RightClick

ஸ்ரீ சொர்ணகார்ஷ்ண கிரிவலம் -2016 மிகவும் நிறைவுற்றது

அன்புள்ள ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு வலைப்பதிவு வாசகர்கள் மற்றும் கிரிவலத்தில் கலந்துகொண்டு சிறப்பித்து நமது குருநாதரின் ஆசிர்வாதத்தையும் நேரடியாக வந்து பெற்று சென்ற நமது அன்பர்களுக்கும், அந்த அண்ணாமலையாரின் அருளையும் பெற்று சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் மற்றும் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு குழுமம் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.  தவிர்க்க இயலாத காரணத்தால் கிரிவலத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் வீண்கவலைகொள்ள வேண்டாம். நிச்சயம் நமது குருவின் ஆசிர்வாதமும்,  அண்ணாமலையாரின் ஆசீர்வாதமும்,  இந்த பதிவை  வாசிக்கும் போது உங்களை  வந்தும் சேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.


கிரிவலம் நிகழ்ச்சி


நேரம் சரியாக 6.௦௦am மணி முதலே நமது அன்பர்கள் சரியாக நமது வலை தளத்தில் உள்ளது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பலரும், பின்னும் பலரும், இரட்டை பிள்ளையார்கோவிலை வந்து சேர ஆரம்பித்துவிட்டார்கள்., நமக்கும் நம்மை சுற்றி இருந்த பொதுமக்களுக்கும் மிகவும் வியப்பாகவும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அங்கு இருந்த நமது ஆன்மீக அன்பர்களின் அனைவரின் பார்வையும் குருநாதரை நோக்கியே இருந்ததால் நாமும் காத்திருந்தோம். சரியாக 7.௦௦ am மணியளவில் அண்ணாமலையாரின் கோவில் வாசலின் முன் பகுதியை கடந்து நமது குருநாதரின் வருகையை நம் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டு அந்த இடத்தை அவர்கள் ஆரவாரத்தில் மூழ்கடித்தனர். எங்களின் ஆவல்களை புரிந்தகொண்டு எங்கள் அனைவரையும் சற்று பார்த்துவிட்டு, நின்று பின் அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு அருகே இருந்த இரட்டை பிள்ளயார்கோவிலுனுள் நுழைந்து அந்த பிள்ளையாரின் ஆசிர்வாதத்தை நமக்கும் நமது அன்பர்களுக்கும் அளித்துவிட்டு பின் அனைவருக்கும் திருநீர் பிரசாதம் வழங்கிய பின், கிரிவலத்தை குருநாதர் முன்நின்று நடத்தி செல்ல நாமும் நமது அன்பர்களும் ஐயாவின் பின் தொடர்ந்தோம்.
 
 
தேரடி முனீஸ்வரர் ஆலயம்
 
 
 

நமது ஆன்மீக அன்பர்களுக்கு  தேரடி முனீஸ்வரரின் அருளையும், ஆசியைப் பெற்றுக்கொண்டு கிரிவலப் பயணம் சிறப்பாகத்  தொடங்கியது.


இந்திர லிங்கம்
குருநாதரின் பாதத்தை தொடர்ந்த நமக்கு முதலில், கிட்டியது ‘’மன இயந்திரத்தையும் உலக இயந்திரத்தையும் ஆட்கொண்டுள்ள அண்ணாமலையார் முதல் அம்சமாக அமர்ந்திருக்கும் இந்தரலிங்கம் ஸ்தலம்-சகஸ்ரவடுகர்அங்கு நமது நன்மைக்காக நமது குரு அவர்கள் நமது அவர்கள் சிறிது நேரம் வேண்டி கொண்டு., நம்மையும் வேண்டிக்கொள்ள சொன்னார். பின் நமது அனைவருக்கும் அங்கு விசேஷசமாக செய்யப்பட்ட பூஜையில் இருந்து செய்யப்பட்ட திருநீரை அன்பர்கள் அனைவருக்கும் குருநாதர் தமது கையாலேயே வழங்கினார். பின் நாம் குருநாதரை பின் தொடர்ந்தோம்.
அக்னிலிங்கம்

இந்த இடமானது, நினைவில் மட்டும் அல்ல நெருப்பிலும் தமது இருப்பிடத்தை இடத்தை உலகிற்கு உணரவைப்பதர்காகவே தமது அமைவிட சிம்மாசனமாகப் பெற்றுள்ளார் ஆடல் அரசன்- சகஸ்ரவடுகர். .,

என்று நமக்கு நமது குருநாதர் விளக்கி உள்ளார். அந்த அற்புத இடத்தை நாம் வெறும் சில மணி துளிகளில் அடைந்துவிட்டோம். அங்கு நமது குருநாதர் அனைவரையும் வழிபடும் முறையை தனது செயல் மொழி மூலமாகவே விளக்கி நம்மை வழிபட வைத்தார். அங்கு சில நிமிடங்கள் தொலை தூரத்தில் (மலேசியா, ஹைதாராபாத், டெல்லி,பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற ஊர்களில்) இருந்து வந்திருந்த நமது ஆன்மீக அன்பர்கள் பலபேருக்காக நின்று ஆசி வழங்கி பின், சாலையோரத்தில் உள்ள சிவனடியார்களுக்கு குருநாதர் உணவு பொட்டலங்களை வழங்கினார் பின் , சிவனின் அணிகலன்களில் ஒன்றான உருத்திராட்ச்சத்தை வழங்கினார் நம் குருநாதர். இதன் பின்னர்தான்  பயணம் மேலும் வேகம் கண்டது.

