RightClick

மார்கழி மாதமும் ஸ்ரீவி ஆண்டாள் அருளும் - அய்யா சகஸ்ரவடுகர்

ஓம் அண்ணாமலையாரே போற்றி ! 
ஓம் உண்ணாமலை அம்மையே போற்றி !! 

ஓம் சிவசிவ ஓம் !! 

ஓம் நமோ நாராயணாய !!! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்

         " நல்லதை நினைப்போம் - நல்லதே நடக்கும் " .. மார்கழி மாதமும் ஸ்ரீவி ஆண்டாள் அருளும் - என்ற உட்கருத்தின் அடிப்படையில் பல வருட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவினை, பலனாக மாற்ற அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும் ஆன்மீக வழிமுறைகள் இதோ !! நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடைய இப்படி பல நன்மைகளை பயக்கும் திருத்தலமாக விளங்குகிறது நம்   ஸ்ரீஆண்டாள் திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர். (இந்தியா - தமிழ் நாடு - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ) ஸ்ரீ ஆண்டாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி நாம் நன்கு அறிவோம் இருப்பினும் ஒரு சிறு குறிப்பு ;

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் - 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் இது. 

வில்லி என்பவர் இந்த காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது என்றும் வரலாறு உண்டு .

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

நோய் தீர்க்கும் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க்காப்பு: 

 திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் : 

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்..

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் : 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் 'பூரம்' அன்று ஸ்ரீ ஆண்டாள் தேரோட்ட உற்சவம் நடைபெறும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு திருத்தேர் வடம் பற்றி ஊர்வலம் வந்து வழிபடுவர்.
18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர்( மாற்று தேர் ஊர்வலம் நடைபெற்றது ) பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். 

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே)

காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம்,கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது. (கருத்துகளை பகிர்ந்ததற்காக நன்றி ஆன்றோர்களே)

இப்படிப்பட்ட திருத்தலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ? எப்படி பலன்களை பெற வேண்டும் ? எந்த நாள் ? எந்த நேரம் ? பதில் இதோ 

மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாள் அதாவது நாளை (1-1-2016) முதல் 14-1-2016 வரையில் உங்களது வசதிக்கு ஏற்ப காலையிலோ (மிக்க நன்று ) அல்லது மாலையிலோ கோவிலின் பிரகாரம் சுற்றி வந்து பின்பு வடகிழக்கு பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சென்று ( முறையாக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் ) மாளிகையின் ஒவ்வொரு மூலையிலும் குறைந்தது 1 நிமிடம் நின்று உங்களது கோரிக்கையினை மனதில் வைத்து அம்மையாம் ஸ்ரீ ஆண்டாள் அவர்களிடம் சமர்பித்து ( 4*1=4 நிமிடங்கள் பிராத்தனை நேரம் ) இப்படி 16 முறை கண்ணாடி மாளிகைக்கு உள்ளே வலம் வர வேண்டும்(கன்னி மூலையில் தொடங்கி அக்னி,ஈசான்யம்,வாயு மூலையில் முடிக்க வேண்டும் - பிறருக்கு ஐயம் வாராதபடி ) சுற்றி வரும் பொழுது பிறரிடம் பேச்சை தவிர்ப்பது நன்று.  பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.மிக விரைவில் பலனை அடைவார்கள்.இதை முடித்த பிறகு கோவிலின் உட்பிரகாரம் சுற்றி வந்து நேராக கருவறை அருகில் சென்று அன்னை ஸ்ரீ ஆண்டாள் அம்மையைசேவித்து தங்களது பெயர் - நட்சத்திரம் அர்ச்சனை செய்து, கோசாலை சென்று பசுவிற்கு வேண்டிய தருதல் நன்று ( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) அல்லது யானைக்கு கரும்புகளை கொடுக்கவும்( கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ) மேலும் நமது பிரதான கொள்கை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் கூறும், 
அன்னதானம் செய்ய வேண்டும் ( தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல் )
இதை முடித்த பின்பு அவரவர் இல்லத்திற்கு செல்வது சாலச்சிறந்தது,. கட்டாயம் கை மேல் பலன் உண்டு என்பது அய்யாவின் கூற்று. 
இப்படி செய்தால் உங்களது நேர்மையான கோரிக்கைகள் உட்பட நமக்கு அன்றாட வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, ஆழ் மன சக்தியினை தட்டி எழுப்ப, காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை எய்த, திருமண தடை நீங்கி சுபிக்சமாக  வாழ, உடல் - மன தூய்மை பெற, பெண்களுக்கு தைரியம் - அழகு - கட்டுப்பாடு - நற்பண்பு பெருக, பொருளாதார நெருக்கடி நீங்க, உண்மையின் பெருமைதனை அடையலாம் . 

இதை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது உத்தமம். 

இத்தகைய அறிய ரகசிய கருத்தை ஆராயிந்து நமக்கு அளித்து,  நம் இன்னல் நீங்க வழிகாட்டும் ஆசான் அய்யா சகஸ்ரவடுகர்அவர்களுக்கு ஆன்மீக கடல் சார்பாகவும் எங்களது அன்பர்கள் சார்பாகவும் நன்றிகள் பல. 

வாழ்க வளமுடன் 

ஓம் சிவசிவ ஓம்!!! ஓம் சிவசக்தி ஓம் !! 

குறிப்பு : 

1) மார்கழி மாதம் 
2) ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் 
3) கண்ணாடி மாளிகை - 4 மூலைகள் - 1 நிமிட பிராத்தனை -அதே போல 16 முறை வலம் (மாளிகைக்கு உள்ளே ) 
4) உட்பிரகாரம் சுற்றி கருவறை அன்னை ஸ்ரீ ஆண்டாள் வழிபாடு - தங்கள் பெயர் கூறி அர்ச்சனை 
5)  கோசாலை - பசுவிற்கு அன்னம் / யானைக்கு கரும்பு ( கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்று ) 
6)  பிரதான கொள்கை - அன்னதானம் (தகுதிக்கு ஏற்ப ) 
7) வேறு எங்கும் செல்லாமல் தங்களது இல்லத்திற்கு செல்லவும் 


" ஆருத்ரா தரிசனம் " - சென்றால் வென்றிடலாம், செல்வோமா ??

