RightClick

கண்ணீருக்கு இனிமே அவசியம் இல்லை!! ஆதிச்சித்தன் நம் ஈசன் இருக்கும் வரை !!

அய்யா பூசணி சித்தர் அவர்கள் வழியில் சகஸ்ரவடுகரின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகள் :


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !! 

திருச்சிற்றம்பலம் !  எல்லாம் சிவமயம் !! " குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்" - ஔவை அம்மையார். 

நமது குரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் தம் வாழ்வில் மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் எண்ணிலா ஆன்மீக சூட்சும உண்மைகளை நம்முடைய இந்த வலைதளம் வழியே நமக்கு உபதேசித்து இருக்கிறார்கள் இன்று வரை உபதேசித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இன்று மேலும் ஒரு முக்கியமான சித்த ரகசிய ஆராய்ச்சி முடிவினை, சித்தர்கள் காட்டிய வழி நின்று நம்மிடம் பகிர்கின்றார்கள்.

ஓம் சிவசிவ ஓம் = ஓம் சிவசக்தி ஓம் : 

எவ்வளவு உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை - மனக்கோளாறு - செய்வினை கோளாறு - சுற்றத்தாரின் வஞ்சம் - தொழில் முடக்கம் - எடுத்த நல்ல காரியங்களில் தடை - குல தெய்வ அருள் இல்லாமை - நாள்பட்ட வியாதி (நோய் ) - போட்டி பொறாமை குணம் நீங்க - பில்லி - சூனியம் - ஏவல் நீங்க, நல்லவனாக வாழ 
( நல்ல எண்ணங்களுடன் கூடிய நேர்மையான உங்களது கோரிக்கைகள் மட்டும் ) 

இதோ நம் சித்தர் கூறிய வழி, 

முன்னொரு காலத்தில் சித்தர்களின் பூமியாம் நம் "திருஅண்ணாமலை"இல்  சித்தர் ஒருவர் மக்களின் குறைகளை ( எவ்வளவு உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை - மனக்கோளாறு - செய்வினை கோளாறு - சுற்றத்தாரின் வஞ்சம் - தொழில் முடக்கம் - எடுத்த நல்ல காரியங்களில் தடை - குல தெய்வ அருள் இல்லாமை - நாள்பட்ட வியாதி (நோய் ) - போட்டி பொறாமை குணம் நீங்க - பில்லி - சூனியம் - ஏவல் நீங்க, நல்லவனாக வாழ 
( நல்ல எண்ணங்களுடன் கூடிய நேர்மையான உங்களது கோரிக்கைகள் மட்டும் ) நீக்கி அருள் புரிந்து வந்தார்கள். 

அந்த மகான் மக்களின் குறைகளை பூசணி காய்களை கொண்டு நிவர்த்தி செய்து வந்தார்கள். ஆம் ஒப்பிட முடிய வண்ணம் மகத்துவத்தை கொண்டது இந்த பூசணிக்காய். 

இந்த சாது தனது பூஜைக்கு அதிக அளவில் பூசணி காய்களை பயன்படுத்துவார்கள்.அதே போல் தம்மை நாடி வரும் பக்தர்களையும் பூசணிக்காய் வாங்கி வர சொல்வார்கள். இப்படி ஒரு கோடி பூசணிகளில் ஒரு பூசணியில் எம் பெருமான் "சிவலிங்க" வடிவில் காட்சி தந்து அருள் புரிந்ததாக வரலாறு உண்டு. சித்தர் அவர்களை, ஒரு முறை, மருத்துவ நண்பர்களால் கைவிட பட்ட அன்பர் ஒருவர், அய்யா அவர்களை சந்திக்க வந்தார். ஐயனை கண்டதும் அன்பர் மனம் கசிந்து அழுகின்றார். பயிர்கள் வாடினாலே  தானும் வாடும் தன்மை பொருந்தியவர்கள் சித்தர்கள். இந்த மானுடனை கண்டு சித்தரும் நெகிழ்ந்து அந்த அண்ணாமலையார் அருள் கொண்டு ஞான திருஷ்டியில் அன்பரின் வியதியினை கண்டறிந்து கொண்டார்கள். குறளின் படி, "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்......" என்பது போல் வியாதியின் மூலத்தினை கண்டறிந்தார் சித்தர் மூலம் "கர்ம வினையுடன்" தொடர்பு உடையது என்பதை அறிந்து யாகம் ஒன்றினை செய்ய வேண்டும் அதில் பூசணிக்கே முக்கியதுவம் என்றும் தம் சீடர்களிடம் பரி பாஷையில் பேசிக்கொண்டார்கள் சித்தர் பெருமான். 

பூஜை தொடங்கியதும் தம் வலி குறைவதை அன்பர் உணர ஆரம்பித்தார். பின் பூசணி யாகத்தை சித்தர் அவர்கள்  சிவனுக்கு அர்பணித்தார். அன்பரும் தம் வியாதியில் இருந்து பூரண குணமடைந்ததுடன் மரணமில்ல பெருவாழ்வு பெற்றான் சித்தர் அவர்களின் அருளாசியால் !!! 


இது போன்று அவர்கள் அன்றாடம்  மக்களுக்கு உபதேசமும் மக்கள் தம் குறைகளையும் "பூசணி காய்களை"கொண்டு சரி செய்து வந்தமையால் சாது அவர்கள் " பூசணி - சித்தர் " என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்கள். 