எமலிங்கம்

“உயிர்களின் இயக்கத்தையும், செயல்களையும் தமது விரல் நுனியில் கொண்டுள்ள அந்த சிவபெருமான், உயிரின் துன்பங்களை உண்மையான பக்தி மற்றும் பிரார்த்தனை  மூலமாகவும் நாம் விடுப்பட்டு நன்மையைப்  பெற்றுக்கொள்ளலாம்-சகஸ்ரவடுகர்”  இதையும் நாம் நமது குருவுடன் கடந்து சென்றோம்.
நிருதி லிங்கம்

"சிவனின் நான்காவது அம்சமாக மட்டும் அல்லாது சிவ ஆசிர்வாத சின்னமாகவே அமைந்து உள்ள இந்த அமைவிடம் தான் சிவ அடியார்களை சந்திந்து நாம் நமது கஷ்டங்களை நீக்கி கொள்ள உதவும் சிவகணங்கள் போன்று உள்ள ஒரு இடம்-சஸ்ரவடுகர்" என்று நமது குருநாதர் சொன்ன நம் நினைவிற்கு வந்ததது. இவ்வளவு சக்திவாய்ந்த அந்த சிவ அம்சமும் நமது பயணத்தை சிறப்பித்தது.


வருணலிங்கம்

"இந்த கலியுகத்தில் நம்மை போன்றோரின் பாவத்தை இந்த நிலத்திலும் தொடரவிடாதபடி வருண அம்ச அடையாளத்துடன் இங்கு வீற்று இருக்கும் நம் சிவன்- சகஸ்ரவடுகர்".  நாம் இந்த லிங்கவடிவத்தை அடையும் பொது நமது நமது ஆன்மீக அன்பர்கள் சிலர் நம்முடன் வந்து இணைந்து கொண்டனர்.

வாயு லிங்கம்
"உலகில்  சிவனின் இருப்பிடத்தையும், இறைவனின் இருப்பிடத்தை உணரும் கருவியே வாயு அம்சம்.- சகஸ்ரவடுகர்". இந்த லிங்கவடிவத்தை  நாம் கடக்கும்போது, நாம் நமது உடலில் வாயுவை முதலில் முறைப்படுத்துதல்தான் சிவத்தை அடைய நாம் எடுக்கும் முதல் படி  என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதையும் நாம் மெதுவாக கடந்து  சென்றோம்.


 பொதுவாக இது போன்று கிரிவல நேரங்களில்தான், நாம் நடமாடும் சித்தர்களின் அன்பையும், ஆசிர்வத்தையும் நாம் பெறமுடியும். இங்கு உள்ள சிவனின் சிவ அம்சத்தின் பார்வையிலும், செவிகளிலும் நமது பிரார்த்தனைகள் சென்றடைந்தால் நாம் வாழ்வில் நிலையான மற்றும் நேர்மையான பலன்களை அடைந்துகொள்ளலாம். இங்கும் நமது குருவின் கைகளாலேயே நாங்கள் அனைவரும் திருநீறும், உருத்திராட்சங்ளைப் பெற்றுக் கொண்டோம்.குபேரலிங்கம்

   
நமது அன்பர்களுக்காக  முக்கியமான அம்சமாக சிறப்பு பூஜை ஒன்று நமக்காகவே  செய்யப்பட்டிருந்தது, அதில்  நாம் நமது குருவோடு அமர்ந்து கலந்துகொண்டோம். பிறகு நமது குருநாதரின் கரங்களாலே நமது அன்பர்களுக்கும்,பொதுமக்களுக்கும் சொர்ணத்தின் அடையாளமாக விஷேச விபூதியும், சொர்ண நாணயமும் வழங்கப்பட்டது. இதில் இன்னும் சிறப்பானதாக்க அகஸ்திய மகரிஷி, தன்வந்திரி பகவான் மற்றும் இடைக்காடரின் படத்தையும் வழங்கப்பட்டது.
   