ஓம் சிவசிவ ஓம் !!! 

தென்னாடுடைய சிவனே போற்றி ! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! 

ஆன்மீக அன்பர்கர்களுக்கு வணக்கம். 

நாம் நலமுடன் வாழ , நல்வழியில் செல்ல , நல்ல சிந்தனையுடன் செயல்பட ஆன்மீக ஆராய்ச்சிகள் பல செய்து முடிவுகளை கட்டுரையாக தந்து கொண்டு இருக்கும் திரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் " ஆருத்ரா தரிசனமும் அதனால் விளையும் நன்மைகளும்"  என்று நமக்கு நல்லதொரு வழியினை சிவ வழிபாட்டினால் இங்கு விளக்குகிறார்கள். 

ஓம் சிவசிவ ஓம் !! 

ஆருத்ரா தரிசனம் " என்பது நாம் நன்கு அறிந்ததே . மீண்டும் ஓர் நினைவூட்டல். மார்கழி மாதம் - முழு நிலவாம் "பௌர்ணமி" அன்று "ஆருத்ரா" எனும் "சிவ பெருமானின்" நட்சத்திரம் அதாவது 'திருவாதிரை' வருவது ,  நன்னாளில் சிவபெருமான் அம்மையோடு தேரில் பவனி வந்து மக்களுக்கு அருள் புரிவார்கள். இதில் ஈச வடிவமானது திரு நடராசர் அமைப்பாகும் எனவே  தில்லை அம்பலம் என்னும் ஆகாய தலமே இந்த ஆருத்ரா தரிசனத்திற்கு பேரு பெற்ற தலம் ஆகும். இறைவன் எங்கும் நிறைந்தவன்; எதிலும் தெரிபவன் : ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை களி குறித்த புராண கதைகள் : 

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.

 மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் வருவதாக புராணங்கள் கூறுகிறது. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்று அழைப்பர்.

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் தேரில் வீதி வலம் மக்களுக்கு அருள்பாலிப்பார். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் இங்கு வருவது நாம் அறிந்ததே. சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.( ஆன்றோர்களுக்கு நன்றி ) சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். 

 மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. மக்கள் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். 

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது. ( ஆன்றோர்களுக்கு நன்றி ) 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் நமது  கர்ம வினை நீங்கி நற்பேறு பெரும் பொருட்டும் - தடைபட்ட திருமணம் ;  கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ; நோய் நொடியின்றி வாழ ; நேர்மையான கோரிக்கைகள் இப்படி எல்லாவித நலனும் கிடைக்க பின்வருவனவற்றை வருகின்ற 26-12-2015 சனிக்கிழமை அதிகாலையில் இருந்து - மதியம் 12 மணிக்குள் செய்ய யாவும் பலிதமாகும் என்பது நமது அய்யா சகஸ்ரவடுகரின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை . 


அதிகாலை நீராடி அருகில் உள்ள சிவாலயம் சென்று முதலில் வெளிபிரகாரம் ஒரே ஒரு முறை சுற்றி பின் கொடிமரம் அருகில் சென்று ஈசனிடம் மனதார வேண்டி (நேர்மையான கோரிக்கைகள் ) பின்பு நேராக கோவிலின் உள் சென்று உட்பிரகாரதினை ஆறு முறை கட்டாயம் சுற்ற வேண்டும் . இங்கு வேண்ட கூடாது , சிவ எண்ணத்திலே சுற்ற வேண்டும் ( யாரிடமும் பேச வேண்டாம் ). சுற்றிய பின்பு கோவில் (கருவறை - நின்று தரிசிக்கும் இடம் )உள்ளே சென்று உங்களது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு தான் அர்ச்சனை. அர்ச்சனையை முடித்த பின்பு நமது பிரதான கொள்கையாக நம் சகஸ்ரவடுகர் அய்யா கூறிய அன்னதானம் செய்ய வேண்டும் கட்டாயம் குறைந்தது 6 பேருக்கு செய்ய வேண்டும். சூட்சும வடிவில் சித்தர்களே வந்து உண்பதாக அய்யா அவர்கள் கூறினார்கள். அதனை விசேஷம் மிகுந்த நாள் இந்த ஆருத்ரா தரிசன நாள். நம் இன்னல் தீர்ந்து இறைபாதம் அடைய இதைவிட எளிய வழி எங்கும் உண்டோ ?? ஆன்மீக ஆராய்ச்சியில் தன்னையே அர்ப்பணித்து எங்களை போன்றோருக்கு உதவும் அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றிகள் பல!!! 


அன்பர்களே இதில் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் : 

1) 26-12-2015 சனிக்கிழமை அதிகாலை முதல் மதியம் 12 மணிக்குள் (11.50 am வரை)
2) அருகில் உள்ள சிவாலயம் 
3) ஒரு சுற்று வெளி பிரகாரம்  - 6 சுற்று உட் பிரகாரம் ( கட்டாயம் சுற்ற வேண்டும் ) 
4) கருவறை கடவுளாம் சிவலிங்கத்திற்கு (ஈசனுக்கு ) அர்ச்சனை - உங்கள் பெயருக்கு அர்ச்சனை 
5) 6 பேருக்கு அன்னதானம் ( நம் பிரதான கொள்கை ) 

                                      ஓம் சிவசிவ ஓம் !!!                ஓம் சிவசக்தி ஓம்!!!

உங்கள் கவலைகளை இனி நீங்களே மகிழ்ச்சியாய் மாற்றலாம் - நம் குருவின் வழிகாட்டுதலால் : இன்னும் ஏன்னம்மா தயக்கம்??

ஓம் சிவசிவ ஓம் !! 

ஓம் அண்ணாமலையாரே போற்றி !! 

தென்னாடுடைய சிவனே போற்றி ! 
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !! 


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும்
வணக்கம் . 


