RightClick

மாணவர்களுக்கு - கல்வி உபகரணங்கள் வழங்குதல்


நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஒவ்வொரு வருடமும்,பள்ளிகள் திறந்த ஒரு மாதத்திற்குள் சுமார் நூறு ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விதானம் செய்து வருகிறார்.கடந்த 31 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு நமது ஆன்மிகக்கடல் அறக்கட்டளை வாயிலாக  நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இந்த வருடம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் புடைசூழ 29.08.2015 சனிக்கிழமை அன்று  அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;ஒவ்வொரு ஆண்டும் ஜீன்,ஜீலை மாதங்களில் இவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார். சிறப்பு உரை

குழந்தைகளுக்காக நமது தமது கைகளினால் அடையாளஅட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு தனது  சிறப்பு உரையை பேசினார். இன்றைய மாணவர்களுக்கு படிப்பின் இன்றைய நிலைமையில் நமக்கான தனிப்பட்ட கடமையும், சமூகத்தில் நாம் பின் பற்ற வேண்டிய கடைமைகளையும் பற்றியும் தெளிவாக எளிய நடையில் அந்த மாணவமணிகளிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையில்  கடந்த முப்பது  ஆண்டுகளாக இந்த அட்டை வழங்கும் விழா  நடந்ததற்கான ஒரு சுவாரசியமான உரையில் இருந்து  ஒன்று ,   அது அதை நாம் நம் வலைப்பூ வாசகர்களுக்காக நேரிடையாக அய்யாவின் உரையில் இருந்தே இதோ’, கல்வி என்பதன் பொருள்  கல்லாமை இல்லாமல் விரட்டிடு நீ என்பதன் ரத்தினச்சுருக்கம். இன்றைய தொழில்நுட்பம், சமுதாயமும் நாளை உங்கள் கரங்களினால் செயல்படத்தான்.தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்கள் ஒருகதை சொல்லப்போகிறேன், ஒரு ஊரில் இரண்டு நபர்கள் ஊருக்குள் வருகிறார்கள் என்று ஒரு சிறுவன் தன் அப்பாவிடம் போ சொல்கிறான். யாருடா அவுங்க என்று அப்பா கேட்க , அதற்கு சிறுவன்., அப்பா நம்ம ஊருக்கு வாத்தியாரும், சிலை செய்பவரும் வந்திருக்காங்க. இதில் இந்த ரெண்டுபேர்ல யாருப்ப ரெம்ப முக்கியம்., அதற்கு அப்பா அவங்க ரெண்டு பேருமே முக்கியம் என்று சொல்ல ., எப்படிபா? என்று சிறுவன் கேள்விகேட்டான்., யாராவது ஒருத்தர சொல்லுங்க அதுக்கான காரணத்தையும் சொல்லுங்கள் என்றான்., அதற்கு அப்பா சற்றும் தாமதிக்காமல் ஆசியர்தான் என்று கூறினார். ஏனன்றால் அவர்களால் மட்டும்தான்., உன்னை அறிவியலாளராகவோ, படைப்பாளியாகவோ, பொறியாளராகவோ,சிந்தனையாளராகவோ மற்றும் ஆசிரியராகவோ மாற்றமுடியும். இது மட்டும் அல்லாமல் நமது பெற்றோர், உறவினர்கள் சேர்த்து யார் எந்த  ஒரு நல்லபண்புகளை சொல்லித்தரும் அனைவருமே,  நமக்கு  நல்ல ஆசிரியரின் பிரதிபலிப்புத்தான். அதற்கு அந்த சிறுவன் அந்த சிலை செய்பவர் என்றான்., அதற்கு அவரும் உன்னைப் போன்ற ஒரு மாணவனாக., ஒரு சிலை செய்யும் ஆசிரியரிடம் இருந்துதான் கற்றிருக்கிறார். எனவே நீ எவ்வள்வு சாதனைகளும் செய்தாலும்., உன்னை சாதிக்க அடித்தளம் விதைத்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது.., சரியா என்றார்.,அதற்கு அந்த சிறுவன் சரி என்று தலை அசைத்தான்.இது அந்த பையனுக்கு மட்டும் அல்ல நமக்குத்தான். என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நம்ஹ