  
    இந்த கிரிவலத்தின் போது நாம் பெற்ற இந்த உருத்திராட்சமும், சொர்ணநாணயங்களும் மற்றும் நம்மை முனேற்றபாதைக்கு எடுத்து செல்லும் காரணிகள் ஆகும். இதனை என்றும் நாம் தவரவிடக்கூடாதவை என்று நினைவு படுத்தினார் நம் குருநாதர். இவைதான் சொர்ணங்களை நேர்மையான வழியில் கொண்டு வந்து சேர்க்கும் வலிமை படைத்தது. எனவே இதனை பெற்று சென்ற அனைவரும், அந்த சொர்ண நாணயத்தை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பெட்டியிலோ அல்லது பீரோ போன்ற இடத்தில் பத்திரமாக வைக்கவும். வியாபாரம் செய்பவர்கள் அந்த நாணயத்தை நீங்கள் உங்கள் அலுவகத்தில் பணம் வைத்து பயன்படுத்தும் கல்லாவிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொள்ளலாம். இது போன்ற சூழ்நிலை இல்லாதவர்கள் தங்கள் மணிபர்ஸில் வைத்துக்கொள்ளலாம். அங்கு வந்த சில அன்பர்கள் தங்களுக்கும்,
 
 
 
 

 
 
 
 

 
 

இதனை செயல் முறை மூலமாகவே நாம் உணரத்தான் இந்த சொர்ணாகர்ஷ்ண கிரிவலம் ஏற்படுத்தபட்டது என்ற உண்மை நம்மிடம் விளக்கினார் நம் குருநாதர்.


ஈசான லிங்கம்

கிரிவலம் பயணத்தில் சிவனின் எட்டாவது அம்சமாகவும் அங்கம் வகித்தாலும், நம் வேண்டுதலின் பயனை இவர்தான் நிறைவு செய்வதோடு நாம் எந்த இடையூறு இல்லாமல் பயணத்தை முடிப்பதற்கு துணை இருந்தவர். இங்கு நாம் குருவின் துணையுடன் இந்த இடைத்தை அடைந்தவுடன், ஐயா அவர்கள்  அபிஷேகசொர்ண நாணயங்களை., பின் தங்கி வந்த அன்பர்களுக்காக நின்று ஐயா தன் கையாலேயே விநியோகம் செய்தார்.

நிகழ்ச்சி நிறைவு
ஈசான லிங்கத்தை அடுத்து நாம் பூதநாராயண பெருமாள் ஆலயத்தை அடைந்து சரியாக 03.30pm அளவில் அடைந்தோம். அங்கு நமக்காக முன்னே சென்று காதிருந்து நமது குருநாதர் அனைவரையும் நல்லாசியுடன் வழியனுப்பி வைத்தார்.
 
 
நன்றி
 
 
எங்களுடன் ஒத்துழைப்பு தந்த அனைத்து திருவண்ணாமலை மக்களுக்கும், ஊடக மற்றும் திருவண்ணாமலை காவல்துறையினர்களுக்கும் மற்றும் நமது ஆன்மீகஅன்பர்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் சார்பாகவும் மற்றும் ஆன்மீககடல் & ஆன்மீகஅரசு சார்பாக மீண்டும்  எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 "ஓம் சிவ சிவ ஓம்"  "ஓம் சிவ சக்தி ஓம்"

ஆன்மீகக்கடல் மற்றும்  ஆன்மீகஅரசு குழுமம்
 எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது !!! ஓம் சிவசிவ ஓம்


ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரணம் . 

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வராக குரு சாட்சாத் பிரப்ரம்ம தத்ம ஸ்ரீ குருவே நமோ நமஹ !! 

அன்புடைய ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீகக்கடலின் அன்பான வணக்கங்கள்

மாதா பிதா குரு குரு காட்டிய தெய்வம். 

இப்படி குரு அவர்களை பற்றி நாம் நமது வலைத்தளத்தில் ஒவ்வொரு முறையும் பார்த்தும் கற்றும் வருகின்றோம். ஏழைகளுக்கு உதவுவது எப்படி இறைவனை சேர்க்கிறதோ அதே போல தான் குரு அவர்களுக்கு நாம் செய்வும் பணிவிடைகளும் இறைவனையே அதாவது அந்த பரமாத்மாவையே சென்று சேர்க்கிறது... 

ஓம் நமசிவாய

ஸ்ரீ சிவயோக சச்சிதானந்த ஸ்ரீ ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள், அய்யா அவர்களை பற்றி நம் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். இன்றும் அய்யா ஸ்ரீ மாதாவானந்தர் அவர்களின் ஆசியை பெரும் பொருட்டு இந்த பதிப்பு நம் வலைத்தளத்தில் வலம் வருகிறது. ஓம் சிவ சிவ ஓம்

அய்யா அவர்கள் வாசி யோகத்தில் வித்துவான் என்றால் அது மிகையல்லபொதுவாகவே சித்த பெருமக்கள் தாங்கள் எவ்வளவு பெரிய அல்லது அரிய சக்திகளை வைத்திருந்தாலும் மிக எளிமையாகவும் ஏதும் அறியாத குழந்தைகளைப்போலவே இருப்பார்கள்.

 தன்னை நாடி வருபவன் யார் ? எதற்காக வந்திருக்கிறான் ? அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ? அது எந்த பிறவியில் தொடங்கியது, எப்பொழுது முழுமை பெறும் என்பது வரை அவர்கள் நன்கு அறிவார்கள், அறிந்திருந்தும் விதியின் பொருட்டு அதை யாரிடமும் உரைக்காமல் சிவார்ப்பணம் என்ற கொள்கைப்படி வாழ்வினை மேற்கொண்டவர்கள் மேலும் நமக்கு இறை வழிகாட்டிகளும் அவர்களே. 

