RightClick

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!!! கழுகுமலை கிரிவலம் : அய்யா சகஸ்ரவடுகர் அவர்களுடன்

ஓம் சிவ சிவ ஓம் !!! 

ஓம் மஹா கணபதியே சரணம் !!

ஓம் அண்ணாமலையாரே போற்றி !! 
ஓம் உண்ணாமுலைதாயே போற்றி போற்றி !! 

ஓம் ஈஸ்வரப்பட்டாய நமஹ !!

ஓம் கழுகாசலமூர்த்தியே சரணம் !!


ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் .

கழுகுமலையில் ஈஸ்வரபட்டர்  அய்யாவின் நினைவாக நான்காம் ஆண்டு சித்தக்கிரிவலம்


  • கழுகுமலையில்  ' மகாயோகி ஈஸ்வரபட்டரின் அய்யாவின் ' நினைவாக 11ம்ஆண்டு நிறைவாக   " குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் " தலைமையில் 4ம் ஆண்டு சித்தக்கிரிவலம் மற்றும்  அன்னதானம்  நடைபெறுகிறது.

  • கிரிவலம் சரியாக 23.7.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சரியாக காலை 11am அளவில் கழுகாசமூர்த்தியின் சன்னதியில் இருந்து ஆரம்பிக்கிறது.

  • கிரிவலம் முடிந்த பின்  நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வாழ்வை வளமாக்கும் ஆன்மீகச் சொற்பொழிவு  உள்ளது.
 இந்த கிரிவலம் ஆன்மீகத்தேடலில் உள்ளவர்களுக்கு மிகமிக முக்கியமான நிழற்குடை. ஆம் அன்பர்களே ஆன்மீக பசிக்கு நல்லுணவு சத்துணவு காத்துக்கெ ாண்டிருக்கிறது. 

அனைவரும் ஆவலுடன் அறிய விரும்பும் " நெற்றிக்கண் எனும் மூன்றாம் கண் " பற்றியும் திறக்க செய்யும் வழிகளைப்பற்றிய   விவரங்களை நம் அய்யா அவர்கள்  எடுத்து உரைக்க இருக்கிறார்கள்.

அன்பான சகே ாதர சகே ா தரிளே கழுகாசலமூர்த்தியின் திருவடியில் ஒன்று கூடுவே ா ம் .... 

ஓம் சிவ சிவ ஓம் 
மகாரிஷி அய்யா ஈஸ்வரபட்டர் ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரபட்டர் அவர்கள் கன்னட மாநிலத்தில் பிறந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே, பல சித்த ஞானிகளிடம் ஆசி பெற்று,  ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக  தென்னிந்தியாவை வந்தடைந்தார். இங்கிருக்கும் எளியோர்களுக்கு, அவர்கள் துன்பங்களில் இருந்து விடுபட அருள்புரிந்தார். பின் பழனியம்பதிக்கும் வந்து மக்களின் குறைகளை தீர்த்து பல சித்துகள் புரிந்தார். ஐயா அவர்கள்  பழனி கிரிவலப்பாதையில் மலைக்கு அடியில்  ஜீவ ஒளி  வடிவமாகி  48 வருடங்கள் ஆகின்றது. இடும்பன் கோவில் அருகாமையில் ஜீவ அதிர்ஷடானம் அமைந்துள்ளது.

                       வாழ்க்கையின் பிரச்சினைகளின் பிடியில் உள்ளவர்கள் " ஓம் ஈஸ்வரபட்டாய நமஹ " என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் மகான் அவர்கள் " சூட்சுமமாக " நம்மை சீர்படுத்துவார் - திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.  இந்த மகானின் ஆயுள்கால சீடர்தான் நம் குருநாதர் சகஸ்ரவடுகர்.  


கிரிவலம் 
வருகிற ஆடி அமாவாசை (23.07.2017) ஞாயிற்றுக்கிமை  அன்று நடைபெற இருக்கிறது.

  நாம்  நமது வாழ்வில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை எந்த ஒரு அளவீட்டாலுமோ அல்லது நுண்ணோக்கியினாலோ  நம்மால் அளக்க முடியாது, அதனை சமன் செய்யவும் முடியாது,  ஆன்மிக பிரார்த்தனைகளும், நமக்கு  குருமார்களால்   கிடைக்கப்படும் வழிகாட்டுதல்களும்  எல்லாவித  பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதற்கான சரியான முதல் படி, சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும்தான். இப்படிபட்ட விஷேசதரிசனம் சக்திகளையும், அற்புதங்களையும்  அளவில்லாமல் அருளக்கூடியவர்தான் மகரிஷி ஶ்ரீ ஈஸ்வரபட்டர்  அவர்கள். அவர்தம் நினைவாக நாம் மேற்கொள்ள இருக்கும் இந்த கிரிவலம் நமது இன்னல்களை முழுவதுமாக துடைத்து நம்மை நெறிப்படுத்தும். வாழ்வை வளப்படுத்தி முன்னேற்றும். 