ஆடி அம்மாவசை இனிதாக நிறைவுற்றது

வணக்கம்

காலை சரியாக 7am அளவில் நமது முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு நமது கழுகாச மூர்த்தியின்  சன்னதியில் நடத்த ஏற்பாடு செய்யப்படிருந்தது . அதன் பின் நமது குருநாதர் சரியாக 9.30 மணி அளவில்  நமது கழுகாசமூர்த்தியின்   சன்னதியை வந்தடைந்தார். பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு கலுகாசமூர்த்தியின் சன்னதிக்கு அழைத்து சென்று அனைவருக்கும் சிறப்பு வழிபடு செய்யப்பட்டது. பின் கோவிலன் தெற்கு  வாசல் பகுதிக்கு வந்த நமது குருநாதர், வந்த அனைத்து மக்களையும் அமர வைத்து,  இந்த கிரிவல நோக்கம் என்ன மற்றும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை வந்தவர்களுக்கு விளக்கினார். இந்த கூட்டமிகுதியில் ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கும், நம் கிரிவலம் குறித்த தகவலை தெரிவித்தார் நம் குருநாதர். பின் 10.00am அளவில் நமது கிரிவலம், சன்னதியின்  தெற்கு   வாசலில் இருந்து தொடங்கியது.மிளகாய்ப்பழ சித்தர்


கழுகுமலை மக்களின் அன்போடும், அவர்களின் இணைவோடும் நமது பயணம் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதியை அடைந்தது. அங்கு பக்தர்கள் அனைவருக்காகவும்  சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனித்தனியாக சிறப்பு அர்ச்சனைகள் நடந்ததது, அங்கு அனைவருக்கும் நமது குருநாதர்.,  ஈஸ்வர பட்டர் பெருமானின் மகிமையை எடுத்துரைத்தார். பின் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் திருஉருவப்படம் வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.


தர்ப்பணம்மிளகாய்ப்பழச்சித்தர் ஜீவசமதியில்  இருந்து தொடர்ந்த கிரிவலம் நேராக மலையின் பின் பகுதியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆம்பல் ஊரணியை அடைந்தது. அங்கு குருநாதர்கள் அவர்கள்., தர்பை மூலம் தர்ப்பண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக தங்கள் முன்னோர்களை மனதில்  நினைத்து, தர்ப்பணம் செய்தனர்.


 அன்னதானம்


 அன்பர்கள் அனைவரும்  குருவை தொடர்ந்தபடி சரியாக 1.30pm மணி அளவில் சன்னதியின் மேற்கு வாசலை அடைந்தனர். பின் கழுகுமலை  ஊர்மக்கள் அனைவரும், நமது குருநாதரை வந்து சந்தித்து ஆசி பெற்று, பின் அனைவருக்கும், நமது குருநாதர் தமது கைகளால் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மேலும் கிரிவலம் மற்றும் அன்னதானத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நமது குருநாதர், காசி உட்பட 108 சிவா ஆலயங்களில் வைத்து விஷேச பூஜை செய்யப்பட்ட சொர்ணநாணயங்கள் வழங்கப்பட்டது.

நன்றி

இந்த கிரிவலம் மகாரிஷி ஈஸ்வரபட்டர் அவர்களின் ஆசியாலும்,கழுகாசமூர்த்தியின் அருளாலும் கிரிவலம் இனிதாக நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட அனைத்து  அன்பர்களுக்கும், அனுமதி அளித்து உறுதுணையாக இருந்த கலுகாசமூர்த்தி ஆலய நிர்வாகத்தினர்,கழுகுமலை காவல்துறை ஆய்வாளர், தூத்துக்குடி மாவட்ட ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கழுகுமலை பொதுமக்களுக்கும் ஆன்மிகஅரசுமற்றும் ஆன்மிகக்கடல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.