எண்ணங்களின் புதையலை கொண்டு தினமும் நடை தளராது வலம் வரும் இந்த மானிட பிறப்பில், நாம் தினமும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், மான அவமானங்கள் , நிதி நெருக்கடி , பந்த பாசங்களின் தொந்தரவுகள், இல்லறத்தில் ஒற்றுமை இல்லாமை , மக்கட்பேறு இல்லாமை, திருமண தடை, உடல் நிலை சரி இல்லாமை மற்றும் கல்வி சம்மந்தபட்ட எல்லா கேள்விகளுக்கும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் தமது ஆராய்ச்சியின் மூலம் விடை தருகிறார்கள். அய்யா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் "ஆன்றோர் கூறிய மொழி பொய்க்காது "என்றும் -" நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா" என்றும்.. இந்த வாக்கியத்தினை ஆராய்ந்தால் நன்மை உண்டு மேலும் நிழலினை மறந்து நிஜத்தினை (உண்மைதனை ) உணர்வாய் என்றும் கூறுவார்கள் . ஆம் அன்பர்களே ' நன்மையையும் தீமையும் பிறர் மூலமே நமக்கு வருகிறது என்று நாம் இன்று வரை நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் உண்மை அதுவா ? சற்று யோசியுங்கள் .. 

'நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா' - மேலே கூறிய செயல்கள் மற்றவர்கள் மூலம் வராது என்றால் - அதற்கு யார் தான் காரணம் ? எப்படி அறிவது ? எப்படி அதில் இருந்து தம்மை காப்பது ? இப்படி கேள்விகள் கேட்க கேட்க தெளிவு கிட்டும் என்பார் அய்யா, சகஸ்ரவடுகர் அவர்கள்.

இப்படி அனுபவ மொழிகள் மற்றும் ஆன்றோர் வாக்குகள் மேலும் அதன் பொருள் உணர்ந்து விளக்கி,நமக்கு விளங்கும் வண்ணம் எடுத்து உரைத்து அந்த சித்தர்கள் /ஆன்றோர் வழியில் நின்று எளிய பரிகார முறைகளை ஆன்மீக ஆராயிச்சி மூலம் வெளிப்படையாக கூறுகிறார்கள், ஆன்மீக வழிகாட்டி.

இந்த கலியுகத்தில் நாம் அன்றாடம் படும் துயர் அளவிட முடியாது. கல்வி கற்க முடியாமலும், நிதி பற்றாகுறையால் சரியாக உணவு உண்ணாமல் , வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், தொழிலில் பெரும் நஷ்டம், சூழ்ச்சிகள் , நம்பிக்கை துரோகம் , கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமை, மக்கட் பேறு இல்லாமை இன்னும் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை இப்படி சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கும் அன்பர்களே இதோ ஓர் எளிய முறையில் உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ள அய்யா சகஸ்ரவடுகர் ஆராய்ந்து நமக்கு அளித்த அற்புத கட்டுரை முடிவுகள் :- 

அன்பர்களே நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் பரவா இல்லை உங்கள் துயர் தீர,  

ஒரே ஒரு முறை சிவராத்திரி நாளில் அல்லது உங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில்  "கரூர் " இல் உள்ள " ஶ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் " சென்று அவருக்கு அபிஷேகம் செய்து (அதிகாலையில் - உச்சி - இரவு ) குடும்ப தலைவர் (தலைவர் யாரோ / தலைவி பெயருக்கு மட்டும் ) பெயருக்கு மட்டும் அர்ச்சனை செய்ய வேண்டும் எல்லோர் பெயருக்கு செய்யகூடாது ; பின்பு அங்கு உள்ள கோ சாலை சென்று கோ பூஜை செய்து, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் (உங்களால் முடிந்த பேருக்கு )செய்தால் கட்டாயம் உங்களுடைய நேர்மையான கோரிக்கைகள் உடனே நிறைவேறும் என்பதில் சிறிதளவும் ஐயம் கொள்ள வேண்டாம் என்று அய்யா கூறுகிறார்கள் .மேலும் இங்கு சித்தர் கருஊரார் அவர்கள் சூட்சும வடிவில் வந்து மக்களுக்கு ஆசி வழங்குகிறார்கள் என்றும் நம் அய்யா கூறுவார்கள். முதலில் கோவில் சென்று (கரூர்- பசுபதீஸ்வரர் கோவில்) அபிஷேகம் மற்றும் கோ பூஜை பற்றி விவரங்களை அறிந்து, அர்த்தகரின் படியானது ஶ்ரீ தட்சனா தேவி ஆசி கிடைக்கும் பொருட்டு - நாம் படி கொடுகிறோம் அதிகம் தர வேண்டாம் ( உங்கள் தகுதி ஏற்றார் போல் கொடுக்கவும் ) அனைத்தையும் அறிந்து பின் முறையாக சித்தர் காட்டிய வழி நின்றால் நிச்சயம் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் . திருமண தடை நீங்கும் ; நல்ல கல்வி ; நல்லொழுக்கம் ; கணவன் மனைவி ஒற்றுமை ; காரிய சித்தி ; பொருளாதரத்தில் முன்னேற்றம் ; குழந்தை பாக்கியம் இப்படி நமது கோரிக்கைகள் நிறைவேறும் .இதை (இந்த முழு பரிகாரத்தினை )ஒரே ஒரு முறை தான் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் செய்வதால் பலன் இல்லை என்பது அய்யாவின் ஆராய்ச்சி முடிவுகள் . 

எப்போது மனிதன் பிறர் துன்பத்தினை தன் துன்பமென பார்கின்றானோ அப்போது அவன் பாக்கியவான் ஆகிறான் என்று அய்யா கூறுவது உண்டு. 

அய்யா உங்களுடைய ஆன்மீக ஆராய்ச்சிகளை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கும் எங்களுக்கு இன்றுவரை ஆன்மீக வழிகளை கட்டியதோடு உடன் நடந்து வருவதற்கு - ஆன்மீக கடல் அன்பர்கள் சார்பாக நன்றி அய்யா .. 

உங்களது அடுத்த முடிவினை எதிர்நோக்கி ஆன்மீக கடல் குழுமம் மற்றும் அதன் அன்பர்கள் .. 


