RightClick

குருப்பெயர்ச்சி 05.07.2015- 02.08.2016

வணக்கம் இன்று  (05.07.15) சுபஸ்ரீ ம ன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிறு இரவு 01.03 மணிக்கு மகம் நடசத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார்.


குருப்பெயர்ச்சி 
  பொதுவாக இந்த பிரபஞ்சம் கிரகங்களை வேர்களாகக் கொண்டுதான் சுழல்கிறது. அதில் ஆணிவேராக இந்த உலகத்தை வழிநடத்துவது நமது குருபகவான். இதனை மறைமுகமாக விளக்கவே அன்றோர் சான்றாக அமைந்த வாக்கியம்தான் 'குரு தொட்டுகட்டினால் கிட்டிடும் இராஜயோகம். இந்த  உவமை வார்த்தை ஜாலமாக மட்டும் நின்றுவிடவில்லை, நமது வாழ்க்கையின் ஜாலமாகவே மாறியதன்  சான்றுதான் இந்த கிரகங்களின் பெயர்ச்சி. அதில் குருவின் பெயர்ச்சியில், ஜீவராசிகள்  தன்  தடைகளை வென்று, தகர்த்து முன்னேறும் பாதைக்கான நேரம்   அமைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த குருவின் பார்வையை நாம் அடையவிருக்கிறோம். உங்களில் சில பேருக்கு கிரங்களின்  பெயர்ச்சி ஏன் என்ற சந்தேகம் இருக்கலாம் அதற்க்கான விடை இதோ இந்த வேளையில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

கிரகங்களின் பெயர்ச்சி ஏன்?இப்போது நமது குரு பகவான் பார்வை எப்போதுமே இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம். அப்படி பட்ட பார்வை இந்த பெயர்ச்சிப் பொழுதில் பதியவிருப்பது மேஷம், தனுசு,கும்பம் ஆகிவையாகும். இதில் இன்னும் ஒரு முக்கிய நிகழ்வாக பொருளாதரத்தைக் குறிக்கும் ஸ்தானமான  (2 ம் இடம்) தனஸ்தானத்தைப் பார்க்கிறார். அதனால் தனவரவுக்கு தடையே வராது. மேலும் விருச்சிகம்,மகரம் மற்றும் மீனம் போன்ற இராசிக்காரர்கள் மீதும் குரு பார்வை படுகிறது. மற்ற இராசிக்காரர்கள் குருபெயர்ச்சியின் போது சென்று வழிபாட்டில் கலந்து கொண்டால் நிச்சயம் பார்வைக்கான பலன் நன்மையாகவே அமையும். பொதுவாக இந்த பெயர்ச்சியின் பொழுது குரு பலமும், வழிபாடும் திண்ணமாக இருந்தால்,   திருமணம் கைகூடும், புத்திரபாக்கியம் கிட்டும், மனை யோகம் வாய்க்கும் ,மற்றும் தீராத பினியில் இருந்து விடு படலாம்.


குரு பீடங்கள்   குருப் பெயர்ச்சி நடக்கும் வேளைகளில் ஆலயங்களில் , நமது குருபகவானின் அருள் வாசம் அதிகமாக இருக்கும்   இடங்கள். இங்கு உங்களுக்காக சில முக்கியமான  குரு பீடங்களை குறிபிட்டுள்ளேன், இது பெரும்பாலும் ஜாதகரின் அறிவுரையின் சென்றுவருவது வழக்கம். உங்களுக்கு விருப்பமாயின் கீழ் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு  சென்று குரு பகவானை  வழிபடலாம். 1.திருச்செந்தூர்,2. சிவகங்கை பட்டமங்கலம்,3.திருவாரூர் மாவட்டம் மடப்புரம் தட்சிணாமூர்த்தி,4.சூரியனார் கோவில்  .5.புதுக்கோட்டை அருகிலுள்ள திருவேங்கைவாசல்,6.திருவெற்றியூர் . இது போன்ற தளங்களுக்கு செல்ல இயலதவர்கள் உங்கள் அருகாமையில் உள்ள பழமையான சிவ ஆலயங்களில் சென்று வழிபட்டாலே  போதும்.
குருவின் பயணம் 05.07.2015 - 02.08.2016


குரு பார்வை  
 விருச்சிகம், மகரம், மீனம்,
 சிம்ம குரு
 தனுசு,கும்பம், மேஷம் 
 இராகு-கேது பெயர்ச்சி
 08.01.15(சிம்ம  , கும்பம்
 குருபெயர்ச்சி 
 02.08.2016-ல் கன்னி இராசியில் செவ்வாய்கிழமை.குரு பெயர்சசிகாலங்களின் போது  நமது வழிபாடுகள் 

மேஷம்: 

விநாயகர், முருகன், துர்கையை  வழிபடுங்கள். வியாழன்தோறும் குருவுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். வறுகடலை, வெல்லம் தானம் கொடுங்கள். 

ரிஷபம்:

உணவு தானம் குறைந்தது ஐந்துப்  பேருக்காவது கொடுங்கள், ஏழைப் பெண்களுக்கு மருத்துவ உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்து தரலாம். 

மிதுனம்: 

 வியாழக்கிழமைகளில் காக்கைக்கு படையல் இடுங்கள்.அரிசி மாவினால் சிறுசிறு உருண்டைகள் செய்து, ஆறு, குளத்து மீன்களுக்குப் போடுவது புண்ணியம் தரும். 

கடகம்: 

பார்வதி, பரமேஸ்வரர், ஸ்ரீலஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகியோரை வழிபட  வேண்டும். 

சிம்மம்: 

சூரியனை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். அதிதேவதையாக ருத்ரனையும் வழிபடலாம். கணபதி, ஸ்ரீதுர்கை மற்றும் ராகுவையும் வழிபடலாம். 

கன்னி: 

ஸ்ரீலஷ்மி நாராயணரை வழிபடுங்கள். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்,பிராயணம்  செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். நெற்றியில் மஞ்சள் சந்தனம் அணிய, சுபகாரியத் தடை விலகும். 

துலாம்: 

மகாகணபதி, ஸ்ரீதுர்கை, ராகு-கேது ஆகியோரை வழிபடவும். 

விருச்சிகம்: 

ஸ்ரீதுர்கை, கணபதி, ஸ்ரீவிஷ்ணு, பைரவ ஆராதனைகள்  செய்ய வேண்டும். பெரியவர்களையும் பெற்றோர்களையும் கவுரவிக்கவும். 

தனுசு: 

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு திருநாகேஸ்வரம் சென்று பால் அபிஷேகம் செய்தால் சிறப்பு உண்டாகும். திங்கட்கிழமைகளில் சிவ ஆராதனை செய்யுங்கள். 

மகரம்:

 சனிக்கிழமைகளில் பைரவரை  கும்பிட வேண்டும். 

கும்பம்: 

சனிபகவானை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள் சாதம் இடுங்கள். சிவபெருமானையும், பத்ரகாளிளையும் வழிபடுங்கள். 

மீனம்: 

ஸ்ரீதுர்கை, விஷ்ணுவை வணங்க வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு தோஷத்தை அறவே போக்கும். மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது.    


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