
அனைவருக்கும் வணக்கம் ., முதலில் உங்களுக்கு என்னுடைய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு வரும் சோதனைகளை உங்களுடையப் பிரார்த்தனைகள் மூலமாகவே நிச்சயம் வெல்லலாம். இறைவன் நம்மை இந்த இடர்களால் ஆன உலகிற்குக்கிடையே தனியே விட்டு விடவில்லை அந்தந்தப் பருவத்திற்கு ஏற்றவாறு, நமது பெற்றோர்,ஆசிரியர்,குருநாதர் மற்றும் நாம் நமக்காக சேமித்த நம் சொந்தங்கள் என வரிசசையாக நம் கரம் பிடித்து வழிநடத்துவார்கள். அப்போது அதை நாம் ஏற்று நமது சோதனைகளையும், இன்னல்களையும், பிரார்த்தனை என்ற நெருப்பைக் கொண்டு அனைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் நமது தலையாய பிரச்சனையாக உள்ளது கடன், ஒருவகையில் ஆன்மிக சான்றோர்களின் கூற்றின்படி., நாம் அனைவரும் நமது முந்தையப் பிறவியில் ஏற்பட்ட கடன்களை திருப்பி செலுத்தவே வந்துள்ளோம் என்பார்கள். இந்த சூழ்நிலையில் நாம் நமது மாயஉலகில் அத்தியாவிச தேவைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு அதனால் கூட இடர்களில் சிக்கித் தவிப்பவர்கள் நம்மவர்களில் பலர் இருக்கிறார்கள். அதில் தொடர்ந்து தமது கடன்களை அடைக்க முயன்றும் முடியாமல், தொழில் நடத்த முயன்றும் அதை சரிவர செய்ய முடியாமல் என்று கடன்களின் பரிணாமம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேப் போகிறது நம் பூவுலகில். அதில் இருந்து விடைபெற நாம் அந்த பணத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆம் தகுந்தகாலம் பணப்பறிமற்றதிர்க்கான நேரம் என்பதே முக்கியம். அதற்கு சான்றாக நீங்களும், உங்கள் அனுபவ மின்னஞ்சல்களுமே சான்றாக உள்ளது. நாம் நமது வலைத்தளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டுவரும் மைத்திரமூகூர்த்தம் இதோ இன்று பார்வைக்கு. நாம் நமது வலைத்தளத்தில் 13.04.15 அன்று வரையிலான மைத்ர மூகூர்த்தம் தினத்தை குரிபிட்டவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2015-2016 ம் ஆண்டுகளுக்கான மைத்ர மூகூர்த்தம் தினங்கள்.
01.05.15-வெள்ளி காலை 07.20am முதல் 09.18 வரை
06.05.15-புதன் இரவு 08.24pm முதல் 10.24 வரை
29.05.15-வெள்ளிமதியம் 02.08pm முதல் 04.08 வரை
02.06.15- செவ்வாய் காலை 09.44am முதல் 11.44am வரை
25.06.15-வியாழன் காலை 10.40am முதல் 12.40pm வரை
29.06.15-திங்கள் அதிகாலை 05.05am முதல் 07.05 வரை
10.07.15-வெள்ளி இரவு 09.24pm முதல் 11.24 வரை
02.07.15-புதன் மதியம் 01.36pm முதல் 03.36 வரை
27.07.15-திங்கள் அதிகாலை 03.40 முதல் 05.40 வரை
06.08.15-வியாழன் இரவு 11.02pm முதல் 01.02am வரை
19.08.15-புதன் காலை 05.24am முதல் 07.24am வரை
23.08.15-ஞாயிறு காலை 06.20am முதல் 08.20am வரை
03.09.15-வியாழன் மதியம் 11.04am முதல் 01.04pm வரை
15.09.15-செவ்வாய் மாலை 04.40pm 06.40pm வரை
19.09.15-சனி மதியம் 12.16pm முதல் 02.16pm வரை
12.10.15-திங்கள் இரவு 06.04am முதல் 08.04pm வரை
17.10.15-சனி மாலை 05.32pm முதல் 07.32 வரை
27.10.15-இரவு 11.08pm முதல் 01.08 வரை
13.11.15-இரவு 09.12pm முதல் 12.12am வரை
24.11.15- செவ்வாய் இரவு 11.05pm முதல் 12.05 வரை
10.12.15- சனி அதிகாலை 01.02am முதல் 02.02 வரை
21.12.15-திங்கள் மதியம் 12.08pm முதல் 02.08 வரை
02.01.15-சனி மதியம் 12.24pm முதல் 02.24 வரை
07.01.16-வியாழன மாலை 05.32 pm முதல் 07.32pm வரை
29.01.16-வெள்ளி இரவு 09.04 pm முதல் 11.04pm வரை
03.02.16-புதன் காலை 06.02am முதல் 08.02 pm
26.02.16-வெள்ளி மதியம் 02.08 pm முதல் 04.08 pm வரை
01.03.16-செவ்வாய் காலை 09.24 am முதல் 11.24 am வரை
24.03.16-வியாழன் இரவு 12.32 pm முதல் 02.32 am வரை
இங்கு மேல குறிப்பிட்ட நாட்களில் உள்ள நேரங்களில் உங்களில் தீராத கடன்களில் சிறிதளவேணும் உரியவரிடத்தில் கோடுத்தீர்களாயின் அந்த சிவனின் அருளால் உங்கள் பிரச்சனைகள் பனிபோல் விரைவில் மறையும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