குறிப்பு

1) சிவராத்திரி நாள் அல்லது ஜென்ம நட்சத்திரம் அன்று 
2) கரூர் - பசுபதீஸ்வரர் கோவில் - (கரூர் சித்தர் அய்யா) - சிவனுக்கு அபிஷேகம் - 
3) ஒருத்தருக்கு மட்டும் அர்ச்சனை (குடும்ப தலைவர் / இல்லை எனில் தலைவி ) 
4) கோ சாலை - கோ பூஜை - அர்த்தகற்கு படி(முடிந்த அளவு ) 
5) அன்னதானம் - ஏழை எளியவர்களுக்கு 
6) ஒரே ஒரு முறை தான் இதை (முழு பரிகாரம்) செய்ய வேண்டும் 


                     ஓம் சிவசிவ ஓம் !!!                                                            ஓம் சிவசக்தி ஓம் !!! 


கண்ணீருக்கு இனிமே அவசியம் இல்லை!! ஆதிச்சித்தன் நம் ஈசன் இருக்கும் வரை !!

அய்யா பூசணி சித்தர் அவர்கள் வழியில் சகஸ்ரவடுகரின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகள் :


ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !! 

திருச்சிற்றம்பலம் !  எல்லாம் சிவமயம் !! " குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்" - ஔவை அம்மையார். 

நமது குரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் தம் வாழ்வில் மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் எண்ணிலா ஆன்மீக சூட்சும உண்மைகளை நம்முடைய இந்த வலைதளம் வழியே நமக்கு உபதேசித்து இருக்கிறார்கள் இன்று வரை உபதேசித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இன்று மேலும் ஒரு முக்கியமான சித்த ரகசிய ஆராய்ச்சி முடிவினை, சித்தர்கள் காட்டிய வழி நின்று நம்மிடம் பகிர்கின்றார்கள்.

ஓம் சிவசிவ ஓம் = ஓம் சிவசக்தி ஓம் : 

எவ்வளவு உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை - மனக்கோளாறு - செய்வினை கோளாறு - சுற்றத்தாரின் வஞ்சம் - தொழில் முடக்கம் - எடுத்த நல்ல காரியங்களில் தடை - குல தெய்வ அருள் இல்லாமை - நாள்பட்ட வியாதி (நோய் ) - போட்டி பொறாமை குணம் நீங்க - பில்லி - சூனியம் - ஏவல் நீங்க, நல்லவனாக வாழ 
( நல்ல எண்ணங்களுடன் கூடிய நேர்மையான உங்களது கோரிக்கைகள் மட்டும் ) 

இதோ நம் சித்தர் கூறிய வழி, 

முன்னொரு காலத்தில் சித்தர்களின் பூமியாம் நம் "திருஅண்ணாமலை"இல்  சித்தர் ஒருவர் மக்களின் குறைகளை ( எவ்வளவு உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை - மனக்கோளாறு - செய்வினை கோளாறு - சுற்றத்தாரின் வஞ்சம் - தொழில் முடக்கம் - எடுத்த நல்ல காரியங்களில் தடை - குல தெய்வ அருள் இல்லாமை - நாள்பட்ட வியாதி (நோய் ) - போட்டி பொறாமை குணம் நீங்க - பில்லி - சூனியம் - ஏவல் நீங்க, நல்லவனாக வாழ 
( நல்ல எண்ணங்களுடன் கூடிய நேர்மையான உங்களது கோரிக்கைகள் மட்டும் ) நீக்கி அருள் புரிந்து வந்தார்கள். 

அந்த மகான் மக்களின் குறைகளை பூசணி காய்களை கொண்டு நிவர்த்தி செய்து வந்தார்கள். ஆம் ஒப்பிட முடிய வண்ணம் மகத்துவத்தை கொண்டது இந்த பூசணிக்காய். 

இந்த சாது தனது பூஜைக்கு அதிக அளவில் பூசணி காய்களை பயன்படுத்துவார்கள்.அதே போல் தம்மை நாடி வரும் பக்தர்களையும் பூசணிக்காய் வாங்கி வர சொல்வார்கள். இப்படி ஒரு கோடி பூசணிகளில் ஒரு பூசணியில் எம் பெருமான் "சிவலிங்க" வடிவில் காட்சி தந்து அருள் புரிந்ததாக வரலாறு உண்டு. சித்தர் அவர்களை, ஒரு முறை, மருத்துவ நண்பர்களால் கைவிட பட்ட அன்பர் ஒருவர், அய்யா அவர்களை சந்திக்க வந்தார். ஐயனை கண்டதும் அன்பர் மனம் கசிந்து அழுகின்றார். பயிர்கள் வாடினாலே  தானும் வாடும் தன்மை பொருந்தியவர்கள் சித்தர்கள். இந்த மானுடனை கண்டு சித்தரும் நெகிழ்ந்து அந்த அண்ணாமலையார் அருள் கொண்டு ஞான திருஷ்டியில் அன்பரின் வியதியினை கண்டறிந்து கொண்டார்கள். குறளின் படி, "நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்......" என்பது போல் வியாதியின் மூலத்தினை கண்டறிந்தார் சித்தர் மூலம் "கர்ம வினையுடன்" தொடர்பு உடையது என்பதை அறிந்து யாகம் ஒன்றினை செய்ய வேண்டும் அதில் பூசணிக்கே முக்கியதுவம் என்றும் தம் சீடர்களிடம் பரி பாஷையில் பேசிக்கொண்டார்கள் சித்தர் பெருமான். 

பூஜை தொடங்கியதும் தம் வலி குறைவதை அன்பர் உணர ஆரம்பித்தார். பின் பூசணி யாகத்தை சித்தர் அவர்கள்  சிவனுக்கு அர்பணித்தார். அன்பரும் தம் வியாதியில் இருந்து பூரண குணமடைந்ததுடன் மரணமில்ல பெருவாழ்வு பெற்றான் சித்தர் அவர்களின் அருளாசியால் !!! 


இது போன்று அவர்கள் அன்றாடம்  மக்களுக்கு உபதேசமும் மக்கள் தம் குறைகளையும் "பூசணி காய்களை"கொண்டு சரி செய்து வந்தமையால் சாது அவர்கள் " பூசணி - சித்தர் " என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்கள். 