சித்தர்கள் ரூபத்தில் அதாவது சரீரத்தினால் வேறுபட்டாலும் அவர்கள் ஒருவரே அன்றி வேறில்லை. 

அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரீரத்தோடு இருந்தபோதிலும், தன் ஜீவனை அடக்கி ஜீவசமாதியாக சிவத்தில் ஐக்கியமான பின்னும் சர்வ வல்லமை பொருந்தியவராக இந்த வளிமண்டலத்தில் உலா வருகின்றார்.ஆம் அன்பர்களே தன்னை நாடி வருபர்களின் இன்னல்களை  களைந்து சுபிக்ட்ஷம் அளித்துவருகிறார்கள். மேலும் அன்பர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்நின்று நிறைவேறுகிறார் அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்

அய்யா அவர்களின் ஜீவசமாதி நிறைவடையும் தருவாயில் அன்பர்களாகிய நமது உதவிக்கரம் நீட்ட என்று சொல்வதைவிட நம் கடமை அல்லது அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகளுக்கு கைங்கரியம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டியது என்றே சொல்ல விரும்புகிறேன். 

அய்யா அவர்களின் ஜீவசமாதி கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கு அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி அதாவது சிமெண்ட் மூடைகள் அல்லது செங்கல், அன்பர்கள் பலர் ஒன்றாக இணைந்து மணல், இரும்பு கம்பிகள் ( கட்டிட வேலைக்கு தேவைப்படும் ) இப்படி ஏதாவது வகையில் உதவும்படியும் இல்லையேல் பணமாகவோ காசோலையாகவோ அனுப்பும் படி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பில் ஆன்மீகக்கடல் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நேரில் வந்து உதவுவதாக இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி. 

அன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உதவும் படியும் அய்யா ஸ்ரீமாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்களின் அருளாசியும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் 

அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் சமாதி பற்றிய சில புகைப்படங்கள் இதோ , 


5E4B0DD8-53DB-4F22-A0C7-A11CC6F565EF

D5DE3A69-2031-4AAB-A7E2-4AC0B84BDB2F

FA6622BE-E0E2-4E40-8876-9C1467F58E4A

DEAEED09-2173-40DC-9137-E2FB863C255A

E6A23DA8-1A42-465D-833F-8E7596D9E672

DBD38131-5D3E-4CEA-AE83-8367A770749C

A26A99A3-7FDD-479F-9C67-8AF98CA8BA9Cஇருப்பிடம் செல்லும் வழி பற்றிய குறிப்புக்கள் : 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம்  சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த  பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.

பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.

இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு ஶ்ரீ மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.


மேலும் தொடர்புக்கு : 

திரு. மணி அவர்கள் ,  

பாம்புக்கோவில் சந்தை. 

9442890125

94429 89125  . 

ஓம் சிவசிவ ஓம்   ஓம் சிவசிவ ஓம்


ஆன்மீகம் என்பது அமைதியே அன்றி போர்களம் அன்று !!!

ஓம் சிவசிவ ஓம் !!! 

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

எங்கும் நிறைத்திருக்கும் என் அப்பன் ஈசன் அருள் யாவர்க்கும் கிட்டிடும் ! 

ஓம் சிவசிவ ஓம் .. 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வாதம் - விவாதம் இரண்டுமே கூடாது என்பர் சான்றோர். 

அமைதியை ஆயுதமாக கொண்டு அன்பு என்னும் வீரர்களுடன் யான் ( தற்பொழுது ஆன்மீகக்கடல்)  இருக்கும் வரை என் மீது தொடுக்கப்படும் அத்தனை அம்புகளும் " சாதனை பூக்களே " அன்றி வேறொன்றும் இல்லை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். 

கலியுகத்தின் தன்மை என்னன்ன பிரச்சனைகள் எந்தெந்த ரூபத்தில் வரும் என்று ஆன்மீகப்பெரியோர்களே அறிந்திராத நிலையில் நம் ஆன்மீக அன்பர்கள் - னால உள்ளம் கொண்ட இறை உள்ளங்கள் நன்மை அடையும் பொருட்டும் அன்றாட வழிந்த இன்னல்கள் களைந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ மேலும்   பிறவி பிணி என்னும் கொடிய நோயில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது வரை நம் அய்யா வழிகாட்டிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், நேரடியாக நம்மை சமாளிக்கமுடியாமல் அப்பாவி ஆன்மீக அன்பர்களை சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து கால் பந்தாடுகின்றனர். 

சிவசித்தர்கள் வழியில் ஆன்மீக ஆராய்ச்சி மூலமாகவும் நற்பல குருமார்களின் ஆசியுடனும் ஆன்மீகவழியில் பயணிக்கும் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை சித்தர்கள் கூறிய ரகசிய வழிபாடு வழிமுறைகளை பின்பற்றியும் வந்தோம். 