அப்படிப்பட்ட பூசணி யின் பெருமையை மக்கள் யாவரும் அறிய வேண்டும் என்று, சித்தர் அவர்கள் தம் இறுதி நாட்களில் மலையாய் எழுந்து அருளி இருக்கும் சிவபெருமானை சுற்றிலும் (தற்போதைய 14 கிலோ மீட்டர் சுற்று வட்ட பாதை) இறைவனின் ஆணைக்கிணங்க பூசணி விதைகளை தூவி சென்றார்கள். 

இறுதியில் எல்லாம் வல்ல 'சிவ ஜோதியில்' பூசணி சித்தர் அவர்கள் ஐக்கியம் ஆனார்கள் . சித்தர் அவர்களுக்கு தனி ஜீவ சமாது  கிடையாது மேலும் இன்றளவும் பூசணி சித்தர் அவர்கள் சூட்சும வடிவில் அண்ணாமலையில் பக்தர்களுக்கு இன்னல் நீக்கி அருள் பாலித்து வருகிறார்கள் என்று சித்தர் பெருமானின் ஆசி பெற்றவர்கள் கூறுகின்றார்கள். 

ஆம் அன்பர்களே இபோது புரிகிறதா ?? 
நாம் ஏன் சுப வைபவங்களில் பூசணி காயினை சேர்க்கின்றோம் என்று ! 

பூசணி கொண்டு எப்படி தீர்வுகாண்பது என்று யோசிக்கீன்றீர்களா - கவலையினை விடுங்கள்.. எந்த நாளில் செய்வது ??? எப்படி செய்வது ? எங்கு சென்று செய்வது ?? 

இந்த புண்ணிய பரிகாரத்தை "சிவராத்திரி" நாளில் தான் செய்ய வேண்டும் - ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி நாளில் செய்ய விரைவில் சித்தியாகும். நேரம் - காலை/மாலை  ஆனால் சிவராத்திரி நாளில் தான் செய்ய வேண்டும்.வளர்பிறை
சிவராத்திரி சால சிறந்தது. 

பூசணி ஒன்றை வாங்கி இரண்டாக நறுக்கி (யாருக்கு நலம் வேண்டுமோ அவர்கள்) பின்பு அருகில் உள்ள சிவாலயம் சென்று வெட்டிய பூசணிக்காயை கொடுத்து உங்களது பெயரில் (தோஷம் நீங்க வேண்டியவர் பெயர்கள் மட்டும் )கூறி அர்ச்சனை செய்து, அர்த்தகரிடம் அந்த வெட்டிய பூசணி காயினை வாங்கிக்கொண்டு அதை சிறிது சிறிதாக வெட்டி ஆலயத்தில் உள்ள கோசாலை பசுவிற்கு கொடுக்க வேண்டும். பசு இல்லை என்றால் எருமை மாட்டிற்கு கொடுக்கவும் ;அதுவும் இல்லை என்றால் ஆடுகளுக்கு கொடுக்கவும். எளிமையாக தோன்றினாலும் பூர்வ ஜன்ம பலனடிப்படையில் தான் யாவும் நடக்கும். 

சிவாலயம் செல்ல இயலாதவர்கள் தங்கள் அருகில் உள்ள ஜீவ சமாது சென்று வழிபடவும்.பூசணிக்காயை கொடுத்து உங்களது பெயரில் (தோஷம் நீங்க வேண்டியவர் பெயர்கள் மட்டும் )கூறி அர்ச்சனை செய்து, அர்த்தகரிடம் அந்த வெட்டிய பூசணி காயினை வாங்கிக்கொண்டு சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு பின்பு பூசணியை (சிறிது சிறிதாக வெட்டி )பசுவிற்கு கொடுக்க வேண்டும். பசு இல்லை என்றால் எருமை மாட்டிற்கு கொடுக்கவும் ;அதுவும் இல்லை என்றால் ஆடுகளுக்கு கொடுக்கவும். எளிமையாக தோன்றினாலும் பூர்வ ஜன்ம பலனடிப்படையில் தான் யாவும் நடக்கும். 


சிவாலயத்திற்கு அல்லது ஜீவ சமாது சென்று செய்ய இயலாதவர்கள் , சித்தர்கள் பூமியாம் மலையே லிங்கமாக திகழும் "திருஅண்ணாமலை " சென்று அதாவது சிவராத்திரி நாளில் சென்று கையில் பூசணிக்காய் ஏந்தியவாறு கிரிவலம் வந்து (நடந்து கிரிவலம் செல்வது உத்தமம் )
பின் மேற்கூறியவாறு பசுவிற்கோ எருமைக்கோ அல்லது ஆடுகளுக்கோ அந்த பூசணியை சிறிது சிறிதாக வெட்டி கொடுத்து வர உங்களது நேர்மையான வேண்டுதல்களும் மேலும் எப்பேற்பட்ட பில்லி - சூனியம் - ஏவல்  - செய்வினை கோளாறு இப்படி தீர்க்க முடியாத வினைகளும் வியாதிகளும் தீரும் என்பது சித்தன் வாக்கு. சித்தன் வாக்கு சிவன் வாக்கு!! 

                                                                                                                          - சகஸ்ரவடுகர் 

                                  
                                       ஓம் சிவசிவ ஓம் !                               ஓம் சிவசக்தி ஓம் !  இன்று போல் என்றும் உங்களது ஆராய்ச்சி முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம் அய்யா, தகவலுக்கு நன்றி என்றும் ஆன்மீக வழியில் ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு குழுமம்.( எங்களுக்கு ஆன்மீக கடல் / ஆன்மீக அரசு தவிர வேறு வலைத்தளங்கள் இல்லை அன்பர்களே)