அப்படிப்பட்ட பூசணி யின் பெருமையை மக்கள் யாவரும் அறிய வேண்டும் என்று, சித்தர் அவர்கள் தம் இறுதி நாட்களில் மலையாய் எழுந்து அருளி இருக்கும் சிவபெருமானை சுற்றிலும் (தற்போதைய 14 கிலோ மீட்டர் சுற்று வட்ட பாதை) இறைவனின் ஆணைக்கிணங்க பூசணி விதைகளை தூவி சென்றார்கள். 

இறுதியில் எல்லாம் வல்ல 'சிவ ஜோதியில்' பூசணி சித்தர் அவர்கள் ஐக்கியம் ஆனார்கள் . சித்தர் அவர்களுக்கு தனி ஜீவ சமாது  கிடையாது மேலும் இன்றளவும் பூசணி சித்தர் அவர்கள் சூட்சும வடிவில் அண்ணாமலையில் பக்தர்களுக்கு இன்னல் நீக்கி அருள் பாலித்து வருகிறார்கள் என்று சித்தர் பெருமானின் ஆசி பெற்றவர்கள் கூறுகின்றார்கள். 

ஆம் அன்பர்களே இபோது புரிகிறதா ?? 
நாம் ஏன் சுப வைபவங்களில் பூசணி காயினை சேர்க்கின்றோம் என்று ! 

பூசணி கொண்டு எப்படி தீர்வுகாண்பது என்று யோசிக்கீன்றீர்களா - கவலையினை விடுங்கள்.. எந்த நாளில் செய்வது ??? எப்படி செய்வது ? எங்கு சென்று செய்வது ?? 

இந்த புண்ணிய பரிகாரத்தை "சிவராத்திரி" நாளில் தான் செய்ய வேண்டும் - ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி நாளில் செய்ய விரைவில் சித்தியாகும். நேரம் - காலை/மாலை  ஆனால் சிவராத்திரி நாளில் தான் செய்ய வேண்டும்.வளர்பிறை
சிவராத்திரி சால சிறந்தது. 

பூசணி ஒன்றை வாங்கி இரண்டாக நறுக்கி (யாருக்கு நலம் வேண்டுமோ அவர்கள்) பின்பு அருகில் உள்ள சிவாலயம் சென்று வெட்டிய பூசணிக்காயை கொடுத்து உங்களது பெயரில் (தோஷம் நீங்க வேண்டியவர் பெயர்கள் மட்டும் )கூறி அர்ச்சனை செய்து, அர்த்தகரிடம் அந்த வெட்டிய பூசணி காயினை வாங்கிக்கொண்டு அதை சிறிது சிறிதாக வெட்டி ஆலயத்தில் உள்ள கோசாலை பசுவிற்கு கொடுக்க வேண்டும். பசு இல்லை என்றால் எருமை மாட்டிற்கு கொடுக்கவும் ;அதுவும் இல்லை என்றால் ஆடுகளுக்கு கொடுக்கவும். எளிமையாக தோன்றினாலும் பூர்வ ஜன்ம பலனடிப்படையில் தான் யாவும் நடக்கும். 

சிவாலயம் செல்ல இயலாதவர்கள் தங்கள் அருகில் உள்ள ஜீவ சமாது சென்று வழிபடவும்.பூசணிக்காயை கொடுத்து உங்களது பெயரில் (தோஷம் நீங்க வேண்டியவர் பெயர்கள் மட்டும் )கூறி அர்ச்சனை செய்து, அர்த்தகரிடம் அந்த வெட்டிய பூசணி காயினை வாங்கிக்கொண்டு சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு பின்பு பூசணியை (சிறிது சிறிதாக வெட்டி )பசுவிற்கு கொடுக்க வேண்டும். பசு இல்லை என்றால் எருமை மாட்டிற்கு கொடுக்கவும் ;அதுவும் இல்லை என்றால் ஆடுகளுக்கு கொடுக்கவும். எளிமையாக தோன்றினாலும் பூர்வ ஜன்ம பலனடிப்படையில் தான் யாவும் நடக்கும். 


சிவாலயத்திற்கு அல்லது ஜீவ சமாது சென்று செய்ய இயலாதவர்கள் , சித்தர்கள் பூமியாம் மலையே லிங்கமாக திகழும் "திருஅண்ணாமலை " சென்று அதாவது சிவராத்திரி நாளில் சென்று கையில் பூசணிக்காய் ஏந்தியவாறு கிரிவலம் வந்து (நடந்து கிரிவலம் செல்வது உத்தமம் )
பின் மேற்கூறியவாறு பசுவிற்கோ எருமைக்கோ அல்லது ஆடுகளுக்கோ அந்த பூசணியை சிறிது சிறிதாக வெட்டி கொடுத்து வர உங்களது நேர்மையான வேண்டுதல்களும் மேலும் எப்பேற்பட்ட பில்லி - சூனியம் - ஏவல்  - செய்வினை கோளாறு இப்படி தீர்க்க முடியாத வினைகளும் வியாதிகளும் தீரும் என்பது சித்தன் வாக்கு. சித்தன் வாக்கு சிவன் வாக்கு!! 

                                                                                                                          - சகஸ்ரவடுகர் 

                                  
                                       ஓம் சிவசிவ ஓம் !                               ஓம் சிவசக்தி ஓம் !  இன்று போல் என்றும் உங்களது ஆராய்ச்சி முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம் அய்யா, தகவலுக்கு நன்றி என்றும் ஆன்மீக வழியில் ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு குழுமம்.( எங்களுக்கு ஆன்மீக கடல் / ஆன்மீக அரசு தவிர வேறு வலைத்தளங்கள் இல்லை அன்பர்களே)

ஏன் கலங்குகிறாய் நெஞ்சே? இதோ நம் சிவன் இருக்கிறார் !!!ஆன்மீக அன்பர்கள் யாவர்க்கும் வணக்கம் !! 

ஓம் அண்ணாமலையாரே போற்றி ! 

ஓம் சிவசிவ ஓம் !! 


சென்ற கட்டுரையில் நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் திரு அண்ணாமலையில் அசாதாரணமாக நிகழ்த்திய ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண  கிரிவலம் எனும் ஸ்ரீ குபேர கிரிவலத்தினை பற்றி கண்டோம். 

