ஓம் விநாயகனே நமஹஓம் சிவ சிவ ஓம்
தன்னை தானே அறிந்து உணர தாய் தந்தை தயவோடு குருவினது திருவடி சரண் புகவேண்டும். அப்போது இறையருள் உன்னுள், உன்னை காட்டி உன்னை ஆட்கொண்டு அருளும்.

தன்னை யார் என்று அறிவது குறித்த எண்ணம் எப்படி முதல் படியோ அதற்கடுத்தது குருவினை சரண் புகுவது.
குரு என்பர் யார் ? எங்கு இருக்கிறார் ? அவரை எப்படி அடைவது ? அவரது விலாசம் என்ன ? என்ற ஆராய்ச்சி கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.

உங்கள் குரு உங்களது அருகிலே எப்போதும் சூட்சும வடிவில் இருந்து கொண்டே இருப்பார். தக்க தருணத்தில் உங்களை ஆட்கொள்வது அவரது பொறுப்பு.
உங்களது கடமை உங்களை தயார் செய்வது தான். உங்களை பக்குவப்படுத்தும் பொழுது, உங்கள் குருவினது வார்த்தைகளை நீங்கள் கேட்டுணர்வீர்கள்.
இப்படி உங்களை நீங்கள் யார் என்று அறிய ஓர் நிரந்தர இடம் ஒன்று உண்டு, அதுவே நம் ஆசிரமம்.
ஆம் ஆன்மீக அன்பர்களே, குருவும் குருகாட்டும் இறையும் ஒன்றாய் கலந்திருக்கும் இடம் ஆசிரமம் ஒன்றே !
நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் ஆன்மீக கொள்கைகள் :
1) ஜீவகாருண்யம்
( கொல்லாமை - புலால் உண்ணாமை - பொய் உரைக்காமை - கள்ளுண்ணாமை )
2) அன்னதானம்
3) குரு - இறைவனிடத்து நம்பிக்கையும் பொறுமையும்
4) தன்னிலை அறிதல்
( தியானம் - தவம் )
5) ஒன்றில் ஒடுங்குதல்

மனதினை பக்குவப்படுத்த நமது அய்யா அவர்கள் கூறும் ஆன்மீக பாதை :
ஜீவகாருண்யம்
( கொல்லாமை - புலால் உண்ணாமை - பொய் உரைக்காமை - கள்ளுண்ணாமை )
ஏழை எளியவர்களுக்கு மற்றும் பிற உயிர்களுக்கு அன்னமிடல்
மூச்சு பயிற்சி ( குரு புகட்டும் )
தியானம்
ஆன்மீக பணிகள்
( குரு மொழி கொள்ளுதல் - ஆன்மீக பணிகளில் சுற்றுபுறத்தை பேணுதல், வயோதிகர்களுக்கு உதவுதல்,வசதியற்ற பள்ளி குழந்தைகளுக்கு உதவி செய்வது, திருக்கோவில் வழிபாடு , கிரிவலம் , இப்படி பல வகையான சேவைகள் அடங்கும் )
மந்திர உச்சாடனம்
தன்னிலை அறிதல்
தவம்
எளிய வடிவில்,
ஜீவகாருண்யம்
|
ஏழை எளியவர்களுக்கு மற்றும் பிற உயிர்களுக்கு அன்னமிடல்
|
மூச்சு பயிற்சி ( குரு புகட்டும் )
|
தியானம்
|
ஆன்மீக பணிகள்
|
மந்திர உச்சாடனம்
|
தன்னிலை அறிதல்
இறுதி நிலை வரை என்னென்ன செய்வது என்றதுவரை இறைவனின் எண்ணப்படி குரு வகுத்தவாறு அமையும் அன்பர்களே.
மேலும் ஆன்மீக வழியில் ஒவ்வொரு நடை எடுத்துவைப்பது குறித்து முழுவதுமாக இருள் நீங்கி ஒளி உண்டாகி ஜோதியினை அடையலாம் அன்பர்களே.

அய்யா அவர்களின் கூற்றுப்படி வருடத்திற்கு இருமுறை முதற்கட்ட பயிற்சியும் அதில் தெரியவர்கள் அடுத்தநிலைக்கும் அழைத்துச்செல்லப்படுவார்கள்.
பயிற்சிக்கு கட்டாயம் குருதட்சணை உண்டு .
தட்ச்சனாதேவியின் சாபத்திற்கு ஆளாகாதவாறு பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஆன்மீகப்பணிகளுக்கும் அந்த கட்டணமானது பயன்படுத்தப்படும்.
ஆசிரமம் - பயிற்சி குறித்த தகவல்கள் அய்யாவின் ஆணைப்படி விரைவில் அறிவிக்கப்படும்.
தன்னிலை உணரவிரும்பும் அன்பர்கள் - subject ல் தன்னிலை உணர என type செய்து ,
தங்களது புகைப்படம், ஜாதகம் ஆகியவற்றுடன் ஆன்மீக்கடல் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . தகுதியடையவர்களையும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களையும் இறைவன் ஒருபோதும் கைவிடான்..
ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம்
அன்பர்களே பயிற்சியில் சந்திபோமா ?
அன்பர்களின் இந்த கட்டுரை குறித்த கருத்துக்களை வரவேற்கிறோம்.