RightClick

நரக சதுர்த்தி (எ) தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி என்பதன் உண்மையான விளக்கம் புராணரீதியில் அதற்கு இன்னொரு பெயர் உண்டு அது நரக சதுர்த்தி என்பதாகும். நரகத்தின் சாரம்சம் என்ன?.,  பாவங்கள் சேருமிடமாகும். அங்கு நாம் செல்லாவண்ணம் புண்ணியமே செய்யவேண்டும் என்று நினைவூட்டும் நாள் இது. முதல் நாள் நாள் யமதீபம் என்றும் மறுநாள் எமதர்ப்பணம் செய்யவேண்டும்.

எமதர்ப்பணம்
த்தினத்தில்  நம் மூதாதையர்கள் யமதீபத்தை(தீபம்) உயரமானகம்பத்தில் ஏற்றி வைப்பார்கள். இது பூலோகம் வந்த பித்ருக்களை வழியனுப்பும் உபசாரம் போலாகும். எமன் மற்றும் எமலோகம் இவற்றை கேட்டாலே நமக்கு சிறிது அச்சம் ஏற்படும், அதனால் பாவம் செய்யாமல் இருப்போம். ஆதலால்அன்றன்று எழுந்தவுடன் செய்த புண்ணிய பாவங்களையும் மரணம் உண்டென்பதையும் நினை என்கிறது தர்ம சாஸ்திரம்.

தீபம்தீபாவளி எனில் தீப வரிசை எனப்படும். ஆலயங்களிலும், மடங்களிலும், வீடுகளிலும் வரிசை வரிசையாகத் தீபம் ஏற்ற வேண்டும். இதை வடநாடும்கூட  அனுஷ்டிக்கிறது. தென்நாடோ தீபத்திருநாளை சிறந்ததென்று இரண்டு  நாட்கள் அனுஷ்டிக்கிறது. தீபம் எப்பொழுதும் அதீத ஆன்மிக அர்த்தங்களை உள்ளடக்கியது. அதை நான் உங்களுக்கு குத்துவிளக்கு பூஜையில் விளக்கைப்பற்றி விளக்கியிருப்பேன். அது விளக்கை மட்டும் குறிக்கவில்லை தீபம் பொதுவாக ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் அழைக்கும் ஒரு வழிகாட்டிதான். நமது வேதங்களிலும், புராணங்களில் பார்க்கும்போதுகூட பல அரசர்கள், ஜோதிடர்கள், சாஸ்திரிகள் மற்றும் அர்ச்சர்கள்  விளக்கு ஏற்றுவதையே உயர்வான விஷயமாகப் பின்பற்றி உள்ளார்கள், நிறைவேற்றியும்,தங்கள் மாணவர்களுக்கு போதித்திருக்கிறார்கள்.

தீப ஒளியில் ஏற்படும் நன்மைகள் • கல்வித்தடை நீங்கும்
 • லக்ஷ்மி வாசம் நமது வீட்டில் பரவும்
 • திருமணத்தடை நீங்கும்
 • புத்ரதோஷம் நீங்கும்
 • பசு, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்
 • சாபம் நீங்கும்
 • முன்வினை பாவங்கள் நீங்கும்
 • செல்வம் பெருகும்
 • நோய் குணமாகும்
 • பீடை விலகும்
 • திருமகள் அருள்கிடைக்கும் 
 • சனிகிரகதோஷம் விலகும்  


தீபாவளி சிறப்பு வழிபாடு

ந்த தீபாவளியானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால்இது பிரதோஷத்துடன் வரும்தீபாவளி என்பதால், ஆன்மீக அன்பகளுக்கு மிகவும் உகந்தது. ஆம் நம்மில் சிலபேர் குறி சொல்பவர்களவும், ஜோதிடராகவும், சித்தமருத்துவம்,அர்ச்சகர்களாகவும், மற்றும் வேதம் துதிப்பது போன்றவற்றைப் பின்பற்றுபவர்களாக இருப்பீர்கள். அதிலும் சிலர் தங்கள் ஆன்மீக வாழ்வில் சில ஏற்ற, இறக்கங்களை சந்தித்து இருப்பீர்கள், உங்கள்துயரங்கள் நீங்க பின் வரும் பரிகார முறையை செய்யவும். நமது ஒவ்வொருவருக்கும் குரு என்பவர் ஒருவர்  நிச்சயம் இருப்பார், அவர் யாராக இருந்தாலும் சரி, வயதோ மற்றும் தொலைவோ தடையல்ல. அவர்களை தீபாவளி நாள் அன்று முழுமனதுடன் சென்று வணங்கி அவர்களுக்கு ஆடை, பழங்கள் மற்றும் இனிப்புகளை வணங்கி ஆசிபெறவும். இது நமது கர்ம வினைகள் அனைத்தையும் எரித்துவிடும். குருவை இதுவரை நீங்கள் சந்திக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்., அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஜீவசமாதி சென்று வழிபடுங்கள். நிச்சயம் உங்கள் குருவின் பாதம் பற்றுவீர்கள். இது உறுதி இதை உங்களால் செயல் படுத்த முடிந்தால் நிச்சயம் உங்கள் மூன்று ஜென்ம பாவங்கள் குருவின் அருளால் களையப்படும்.  . ஆனால் இதில் சோதனைகள் பல நேர வாய்ப்பு உள்ளது கவலை கொள்ள வேண்டாம்.  அனைவருக்கும் என் மனமார்ந்த தீபஒளி நல்வாழ்த்துக்கள். இத்திருநாளில் உங்கள் அனைவருடைய மனஇருள் அகன்று தீபஒளி வழியே உங்களை குருஅருளும், திருஅருளும் ஆட்க்கொள்ளட்டும்.  எல்லாரும் எல்லா  செல்வமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ என் வாழ்த்துக்கள்.  நன்றி

-சகஸ்ரவடுகர்