அக்கட்டுரையில் சொல்லப்பட்ட அய்யா ஸ்ரீ பூசணி சித்தர் அவர்களின் மக்கள் சேவைகளில் சிலவற்றையும் நம் குறைக்களை அந்த மகான் தீர்த்த வழியில், ஒரு தீர்வுக்கு கொண்டு வரும் பொருட்டு நமது குரு அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள், யாரும் இதுவரை கூறிடாத சித்த ரகசியத்தை நம் வலை தளத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களில் தருவதாக மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள். 

அந்த கட்டுரையின் மூலம் நிச்சயம் நம் நமது தீராத நோய்களில் இருந்தும், பில்லி - சூனியம் - ஏவல் ஆகியவற்றின் தாக்குதல்களில் இருந்து முழுவதுமாக விடுபட்டு சுக சௌகர்யமாக, நல்ல எண்ணங்களோடு இறை சிந்தனையில் திளைத்து வாழ, நினைத்தது நிறைவேற (நியாயமான கோரிக்கைகள்) மட்டும் எம்பெருமான் ஈசனது அருளாலும் சித்த புருஷர்களது ஆசியாலும் நமது அய்யாவின் வழிகாட்டுதலின் பெயரில் நிச்சயம் சித்தியாகும் என்பது பற்றியது. மிக விரைவில் கட்டுரையில் கலப்போம். 

                     ஓம் சிவசிவ ஓம் !!                                                                      ஓம் சிவசக்தி ஓம் !!

ஸ்ரீ சொர்ண ஆகர்சண கிரிவல நிகழ்ச்சி நிறைவும் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றி !!


ஓம் திரு அண்ணாமலையாரே போற்றி ! 
      ஓம் தவத்திரு உண்ணாமலை தாயே போற்றி !
                                ஓம் சிவசிவ ஓம் !! 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

இயற்கையின் கைகளை பற்றி கொண்டு நாம் நமது குருநாதருடன் வலம் வந்த நினைவுகளின் பகிர்தல்கள். 

ஆம் நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூற்று படி குறித்த நாளில் குறித்த நேரத்தில் திரு அண்ணாமலையில் "  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " சொர்ண ஆகர்ஷண கிரிவலம் (6-12-2015) மிக சிறப்பாக நடைபெற்றது.

என்ன வழக்கத்துக்கு மாறாக ஈசனின் சோதனை வருண வடிவில் நம்மை சோதித்தது. குருவுடன் செல்கையில் குரு காட்டிய தெய்வம் நம்மை ஏது செய்ய இயலும். 

வருகை தந்து விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு சார்பில் நன்றிகள் !! 
ஓம் சிவசிவ ஓம் !  
 
இரட்டை விநாயகர் சன்னதி : 

    கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் அன்பர்கள் நமது அய்யாவின் வருகையினை எதிர் பார்த்து ' இரட்டை விநாயகர் கோவில்' அருகில் காத்துக்கொண்டு இருந்தனர். இருளில் ஒளிரும் ஒரு தீக்குச்சியின் வெளிச்சம் போல் அய்யா அவர்கள் வருகையினை கண்டதும் நமது அன்பர்கள் அய்யா அருகில் கொடி போல படர்ந்தனர். 


விழாவில் தொலைந்த தன் குழந்தையினை கண்ட தாய் போல அய்யா நம்மிடம் வந்து நலம் விசாரித்து பின் அய்யன் விநாயக பெருமான் ஆசி வாங்கி  தந்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களும் ஆசிர்வதித்து விபூதி வழங்கி "சொர்ண ஆகர்ஷண கிரிவலத்தினை தலைமை பொறுப்பேற்று வனம் சுற்ற ஒரு அடி எடுத்து வைத்தார்கள். இப்படி இனிதே தொடங்கியது நமது கிரவல நிகழ்ச்சி. 

"ஓம் சிவசிவ ஓம்" என்னும் பிரணவத்துடன் கூடிய லோக சூட்சும மந்திரம் விண்ணை எட்டும் சத்தத்துடன் பூமியில் நடமாடும் இடி முழக்கமாய் வலம் வர தொடங்கியது அன்பர்கள் இயற்கையின் தன்மைக்கு ஏற்றார் போல தம்மை மாற்றிக்கொண்டு நமது அய்யாவின் திருவடி பற்றி நடக்க ஆரம்பித்தனர். 

தேரடி முனீஸ்வரர் அய்யா ஆலயம் : 

கிரிவல காவலாய் அய்யன் முனீஸ்வரன் துணையினை பெற்று அய்யா ' கோழி தனது பிள்ளைகளை(கோழி குஞ்சுகளை) யாரும் அண்டாதவாறு - இங்கு துர் ஆவிகள் எனும் எதிர்மறை எண்ணங்கள் ( negative thoughts ) நம்மை தொடாதவாறு சகஸ்ரவடுகர் அவர்கள் நம்மை தாங்கி சென்றார்கள் என்பது திண்ணம். 
திரு அண்ணாமலையில் எங்கும் நமது மஞ்சள் நிற வேஷ்டி - சேலைகள் தெரிய ஆரம்பித்தது. மக்கள் நம் கூட்டதை உற்று நோக்க ஆரம்பித்தனர். சிவ முழக்கம் வலுபெறும் வண்ணம்  இயற்கை நமக்கு கைகொடுத்தது ஆம் அந்த கொட்டும் மழையில் யாவரும் நிழற்குடையின் கீழ் இருக்கும் பட்சத்தில் நாம் நமது குருவுடன் அதும் ஓங்கார நாதத்துடன் வலம் வருவதை சிவதிருவிளையாடல் என்று சொன்னால் மிகையாகது. 

"மாதா பிதா குரு தெய்வம் " என்பது போல் பெற்றவர்களின் ஆசிர்வாதம் பெற்று இன்று குருவின் கையில் எங்களை தந்து அவர் காட்டும் கடவுளை காண வந்தோம் - என்று சொல்லாமல் சொல்லும் வண்ணமாய் நாங்கள் இயற்கையின் தொட்டிலில் குருவின் தாலாட்டில் துங்காமல் தூங்கி (தியானத்தில்) வலம் வந்தோம் . 


