RightClick

அன்பர்களே இது ஒரு எச்சரிக்கை கட்டுரை !!

ஓம் சிவசிவ ஓம் 

எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் ஈசனே சர்வேஸ்வரனே சரணம் !!! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

எங்கு சென்றாலும் துரத்தும் மாயை .., ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. 

 

ஆம் அன்பர்களே, மாயை என்பது கலியுக அசுரன் இவன். எப்படி பட்டவன் தெரியுமா ? என்ன என்ன செய்வான் தெரியுமா ? 
அவனின் செயல்பாடுகளை சொல்லி முடியாது. ஆம் உருவம் கொண்டவனை ( அரக்கனை ) அடையாளம் கண்டு திருந்த ஒரு வாய்ப்பு தந்து, திருந்தாவிடில் அசுரனை அழித்து தர்மத்தையும் சாத்தியவார்களையும் காத்து நிற்பார், நம் இறைவன்

ஆனால் இந்த கலி, உருவம் அற்றவன். அடையாளம் காண்பதென்பது அரிது. அடையாளம் கண்டபின் அவனையும் அவனது செயலையும் தடுத்து நிறுத்துதல் அதை விட சிரமம். ஆம் 

கலியுகத்தின் தன்மையை இது தான் என்று வரையறுக்க இயலாது. எதை வேண்டுமானாலும் செய்வான் அந்த மாயாவி. 

எடுத்துக்காட்டாக, 

பிறரை, அவன் துன்புறுத்த எண்ணினால் - அவனுக்கு சாதகமாக ஒரு காரணத்தினை கூறி தான் சரியாகவும் ஏனையோர் நன்மைக்காகவும் செய்தேன் என்று விவாதம் செய்து தன்னை சரியானவர் என்று கூறிக்கொள்வான். இப்படி கூறிக்கொண்டே போகலாம். 

மாயை - கலி - மாயாவி - இது ஆண் பாலில் கூறுவதால் ஆண்கள் தான் அரக்கன் என்று அர்த்தம் அல்ல. பொதுவாக பெண்ணை மேன்மையாகவும் உயர்வாகவும் தாயாகவும் கூறுவதால் அப்படி இங்கும் கூறுகின்றோம். ஓம் சிவசிவ ஓம் . 

மாயை - மாயை ?? 

மாயை என்பது நிழல் உண்மையில் இல்லை ஆனால் இல்லாமலும் இல்லை என்பதே மாயை. புரிதல் எனது நிஜம் எனில் புரிந்து புரியாதது போல் நடிப்பது, நடிக்க வைப்பது மாயை. மாயை இப்படி அப்படி என்று வகை படுத்திக்கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமான ஒன்று " ஆவா " என்னும்  ' ஆசை ' .. 

ஆசை - ஆம் அன்பர்களே ஆசையே மாயையின் மிக முக்கியமான ஆயுதம் - போர்ப்படை தளபதி போன்றது. மாயாவியை அரசன் என்று சொன்னால் ஆசை தலைமை தளபதி ; அரசனை விட பலமடங்கு தைரியமும் சாமர்த்தியமும் கொண்டவன், இருந்தும் தன்னை ஒரு வரையறை - கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே தளபதி.  இப்பொழுது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

ஆம் அன்பர்களே ஆசை நம்மை ஆட்டுவிக்கிறது என்றால் மிகை ஆகாது. ஆசை - நாம் சொல்லி தான் இது பற்றி அறியப்போகிறீர்கள் என்றால் , இல்லை. 

ஆதி சித்தன் முதல் இன்றைய திரையுலகம் வரை இதை பற்றி பேசாதோர் இல்லை. " ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே " என்ற பாடலில் அன்றுமுதல் இன்றுவரை மனிதன் ஆசையை பற்றிய சிந்தனை அதனால் வரும் நன்மை தீமையை ஆராய்ந்தவரே அல்லல் உற்றுக்கொண்டிருக்கிறான். இன்றும் அது தீர்ந்தபாடில்லை. 

பௌத்த மதம் " ஆசையே அழிவிற்கு காரணம் என்கிறது. ஆசை நிராசையாகும் பொழுது எத்தனையோ சொல்லமுடியாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி நம்மை சீரழித்துவிடுகிறது. இறுதியில் ஆசை கொண்டோரின் உயிரையும் உணவாக உட்கொள்கிறது.  இஃது எத்தகைய கொடுமை இறைவா ??? 

இந்த ஆசையை பற்றி, இன்று - இங்கு - பேச காரணம் என்ன ? என்று எதிர்பார்க்கும் அன்பு உள்ளங்களே , இந்த ஆசை நமது ஆன்மீக வழியிலும் தன் வேலையை காட்ட வந்து விட்டது... ஆம் அது தனதுநாராசன் அரக்கனுமான மாயாவியின் ( கலி - கலியுக அரக்கன் ) கட்டளைக்கிணங்க ஆன்மீக அன்பர்களை ஆசை வழியில் இழுத்து அல்லல் படுத்தும் வேலையை செய்ய துவங்கிவிட்டான். இன்னும் புரியவில்லையா ??? 

மக்களுக்கு அந்த சக்தியை பெற்றுத்தருகிறோம் : உங்களால் இப்படியும் செய்யமுடியும் : இதை செய்தல் இது கிடைக்கும் - கிடைக்கும் வரை போராடுங்கள் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி அவர்கள் தம் வலைகளில் சிக்க வைத்து வசூல்வேட்டையிலும் இறங்கிவிடுகிறார்கள். 

இப்படி நிஜம் உண்டு என்றால் நிழல் அதனை தொடருமோ அப்படியே நிஜமான ஆன்மீக வழிகாட்டியை போல நடித்து, தற்சமயம் தப்பிவிட்டு பின் மீள துயரத்தில் அடைபட்டுக்கொள்கின்றனர். ஆம் அன்பர்களே இது ஒரு எச்சரிக்கை கட்டுரை. 

நினைத்தால் அடையமுடியாதது ஏதும் இல்லை ; அது போல காலம் கருதி செயல் செய்தால் மட்டுமே வெற்றி நம்மை வந்து சேரும் என்பது நம் அய்யா அவர்களின் கூற்றும் கூட. 

 

போலியான பொருட்களை போன்றே சில போலியான வழிகாட்டல்களும் இந்த பிரபஞ்சத்தில் உலவுகிறார்கள். அவர்களை நாம் தான் தக்க தருணத்தில் உலக வெளிச்சத்திற்கு காட்ட வேண்டும். 

நமது பதிப்புகள் வலைத்தளங்களில் திருடப்படுவது வருத்தமளிப்பதாக நமது குரு அய்யா சகஸ்ரவடுகர் கூறினார்கள். 
" உளி சிற்பி கைகளில் கிடைப்பதற்கும் திருடன் கைகளில் சிக்குவதற்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது " ,  இது நம் அய்யா அவர்கள் கூறியது. 

அன்பர்கள் உங்களது ஆன்மீக சந்தேகங்கள் மற்றும் சந்திப்பு குறித்த கேள்விகளை நம் வலைதள மின்னஞ்சல் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

குருவின் அடி பணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் .  ஓம் சிவசிவ ஓம் !!! 


அன்னம் இடுவோம் ஆண்டவன் அருள் பெறுவோம்