இன்று பல பொய்யான போலியான ஆன்மீக வழிகாட்டுதல் என்ற பெயரில் பலர் மக்களை பல வகையான அல்லலுக்கு ஆளாக்குகின்றனர். உதாரணமாக ஆன்மீக அன்பர்களின் நேரம், பணம் மன சோர்விற்கு ஆளாக்குவதோடு மட்டும் அல்லாமல் அன்பர்களின் ஆன்மீகம் என்ற எண்ணம் அழியும் படி சில நடவடிக்கையில் இறங்குகின்றனர்.  

மேலும் நம் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் என்னும் மகத்தான  கிரிவலத்தினை அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில், நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் பொருட்டு ஆன்மீக பயணத்தில் பயணித்தோம். இன்று பல் வலைத்தளங்கள் ஆன்மிகம் என்னும் பெயரில் தவறான தகவல்களை மேற்கோள் காட்டி 27.11.2016 அன்று0 தான் ஸ்ரீ கிரிவலம் -  இன்னும் வேறு ஏதோ தேதி என்றெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள். அதுவல்ல உண்மை. 

நம் வலைத்தளத்தில் அய்யாவின் ஆன்மீக வழிகாட்டுதலின் படி 11.12.2016 அன்று வருவதே செல்வங்களை ஆகர்ஷிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் ஆகும் . 

மேலும் அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் இன்று தீர்கமாக எடுத்த முடிவு என்னவென்றால் இந்த ஆண்டோடுஅதாவது 11.12.2016 நடைபெற போகும்  ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் ( திரு அண்ணாமலையில் ஆண்டுதோறும் சித்தர்கள் குறிப்பின் பொருட்டு அய்யா அவர்களால் தலைமை ஏற்று  நடத்தப்பட்டு வந்த )  இறுதியாக தலைமையேற்று நடத்த போவதாகவும் இதற்கு பின் இந்த மாதிரியான கிரிவலத்தினை நடத்த போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்கள. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியினையும் அழித்தது. 

அய்யாவிடம் இது குறித்து வினவியபோது, கலி யாரையும் விட்டுவைக்காது மேலும் இந்த முடிவு பல ஆன்மீக போர்வையில் உலவும் போலிகளுக்கு ஒரு சாட்டையடி என்றும் பைரவ பயணத்தினை விளையாடி பார்த்தவர்களுக்கு கிடைக்கப்போகும் உண்மை சன்மானம் என்றார்கள். 

குறித்த நேரத்தில் நம் அய்யா அவர்களின் வழுக்காட்டுதலோடு நம் ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் தொடங்கும் என்றும், அய்யா தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் ஆன்மீகக்கடலோ அல்லது அய்யா அவர்களோ யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம். இறைவனை தேடுபவர்களுக்கு உண்மையான கோரிக்கையை நிறைவேற்ற துடிப்பவர்களும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம். கட்டாயம் இல்லை. 

ஆன்மீகம் என்பது அமைதியின் வடிவமே அன்றி போர்க்களம் அன்று .... 

ஒரு உறையில் ஒரு வாள் வைப்பது சாலச்சிறந்தது....... 

ஓம் சிவசிவ ஓம் ! 

திருச்சிற்றம்பலம் 

திருஅண்ணாமலை ஶ்ரீ சொர்ணாகர்க்ஷண கிரிவலம் பற்றிய நினைவூட்டல்

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் !!! 

பொருள் : திருஅண்ணாமலை கிரிவலம் தொடர்பான நினைவூட்டும் பொருட்டு சொர்ணாகர்ஷண கிரிவலம் : (சொர்ணம் - செல்வம் ) = இறைவழியில் அவன் அருளால் நேர்மையான முறையில் செல்வம் ஈட்டுவது என்பது விளக்கம். 

கிரிவலம் (11-12-2016 ஞாயிறு கிழமை ) சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.45am அளவில் ஒன்று திரள்வோம். அன்பர்களே, நமது அய்யா அவர்கள் கூறியபடி குறித்த நேரத்தில் கிரிவல வைபவம் நடைபெறும் - இதில் எந்த மாற்றமும் இல்லை . அனைவரும் வருக அய்யன் சிவன் அருள் பெருக. 


எந்த வருடத்திலும் இல்லா சிறப்பு யாதெனில், கார்த்திகை தீபத்திருதாள் நம் கிரிவல நிறைவின் தொடக்கம் என்பதே

இந்த கிரிவலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வரையறுத்து கூறயிலாத அளவு நன்மை உண்டாகும் என்பது சிவசித்தன் வாக்கு .


 அண்ணாமலையாருக்கு அரோகரா !!!
உண்ணாமுலையாளுக்கு அரோகரா !!! 


                                              வாழ்க வளமுடன் !!       ஓம் சிவசிவ ஓம் !        ஓம் சிவசக்தி ஓம் !

கார்த்திகை மாதமம்மா நம் கவலைகள் தீருதம்மா !!!

