RightClick

ஸ்ரீ சொர்ண ஆகர்சண கிரிவல நிகழ்ச்சி நிறைவும் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றி !!


ஓம் திரு அண்ணாமலையாரே போற்றி ! 
      ஓம் தவத்திரு உண்ணாமலை தாயே போற்றி !
                                ஓம் சிவசிவ ஓம் !! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

இயற்கையின் கைகளை பற்றி கொண்டு நாம் நமது குருநாதருடன் வலம் வந்த நினைவுகளின் பகிர்தல்கள். 

ஆம் நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூற்று படி குறித்த நாளில் குறித்த நேரத்தில் திரு அண்ணாமலையில் "  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " சொர்ண ஆகர்ஷண கிரிவலம் (6-12-2015) மிக சிறப்பாக நடைபெற்றது.

என்ன வழக்கத்துக்கு மாறாக ஈசனின் சோதனை வருண வடிவில் நம்மை சோதித்தது. குருவுடன் செல்கையில் குரு காட்டிய தெய்வம் நம்மை ஏது செய்ய இயலும். 

வருகை தந்து விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு சார்பில் நன்றிகள் !! 
ஓம் சிவசிவ ஓம் !  
 
இரட்டை விநாயகர் சன்னதி : 

    கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் அன்பர்கள் நமது அய்யாவின் வருகையினை எதிர் பார்த்து ' இரட்டை விநாயகர் கோவில்' அருகில் காத்துக்கொண்டு இருந்தனர். இருளில் ஒளிரும் ஒரு தீக்குச்சியின் வெளிச்சம் போல் அய்யா அவர்கள் வருகையினை கண்டதும் நமது அன்பர்கள் அய்யா அருகில் கொடி போல படர்ந்தனர். 


விழாவில் தொலைந்த தன் குழந்தையினை கண்ட தாய் போல அய்யா நம்மிடம் வந்து நலம் விசாரித்து பின் அய்யன் விநாயக பெருமான் ஆசி வாங்கி  தந்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களும் ஆசிர்வதித்து விபூதி வழங்கி "சொர்ண ஆகர்ஷண கிரிவலத்தினை தலைமை பொறுப்பேற்று வனம் சுற்ற ஒரு அடி எடுத்து வைத்தார்கள். இப்படி இனிதே தொடங்கியது நமது கிரவல நிகழ்ச்சி. 

"ஓம் சிவசிவ ஓம்" என்னும் பிரணவத்துடன் கூடிய லோக சூட்சும மந்திரம் விண்ணை எட்டும் சத்தத்துடன் பூமியில் நடமாடும் இடி முழக்கமாய் வலம் வர தொடங்கியது அன்பர்கள் இயற்கையின் தன்மைக்கு ஏற்றார் போல தம்மை மாற்றிக்கொண்டு நமது அய்யாவின் திருவடி பற்றி நடக்க ஆரம்பித்தனர். 

தேரடி முனீஸ்வரர் அய்யா ஆலயம் : 

கிரிவல காவலாய் அய்யன் முனீஸ்வரன் துணையினை பெற்று அய்யா ' கோழி தனது பிள்ளைகளை(கோழி குஞ்சுகளை) யாரும் அண்டாதவாறு - இங்கு துர் ஆவிகள் எனும் எதிர்மறை எண்ணங்கள் ( negative thoughts ) நம்மை தொடாதவாறு சகஸ்ரவடுகர் அவர்கள் நம்மை தாங்கி சென்றார்கள் என்பது திண்ணம். 
திரு அண்ணாமலையில் எங்கும் நமது மஞ்சள் நிற வேஷ்டி - சேலைகள் தெரிய ஆரம்பித்தது. மக்கள் நம் கூட்டதை உற்று நோக்க ஆரம்பித்தனர். சிவ முழக்கம் வலுபெறும் வண்ணம்  இயற்கை நமக்கு கைகொடுத்தது ஆம் அந்த கொட்டும் மழையில் யாவரும் நிழற்குடையின் கீழ் இருக்கும் பட்சத்தில் நாம் நமது குருவுடன் அதும் ஓங்கார நாதத்துடன் வலம் வருவதை சிவதிருவிளையாடல் என்று சொன்னால் மிகையாகது. 

