RightClick

சனிப்பெயர்ச்சி 2மேஷம் , சிம்மம், தனுசு


  நிகழும் ஜெய வருடத்தில் நடக்கின்ற சனிபகவானின் பெயர்ச்சியானது நம்மில் சில இராசிக்காரர்கள் மீது பாதிப்பை காண்பித்து கொண்டு இருக்கிறார். அவரின் இந்த கோபத்தை நாம் தனிய செய்யலாம். அது சனி பகவானின் குருவிடம் சென்று நாம் நம் குறைகளை முறையீடுவோமாயின் அந்த  பிரார்த்தனையின் வலிமையானது, நமக்கு வரும்  இடர்களில் இருந்து காக்கும் வேலியாகும்.


 பைரவரே சனிபகவானின் குரு                  சிவனின் அம்சமே நமது பைரவர் அம்சம்நமது இன்னல்கள், எதிர்ப்புகள்  மற்றும் தடைகளைத்  தகர்த்து எரிபவர். இதை நமக்கு பறைசாற்றும் விதமாக நமது சனி பகவானின் வாழ்க்கையில் நடந்த புராண சம்பவம் ஒன்று, " நமது சனி பகவானும்  ஒரு நாள் கர்ம வினையை அனுபவிக்க வேண்டிய காலம் ஒன்று வந்தது, அந்த நேரத்தில் நமது சனி பகவான்., தனது வினையை களைய அனைத்துப்  பிரம்ம ரிஷிகளையும் மற்றும் யோகி களையும்  சந்தித்து., தன்னுடைய துயரத்தின் வேதனையை அவர்களிடம் சொல்லி., தீர்வுக்கான விடையை கேட்டார். அதற்கு அவர்கள் அனைவரும் உரைத்த மந்திர சொல் பைரவர். அன்று முதல் பைரவரை  நோக்கி தனது பிரார்த்தனை செய்ய முயன்றார், உலகம் முழுவதும் அலைந்தார் ,ஆனால் அவரால் அதில் இருந்து  விடுபெற முடிய வில்லை , அப்போது அவர் மனதில் தோன்றிய ஒரு விஷயம் அவர் மனதை மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியது. எப்பொழுதுமே ஒருவரின் வினையை களையும் திறனும், உரிமையும் குருவின் பற்றிலேயே இருக்கிறது என்பதை உணர்ந்தார்.  மறு நிமிடமே  ஒரு மாமுனிவரின் உருவத்தை கண்டார்., அப்போது சனிபகவானின் மனநிலையைப் புரிந்துகொண்ட அந்த மகாமுனி ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று உன்னுடைய தவத்தை  அங்கு சென்று நடத்து என்று சொல்லிவிட்டு அவர் மறைந்தார். அங்கு நெடுங்காலம் பைரவரே நோக்கிய, அவரின் தவத்தின் பலனாக சிவபெருமான், சனி பகவான் முன் தோன்றி சனியின் பினிகளை அழித்து, புத்துயிர்க்  கொடுத்தார். அந்த பெருமை வாய்ந்த அந்த பைரவர் அமைவிடம் இருப்பது புலமைக்  கவியான மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர்., இது நமது தென் தமிழகத்தில் உள்ள மதுரை அருகே உள்ளது. அத்தைகைய சிறப்பு வாய்ந்த ஊரில் உள்ள சிவஆலயத்திற்கு ஒரு முறை  சனிப்பெயர்ச்சிக்காலத்தில் சென்று வழிபட்டு வந்தாலே  நிச்சயம் நமது சோதனைகளில் இருந்து விடுபடலாம்''.  இதை செய்ய இயலாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள பைரவரை வழிபடவும்.


சிறப்பு வழிபாட்டு முறை

   நாம் சனிப்பெயர்ச்சி  இன்னல்களை நாம் நமது குருவின் வழிகாட்டுதலை நாடினோம், இதோ அதற்கான சிறப்பு வழிபாடு ஒன்று நமது வலைப்பூ அன்பர்களுக்காக,
                         ஒரு சனிக்கிழமை நாளில் ஒரு காப்பர் தட்டை வாங்கிக்கொள்ளவும், அதில் குறைந்த அளவு நல்லெண்ணையை ஊற்றிக்கொள்ளவும்,   பின்  குடும்பத்தில் சனியின் பாதிப்பில் உள்ள இராசிக்கரார் தனது முகத்தைப் முதலில்  பார்க்கவும், அதை அதற்குப்  பிறகு குடும்பத்தார்  ஒவ்வொருவரும்  அதில் தங்கள் முகத்தைப் பார்த்த முடித்து பின், அந்த எண்ணையை ஒரு பைரவரின் முன் உள்ள எரியும் தீபத்தின் முன் ஊற்றிவிடவும்.  இப்படியாக தொடர்ந்து எட்டு வாரம் செய்தீர்களாயின் முழுமையான நன்மையை, முன்னேற்றத்தையும் எட்ட முடியும்- சகஸ்ரவடுகர்,
 இதை யாரும் உங்கள் உறனவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பயர்க்கும்  இரகசியம் காத்தாலே நன்மையை பயர்க்கும்.நம் நன்மைக்காக அவரது ஆராய்ச்சிக் குறிப்பை  நம்மிடம் பகிர்ந்து கொண்ட நம் குருநாதர் அவர்களுக்கு மிக்க நன்றி.


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