RightClick

ஆன்மீக பரமபதத்தின் ஏணி இதோ - சில காலத்திற்கு மட்டும் !!! ( பொருளாதார - சமுதாய மேம்பாடு - அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வா??? )

ஓம் சிவசிவ ஓம் !

ஓம் அண்ணாமலையாரே போற்றி !!

ஓம் உண்ணாமலை அம்மையே போற்றி !!! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். "உனக்கு என நிர்ணயிக்கபட்டது உன்னை வந்து அடைந்தே தீரும்". மனிதன் தோன்றிய காலம் முதல் வாழ்நாள் முடியும் வரை நிர்ணயிக்கபட்டதே நடக்கும் என்றாலும் இறைவன் சிலவற்றை மறைபொருளாக, சிலவற்றை அதிக முயற்சியினால் மேலும் சிலவற்றை மற்றவர்கள் மூலமாக கிடைக்க இருப்பதினை - நமக்கென்று நிர்ணயிக்கபட்டதை நாம் பயன்படுத்த / அடைய மறந்துவிடுகிறோம். 

நமகென்று நிர்ணயிக்கபட்டது எதுவாக இருக்கலாம் ? எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆம் அன்பர்களே - உத்தியோகத்தில் பதவி உயர்வாக இருக்கலாம், சிறந்த ஆளுமை தன்மையின் மூலம் மிக சிறந்த பொருளாதார வல்லுனராக இருக்கலாம் ; சிறந்த மங்கையாக நாட்டின் தலைவியாகவோ அல்லது வீட்டின்/ நிறுவனத்தின் பொருளாதார நிலையினை மாற்றும் திறம் கொண்டவர்களாக ; தலைவனாகும் ஆகும் திறமை ; சிறந்த கல்வி அறிவு பெற்று இருந்தும் கை கொடுக்காமை நீங்க வழி இருந்தும் கண்டு கொல்லாமை மேலும் ஆன்மீக பயணத்தினை சிறப்புற தொடங்க , தொடங்கிய பயணம் தங்கு தடை இன்றி நிறைவடைய;  நம் மூதாதையர்களின் சாபம் நீங்கி சுகமாக வாழ - மூதாதையர்களின் ஆத்ம சாந்திக்காக நீங்கள் செய்ய வேண்டியவைகளாக இருக்கலாம், பித்ரு தோஷம் தொட்டு எல்லா தோஷங்களும் இந்த ஜன்மத்தில் நீங்க வாய்ப்புகள்  - இப்படி உங்களுக்காக நிர்ணயிக்கபட்டது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

நிர்ணயிக்கபட்டதை மறப்பதற்கு காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உதாரணமாக பணம் (நிதி ) அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  நேரம் - காலம், உண்மையினை மறந்து நடுப்பு காலத்திலே லயித்து இருத்தல் ( செய்ய வேண்டியதை தவிர்த்து சாதாரண செயல்களிலே)  தீயோர் சேர்க்கை ( கூடா நட்பு ) சரியான வழிகாட்டுதல் இல்லாமை ; போலிகளின் மூலம் பெற்ற முன் அனுபவம்
இப்படி வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம். 

இதற்கு தீர்வு தான் என்ன ? 

மனிதன், தான் பெற்ற இந்த பூத உடலையினையே உண்மை என்றெண்ணி மதி மறந்து மாய மயக்கத்தில் செய்வது அறியாது திரிக்கின்றான். தீர்வினை தேடி தேடி ஓடி அலைந்து சோர்ந்து சொத்துகளை இழந்து இறுதியில் இயற்கை என்னும் மரணத்தின் பிடியில் சிக்கி சிதைகிறான். 

நம்மில் பலர் இறைவனை இகழ்ந்து பேசி இருக்கிறோம். யாரேனும் காரணம் யோசித்து இருகிறீர்களா ? ஏன் அவர் மீது கோபம் என்று. கண்டிப்பாக உண்மைதனை உணராமல் வந்ததே தவிர உண்மை காரணம் யாரும் அறியோம். தன்னை இப்படி தாழ்த்தி படைத்துவிட்டான் அவர்களை எஜமானராக படைத்துவிட்டான். அவர்களிடம் அதை கொடுத்தான் எனக்கு ஏன் இதை தரவில்லை என்று தன்னால் இயலாததை எண்ணி எண்ணி தானும் நொந்து தன்னை படைத்த தாய் தந்தையரை பழித்து மேலும் எல்லாம் வல்ல இறைவனை திட்டிபடுகிறான், மதிகெட்ட மனிதன். 