"மாதா பிதா குரு தெய்வம் " என்பது போல் பெற்றவர்களின் ஆசிர்வாதம் பெற்று இன்று குருவின் கையில் எங்களை தந்து அவர் காட்டும் கடவுளை காண வந்தோம் - என்று சொல்லாமல் சொல்லும் வண்ணமாய் நாங்கள் இயற்கையின் தொட்டிலில் குருவின் தாலாட்டில் துங்காமல் தூங்கி (தியானத்தில்) வலம் வந்தோம் . 


இந்திர லிங்கம் :

இந்திர லிங்கத்தில் அய்யா ஆசி வழங்க. நாங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினோம். எங்களது பயணம் தொடர ஆரம்பித்தது. எங்களுடன் தூய ஆத்மாக்கள் பல்வேறு ஸ்திர ரூபன்களுடனும் அரூபங்களாகவும் உடன் வரத்தொடங்கினர். ஓம் சிவசிவ ஓம் = ஓம் சிவசக்தி ஓம் ! அக்னி லிங்கம் : 

இங்கு நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களை தீயில் போட்டு எரிக்கும் வண்ணம் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அக்னி லிங்க ஆசி வழங்கினார்கள். சில சூட்சுமங்களை நாம் நமது வலைத்தளத்தில் எழுத இயலாது . இருந்தாலும் அய்யா சொல்லிற்கு இனங்கி  இந்த குறிப்பு சொல்லப்பட்டது. வந்தவர்கள் யாவரும் பாக்கியவான்களே. இதன் அர்த்தம் பின் வரும் காலங்களில் கட்டாயம் புரியும் என்பது அய்யாவின் சொல் . ஓம் சிவசிவ ஓம் !! 

பிரதான கொள்கை : 

ஜீவகாருண்யமும் அன்னதானமுமே நம் பிரதான கொள்கை !! ஓம் சிவசிவ ஓம் ! 


சூட்சும வடிவில் சித்தர்கள் உலா ... எம் பெருமான் ஈசனுக்கே சம்பர்பணம் ! 

எங்கள் இடர் தீர்க்கும் ஈசனே உம் திருவடி சரணம் அய்யா !!!

எம லிங்கம் : 

பயங்களில் "மரண பயமே" மிக கொடிய பயம் என்பதை யாவரும் நன்கு அறிவோம். இந்த பயம் போக்கவே நமது குரு சூட்சும வடிவில் நமக்கு ஆசி வழங்கினார்கள். 
மேலும் தனித்தனியாக அன்பர்கள் அனைவருக்கும் அய்யா மரண பயம் நீங்க சிவ - நீறு அதாவது திரு என்னும் செல்வம் குறிக்கும் திருநீறு பூசி நமக்கு ஆசி வழங்கினார்கள்.. ஓம் சிவசிவ = ஓம் சிவசக்தி ஓம் !! 

நிருதி லிங்கம் :  

கிரிவல பாதையில் உள்ள நான்காம் லிங்கம் ஆகும். நற்பேறு-புகழ் மற்றும் நல்ல உடல் நலம் தருவது என்பதால் இவை யாவும் நாம் பெற  வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அய்யா  சகஸ்ரவடுகர் அவர்கள் வணங்கி நமக்கும் ஆசிகளை வாங்கித்தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கனியன் பூங்குன்றனார் அவர்களின் கூற்றுப்படி அன்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவரையும் தம்மை போல எண்ணி செல்லும் பொருட்டு அய்யா நம்மை வழிநடத்தினார்கள் . அன்பர்களுக்கும் அய்யா அவர்களுக்கும் நன்றி .

வீதிகள் தோறும் சிவ முழக்கங்கள்,


ஓம் சிவசிவ ஓம் !!! 


