RightClick

மஹாசிவராத்ரிசிவராத்திரியின் சிறப்பாக இந்த மந்திர உபவாசகமாக இதனை உங்களுக்கு மறுபதிப்பாக தெரிவிக்கிறோம்.  நினைப்பிலும் செயலிலும் சுடர் ஒளியாக நிறைந்திருக்கும் ஏகனின் உரிய நாள் இன்று. அந்த மகேஸ்வரனின் விரதங்களில் முதன்மை வாய்ந்ததான்  இந்த மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் 

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

இதில்  உங்கள் விருப்பமான ஒரு உபவாசகத்தை எடுத்து உங்கள் முற்பிறவி கர்மாவை தீர்த்து வாழ்வில் வெற்றிக்கான வழியை ஏற்ற்படுதிக்கொள்ளவும், ஈசன் துணை நிற்பார்.

நல்லது நடக்கும், நல்லது பலிக்கட்டும்- -சகஸ்ரவடுகர் 


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

பங்குனி உத்திரமும் அதன் வழிபாடுமுறைகளும்

                                                                           

தென்னாடுடைய சிவனே போற்றி

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. 
பங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அ
ன்று பிறப்பவர்களும்/ இறப்பவர்களும் தெய்வம்சம் கொண்டவர்கள்.இன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.குல தெய்வம் தெரியாதவர்கள், பங்குனி உத்திரம் நக்க்ஷத்திரத்தில் இருந்து அடுத்த மாதம் (சித்திரை) உத்திரம் வரை ஆறு நாட்டு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை
  5-8 மணிக்குள்ளும் அல்லது, மாலை 5-8 மணிக்குள்ளும்கொடுப்பது சிறந்த பயணை தரும்.

இவ்வழிபாட்டு முறையினால் குல தெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் தெரிய வரும்.  

சாஸ்தா வழிபாடு செய்பவர்கள் , மேற்க்கூறிய வழிபாடு செய்தால் மிகப் அபரித பலனை கொடுக்கும்.

பங்குனி உத்திரம் அண்ணதானத்தின் மகிமை:5 இட்லி , எள்ளுபொடி நல்லணை சேர்த்து, சாம்பர், தனியாக, 7 பேருக்கு அண்ணதானம் அளிக்க வேண்டும்.
இதனால் பித்ருகடன் நிவர்த்தி, மாணவர்கள் நல்ல தேர்ச்சி, பதவி உயர்வு , நீண்ட கால குடும்ப பிரச்சினகளுக்கும் தீர்வு ஏற்படும், 
அனைவரும் மேற்கூறிய வழிபாட்டினை தங்கள் வசதி ஏற்ப செய்து, இறைவனின் பரிபூரண அருள்பெற வேண்டுகிறோம்.

அன்பர்கள் அனைவரும், இவ்வளைதளத்தில் கூறப்படும் ஆன்மீக தகவலால் பெறப்படும் அனுபவங்களை மின்ஞ்சலில் aanmigakkadal@gmail.com,.....aanmigaarasoo@gmail.comதெரிவிக்கவும்.

ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் உண்மையான விளக்கவுரை

ஆன்மிகக்கடல் வாசகர்களுக்கு நமது குருநாதர் அவர்களை சந்திக்க வந்த அன்பர் தனது நீண்ட வரூட சந்தேகம்  ஒன்றினை மிக பக்தியுடன் கேட்டு தெளிவு அடைந்த நிகழ்வினை குரூவின் அனுமதியுடன் தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்
அன்பர் பனிவுடன் கேட்ட கேள்வி.....:---
ஐயா நான் அதிகம் நன்மை செய்வதும்,
நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன்
இத்தனை துன்பம்?'' என்று கேட்டான்.
குருநாதர் சிரித்தார்.
""அது உன் முன்பிறவியிலான பயன். போன
ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக
இருந்திருக்கலாம். அதன்
விளைவு இப்போது தெரிகிறது,'' என்றார்.
பதிலுக்கு அன்பர் ""அந்த ஜென்மத்
தவறுக்கு தண்டனையை,
அப்போதே அல்லவா தர வேண்டும்....! நீங்கள்
சொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய்
இருந்தாலும், நன்றாய் வாழ்பவர்கள், போன
ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள்
என்றல்லவா அர்த்தமாகி விடும்...இது நியாயமா?''
என்று கேட்டார். 
""உன் வாதம் ஒரு வகையில் நியாயமானது.''
என்று குருநாதர் தொடர்ந்தார்.
""மகனே! மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு.
மனம் நிலையற்றது.
முதல் சில
பிறவிகளில் நன்றாய் நடப்பவன், அடுத்து வரும்
பிறவிகளில் நல்லவனாயிருக்க
உத்தரவாதமில்லை. ஆக, தண்டனைகள்
மாறி மாறி வரும். ஆனால், எந்நிலையிலும்
எப்பிறவியிலும், நல்லவராய் இருப்பவர்
மிகச்சிலரே.
அவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள்
சிவ பாதமடைவர். இது என்னையும்
சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும்,'' என்றார்.
நேர்மையாளருக்கு இப்போது தெளிவு பிறந்தது.இத்தகைய மிகப்பெரிய தகவலை மிக எளிமையாக கூறும் வல்லமை  சித்தம் மிகுந்த நமது குருவினால் உணர்ந்தோம.. 
ஓம்சிவசக்திஓம்