அமாவாசை கிரிவலம் 


இந்து சமயம்  மற்றும் ஜோதிட சாஸ்திர மரபுப்படி அமாவாசை தினங்களில்தான் மறைந்த நம் முன்னோர், தங்களின் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகுக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை. எல்லா தமிழ் மாத அம்மாவசை  தினங்களுமே சிறப்பானவைதான். ஆனால் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில்  அமாவாசையின் பொழுது  பூமி எண்ணற்ற நற்கதிர்களை ஈர்க்கும்,.அப்போது  நாம் செய்யும்  நமது பித்ரு சாபவிமோச்சன வழிபாடு வெற்றி பெறும் மேலும் நம் மனதில் இருக்கும்  இருள் நீங்கி அருள் என்னும் வெளிச்சம் பெற அமாவாசை தினங்களே மிகவும் சரியான நாள்.  

தர்ப்பணம்


பூர்வ ஜென்ம கர்மாவினால் பாதிக்கப்படுவோர், இந்நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனாலேயே கன்னியாகுமரி கடற்கரையிலும் பித்ரு  நினைவாக  தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வர். இதுபோல், நெல்லை மாவட்டம் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட அருவிகளில் புனித நீராடும் வழிபாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால்   நமது  சித்தர்கள் மிகவும் எளிமையான தர்ப்பண முறையையும் நமக்காக உருவாக்கி  இருக்கிறார்கள். அதை   குருநாதர்  நமக்காக  விளக்கி நம்மையும் செய்ய வைக்க விருக்கிறார்.  நாம் தர்ப்பணம் செய்து நமது பாவங்களை முற்றிலுமாக கரைத்துவிடலாம்.
பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மகாரிஷி ஶ்ரீ ஈஸ்வரபட்டர் நினைவாக நடைபெறும் கிரிவல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே,  ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது  சிவனடியார்களின் வாக்கு. ஆடி மாதம் கழுகுமலையில் சித்தர்களின் வருகைகள் அதிகமாக இருக்கும், இந்த புண்ணிய பூமியில் இன்னும் மனிதர்களின் கண்ணில் அகப்படாமல்  பல ஜீவசமாதிகள் உள்ளன. அந்த மகான்களின் ஆசியும் இந்த வேலையில் அதிகமாக வெளிப்படும்.   அவர்களை வரவேற்கவே  ஆடி அமாவாசையில் இந்த கிரிவலத்தினை நமது ஆன்மீக வழிகாட்டி குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் இறையருளால் நடத்தி வருகின்றார்கள். 
கழுகுமலை வரும் வழி 

குறிப்பு 

இந்த அமாவாசை நூற்றைம்பது ஆண்டுக்கு பின் வருவது மிகவும் சிறப்பு மிக்கது.மேலும் இந்த தினத்தில் பதினென் சித்தர்கள் சமணச் சான் ே றார்கள் கிரிவலம் வருவது ஐதீகம். 

நம் அய்யா சகஸ்ரவடுகர் வழிநடத்த நம் கர்மவினைகளை அழிக்கும்பெ ா  ருட்டு கழுகாசலமூர்த்தியின் திருவடி பணிந்து சகல நலம் பெறுவே ா மாக .!!

கிரிவலத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து அன்பர்களும் மஞ்சள் நிற ஆடையுடன் கழுகாசமூர்த்தியின்  சன்னதியின் முன்பாக சரியாக 23.07.2017 அன்று காலை 10.30am அளவில் வந்து சேறுமாறு கனிவன்புடன்  கேட்டுக்கொள்கிறோம் .

குருநாதர் அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் மற்றும் ஆன்மிகக்கடல் - ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம். 

நலம் உண்டாகட்டும். 


ஓம் நற்பவி .....


ஓம் சிவ சிவ ஓம் !!!                            ஓம் ஈஸ்வரப்பட்டாய நமஹ                              ஓம் சிவ சிவ ஓம் !!!