சித்தர்கள் காட்டிய வழியில் - நவதானியத்தயங்கள் இயற்கைக்கு சமர்பணம் ! 
வருண லிங்கம் : 

ஆத்ம தாகம் தீர்க்கும் வண்ணம் வருணனை வரவழைத்து நம்மை ஆட்கொண்ட லிங்கம். தாகமாய் வந்தோர்க்கு இழைப்பற வந்த வற்றாத நீர் ஊற்று போல குரு அவர்களின் திருவடி ( கண்கள் ) ஆசிகள் பலவாறு செய்து எம்மை ஆட்கொண்டமைக்கு நன்றி - சிவசிவ சிவசிவா 


வாயு லிங்கம் : 

வாயு - காற்று ;  நம்மை சுற்றிலும் நிறைத்த அந்த காற்றின் அரசன் தான் இந்த சிவலிங்கம் ;  நமது உடலில் மேலும் சக்திகளை கிரகித்து வைத்துக்கொள்ள நம் அய்யா நம்மை இங்கு -  இந்த தளத்தில் தான் ஆயத்த (தகுதி ) படுத்தினார்கள். 'நம்பிக்கையே நல்ல மருந்து' என்பது இலை மறை காய் - சகஸ்ரவடுகர் 

குபேர லிங்கம் : 

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் அல்லது குபேர கிரிவலம் இந்த லிங்கத்திடமே கோரிக்கையாக வைக்கப்பட்டது. இங்கு தான் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நிகழ்ந்தது ஆம் அன்பர்களே. கிரிவலத்திற்கு வந்தவர்கள் நிச்சயம் பேறு பெற்றவர்கள் தாம். நமது அன்பர்களுள் ஒருவர் "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்து அந்த சொர்ணங்களை கொண்டு வந்தார்கள்,திரு அண்ணாமலைக்கு.மேலும் இந்த பைரவ தளம் சைவ சமய நால்வர்களால் போற்றி பாடப்பட்ட இடம் என்பது குறிப்படத்தக்கது.ஈசனின் ஆட்டம் தொடங்கியது, சகஸ்ரவடுகர் அவர்கள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்து விட்டு அருகில் இருந்த மரத்தடிக்கு சென்றார்கள் அப்போது கோவிலில் இருந்து வந்த அன்பர் ஒருவர், அர்த்தகர் தங்களை உள் லிங்க பிரதிஷ்டை செய்த அறைக்கு அருகில் வந்து தரிசிக்கும் படி சொல்ல நாங்கள் அனைவரும் வியப்பிற்கு ஆளானோம். பின்பு அய்யா "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்த அந்த சொர்ணங்களை  மீண்டும் " குபேர லிங்கதிடமும் " வைத்து தரும் படி அர்த்தகரிடம் கூறி, அனுமதி பெற்று ஆசி வாங்கி பின் அன்பர்களுக்கு ' சகஸ்ரவடுகர் அய்யா ' வழங்கி  ஆனந்தம் அடைந்தார்கள் குறிப்பிடத்தக்கது.


கண்களில் நீர் நிறைந்திருக்க அய்யா சில ரகசியங்களையும் உண்மைகளையும் கூற ஆரம்பித்தார்கள். 

அய்யா அவர்கள் கூறிய அனைத்தையும் இப்போது இங்கு கூற இயலாது. இந்த இடத்தில் அன்பர்களுக்கு மூச்சு பயிற்சி உபதேசமும் பூசணி சித்தர் பற்றியும் அவர்களின் சிவ தொண்டு - மக்களுக்கு அவர் செய்த சேவை  மற்றும் மக்கள் குறைகளை அவர் தீர்த்த விதம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்,அய்யா .. ஓம் சிவசிவ ஓம் !! 


அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மௌனம் மேற்கொள்ள போவதாகவும் - தியானம் - தவம் - சமாது - ஆசிரமம் குறித்த பல அறிய தகவல்களை தந்தார்கள் : 

அய்யா அவர்கள் நமக்காக நம் நலம் வேண்டி நாம் யாவரும் சிவகதி எனும் பேரின்பம் பெரும் பொருட்டு ஆசிரமம் அமைக்க போவதாக கூறினார்கள்; இத்தனை நாள் இல்லாமல் இன்று கூறியதன் காரணம் ஈசன் இட்ட கட்டளை என்று கூறி நம்மை ஆனந்த பெரு வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். மேலும் ஒரு கை ஓசை எழுப்பாது அன்பர்கள் நீங்களும் உங்களால் முடிந்த ஒத்துழைப்பினை தரமாறு கேட்டுக்கொண்டார்கள், திரு சகஸ்ரவடுகர் அவர்கள். 
ஆசிரமம் பற்றிய முழு தகவல் பின்னாளில் அறிவிக்கப்படும் - எங்கு அமைகிறது ? எப்படி இருக்கும் ? நீங்கள் உதவ எவ்விதமாக (பணமாக /வரை ஓலையாக / கட்டுமான பொருட்களாக ) வேண்டும் ? அன்பர்கள் யாவரும் உதவும் படி ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீக கடல் குழுமம் சார்பாக நாங்களும் கேட்டு கொள்கிறோம். 

இன்னும் சில காலங்களில் அய்யா அவர்கள் மௌனம் மேற்கொள்ள போவதாகவும் இது ஈசனது கட்டளை என்றும் கூறினார்கள். 

சிறுது நேர மௌனத்திற்கு பிறகு வந்த அன்பர்கள் அனைவருக்கும் சகஸ்ரவடுகர் அவர்கள் நன்றி கூறியது நெஞ்சை நெகிழ்ச்சிக்கு ஆழ்த்தியது. ஆம் நன்றி கூறிய நம் அய்யா அன்பர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கி சொர்ணகாசுகளை தந்து அருள் புரிந்தார்கள். 

பின்பு அனைவரும் குபேர ஆசியுடன் நம் அய்யாவின் வழிகாடுதலின் பெயரில் நடையினை தொடர்ந்தோம் சிவ முழக்கத்துடன் " ஓம் சிவசிவ ஓம் " ஓம் சிவசிவ ஓம் " ஓம் சிவசிவ ஓம் " ஓம் சிவசக்தி ஓம் " என்றவாறு கிரி சுற்ற ஆரம்பித்தோம். 


ஈஸான்ய லிங்கம் : 

    அஷ்ட லிங்கங்களுள் எட்டாவது, ஈசன்யத்தில் அமைத்தது - பற்று அற்ற நிலையினை எய்தும் பொருட்டு திரு சகஸ்ரவடுகர் அய்யா நமக்கு ஆசி வழங்கி (ஒளி - சிவதரிசனம் ) பயணம் முடியும் பொருட்டு நடை தொடர்ந்தது. 

பூத நாராயணன் கோவில் : 

ஈசான்ய லிங்கத்தில் தொடங்கிய நடை பூத நாராயணன் திருவடியில் வந்து நின்றது நமது அய்யா அவர்களோடு. இங்கு திரு சகஸ்ரவடுகர் அவர்கள் இறுதி உரை தந்து அன்பர்களை ஆசிர்வதித்து கிரிவல நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள் . கிரிவலம் இனிதே நிறைவு உற்றது. ஓம் சிவசிவ ஓம் !!! 
நன்றி திரு சகஸ்ரவடுகர் அய்யா -  நாங்கள் பாக்கியவான்கள் தான் இப்படி ஒரு ஆன்மிக வழிகாட்டி எங்களை வழி நடத்தி செல்வது நாங்கள் முற்பிறப்பில் செய்த புண்ணியம் தான் அய்யா. கட்டாயம் நமது ஆசிரமம் அமைய எங்களால் இயன்ற பண உதவியும் பொருள் உதவியும் செய்வோம் மேலும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் இது நல்ல முறையில் நடைபெற வேண்டி. அன்பர்களே நாமும் நம்மை போன்றவர்கள் நலம் பெற்று வாழ்வில் முன்னேற உதவுவோம் . நன்றி அன்பர்களே ! 

அன்புடன் ஆன்மீக பாதையில் "ஆன்மீக கடல் மற்றும் ஆன்மீக அரசு" குழுமம்