RightClick

செய்தார்க்குச் செய்வினை - தீராத துயரம் ? மீளும் வழி இதோ !!!

ஓம் கங்கணபதயே நமஹ 

 
 
எல்லோரும் இன்புற உதவுவதே அறம் - ஆன்மீகம், எல்லாம். 

அனைத்தையும் சரியாக செய்தும், நான் ஏன் துன்புறுகிறேன். ஏன் ?? எனக்கு ஏற்பட்ட நிலைதனை என்னால் அறியமுடியவிலையே இறைவா !! குருவே  !! 

எனக்கு இந்த நேரத்தில், இது கிடைத்து இருக்க வேண்டுமே ! ஏன் இன்னும் கிடைக்கவில்லை ? கடவுளே என்ன இது சோதனை ? இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கிறதா ?? சிவனே பரம்பொருளே ?? கோவிந்தா ? கிருஷ்ணா - ஹரே ராமா ?? என்று உங்களுக்குளேயே பேசிக்கொண்டும் ஏங்கி கொண்டும் இருக்கிறீர்களா ?? 

நாம், நமது இளம் வயதில் கவலைகள் ஏதும் இன்றி கனவுகளையும் களிப்புகளையும் (ஆனந்தத்தையும் ) மட்டுமே சுமந்து சுவைத்து வந்திருப்போம். ஆனால் இன்று ?? இறைவா என்னால் முடியவில்லை என்று, எல்லா நேரமும் இடைவிடாது கூறிக்கொண்டே இருக்கிறோம் , மந்திரங்களை போல .. தீர்வு இல்லையா ? நிச்சயம் உண்டு ... 

 

நம் பள்ளி பருவத்தில், நாம் நன்றாக படிப்போம். ஞாபக சக்தியும் உண்டு. தேர்வு நேரத்தில் அல்லது தேர்வு காளத்தில் நம் நண்பரோ அல்லது அருகில் இருப்பவனோ ( சுமாராக படிப்பவன் / தேர்ச்சி அடையவே மாட்டான் ) கேக்கும் கேள்விகளுக்கு நீங்கள் துப்பு ( குறிப்பு ) கொடுத்து இருப்பீர்கள். தேர்வுகள் எல்லாம் நிறைவடைந்து , விடுமுறைநாட்கள் கழித்து தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படும். அதிர்ச்சி அங்கிருந்துதான் ஆரம்பம் ஆகும். நாம் மிக குறைந்த மதிப்பெண் எடுத்தும் நம்மிடம் கேட்டு எழுதியவன் அதிக மதிப்பெண் பெற்று அதிர்ச்சியில் ஆழ்த்துவான். அன்று இதை பற்றி சிந்தித்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்க வாய்ப்புகள் சற்று குறைவு தான் .. ஆம் அன்பர்களே .....

இது பள்ளி - இளம் பருவத்தில்.. 

குடும்ப வாழ்க்கையில்  ?? 

அங்கும் இப்படித்தான் நடக்கிறது . புரியவில்லையா ?? 

நம் குறைகளை களைய ஒரு ஆன்மீக வழிகாட்டியின் ( நம் அய்யா போல ) வழிகாட்டுதலின் சில பரிகாரங்களை செய்து பலன்களை புசிக்க ஆரம்பித்துக்கொண்டு இருப்போம். அந்த தருணத்தில் அல்லது அந்த வேளையில் நம் நண்பரோ அல்லது உறவினர்களோ அல்லது சுற்றத்தாரோ கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள் அல்லது உங்களிடம் வந்து புலம்பி இருப்பார்கள். 

இரக்கமே உருவமான நீங்கள் உதவுவதாக எண்ணி, உங்களை நீங்களே ஒரு ஆழ் புதைகுழியில் தள்ளிவிட்டு புதைக்கவும் தயாராவீர்கள். ஓரளவு புரிந்திருக்குமே ? 

நீங்கள் செய்த பரிகார முறைகளை அதாவது கோவிலுக்கோ அல்லது சான்றோர்களை வழிபடும் முறையையே சொல்லி கொடுத்து நீங்கள் எதையோ சாதித்தது போல, மகிழ ஆரம்பித்து பெரு மூச்சுவிடுவீர்கள் ஆனால் உண்மையில் அது துன்பத்தின் ஆரம்பம். 

உதாரணமாக உங்களிடம் ஒருவர் ஒரு தங்க நாணயத்தினை கொடுக்கிறார் மேலும் இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம் நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துகிறேன் என்று எண்ணி அதை மற்றொருவரிடம் கொடுத்தால் உங்களிடம் நாணயம் இருக்குமா ?? இல்லை நாணய சுவடு மட்டும் இருக்குமா ? யோசியுங்கள்... 