ஓம் 

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீகக்கடலின் வணக்கங்கள்  !

 எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனைகளை சுமந்தவாறே சுற்றி திரியும் மனிதர்களின் சுமைகளை குறைத்து, சுகங்களை அனுபவித்து எந்த நிலையினையும் ஏற்று சமாளிக்கும் திறமையை வளர்க்கவே ஆன்மிகம் என்னும் ஞான பாடம் உள்ளது. 


 


இந்த பாடத்தில் வரும் உட்தலைப்புகள் எல்லாம் இறைவனின் அவதாரங்களை பற்றி, திருவிளையாடல்கள் பற்றி மேலும் மீண்டுவர உதவும் 
பரிகாரங்களை பற்றியதே. 

ஆம் அன்பர்களே, நமது குறிக்கோள் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பது மேலும் இறைவனை அடைய பரிகாரங்களை கருவியாக பயன்படுத்துவதே. 

இங்கு இறைவன் யார் என்ற கேள்வி தோன்றுவது இயல்பு !  அகத்திலும் புறத்திலும் இருப்பவன் அவனே ( இறைவன் ) என்ற உணர்வினை எட்டும்வரை ஆன்மீகப்பயணம்தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்த பயணத்தில் ஒரு முக்கியமான நேரம் தான் இது. 

புரியவில்லையா ?? 

கார்த்திகை பிறந்துவிட்டது நம் 
கவலைகளுக்கு ஒரு முற்று புள்ளியும் வந்துவிட்டது.

இது கார்த்திகையம்மா 
காலனை துரத்தும் காலம்மம்மா 
கவலைகளை போக்க - நம் 
காலபைரவர் அவதரிதாரம்மா !!! 

நம் ஸ்ரீ காலபைரவரை  பற்றி பல கட்டுரைகளை நமது வலைதளத்தில் பகிர்ந்து வந்துள்ளோம், நமது ஆசான் திரு சகஸ்ரவடுகர் அய்யா அவர்கள். 

கார்த்திகை மாதத்தில் வரும் கிருஷ்ணா பட்ச/ தேய்பிறை அஷ்டமியே " ஸ்ரீ காலபைரவாஷ்டமி " அல்லது ருத்ராஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இந்த வருடம் வருகின்ற 22.11.2016  அங்காரக நாளாம் செவ்வாய் கிழமை அன்று மகம் நட்சத்திரத்தன்று வருகின்றது. 

அன்பர்களே உண்மையில் இந்த நன்னாளில் ஏதோ ஒரு சக்தி வரையறுக்க முடியாது அளவு சக்தி உள்ளது என்பது ஆராய்ச்சியின் வெற்றி தன்மை. 

எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் எல்லோரையும் பாதுகாத்து பாவ விமோச்சனம் கொடுத்து அருள்வது அவரே( ஶ்ரீ கால பைரவர்) என்றால், அது மிகை ஆகாது.

காலபைரவாஷ்டமி தினத்தன்று நாம்செய்ய வேண்டியது இதுவே, 

அதிகாலையில் எழுந்து நீராடி பின் அவரவர் இல்லத்தில் பூஜை அறையில் குலதெய்வத்தினை எண்ணி ஆசிபெற்று பின் அருகில் உள்ள சிவாலயம் சென்று ஸ்ரீ காலபைரவரின் அபிஷேக ஆராதனைகளை கண் குளிர கண்டு, நெஞ்சுருகி வேண்டினால்  வேண்டியவாரே தந்திடுவான் நம் காலபைரவன் ( நேர்மையான கோரிக்கைகள் ) 

இந்த நாளில் அபிஷேக பொருட்களை அதாவது, 

அத்தர்
சந்தனாதி தைலம்  
புனுகு 
செவ்வரளி மாலை 
ஜவ்வாது 
வெற்றிலை - பாக்கு 
ஊது பத்தி 

அர்த்தகரிடம் கொடுத்து தங்கள் குடும்பத்திற்கு அர்ச்சனை செய்து காலபைரவர் துதி படவேண்டி, 15நிமிடம் தியானம் செய்து வர, சகல சம்பத்துகளும் கிடைக்கும். 
எதிரிகள் விலகுவர். செய்யும் தொழிலில் நிச்சயம் ஏற்றம் உண்டு. இப்படி பலவாறு கூறிக்கொண்டே போகலாம். 

நம்பிக்கையை அருள்பவர் காலபைரவர் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. 

 


வாழ்க வளமுடன் என்றும் நாவில் பைரவர் நாமத்துடன்  !!!

நம் முன்னோர்களால் ரகசியமாகவும் உண்மையில் சிரமப்படுபவர்களுக்கு உரைக்கப்பட்டும்,பின்பற்றப்பட்ட வழிமுறைகளில் ஒன்று !!!ஓம் சிவ சிவ ஓம் 

நமசிவாய வாழ்க 
நாதன் தாள் வாழ்க 

இமைப்பொழுதும் என்நெஞ்சில் 
நீங்காதான் தாள் வாழ்க ..., 


 


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

நாளை (14-11-016) திங்கட்கிழமை 33 ஆண்டிற்கொருமுறை இந்த நன்நாள் மீண்டும் வந்திருப்பது சிறப்பு.