சமர்ப்பணம்

ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு அன்பர்களுக்கு ,


நமது மதிப்பும் மரியாதையும் மிக்க மேதை.Dr .A .P .J . அப்துல் கலாம் அய்யா அவர்கள் மறைவிற்கு  மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் ..

மேலும் எவ்வித பாகுபாடு பார்க்காத அண்ணல் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திப்போம் .

அவர் நம் நாட்டின் மீது கொண்ட பற்று அளவிடற்கரியது .அவரது சாதனைகளை சிறப்பிக்கும் வகையில் நாம் எவ்வித மத வேறுபாடின்றி அய்யா அப்துல் கலம் அவர்களின் பெயரை நம் வருங்கால சந்ததி இனருக்கு சூட்டி, அவர் பெயர் நிரந்தரமாக நம் மண்ணில் உலா வருவதோடு மட்டுமின்றி
      அப்பெயரை அழைக்கும் போதெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் எண்ணம் ,செயலாக அயராது உழைக்க வேண்டும் :  அவர் எண்ணத்தை நாம் செயல்படுத்துவோம்..

அய்யா அப்துல் கலாம் அவர்களே.., "நீங்கள் உடலால் எங்களை பிரிந்தாலும், எங்களது எண்ணத்தில் சிந்தனை என்னும் விதையாய் விதைக்க பட்டுவிட்டீர்கள் .. மரமாகவும் பின் தோப்பகவும் மாற்றிக்காட்டுவோம் ;  நன்றி கூற "நன்றி  எனும் வார்த்தை கொடுத்து வைதிருக்கிரதுபோலும் .. இருதயத்தில் உங்கள் நினைவுகளுடன் "" 
ஆன்மிகக்கடல் மற்றும் ஆன்மிக அரசு குழுமம் உடன் அன்பர்கள் நீங்களும் "


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ 

குருப்பெயர்ச்சி 05.07.2015- 02.08.2016

வணக்கம் இன்று  (05.07.15) சுபஸ்ரீ ம ன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிறு இரவு 01.03 மணிக்கு மகம் நடசத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார்.


குருப்பெயர்ச்சி 
  பொதுவாக இந்த பிரபஞ்சம் கிரகங்களை வேர்களாகக் கொண்டுதான் சுழல்கிறது. அதில் ஆணிவேராக இந்த உலகத்தை வழிநடத்துவது நமது குருபகவான். இதனை மறைமுகமாக விளக்கவே அன்றோர் சான்றாக அமைந்த வாக்கியம்தான் 'குரு தொட்டுகட்டினால் கிட்டிடும் இராஜயோகம். இந்த  உவமை வார்த்தை ஜாலமாக மட்டும் நின்றுவிடவில்லை, நமது வாழ்க்கையின் ஜாலமாகவே மாறியதன்  சான்றுதான் இந்த கிரகங்களின் பெயர்ச்சி. அதில் குருவின் பெயர்ச்சியில், ஜீவராசிகள்  தன்  தடைகளை வென்று, தகர்த்து முன்னேறும் பாதைக்கான நேரம்   அமைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த குருவின் பார்வையை நாம் அடையவிருக்கிறோம். உங்களில் சில பேருக்கு கிரங்களின்  பெயர்ச்சி ஏன் என்ற சந்தேகம் இருக்கலாம் அதற்க்கான விடை இதோ இந்த வேளையில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

கிரகங்களின் பெயர்ச்சி ஏன்?இப்போது நமது குரு பகவான் பார்வை எப்போதுமே இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம். அப்படி பட்ட பார்வை இந்த பெயர்ச்சிப் பொழுதில் பதியவிருப்பது மேஷம், தனுசு,கும்பம் ஆகிவையாகும். இதில் இன்னும் ஒரு முக்கிய நிகழ்வாக பொருளாதரத்தைக் குறிக்கும் ஸ்தானமான  (2 ம் இடம்) தனஸ்தானத்தைப் பார்க்கிறார். அதனால் தனவரவுக்கு தடையே வராது. மேலும் விருச்சிகம்,மகரம் மற்றும் மீனம் போன்ற இராசிக்காரர்கள் மீதும் குரு பார்வை படுகிறது. மற்ற இராசிக்காரர்கள் குருபெயர்ச்சியின் போது சென்று வழிபாட்டில் கலந்து கொண்டால் நிச்சயம் பார்வைக்கான பலன் நன்மையாகவே அமையும். பொதுவாக இந்த பெயர்ச்சியின் பொழுது குரு பலமும், வழிபாடும் திண்ணமாக இருந்தால்,   திருமணம் கைகூடும், புத்திரபாக்கியம் கிட்டும், மனை யோகம் வாய்க்கும் ,மற்றும் தீராத பினியில் இருந்து விடு படலாம்.


