ஓம் சிவசிவ ஓம் !!!
ஓம் சிவசக்தி ஓம் !!!
நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள், கடந்த 33 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு நமது ஆன்மீகக்கடல் ( ஓம் நற்பவி ) அறக்கட்டளை வாயிலாக நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த வருடமும் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,
அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள்படைசூழ 1.09.2017 வெள்ளிக்கிழமை அன்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார்.
சிறப்பு உரை
அய்யா அவர்கள் உரையில் , கல்வி என்பதை , நாம் " தேன் " போல எண்ண வேண்டும் ஏன்னென்றால் " தேன் " என்பது தானும் கெடாது தன்னை சார்ந்தவர்களையும் கெடுக்காது .
எவ்வளவு பெரிய விஷயத்தை மிக மிக எளிமையாக எடுத்துரைத்து எல்லோரது எண்ணத்திலும் நிறைந்த நம் அய்யா அவர்களுக்கு நன்றி !!!
இறுதியாக மாணவமணிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக நடனம், பாடல் மற்றும் நடிப்பு போன்ற திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
நமது ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு குழுமம் சார்பாக நமது குருநாதர் மாணவர்களுக்கு அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவசக்தி ஓம்