அன்பர்களே சோமநாதனுக்கு உகந்த சோமதினத்தில் ( திங்கட்கிழமை ) பரணி நட்சத்திரத்தில் சிவனக்கட்டும் சிவசித்தர்களை வணங்கினால் சகலமும் கைகூடும். 

ஆம் அன்பர்களே, நம் சிவபெருமானின் அருளை பெற சிவசித்தர்களே நம் வழி .. இந்த தினம் நம் பெற்றோரை வணங்கி பின் நமது குருவிடம் ஆசி பெற்று தங்கள் இருப்பிடம் அருகில் உள்ள " ஜீவசமாதி " ( சித்தர்கள் அடங்கிய இடம் ) சென்று கீழ்கண்ட பூஜை பொருட்கள் வைத்து வணங்கி, குறைந்தது 15 நிமிடம் தியானம் செய்திட - எண்ணிய நற்காரியங்கள் ( நேர்மையான கோரிக்கைகள் ) தங்கு தடையின்றி நிறைவேறும். 

பன்னீர் ரோசா மாலை 
டைமோண்ட் கற்கண்டு 
பன்னீர் திராட்சை 
ஊது பத்தி 
வாழைப்பழம் 
வெற்றிலை - பாக்கு 
தட்சணை - உங்களால் இயன்றது ₹1 முதல் ~ ( ஆலய மேம்பாட்டிற்கு )

இந்த வழிபாட்டு முறை நம் முன்னோர்களால் ரகசியமாகவும் உண்மையில் சிரமப்படுபவர்களுக்கு உரைக்கப்பட்டும்,பின்பற்றப்பட்டும் வந்தது. 

பரிகார மேற்குறிப்பு : 

1.அருகில் உள்ள ஜீவசமாதி 
2.14-11-2016 / திங்கட்கிழமை 
3.பன்னீர் ரோசா மாலை 
4.டைமோண்ட் கற்கண்டு 
5.பன்னீர் திராட்சை 
6.ஊது பத்தி 
7.வாழைப்பழம் 
8.வெற்றிலை - பாக்கு 
9.தட்சணை - உங்களால் இயன்றது ₹1 முதல் ~ ( ஆலய மேம்பாட்டிற்கு )
10. 15 நிமிடம் தியானம்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தாற் செயின்
                                      - திருக்குறள்.


 


மக்களின் கலியுக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண உதவும் திரு.சகஸ்ரவடுகர் அய்யா அவர்களுக்கு நன்றி , இவன் ஆன்மீகக்கடல்

அன்பர்களே இது ஒரு எச்சரிக்கை கட்டுரை !!

ஓம் சிவசிவ ஓம் 

எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் ஈசனே சர்வேஸ்வரனே சரணம் !!! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

எங்கு சென்றாலும் துரத்தும் மாயை .., ஆன்மீகத்தையும் விட்டு வைக்கவில்லை. 

 

ஆம் அன்பர்களே, மாயை என்பது கலியுக அசுரன் இவன். எப்படி பட்டவன் தெரியுமா ? என்ன என்ன செய்வான் தெரியுமா ? 
அவனின் செயல்பாடுகளை சொல்லி முடியாது. ஆம் உருவம் கொண்டவனை ( அரக்கனை ) அடையாளம் கண்டு திருந்த ஒரு வாய்ப்பு தந்து, திருந்தாவிடில் அசுரனை அழித்து தர்மத்தையும் சாத்தியவார்களையும் காத்து நிற்பார், நம் இறைவன்

ஆனால் இந்த கலி, உருவம் அற்றவன். அடையாளம் காண்பதென்பது அரிது. அடையாளம் கண்டபின் அவனையும் அவனது செயலையும் தடுத்து நிறுத்துதல் அதை விட சிரமம். ஆம் 

கலியுகத்தின் தன்மையை இது தான் என்று வரையறுக்க இயலாது. எதை வேண்டுமானாலும் செய்வான் அந்த மாயாவி. 

எடுத்துக்காட்டாக, 

பிறரை, அவன் துன்புறுத்த எண்ணினால் - அவனுக்கு சாதகமாக ஒரு காரணத்தினை கூறி தான் சரியாகவும் ஏனையோர் நன்மைக்காகவும் செய்தேன் என்று விவாதம் செய்து தன்னை சரியானவர் என்று கூறிக்கொள்வான். இப்படி கூறிக்கொண்டே போகலாம். 

மாயை - கலி - மாயாவி - இது ஆண் பாலில் கூறுவதால் ஆண்கள் தான் அரக்கன் என்று அர்த்தம் அல்ல. பொதுவாக பெண்ணை மேன்மையாகவும் உயர்வாகவும் தாயாகவும் கூறுவதால் அப்படி இங்கும் கூறுகின்றோம். ஓம் சிவசிவ ஓம் . 

மாயை - மாயை ?? 

