RightClick

குழந்தையம் கிட்டும் இறைஅருள் இருந்தால்

ஆன்மீகக் கடல் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . 


                                                இல்லற வாழ்வின் சான்றாக விளங்குவது குழந்தை பேறு. நம் குலம் இப்பூமியில் நிலை பெற்று விளங்க நம் சந்ததி அவசியம் .ஆம் இந்த கலி யுகத்தில் பல் வேறு இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும் மானுடர்களின் மற்றொரு வேதனை குழந்தை இன்மை. இது பெரும்பாலும் கர்ம வினையின் பொருட்டு வருவதே என்றாலும் இறை அருளும் குருவின் திருவருளும் இருந்தால் விதியை வென்றிடலாம் . 

குழந்தை பேறு இல்லை என்று இனியும் கவலை வேண்டாம் .இதோ அதற்கான வழி நம் சித்தர் கட்டிய வழி, 

இதை பின்பற்றி மக்கட்செல்வம் பெறுவீர்களாக !!! டொட்டமல்லுர் , சன்னபத்னா (பெங்களூர் - மைசூர்  நெடுஞ்சாலை ) இங்கு உள்ள " நவநீத கிருஷ்ணனை" 

வெள்ளிகிழமை அன்று மாலை 4.30 -6.00 pm குள் தங்கள் பெயர் ஜன்ம நட்சத்திரம் சொல்லி "குழந்தை வரம் வேண்டி என்று சொலி அர்ச்சனை செய்யவேண்டும் .இது முதல் படி .

இரண்டாம் படி

பின்பு தொடர்ந்து ஆறு வாரங்கள் அருகில் உள்ள நவநீத கிருஷ்ணனன் ஆலயம் சென்று வழிபடலாம் அல்லது ஜீவ சமாதி(ஒரே ) சென்று வழிபட வேண்டும் . கிழமையும் நேரமும் ஒன்றே .  6 வரங்கள் கட்டாயம் வழிபடவேண்டும் 
நெய் வேத்யமாக

முதல் வாரம்            27லட்டு 
இரண்டாம் வாரம்  27 மகிழம்பூ முருக்கு 
3ம் வாரம்                 27 முந்திரி கொத்து  
4ம் வாரம்                 27 கற்பூர வள்ளி பழம் 
5ம் வாரம்                1/4 வெண்ணெய் 
6ம் வாரம்                அவல்  பாயசம் 

ஒவ்வொரு வாரம் வழிபாடு செய்யும் போது தங்கள் பெயர் நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்து வழிபாட்டின் நோக்கத்தைக் கூறி வழிபட வேண்டும் .

இப்படி நம்பிக்கையுடன் செய்து வர கட்டாயம் இறை அருளால் குழந்தை பேறு கிட்டும் என்பதில் ஐயம் இல்லை - சகஸ்ரவடுகர் 

                  ஓம் சிவ சிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!

அனைவருக்கும் ரிஷி பஞ்சமி ஆசிர்வாதங்கள் !!!

இன்று புரட்டாசி மாதம் முதல் நாள். இன்று ரிஷி பஞ்சமி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஆம் ரிஷிகள் ஏழ்வரின் பொருட்டு இன்று இந்த பஞ்சமி கொண்டாடபடுகிறது.

அவர்களின்  ஆசி பெரும் பொருட்டு, 
           தாங்கள் தங்களின் அருகில் இருக்கும் ஏதேனும் ஜீவ சமாது சென்று கீழ்கண்ட பூஜை பொருட்கள் கொண்டு வழிபட - 30 நாட்களுக்குள் தங்களின் நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை . 

1. வாழைபழம் 
2.பேரிச்சை பழம் 
3.ஊது பத்தி 
4.ரோஜா மாலை 
 இவைகள் கொண்டு வழிபடவும் . 
                                              சப்த ரிஷிகளின் ஆசியும் அய்யா ஈஸ்வரபட்டார் அவர்களின் ஆசி மற்றும் 
                                                      நமது குருவின் ஆசியும் பெற்று நன்கு வாழலாம் . 

                                             ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!!

குருவார்ப்பணம்தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்
 கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்டிபிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தார். பின் திருமணம் செய்துகொண்டார் இவருக்கு  ஒரு மகனும் உண்டு.       
                                                        
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானநதாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள் மற்றும்  சாஸ்த்திர வல்லுநர்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையும்  பெற்றதுடன்,பயிற்சிகளையும் மேற்கொண்டார். மேலும்  தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார். குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்ம், அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூலிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்கதிர்வீச்சுக்கள்,ஜோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.

 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாடடுதல் படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங்குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டத்தில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. அகில உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது. திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர் ‘ஆன்மீகத்திறவுகோ என்னும் நூல்களை எழுதியுள்ளார். இவருடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.


 யந்திரப்பிரயோகம் ,காலதோஷ நிவாரணம்,வாஸ்துதோஷ நிவாரணம்,பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார். அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமண மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்ற:

1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்
2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்
3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீக்கூட்டங்கள்,ஆன்மீ க அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்
4.வயது முதிர்ந்த,கவனிப்பரற்ற ஆன்மீகப்பெரியோர்ளை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்
5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்
6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்  இந்த நல்லெண்ணங்களை சீரிய முறையில் செயல்படுத்துவது. இன்றளவும் அதனை செயல்படுத்தி வருகிறார் மிஸ்டிக் செல்வம் ஐயாவின் சீடரான நமது குருநாதர் சகஸ்ரவடுகர். இப்படிப்பட்ட அதிசயங்களுக்கு சொந்தமான மிஸ்டிக் செல்வம் அய்யாவின் நினைவுநாள்  (17.09.15). இதில் நாமும் இணைந்து கொள்வோம். நன்றி.

-ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹமன்மத ஆண்டின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வணக்கம் ,

                                    உங்கள் அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் .

விநாயகர் என்பவர் நமது பாரம்பரியமிக்க  தமிழ் கடவுள். இதற்கு சான்றாகவே நமது மூதாதையர் நமது கோவில், வியாபாரத்தளம், கல்விக்கூடம் போன்ற இடங்களில் விநாயகருக்கு இடம் அளித்து வந்துள்ளார்கள்.  இது நமது இரத்தத்தில் விதைக்கப்பட்ட நன்மை குண நலன்களில் ஒன்று . அதனால் நம் உயர்ந்த நாகரீகத்தில் இன்றளவும் இது ஆங்காங்கு பயன்பாட்டில் உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விநாயகர் நம் வழிபாட்டு கடவுளாக மாறியதற்கு ஒரு முக்கியமான கதை ஒன்று உள்ளது. இதை இந்த நல்ல நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைய நமது பாடசாலை என்பது காடுகள் தான், அங்கு சென்று நமது அரசன் முதல் சாமான்யன் வரை அனைவரும் சென்று கல்வி கற்றுகொள்வார்கள்.  அப்படி செல்பவர்கள் தினமும் குருவிடம் எதாவது சந்தேகம் கேட்டு கொண்டிருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு சீடன் குருவிடம் " குருவே எனக்கு ஒரு சந்தேகம்?, மரம், செடி, போன்றவை எல்லாம் வழிபட்டு உரிய பொருளாகி வருகிறது. இதில் நாம் ஆராயிந்து பார்க்க போது பார்க்கும் போது  நன்மை என்று எடுத்துக் கொண்டால், காடுகளில்  வேறு எதாவது  இருக்கிறதா? என்று கேள்வியை  கேட்டவுடன்., அதற்கு  எப்போதும்போல் தனக்கே உரிய பாணியில் சிரித்துகொண்டே மாணவர்களைப்  பார்த்து நீங்கள் அனைவரும் இன்று கட்டுக்குள் பயணம் மேற்கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து உங்களால் பார்வையிலும், சிந்தனையிலும் பதிந்த விஷயங்களை கொண்டே உங்கள்  சக மாணவனின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்றார். அனைவரும் எழுந்து சென்று சரியாக குரு சொன்ன மணி நேரத்திற்குள் வந்து குருவின் முன் அமர்ந்தார்கள். அந்த கேள்வி கேட்ட சீடன் மட்டும் எழுந்து குருவே என்னுடைய பயண அனுபவத்தில் என் கருத்துக்களை உங்கள் முன் எடுதுரைக்க விளைகிறேன்  என்றான். குரு இசைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான், நான் செடிகளைப் பார்த்தேன் அதில் மூலிகை வைகைகள் இருப்பதால் அதனை தெய்வங்கள் தமது அருகில் வைத்துக்கொண்டு இருப்பதால், மனிதர்களுக்கு   செடி பற்றிய விஞஞான அறிவியல் வழிபாடு  இருப்பதை உணர்ந்தேன், மரம் நமது உடலின் சுவாச வெளிபாட்டையும், அந்த சுவாசமிக்க உடல் பிற உயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்றும் புரிகிறது , இறுதியாக மிருகங்களின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள எதுவும் இல்லையே? என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று வந்த வழியில் விநாயகரைத்தான் கண்டேன் மிருகங்கள் ஒன்றையும் நான் காணவில்லை  என்னால் அதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் சென்று மிருகம் ஏதாவது தெரிகிறதா? என்று பார்துவிட்டு வரட்டுமா? அதற்குள் தாங்கள் கால  அவகாசம் வேறு முடிந்துவிட்டது, என்னை தெளிவுபடுத்துங்கள் குருவே என்று கூறி முடித்தான், இதை கேட்டுவிட்டு குரு, சற்று எழுந்து மாணவர்களே உங்கள் நண்பன் கூறிய அனைத்தும் உண்மை. நீ வரும் வழியில் மிருகத்தையும் கண்டுவிட்டாய் என்றார், அதுதான் ஈசன் அன்றைய நாளில் நடத்திய திருவிளையாடல் புரிந்திரருக்கும் இவ்வுலகிற்கு. அதிலும் களியின் (யானை) உருவத்தில்தான்  மிக முக்கிய இரகசியம் மானவை என்று அந்த மாணவர்களுக்கு கூறினார். அதுதான் விநாயகர் உருவம்.அப்படி பட்ட இந்த உருவ அமைப்பை நாம் எப்படி வழிப வேண்டி நம்முடைய இன்னல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இரகசியத்தை அவர்களிடம் கூறினார். அந்த இரகசியம் பின்வருமாறு அதிலும் அதன் சிறப்பு விநாயகர் சதுர்த்தி அன்று மிகவும் வலிமை பெற்றதாக மாறும் என்பதை அவர் தெரிவித்தார்.

சிறப்பு வழிபாட்டு முறை

 சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை நாம் உரிய முறையில் வழிபடுவோமேயானால் நிச்சயம் நமது அனைத்துப்  பிரச்னைகளிலும் இருந்து ஒரு நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும். அந்த இரகசியத்தை உங்களிடம்

உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். பின்வரும் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவும்,


நீங்கள் அனைவரும் யானைமுகனின் தோற்றத்தில் உள்ள யானைக்கு., நீங்கள் கரும்பு வாங்கி கொடுத்தால்., உங்கள் துயரம் முற்றிலும் அகலும் என்ற செய்தியோடு., என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ 

- சகஸ்ரவடுகர்