RightClick

விழிமின் ! எழுமின் !! அன்பர்களின் கனிவான கவனத்திற்கு :-

ஓம் மகா கணபதியே சரணம். ஓம் அண்ணாமலையாரே போற்றி ! 
ஓம் உண்ணாமலை தாயே போற்றி !! 

ஓம் சிவசிவ ஓம் ! 

ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ !!  
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

   நமது இந்த ஆன்மீக கடல் வலைதளமானது கடந்த பல வருடங்களாக ஆன்மீக சேவையில் சிறப்புற விளங்கி வருகின்றது. சாதாரண மனிதனுக்கு உதவி செய்தாலே எவ்வளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டிவரும் என்பது நமக்கு நன்கு தெரியும். அப்படி இருக்கையில் பல ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களை கொண்ட நம் வலைதளதிற்கு எத்தனை இன்னல்கள் வந்திருக்கும், நமக்கு மட்டும் அல்லாது நம்மை ஆன்மீக வழியில் மேன்மை நடை போட உதவும் திரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கும் எவ்வளவு இடையூறுகள் வந்திருக்கும்.சற்று பொறுமையாக சிந்தியுங்கள் அன்பர்களே. நமக்கு கடந்தகால, எதிர்கால பலன் முதல் ஈம சடங்கினை செய்வதால் வரும் பலன் வரை அய்யா அவர்கள் வழிகாட்டுகிறார்கள் மேலும் குல தெய்வ வழிபாடு, குல தெய்வம் அறியதவர்க்கு அந்த தெய்வத்தை அடையாளம் காண உதவும் தன்மை, அய்யா பைரவர் வழிபாடு ; அன்றாட வாழிவில் மேன்மை பெற ; ஆன்மீக பயணத்தில் சிறப்புற  ; தன்னைத்தான் கண்டறிய ; தம் இடர் பிறர் இடர் களைய ; பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வாழ்வில் சிறப்புற, பூர்வ புண்ணியபலன் அடைந்து செம்மைய வாழ, திருமண தடை நீங்கி மக்கட்பேறு பெறுதல் என்று தங்களின் அனைத்து வினா / ஆன்மிகம் குறித்த ஐயங்களுக்கு தீர்வு தந்தும், தமது குருநாதர் காட்டிய வழி நின்று ஆன்மீக ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு முடிவுகளை நமக்கு தந்தும் - அருள் ஆசி வழங்கி வரும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றிகள் பல !! 

ஆன்மீக அன்பர்கள் , தாங்கள் அனுப்பிய வினாவிற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் அதிக காலதாமதம் என்றும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கீர்கள் - இதற்கு நம் வலைத்தளம் பொறுப்பு ஏற்கிறது ; தொலை தொடர்பு தொந்தரவினாலும் முக்கிய நபரின் எதிர்பாராத சில வேலைகளாலும் இந்த தாமதம் . இனி அதற்கு இடம் இல்லை, தங்களின் வினாவிற்கு ஒரு வாரத்திற்குள் பதில் வந்துவிடும் என்றும் தாமதம் முற்றிலுமாக தவிர்க்கப்படும் ; தாமதம் இருப்பின் வலைதளம் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் அன்பர்களே!!! 
மேலும் அன்பர்களே இது ஆன்மிகம் அதாவது ஆன்மாவினை ஒருநிலைபடுத்தி ஈசனது திருவடிதனை அடைவது, இடர் களைந்து வாழ வழிக்காட்டும் ஓர் வலைதள மேடை இது : சரியாக முறையாக பயன்படுத்தினால் வெற்றி என்னும் வேதம் வெளிப்படும் . 

இங்கு ஜோதிடத்திற்கு வேலை இல்லை நமது இந்த தளம் அதை தாண்டியது. நாங்கள் ஜாதகம் எழுதி தருவதில்லை ஆனால் ஆண்டவனின் அருளால் அந்த தலை எழுத்தினை நிர்ணயம் செய்வோம் ; 
ஓம் சிவசிவ ஓம் !!! 

அன்பர்கள் இனி கேள்வி எழுப்பும் பொழுது தங்களது - (உங்களது) புகைப்படம் : ராசி - நட்சத்திரம் மட்டும் போதுமானது மேலும் வேண்டுமானால் "ராசி கட்டம் / மண்டலம் " இணைத்து அனுப்புங்கள் ; இந்த முறை நடைமுறைபடுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதால் தான் இந்த கட்டுரை . அன்பர்கள் பலர் மின்னஞ்சலில் கேட்டிருந்த ஆசிரமத்திற்கு தானம்( நன்கொடை )வழங்குதல் - ஆசிரமம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் நன்கொடை குறித்த கேள்விக்களுக்கும் விரைவில் பதில் வரும். 

அனைத்து அன்பர்களுக்கும் நமது ஆன்மீக கடல் சார்பாக நன்றிகளை உளமார தெரிவித்துக்கொள்கின்றேன் . 

மேலும் விரைவில் நம் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள், அவர்களின் அடுத்த ஆன்மீக முடிவினை நம்மிடம் பகிர்வார்கள்.