இந்திர லிங்கம் :

இந்திர லிங்கத்தில் அய்யா ஆசி வழங்க. நாங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினோம். எங்களது பயணம் தொடர ஆரம்பித்தது. எங்களுடன் தூய ஆத்மாக்கள் பல்வேறு ஸ்திர ரூபன்களுடனும் அரூபங்களாகவும் உடன் வரத்தொடங்கினர். ஓம் சிவசிவ ஓம் = ஓம் சிவசக்தி ஓம் ! அக்னி லிங்கம் : 

இங்கு நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களை தீயில் போட்டு எரிக்கும் வண்ணம் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அக்னி லிங்க ஆசி வழங்கினார்கள். சில சூட்சுமங்களை நாம் நமது வலைத்தளத்தில் எழுத இயலாது . இருந்தாலும் அய்யா சொல்லிற்கு இனங்கி  இந்த குறிப்பு சொல்லப்பட்டது. வந்தவர்கள் யாவரும் பாக்கியவான்களே. இதன் அர்த்தம் பின் வரும் காலங்களில் கட்டாயம் புரியும் என்பது அய்யாவின் சொல் . ஓம் சிவசிவ ஓம் !! 

பிரதான கொள்கை : 

ஜீவகாருண்யமும் அன்னதானமுமே நம் பிரதான கொள்கை !! ஓம் சிவசிவ ஓம் ! 


சூட்சும வடிவில் சித்தர்கள் உலா ... எம் பெருமான் ஈசனுக்கே சம்பர்பணம் ! 

எங்கள் இடர் தீர்க்கும் ஈசனே உம் திருவடி சரணம் அய்யா !!!

எம லிங்கம் : 

பயங்களில் "மரண பயமே" மிக கொடிய பயம் என்பதை யாவரும் நன்கு அறிவோம். இந்த பயம் போக்கவே நமது குரு சூட்சும வடிவில் நமக்கு ஆசி வழங்கினார்கள். 
மேலும் தனித்தனியாக அன்பர்கள் அனைவருக்கும் அய்யா மரண பயம் நீங்க சிவ - நீறு அதாவது திரு என்னும் செல்வம் குறிக்கும் திருநீறு பூசி நமக்கு ஆசி வழங்கினார்கள்.. ஓம் சிவசிவ = ஓம் சிவசக்தி ஓம் !! 

நிருதி லிங்கம் :  

கிரிவல பாதையில் உள்ள நான்காம் லிங்கம் ஆகும். நற்பேறு-புகழ் மற்றும் நல்ல உடல் நலம் தருவது என்பதால் இவை யாவும் நாம் பெற  வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அய்யா  சகஸ்ரவடுகர் அவர்கள் வணங்கி நமக்கும் ஆசிகளை வாங்கித்தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கனியன் பூங்குன்றனார் அவர்களின் கூற்றுப்படி அன்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவரையும் தம்மை போல எண்ணி செல்லும் பொருட்டு அய்யா நம்மை வழிநடத்தினார்கள் . அன்பர்களுக்கும் அய்யா அவர்களுக்கும் நன்றி .

வீதிகள் தோறும் சிவ முழக்கங்கள்,


ஓம் சிவசிவ ஓம் !!! 


சித்தர்கள் காட்டிய வழியில் - நவதானியத்தயங்கள் இயற்கைக்கு சமர்பணம் ! 
வருண லிங்கம் : 

ஆத்ம தாகம் தீர்க்கும் வண்ணம் வருணனை வரவழைத்து நம்மை ஆட்கொண்ட லிங்கம். தாகமாய் வந்தோர்க்கு இழைப்பற வந்த வற்றாத நீர் ஊற்று போல குரு அவர்களின் திருவடி ( கண்கள் ) ஆசிகள் பலவாறு செய்து எம்மை ஆட்கொண்டமைக்கு நன்றி - சிவசிவ சிவசிவா 


வாயு லிங்கம் : 

வாயு - காற்று ;  நம்மை சுற்றிலும் நிறைத்த அந்த காற்றின் அரசன் தான் இந்த சிவலிங்கம் ;  நமது உடலில் மேலும் சக்திகளை கிரகித்து வைத்துக்கொள்ள நம் அய்யா நம்மை இங்கு -  இந்த தளத்தில் தான் ஆயத்த (தகுதி ) படுத்தினார்கள். 'நம்பிக்கையே நல்ல மருந்து' என்பது இலை மறை காய் - சகஸ்ரவடுகர் 

குபேர லிங்கம் : 

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் அல்லது குபேர கிரிவலம் இந்த லிங்கத்திடமே கோரிக்கையாக வைக்கப்பட்டது. இங்கு தான் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நிகழ்ந்தது ஆம் அன்பர்களே. கிரிவலத்திற்கு வந்தவர்கள் நிச்சயம் பேறு பெற்றவர்கள் தாம். நமது அன்பர்களுள் ஒருவர் "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்து அந்த சொர்ணங்களை கொண்டு வந்தார்கள்,திரு அண்ணாமலைக்கு.மேலும் இந்த பைரவ தளம் சைவ சமய நால்வர்களால் போற்றி பாடப்பட்ட இடம் என்பது குறிப்படத்தக்கது.ஈசனின் ஆட்டம் தொடங்கியது, சகஸ்ரவடுகர் அவர்கள் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்து விட்டு அருகில் இருந்த மரத்தடிக்கு சென்றார்கள் அப்போது கோவிலில் இருந்து வந்த அன்பர் ஒருவர், அர்த்தகர் தங்களை உள் லிங்க பிரதிஷ்டை செய்த அறைக்கு அருகில் வந்து தரிசிக்கும் படி சொல்ல நாங்கள் அனைவரும் வியப்பிற்கு ஆளானோம். பின்பு அய்யா "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்த அந்த சொர்ணங்களை  மீண்டும் " குபேர லிங்கதிடமும் " வைத்து தரும் படி அர்த்தகரிடம் கூறி, அனுமதி பெற்று ஆசி வாங்கி பின் அன்பர்களுக்கு ' சகஸ்ரவடுகர் அய்யா ' வழங்கி  ஆனந்தம் அடைந்தார்கள் குறிப்பிடத்தக்கது.