நாம் நமக்காக ஒரு செயல் செய்யும் பொழுது அதில் சுயநலம் அதிகம் இருக்கும், அதையே மற்றவருக்கு செய்யும் பொழுது பொதுநலத்துடன் தூய்மையும் இருக்கும். அப்படிப்பட்ட செயலுக்கு சக்தியும் அதிகம். 
ஆம் உங்களுக்கு கொடுத்த பரிகார முறைகள் ஒருவகையான தங்க நாணயம். அதை நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

                 அதை நீங்கள் மற்றவருக்காக பயன்படுத்தும் பொழுது அதை நிச்சயம் நீங்கள் இழக்க நேரிடும் அதாவது நன்மைகளை நீங்கள் துறந்தாக வேண்டும். இப்பொழுது புரிகிறதா ? ஏன் இன்னும் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்று ...

எப்படி படிக்காதவன் , கேட்டு கேட்டு எழுதியவன் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைகிறானோ அதை போலவே தங்க நாணயமாம் பரிகாரத்தினை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு இறுதி வரை இறைவனை குறை கூறிக்கொண்டே வாழ்வினை முடித்துக்கொள்கிறேன், மனிதன். 

இத்தகைய தோஷங்களில் இருந்து தப்ப சில ஜோதிடர்களும் தவறிவிடுகின்றனர்.  வாழ்க்கை வளம் பெற உதவும் ஜோதிடர்கள் ஏன் இன்னும் சிரமத்தில் உள்ளார்கள் ?? பிறரது பிறப்பு வாழ்வினது தரம் வாழ்க்கை துணை எதிர்கால சிறப்பு மற்றும் கண்டங்களை கூறும் அவர்கள் ஏன் இன்னும் சிறப்புற செழிப்பாக வாழ வில்லை ?? அவர்கள் வழிமுறை அறிந்தும் அதை பின்பற்றாமல், பின்னாட்களில் அல்லல் வருகின்றனர். 

ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்களே அப்படி மாட்டிக்கொள்ளும் பொழுது, நீங்கள் இருக்கும் இடத்தினை சற்று சிந்தித்து பாருங்கள் ?? 

நல்லது என்று சொல்லலாம் ஆனால் எல்லோராலும் வழிகாட்டிட முடியாது. இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

நமது ஆன்மீகக்கடலை பார்த்து பயன்பெற்றவர்களுள் ஒருவர் நம் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்து ஆசி பெற்று பின் அவரது வாழ்வு மேம்பட சில பரிகாரங்களையும் சில வழிமுறைகளை ஆன்மீக விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லித்தந்தார்கள். 

செழிப்பினை காணும் தருவாயில், ஆசி பெற்ற அந்த நபர் - மற்றவர்களுக்கு பரிகாரங்களை சொல்லத்தொடங்கினார். ஆரம்பத்தில் புகழ்ச்சியின் உச்சிக்கு சென்றது போல எண்ணி, விடாது  உபதேசித்துக்கொண்டு இருந்தார். 

திருக்குறள் விளக்கம் போல , எவ்வளவு பெரிய வண்டியும் அது தாங்கும் அளவு பாரத்தினை மட்டுமே ஏற்கும் , மயிலிறகு என்பதால் பளு அதிகம் தாங்காது - வண்டியின் அச்சு முறிவது திண்ணம். என்பதற்கேற்ப , 

மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி , படாத பாடுபட்டு, தற்பொழுது அந்த நபர் மீண்டும் நம் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்து நடந்ததை உரைத்து, தான் செய்த தவறுக்கு வருந்தி தன்னை போல யாரும் இப்படி துயரப்படக்கூடாது என்று எண்ணியதற்கு இணங்க இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. 

அன்பர்களே எப்படி உங்கள் துன்பம் நீங்க அய்யா வழிகாட்டுகிறார்களோ அதே போல உங்கள் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார்களுக்கும் இயற்க்கையின் விருப்பப்படி , அல்லல் தீர அய்யா அவர்கள் வழிகாட்டுவார்கள் என்பது திண்ணம்


அன்பர்களே, துயர் துடைக்கின்றேன் என்றெண்ணி மீளா துயரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம் அன்பர்களே. உதவ எண்ணினால் நம் வலைதளத்தினை பார்க்க சொல்லுங்கள் அல்லது நீங்கள் படித்து காட்டுங்கள்.  

நல்லதே நடக்கும் . வழியினை இழந்தோர் , வழியினை தேடுவோர் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். 

இனி நம் அய்யா சகஸ்ரவடுகரிடமும் பேசுங்கள். உங்களது நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி, ஐயம் அற்ற அறவழியில் வாழ வழி காட்டுகிறார்கள். 

 ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!                                ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!