதவும் திரு.சகஸ்ரவடுகர் அய்யா அவர்களுக்கு நன்றி , இவன் ஆன்மீகக்கடல்