இயலாமையின் காரணத்தால் எல்லோரையும் வஞ்சித்தவன், ஒருவரை தேட, அடையாளம் காண , யாசகம் கேட்க தவறிவிடுகிறான். அவர் யார் தெரியுமா ? ஆம் அன்பர்களே அவர் தான் " குரு ".  குரு அவர்களின் அருமை பெருமைகளை நாம் நன்கு அறிவோம். " குரு பார்க்க கோடி நன்மை. மாதா - பிதா - குரு - குரு காட்டிய தெய்வம் 

இப்படி கடவுளை நமக்கு காட்டிய குரு அவர்களை மறந்து நாம்,நம் துயரை துடைக்கும் வழியினை மறந்து எதோ வாழ்ந்து வழி இன்றி இறந்து மீண்டும் பிறப்பெடுத்து மடிந்து கொண்டே இருக்கிறோம்

தீர்வு தற்பொழுது உங்களுக்கு ஓர் அளவு புரியும் என்றே எண்ணுகின்றோம் . தோஷங்களில் ப்ரம்ஹகத்தி தோஷமே கொடியது. ஆம் இந்த தோஷம் பற்றி நாம் நன்கு அறிவோம். சில குறிப்புகள் மட்டும் இங்கே; 
ஸ்ரீ ராம பிரான் - அவதார புருஷர் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி நாம் நன்கு அறிவோம் ; ஸ்ரீ ராம பிரான், தசரத சக்கரவர்த்திக்கு மூத்த மகனாக தோன்றியதில் ஆரம்பித்து இளமை - சீதாபிராட்டி சுயம்வரம் - அரசனாக வேண்டிய ஸ்ரீ ராம பிரான், தாயின் சூழ்ச்சியால் வனவாசம் அடைந்து  


சோதனையாக சீதா தேவி அவர்களை மாயமான் கவர்ந்து ராவண தேசம் கொண்டு சென்று 


அங்கு அவர்களை தேட,அடையாளம் கண்டு வர தூதுவனாக அய்யன் ஆஞ்சநேயர்சென்று வருதல் : ராவணனின் பலம் - சிவ தொண்டு -  அவர் அறிந்த பிரம்மம் - பலம் மிகுந்த ராவணன் ஸ்ரீ ராம பிரானிடம் தோல்வியை தழுவி உயிர்தனை விடுதல் - அசுர சாம்ராஜ்யம் அழிந்து போதல் : இப்படி ஸ்ரீ ஆமா பிரான், கடவுளின் அவதாரமாக வர்ணிக்கப்படும் அவர் - நன்மைகளையே செய்தாலும் " பிரம்மத்தினை அறிந்த ஓர் ஞானிக்கு ஒப்பான ஒருவரை அதாவது ஸ்ரீ ராவணனை கொலை செய்த காரணத்தினால் - பிரம்ம கத்தி தோஷத்திற்கு ஆளானார். 

அன்பர்களே புரிகிறதா " பிரம்மகத்தி தோஷம் " என்பது உயர் ஜாதி அடிப்படையில் வந்தது அல்ல - பிரம்மத்தினை அறிந்த ஒருவரை யார் கொலை செய்கிறார்களோ அல்லது கொலை செய்வதற்கு இணையாக யார் சபித்து பேசுகிறார்களோ அல்லது பிரம்மத்தினை அறிந்தவரின் சொல் கேட்டும் கேட்க்காமல் ஏமாற்றுவது என்று நாம் இப்பிறப்பில் மட்டும் அல்லாது முந்தைய பிறப்புகளில் செய்திருந்தாலும் அதை சரி செய்யாவிடில் ஜன்ம ஜன்மத்திற்கும் இந்த தோஷம் நம்மையும் நம் சந்ததியர்களையும் தொடரும். இதில் எள் அளவும் ஐயம் இல்லை. 

அப்படி கொடிய தோஷம் ஸ்ரீ ராம பிரானை தொட்டது ஆம் அன்பர்களே எப்படி என்று கேள்வி எழுப்புகிறீர்களா ?? 

ஸ்ரீ ராவண பகவான் தனது துரதிஷ்டவசமான காலத்தினால் அத்தகைய ( சீதா தேவி கவர்ந்து வருதல் ) கொடிய செயலுக்கு ஆளானார். அது தவிர ஸ்ரீ ராவண பிரான், எல்லாம் வல்ல ஈசனிடம் அதீத அன்பு கொண்டு பிரம்ம மந்திரத்தினை பெற்று கடுந்தவம் மேற்கொண்டு பிரம்மத்தினை உணர்ந்து அறிந்தவர்; ஒரு ஞானிக்குநிகரானவர் ; அத்தகைய பெருமானை ஸ்ரீ ராம பிரான் வதை செய்ததினால் பிரம்மகத்தி தோஷம் அவரை ஆட்கொண்டது. ஆம் அன்பர்களே எல்லாம் வல்ல ஸ்ரீ ராம பகவானையே தோஷங்களில் கொடிய பிரம்ம கத்தி தோஷம் தீண்டியது. அதை ( தோஷத்தினை ) நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்ரீ ராம பகவானுக்கு சித்தராம் ரிஷிகளில் ராஜ ரிஷியாம் மஹா ரிஷி " ஸ்ரீ விசுவாமித்ர சுவாமிகள் " குருவாய் இருந்து நிவாரண பரிகாரம் செய்து வைத்து அருளியதோடு மட்டும் அல்லாமல் ராஜ இருக்கைதனையும்( அயோத்தி அரசராக ) பெற்று தந்தார்கள். தோஷ நிவர்த்தி எல்லா இடங்களிலும் செய்தல் ஆகாது ஆம் அன்பர்களே அதற்கென்று இடம் உண்டு அங்கு தான் செய்ய வேண்டும்: 
ரிஷி அவர்கள் தேர்வு செய்த இடம் கடற்கரையின் அருகில் பாவங்களை வேரோடு அழிக்கும் சர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீ மகா காளி அன்னை நின்றிருக்க , நன் நீர் ஆற்று படுக்கையுடன் ( குடிக்கும் நிலையில் ) கூடிய இடத்தில், ரிஷி அவர்களால் பிரதிஷ்டை ( தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காகவே பிரத்யேகமாக ) லிங்க வடிவில் சிவபெருமானும் உடன் உலகுக்கெல்லாம் தாயான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மை எழுந்தருளி காட்சியளிக்கும் " விஜயாபதி ". 
இந்த பரிகாரம், இது முழுக்க முழுக்க குரு - சிஷ்ய சூட்சும பரிகாரம். ஆம் அன்பர்களே..

