RightClick

அன்னை மீனாட்சி அம்மனின் திருகல்யாண வைபவம்

நமது வலைதள அன்பர்கள்  அனைவருக்கும் என்  இனிய தமிழ் வருட வாழ்த்துக்கள் - சகஸ்ரவடுகர்
                                                      நமது ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக நம் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை நம் குருவோடு நாமும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி., இதற்கு முதல் அச்சாரமாய் நமது குரு சகஸ்ரவடுகர் அவர்களின் தலமையில் இன்று பாண்டியநாட்டில்  (மதுரை ) மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபத்தை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு மத்தியில் நமது               குழுமம் சார்பாக நேற்று 19.04.16ம் முடிவடைந்தது அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. 

                                                         மீனாட்சி அம்மன் கோவில் 


தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருஆலவாய் (மதுரை)

தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர்     திருஆலவாய் (மதுரை)

இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்

இறைவி பெயர்  மீனாட்சி, அங்கயற்கண்ணிதமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை   மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை   மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில்   மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.


                                      தல வரலாறு

 மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.                                                             சிறப்பு


 மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.

மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.

மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.

600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.

வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.               மஞ்சகயிறு மற்றும் குங்குமம்
இந்த வைபவம் நடை பெரும்பொது கல்யாண வயது பெண்கள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை இங்கு வந்து மாங்கல்ய தோஷம் நீங்கவும், திருமண விரைவில் நடக்கவும் மற்றும் தங்கள் திருமண வாழ்வு மேலும் சிறக்கவும்  மீனாட்சி அம்மனை வேண்டிக்கொண்டு மஞ்சகயிறு, மஞ்சள் மற்றும் குங்குமத்தையும் அங்கு வரும் பெண்களுக்கு கொடுப்பார்கள் அல்லது அந்த நேரத்தில் எதாவது ஒரு ஆன்மிக பெரியோரின் கரங்களினால் அந்த பொருட்களை பெற்றால் மிகவும் சிறப்பு. இது போன்ற வைபவத்தில் நாம் பங்குபெற்றால் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

- இந்த வைபவத்திற்கு முன்  நாம் ஒரு மண்டலம் வரை முறையாக விரதம்   இருக்க வேண்டும்

- வைபவத்தன்று மஞ்சள் உடையுடன் பெண்கள் வைபவத்தில் கலந்துகொள்ள வேண்டும்

- அங்கு யாரிடம் நீங்கள் மஞ்சள் கயிறு பெற்றாலும் அதை உடனே அணியக் கூடாது., தாங்கள் வசிக்கும் வீட்டிற்கு சென்று, தங்கள் பூஜை அறையில் சிறிது நேரம் வைத்து பின் தங்கள் கழுத்தில் உள்ள மாங்கல்யத்தை கழட்டாமலே புது மஞ்சள் கயிறைக்  கட்டிக்கொண்டு பின் தங்கள் பழைய மாங்கல்ய கழட்டி  கயிற்றை ஓடும் நீரோடையில்தான் விட வேண்டும். இப்படி முறையாக வழிபட்டால்தான் நாம் நமது பிரார்த்தனையின் பலனை முழுமையாக அடையமுடியும்.                                             கோவிலில் உள்ள மண்டபங்கள்: கோவிலில் உள்ள மண்டபங்கள்:

அஷ்ட சக்தி மண்டபம்

மீனாட்சி நாயக்கர் மண்டபம்

ஊஞ்சல் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

வசந்த மண்டபம்

கம்பத்தடி மண்டபம்

கிளிக்கூடு மண்டபம்

மங்கையர்க்கரசி மண்டபம்

சேர்வைக்காரர் மண்டபம்

இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

சித்ரா பௌர்ணமி: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. இறைவனின் 5 சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.


                                                    மற்ற சிறப்புகள்

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து நக்கீரருடன் வாதிட்ட தலம். நக்கீரர் தன்னுடன் வாதாடுவது இறைவன் என்று தெரிந்தும் "நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட தலம்.

இத்தலத்தில் தான் முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றியதும், , திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் நிகழ்ந்தது.

திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.

சிவனின் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலம்.

சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்

வருடம் முழுவதும் எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.

பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்

இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.

இத்தலத்திலுள்ள பொற்றாமரைக் குளமும், தெற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே காட்சியளிக்கும் முக்குறுணி பிள்ளையாரை வாங்குதல் மிகுந்த சிறப்பாகும்.


                                              அன்னதானம் 


இந்த வைபம் நிறைவு பெரும் விதத்தில் நமது அறக்கட்டளை  வாயிலாக நமது குரு , தமது கரங்களால் தொடங்கி பின் சிறப்பாக் முடித்தார். இந்த்ச் வைபவதில் குருவின் கைகளோடு தங்களையும் இணைத்துக் கொண்ட நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் அய்யா சகஸ்ரவடுகர் சார்பாகவும், நமது ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிகஅரசு குழுமங்கள் சார்பாக  மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். முள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா-2016

கோவிலின் பூக்குழித் தல வரலாறு

மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த விஜய வருடம் பங்குனி மாதம்  18ம் நாள் சப்தமி கிருஷ்ண திதியும், மூலம்   நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (31.03.2016 )ஆரம்பித்து  தொடர்ந்து பத்து நாள் திருவிழா  நேற்று முடிவடைந்தது. இதில்  20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் ,பக்தைகளும்  விரதம் இருந்து பூ இறங்கினர்.

அன்னதானம்
ஆடைதானம்
நமது குருவின்  கைகளால் விரதமிருந்த தீமித்திக்க இருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் ஆடைதனாம் நடைபெற்றது.உற்சவ ஊர்வலம்

முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு ஊர்வலத்தை அவர்களும் பின் தொடர்ந்தனர்.                                                      
பூ மிதித்தல்


 வலம் வந்ததன் முடிவாக,மாலை 4.30 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினர்.

 மொளப்பாரி
 பக்தர்கள் தங்கள் வேண்டுதலினால் வளர்த்த மொளப்பாரிகளை விரதமிருந்து எடுத்து சென்று குளத்தில் கரைத்தனர்.

கடந்த 49 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 50 ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்கி முத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்.


நன்றி


இந்த அன்னதானத்தில் குருநாதரின் கரங்களோடு கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும்  தங்களையும் இணைத்துக்கொண்ட நம் வலைதள அன்பர்களுக்கு, நமது குருநாதர் சகரவடுகர் அவர்கள் சார்பாகவும் ஆன்மீ கக்கடல் மற்றும் அன்மீகஅரசு குழுமம் சார்பாக மிக்கநன்றி.