குரு பீடங்கள்   குருப் பெயர்ச்சி நடக்கும் வேளைகளில் ஆலயங்களில் , நமது குருபகவானின் அருள் வாசம் அதிகமாக இருக்கும்   இடங்கள். இங்கு உங்களுக்காக சில முக்கியமான  குரு பீடங்களை குறிபிட்டுள்ளேன், இது பெரும்பாலும் ஜாதகரின் அறிவுரையின் சென்றுவருவது வழக்கம். உங்களுக்கு விருப்பமாயின் கீழ் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு  சென்று குரு பகவானை  வழிபடலாம். 1.திருச்செந்தூர்,2. சிவகங்கை பட்டமங்கலம்,3.திருவாரூர் மாவட்டம் மடப்புரம் தட்சிணாமூர்த்தி,4.சூரியனார் கோவில்  .5.புதுக்கோட்டை அருகிலுள்ள திருவேங்கைவாசல்,6.திருவெற்றியூர் . இது போன்ற தளங்களுக்கு செல்ல இயலதவர்கள் உங்கள் அருகாமையில் உள்ள பழமையான சிவ ஆலயங்களில் சென்று வழிபட்டாலே  போதும்.
குருவின் பயணம் 05.07.2015 - 02.08.2016


குரு பார்வை  
 விருச்சிகம், மகரம், மீனம்,
 சிம்ம குரு
 தனுசு,கும்பம், மேஷம் 
 இராகு-கேது பெயர்ச்சி
 08.01.15(சிம்ம  , கும்பம்
 குருபெயர்ச்சி 
 02.08.2016-ல் கன்னி இராசியில் செவ்வாய்கிழமை.குரு பெயர்சசிகாலங்களின் போது  நமது வழிபாடுகள் 

மேஷம்: 

விநாயகர், முருகன், துர்கையை  வழிபடுங்கள். வியாழன்தோறும் குருவுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். வறுகடலை, வெல்லம் தானம் கொடுங்கள். 

ரிஷபம்:

உணவு தானம் குறைந்தது ஐந்துப்  பேருக்காவது கொடுங்கள், ஏழைப் பெண்களுக்கு மருத்துவ உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்து தரலாம். 

மிதுனம்: 

 வியாழக்கிழமைகளில் காக்கைக்கு படையல் இடுங்கள்.அரிசி மாவினால் சிறுசிறு உருண்டைகள் செய்து, ஆறு, குளத்து மீன்களுக்குப் போடுவது புண்ணியம் தரும். 

கடகம்: 

பார்வதி, பரமேஸ்வரர், ஸ்ரீலஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகியோரை வழிபட  வேண்டும். 

சிம்மம்: 

சூரியனை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். அதிதேவதையாக ருத்ரனையும் வழிபடலாம். கணபதி, ஸ்ரீதுர்கை மற்றும் ராகுவையும் வழிபடலாம். 

கன்னி: 

ஸ்ரீலஷ்மி நாராயணரை வழிபடுங்கள். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்,பிராயணம்  செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். நெற்றியில் மஞ்சள் சந்தனம் அணிய, சுபகாரியத் தடை விலகும். 

துலாம்: 

மகாகணபதி, ஸ்ரீதுர்கை, ராகு-கேது ஆகியோரை வழிபடவும். 

விருச்சிகம்: 

ஸ்ரீதுர்கை, கணபதி, ஸ்ரீவிஷ்ணு, பைரவ ஆராதனைகள்  செய்ய வேண்டும். பெரியவர்களையும் பெற்றோர்களையும் கவுரவிக்கவும். 

தனுசு: 

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு திருநாகேஸ்வரம் சென்று பால் அபிஷேகம் செய்தால் சிறப்பு உண்டாகும். திங்கட்கிழமைகளில் சிவ ஆராதனை செய்யுங்கள். 

மகரம்:

 சனிக்கிழமைகளில் பைரவரை  கும்பிட வேண்டும். 

கும்பம்: 

சனிபகவானை வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள் சாதம் இடுங்கள். சிவபெருமானையும், பத்ரகாளிளையும் வழிபடுங்கள். 

மீனம்: 

ஸ்ரீதுர்கை, விஷ்ணுவை வணங்க வேண்டும். பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு தோஷத்தை அறவே போக்கும். மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது.    


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