RightClick

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் =அவசியமான மறுபதிவு
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் பிரம்மா,விஷ்ணு,ருத்ரனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு என்று ஆரம்பித்து ம்என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

சித்தர்கள் வழிபாடு

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள் அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை. ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம் மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர் மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம் ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில் மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில் மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர் திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி. புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில் பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்) ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம். மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில். உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம். உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்; ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர். அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர். சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி. சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம் சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம் விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம் அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம். கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில். மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர் பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில். உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்) உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம் அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்) சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில். பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர். ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர். உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம். ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி ஆதாரம்:சித்தர்

கடலூரிலும் வீற்றீருக்கும் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்

                                                                                                                                               

இத்திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள வடலூருக்கு தெற்கு திசையில்  சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள நற்கருங்குழி கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. வள்ளலார் தண்ணீரால் விளக்கெரித்த இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

                                         திருக்கோயில் தோன்றிய வரலாறுசுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் குலோத்துங்க மன்னர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மன்னர் தன்  துணைவியாரின் திருகைலாச தரிசன வேட்கையைப்  போக்க வேண்டி திருகைலசநாதனையே தமது அருட்சக்தியால் மானசீகமாக கைலாசநாதபெருமானை கொண்டு வந்து, இவ்வூரில்   கைலாசநாதர் திருக்கோவில் என்று பெயர் சூட்டினார். மன்னரின் துணைவியாரும் அன்று முதல் இத்திருக்கோவிலேயே                      திருக்கயிலைநாதர்  தரிசனத்தைப் பெற்று   வந்தார். அன்று முதல் தற்போது வரை  இத்திருக்கோயிலில் திருக்கைலாச நாதரின் தரிசனம் போல் தினமும் மூன்று வேளையும்  நடந்து வருகிறது. 


                                                 திருக்கோவில் பராமரிப்பு


  இத்திருகோவிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கடலூர் உதவி ஆணையர் ஆளுகைக்கு உட்பட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய  அதிகாரி அவர்களால் தக்கார் நிலையில் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

                                                  பூஜை விவரம்

இத்திருகோவிலில் தரிசனம்   காலை 5.30am, மதியம் 11.30am, இரவு 7.30pm, ஆக மூன்று கால பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் , முருகன் சன்னதியும், நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது. நந்தவனம், மடபப்பள்ளி சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
  

                                                   திருக்கோயில் மகிமை இத்திருக் கோவிலில் வந்து ஒருமுறை  தரிசித்து சென்றால் 12 முறை திருக்கைலாயம் சென்று வந்த பலன் கிடைக்கும். திருக்கைலாயம் சென்று வந்தால்  என்னென்ன ஆத்மபலன்   கிடைக்குமோ? அதே பலனை அனுபவிக்கலாம், நோயற்றவாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் பெற்று இம்மையிலும் மறுமையிலும் கையிலை நாதரின் அருளைப் பெறுவது உறுதியாகும்.
 

                                                              விழாக்காலம்

இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி அன்று சூரசம்ஹாரம், விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி மற்றும் மார்கழி  விழாக்கள்  உபயமாக மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.


                                                            குடமுழக்குஇத்திருக்கோயில் கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உபயத்தால் திருப்பணி வேலைகள் நடைபெற்று மூன்று குடமுழக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருக்கோவில் பொலிவுடன் திகழ்கின்றது. இத்தனை பெருமையும் அருட்சக்திக்ளையும் உள்ளடக்கிய இந்த ஆலய திருப்பணி  மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் வாசர்களும் தங்களை இணைத்துக் கொண்டால் நிச்சயம் அந்த கைலாய பெருமானின்  அருளில் நாம் பங்குகொள்ளலாம். இதில் இறை அன்பர்கள் யாரும் தங்களை இணைத்து கொள்ள விரும்பினால்  கீழேக்  குறிப்பிட்டு  உள்ள கைபேசியில்   கோவில் நிர்வாகத்தினரை தொடர்புகொள்ளவும்.


அருள்மிகு காமாட்சி சமதா  கைலாசநாதர் காமாட்சி சுந்தரி திருக்கோவில்  நிர்வாகம்,
சிவன் கோவில் தெரு, 
கருங்காலி(PO),
வடலூர்-607303
கடலூர் மாவட்டம் ,

தலைவர்-திரு.S.இராஜேந்திரன்,
                     கைபேசி-9443411453
உப தலைவர் -திரு.s.அருள்பிரகாசம் 
                      கைபேசி-8508547936


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ


                                  

பிரம்மரிஷி சித்த சிவராஜயோகி ஸ்ரீ மாதவானந்தாசுவாமிகளின் ஜீவேஸ்வர 51வது ஐக்கிய விழா

நிகழும் ஜெயவருடத்தில் வற்றாத பூலோக ஜீவநதியாக நமது குறைகளை தீர்த்துவைத்துக் கொண்டு இருக்கிறார் பிரம்ம ரிஷி நமது மாதவானந்தா சுவாமிகள். அவர்களளின் ஜீவசமாதி சங்கரன்கோவில் அருகில் உள்ள பாம்பு கோவில் சந்தை என்னும் இடத்தில்  அமைந்திருக்கிறது. அங்கு சுவாமிகளின் 51வது ஜீவேஸ்வர ஐக்கிய விழா இரண்டு நாள் விழாவாக அனுசரிக்கப்பட இருக்கிறது. அவை முறையே (ஞாயிறு) 18.01.15 (திங்கள்) 19.01.15. அதில் நமது மெய்அன்பர்கள் ஆத்ம நமஸ்காரங்களுடன் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்அன்னதானமும் நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.


வரும் வழி
  •  சென்னை எழுபூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி சங்கரன்கோவிலில் இறங்கவும்., பின் அங்கிருந்து புளியங்குடி வழியாக சுரண்டை செல்லும் பேருந்தில் ஏறி பாம்பு கோவில் சந்தை  என்று கேட்டு இறங்கவும்.

  • புகைவண்டியில் வர நினைப்பவர்கள் சென்னையில் இருந்து மதுரையை வந்து அடைய வேண்டும், பின் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் புகைவண்டியில் ஏறி சங்கரன்கோவிலில் இறங்கி. பின் அங்கிருந்து புளியங்குடி வழியாக சுரண்டை செல்லும் பேருந்தில் ஏறிபாம்புகோவில் சந்தை கோவில் என்று கேட்டு இறங்கவும்                                                                                                                                                                                      
மேலும் விபரங்களுக்கு

           திரு. மணி,
பாம்பு சந்தை கோவில்,
சங்கரன்கோவில்,
கைபேசி-9688327810,9698209972 

விஜய & ஜய 2015 வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்


கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.

விஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.1.2015 முதல் 13.4.2015 வரை)


16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;

27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;

13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;

23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;

11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;

23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;

8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