மாயை என்பது நிழல் உண்மையில் இல்லை ஆனால் இல்லாமலும் இல்லை என்பதே மாயை. புரிதல் எனது நிஜம் எனில் புரிந்து புரியாதது போல் நடிப்பது, நடிக்க வைப்பது மாயை. மாயை இப்படி அப்படி என்று வகை படுத்திக்கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமான ஒன்று " ஆவா " என்னும்  ' ஆசை ' .. 

ஆசை - ஆம் அன்பர்களே ஆசையே மாயையின் மிக முக்கியமான ஆயுதம் - போர்ப்படை தளபதி போன்றது. மாயாவியை அரசன் என்று சொன்னால் ஆசை தலைமை தளபதி ; அரசனை விட பலமடங்கு தைரியமும் சாமர்த்தியமும் கொண்டவன், இருந்தும் தன்னை ஒரு வரையறை - கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே தளபதி.  இப்பொழுது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

ஆம் அன்பர்களே ஆசை நம்மை ஆட்டுவிக்கிறது என்றால் மிகை ஆகாது. ஆசை - நாம் சொல்லி தான் இது பற்றி அறியப்போகிறீர்கள் என்றால் , இல்லை. 

ஆதி சித்தன் முதல் இன்றைய திரையுலகம் வரை இதை பற்றி பேசாதோர் இல்லை. " ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே " என்ற பாடலில் அன்றுமுதல் இன்றுவரை மனிதன் ஆசையை பற்றிய சிந்தனை அதனால் வரும் நன்மை தீமையை ஆராய்ந்தவரே அல்லல் உற்றுக்கொண்டிருக்கிறான். இன்றும் அது தீர்ந்தபாடில்லை. 

பௌத்த மதம் " ஆசையே அழிவிற்கு காரணம் என்கிறது. ஆசை நிராசையாகும் பொழுது எத்தனையோ சொல்லமுடியாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி நம்மை சீரழித்துவிடுகிறது. இறுதியில் ஆசை கொண்டோரின் உயிரையும் உணவாக உட்கொள்கிறது.  இஃது எத்தகைய கொடுமை இறைவா ??? 

இந்த ஆசையை பற்றி, இன்று - இங்கு - பேச காரணம் என்ன ? என்று எதிர்பார்க்கும் அன்பு உள்ளங்களே , இந்த ஆசை நமது ஆன்மீக வழியிலும் தன் வேலையை காட்ட வந்து விட்டது... ஆம் அது தனதுநாராசன் அரக்கனுமான மாயாவியின் ( கலி - கலியுக அரக்கன் ) கட்டளைக்கிணங்க ஆன்மீக அன்பர்களை ஆசை வழியில் இழுத்து அல்லல் படுத்தும் வேலையை செய்ய துவங்கிவிட்டான். இன்னும் புரியவில்லையா ??? 

மக்களுக்கு அந்த சக்தியை பெற்றுத்தருகிறோம் : உங்களால் இப்படியும் செய்யமுடியும் : இதை செய்தல் இது கிடைக்கும் - கிடைக்கும் வரை போராடுங்கள் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி அவர்கள் தம் வலைகளில் சிக்க வைத்து வசூல்வேட்டையிலும் இறங்கிவிடுகிறார்கள். 

இப்படி நிஜம் உண்டு என்றால் நிழல் அதனை தொடருமோ அப்படியே நிஜமான ஆன்மீக வழிகாட்டியை போல நடித்து, தற்சமயம் தப்பிவிட்டு பின் மீள துயரத்தில் அடைபட்டுக்கொள்கின்றனர். ஆம் அன்பர்களே இது ஒரு எச்சரிக்கை கட்டுரை. 

நினைத்தால் அடையமுடியாதது ஏதும் இல்லை ; அது போல காலம் கருதி செயல் செய்தால் மட்டுமே வெற்றி நம்மை வந்து சேரும் என்பது நம் அய்யா அவர்களின் கூற்றும் கூட. 

 

போலியான பொருட்களை போன்றே சில போலியான வழிகாட்டல்களும் இந்த பிரபஞ்சத்தில் உலவுகிறார்கள். அவர்களை நாம் தான் தக்க தருணத்தில் உலக வெளிச்சத்திற்கு காட்ட வேண்டும். 

நமது பதிப்புகள் வலைத்தளங்களில் திருடப்படுவது வருத்தமளிப்பதாக நமது குரு அய்யா சகஸ்ரவடுகர் கூறினார்கள். 
" உளி சிற்பி கைகளில் கிடைப்பதற்கும் திருடன் கைகளில் சிக்குவதற்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது " ,  இது நம் அய்யா அவர்கள் கூறியது. 

அன்பர்கள் உங்களது ஆன்மீக சந்தேகங்கள் மற்றும் சந்திப்பு குறித்த கேள்விகளை நம் வலைதள மின்னஞ்சல் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

குருவின் அடி பணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் .  ஓம் சிவசிவ ஓம் !!! 


அன்னம் இடுவோம் ஆண்டவன் அருள் பெறுவோம்