நம்மில் பலர், பலமுறை, பல வகையான பரிகாரங்கள் செய்தும், சரியான பலன் கிடைக்காமல் இன்னும் அல்லல் பல பட்டுக்கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம். காரணம் " குரு இல்லா வித்தை பாழ் " ஆம் பரிகாரமும் ஒருவகையான வித்தை தான். 

இந்த வகையான தோஷ நிவர்த்தி பரிகாரம் நம் வாழ்க்கைதனை அப்படியே மாற்றி போடும் சக்தி வாய்ந்தது. சிவகதி கிடைக்க இந்த தோஷ நிவர்த்தி இன்றி அமையாதது. 

சர்வ வல்லமை வாய்ந்த சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மேலுலக வாசிகளும் இந்த வகையான நிவர்த்தி செய்தவர்கள்ஞானிகள்யாவரும் பிறக்கும் போதே சர்வ வல்லமையோடு பிறக்கவில்லைஆனால் மனிதனாக பிறந்து கஷ்ட நஷ்டங்களில் உழன்றுஉண்மைதனை உணரத் தொடங்கையில் குருவினது பாதம் பற்றி சிவதொண்டாற்ற முற்பட்டு பின் கர்ம வினைகளை களைய தோஷ நிவர்த்தி செய்து சிவ தீட்சையுடன் பிரம்மத்தை அடைகிறான். 

ஆம் அன்பர்களே நம் பாவம் இப்பிறவியினால் வந்தது அல்ல நாம் இதற்கு முன் தரித்த உடலாலும் சார்ந்திருந்த உயிரினாலும் நம்மை தொடர்ந்து வருவது. உங்களுக்குள் ஏன் - ஏன் - எப்படி என்று கேள்வி எழுப்ப சில உண்மை இரகசியத்தினை உணர்வாய் என்று நம் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூறுவதுண்டு. ஆம் அன்பர்களே முயற்சித்து பாருங்களேன்

இப்படி நாம் இன்று இப்பொழுது அடைந்து வரும் இன்னல்களில் இருந்து தீர்வு காண்பதோடு மட்டும் அல்லாமல் மறுமையிலும் மேன்மை கொண்டு வாழ வழி இதோ :- 

எல்லா வகையான தோஷத்தினையும் நிவர்த்தி செய்யும் ஒரே பரிகாரம் :- நவ கலச பூஜை. 

நம் அய்யாவின் குருநாதர் கூற்றுக்கு இணங்ககுறித்த காலத்திற்கு மட்டும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் பொறுப்பேற்று பூஜைதனை நடத்தி வைக்க உள்ளார்கள். இது விளம்பரமோ வியாபாரமோ இல்லைகுரு கட்டிய தெய்வம் என்பதால் இந்த பூஜை நடத்தி கொடுக்கும் கடமை - ஆத்ம சீடனின் கடமையாக எண்ணி செய்ய இருக்கிறார்கள்.  மேலும் இந்த பூஜை பற்றி அறிய அல்லது பூஜை செய்வது குறித்த உங்கள் கேள்விகளுக்கு நமது மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.மேலும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இதற்கு பின் இத்தகைய பூஜை செய்வது என்பது ஈசனை காட்டிய அவரது குருவின் கைகளிலே. 

மேலும் இந்த பூஜைக்கு அதிக அளவில் செலவுகள் ஆவதில்லை.மேலும் ஒருமுறை கூறிக்கொள்கிறோம் இது விளம்பரமோ அல்லது கட்டாயமாக எங்களுடன் இணைந்து செய்யுங்கள் என்று கூறவில்லை. எங்களை ஏற்றவர்கள் ஏற்றம் பெரும் வகையில் இதை செய்கின்றோம். நம்பிக்கையை விட சிறந்த மருந்து இவ்வுலகில் இல்லை. 

விவரங்கள் வேண்டுபவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். 

குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் !!!

                             ஓம் சிவசிவ ஓம் !!               ஓம் சிவசக்தி ஓம் !!