கண்களில் நீர் நிறைந்திருக்க அய்யா சில ரகசியங்களையும் உண்மைகளையும் கூற ஆரம்பித்தார்கள். 

அய்யா அவர்கள் கூறிய அனைத்தையும் இப்போது இங்கு கூற இயலாது. இந்த இடத்தில் அன்பர்களுக்கு மூச்சு பயிற்சி உபதேசமும் பூசணி சித்தர் பற்றியும் அவர்களின் சிவ தொண்டு - மக்களுக்கு அவர் செய்த சேவை  மற்றும் மக்கள் குறைகளை அவர் தீர்த்த விதம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்,அய்யா .. ஓம் சிவசிவ ஓம் !! 


அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மௌனம் மேற்கொள்ள போவதாகவும் - தியானம் - தவம் - சமாது - ஆசிரமம் குறித்த பல அறிய தகவல்களை தந்தார்கள் : 

அய்யா அவர்கள் நமக்காக நம் நலம் வேண்டி நாம் யாவரும் சிவகதி எனும் பேரின்பம் பெரும் பொருட்டு ஆசிரமம் அமைக்க போவதாக கூறினார்கள்; இத்தனை நாள் இல்லாமல் இன்று கூறியதன் காரணம் ஈசன் இட்ட கட்டளை என்று கூறி நம்மை ஆனந்த பெரு வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். மேலும் ஒரு கை ஓசை எழுப்பாது அன்பர்கள் நீங்களும் உங்களால் முடிந்த ஒத்துழைப்பினை தரமாறு கேட்டுக்கொண்டார்கள், திரு சகஸ்ரவடுகர் அவர்கள். 
ஆசிரமம் பற்றிய முழு தகவல் பின்னாளில் அறிவிக்கப்படும் - எங்கு அமைகிறது ? எப்படி இருக்கும் ? நீங்கள் உதவ எவ்விதமாக (பணமாக /வரை ஓலையாக / கட்டுமான பொருட்களாக ) வேண்டும் ? அன்பர்கள் யாவரும் உதவும் படி ஆன்மீக அரசு மற்றும் ஆன்மீக கடல் குழுமம் சார்பாக நாங்களும் கேட்டு கொள்கிறோம். 

இன்னும் சில காலங்களில் அய்யா அவர்கள் மௌனம் மேற்கொள்ள போவதாகவும் இது ஈசனது கட்டளை என்றும் கூறினார்கள். 

சிறுது நேர மௌனத்திற்கு பிறகு வந்த அன்பர்கள் அனைவருக்கும் சகஸ்ரவடுகர் அவர்கள் நன்றி கூறியது நெஞ்சை நெகிழ்ச்சிக்கு ஆழ்த்தியது. ஆம் நன்றி கூறிய நம் அய்யா அன்பர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கி சொர்ணகாசுகளை தந்து அருள் புரிந்தார்கள். 

பின்பு அனைவரும் குபேர ஆசியுடன் நம் அய்யாவின் வழிகாடுதலின் பெயரில் நடையினை தொடர்ந்தோம் சிவ முழக்கத்துடன் " ஓம் சிவசிவ ஓம் " ஓம் சிவசிவ ஓம் " ஓம் சிவசிவ ஓம் " ஓம் சிவசக்தி ஓம் " என்றவாறு கிரி சுற்ற ஆரம்பித்தோம். 


ஈஸான்ய லிங்கம் : 

    அஷ்ட லிங்கங்களுள் எட்டாவது, ஈசன்யத்தில் அமைத்தது - பற்று அற்ற நிலையினை எய்தும் பொருட்டு திரு சகஸ்ரவடுகர் அய்யா நமக்கு ஆசி வழங்கி (ஒளி - சிவதரிசனம் ) பயணம் முடியும் பொருட்டு நடை தொடர்ந்தது. 

பூத நாராயணன் கோவில் : 

ஈசான்ய லிங்கத்தில் தொடங்கிய நடை பூத நாராயணன் திருவடியில் வந்து நின்றது நமது அய்யா அவர்களோடு. இங்கு திரு சகஸ்ரவடுகர் அவர்கள் இறுதி உரை தந்து அன்பர்களை ஆசிர்வதித்து கிரிவல நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள் . கிரிவலம் இனிதே நிறைவு உற்றது. ஓம் சிவசிவ ஓம் !!! 
நன்றி திரு சகஸ்ரவடுகர் அய்யா -  நாங்கள் பாக்கியவான்கள் தான் இப்படி ஒரு ஆன்மிக வழிகாட்டி எங்களை வழி நடத்தி செல்வது நாங்கள் முற்பிறப்பில் செய்த புண்ணியம் தான் அய்யா. கட்டாயம் நமது ஆசிரமம் அமைய எங்களால் இயன்ற பண உதவியும் பொருள் உதவியும் செய்வோம் மேலும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் இது நல்ல முறையில் நடைபெற வேண்டி. அன்பர்களே நாமும் நம்மை போன்றவர்கள் நலம் பெற்று வாழ்வில் முன்னேற உதவுவோம் . நன்றி அன்பர்களே ! 

அன்புடன் ஆன்மீக பாதையில் "ஆன்மீக கடல் மற்றும் ஆன்மீக அரசு" குழுமம்திருஅண்ணாமலைகிரிவலம் பற்றி நினைவூட்டல்

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் !!! பொருள் : திருஅண்ணாமலை கிரிவலம் தொடர்பான நினைவூட்டும் பொருட்டு சொர்ணாகர்ஷண கிரிவலம் : (சொர்ணம் - செல்வம் ) = இறைவழியில் அவன் அருளால் நேர்மையான முறையில் செல்வம் ஈட்டுவது என்பது விளக்கம். கிரிவலம் (06-12-2015 ஞாயிறு கிழமை ) சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.45am அளவில் ஒன்று திரள்வோம். அன்பர்களே, நமது அய்யா அவர்கள் கூறியபடி குறித்த நேரத்தில் கிரிவல வைபவம் நடைபெறும் - இதில் எந்த மாற்றமும் இல்லை . அனைவரும் வருக அய்யன் அருள் பெருக. 


வாழ்க வளமுடன் !! ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !