RightClick

ஆரோக்கிய ஆன்மீகம் பகுதி 1

நாம் வாழும் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;செவ்வாய்க்கிரகத்திற்குக் கூட விண்கலம்
அனுப்புமளவுக்கு முன்னேறிவிட்டோம்;இருந்தும் கூட நாம் ஏன் இன்னும்
ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்?


நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் செல்போன் இல்லை;டிவி இல்லை;இணையம்
இல்லை;மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இல்லை;காது மூக்கு தொண்டைக்கு
என்று நமது உடல் உறுப்புக்களுக்கு என்று தனித்தனி மருத்துவர்களோ,தனித்தனி
மருத்துவப் படிப்போ இல்லை;இருந்தும் கூட நமது தாத்தா பாட்டி காலம் வரை
வாழ்ந்து வந்தவர்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார்கள்;நாமோ நாற்பது
ஆண்டுகள் வரை நோய் நொடி இன்றி வாழமுடியாமல் தவிக்கிறோமே ஏன்?

இதற்கான முழுக்காரணங்களையும் நாம் இந்தத் தொடரில் உணரப் போகிறோம்?


நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே
உணவு உண்டார்கள்;காலையில் நீராகாரம் அருந்திவிட்டு விவசாய வேலைக்குச்
செல்வர்;காலை 11 மணி முதல் 1 மணிக்குள் காலை உணவும்,மாலை 4 மணி முதல் 6
மணிக்குள் இரவு உணவும் சாப்பிடுவதோடு சரி;இடையிடையே ஆரோக்கியம் தரும்
இயற்கை தின்பண்டங்கள் சாப்பிடுவதும் உண்டு;இவர்கள் சாப்பிட்டதில் தற்போது
மிஞ்சியிருப்பது இளநீரும்,தேங்காயும் மட்டுமே.மாற்றம் என்பதே
நிலையானது;என்ற பழமொழியை நாம் படிப்படியாகவா அனுபவிக்கிறோம்?

இயற்கை நலவாழ்வு விழிப்புணர்வாளர்கள் சொல்லும் ஆரோக்கியக் கருத்துக்களை
கவனிக்கும் போது நமது சமகாலத்தவர்களுக்கு நோய்கள் வருவதற்குக்
காரணகர்த்தா கருமவினை அல்ல;கவனக்குறைவும்,நமக்கு எல்லாம் தெரியும் என்ற
மனோபாவமுமே!
அந்த ஆடிட்டருக்கு வயது 41 தான்;பசித்தால் என்ன சாப்பிடுவார் தெரியுமா?
ஹால்ஸ் ஐ மெல்லுவார்;வேறு எதையும் சாப்பிட மாட்டார்;இரவில் மட்டும்
இரண்டு பரோட்டா சாப்பிடுவார்;அதையும் முழுசாக அல்ல;சந்தோஷமாக இருந்தால்
ஒரு புரோட்டா அல்லது அதில் பாதிதான்;எப்போதும் வேலை;வேலை;வேலை
தான்;வெறும் ஒன்பது ஆண்டுகளில் சில பத்து லட்சங்கள்
சம்பாதித்தார்;ஆனால்,உணவு மண்டலம் கெட்டுப்போய் 240 நாட்களாக ஐ.சி.யூவில்
இருக்கிறார்;

இன்னொருவர் நமது தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்;காலை உணவு இரண்டு
டீ,மதிய உணவு கொஞ்சம் பிஸ்ஸா;இரவு உணவு மதுபானம்;இந்தப் பழக்கத்தால்
இன்று இவர் இல்லை;இந்தப் பழக்கம் இவரை 21 வயதில் தொற்றியது;31 வது வயதைத்
தொடவில்லை;
இவர்களைப் போல் ஏராளமானவர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்;ஒடி ஒடி
உழைத்து,மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கட்டணத்தை 20 அல்லது 30
ஆண்டுகளில் சம்பாதிக்கிறார்கள்;இதைப் போன்ற நிலை இனி ஒருபோதும்
நம்மவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தொடர்.


ஒருபோதும் சாப்பிடும் போது பேசக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே
தண்ணீர் அருந்தக் கூடாது;சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தக்
கூடாது;சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது அவசர
அவசரமாக உணவை அள்ளி வாய்க்குள் போட்டு விழுங்கக் கூடாது;காலை உணவு
சாப்பிட்டுவிட்டு,மதிய உணவு நேரம் வந்ததும் சாப்பிடக் கூடாது;மதிய உணவு
நேரம் வந்தாலும்,பசித்தால் மட்டுமே அடுத்தவேளை உணவைச் சாப்பிட வேண்டும்;
எப்போதும் எதையாவது மென்று கொண்டே இருக்கக் கூடாது.
இவைகளையெல்லாம் ஏன் செய்யக் கூடாது?

நமது உணவு மண்டலம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால்
மேலே சொல்லப்பட்டிருக்கும் “கூடாது”களை விடாப்பிடியாக
பின்பற்றத்துவங்குவோம்;

நாம் சாப்பிடும் பழங்கள் அல்லது அது சார்ந்த உணவுகளை நமது உணவு மண்டலம்
இரண்டு மணி நேரத்தில் சீரணிக்கிறது;
சைவ உணவு சாப்பிட்டால் அது சீரணமாக மூன்று மணி ஆகிறது. அசைவ உணவு
சாப்பிட்டால் அதை உணவு மண்டலம் சீரணிக்க ஐந்து மணி நேரம் எடுத்துக்
கொள்கிறது;
நாம் சாப்பிடும் உணவை சீரணிப்பதற்காகவே வயிற்றில் ஹைட் ரோ குளோரிக்
அமிலம் சுரந்து காத்துக் கொண்டிருக்கிறது;இந்த அமிலமானது நமது வயிற்றைத்
தவிர வேறு எந்த இடத்தில் பட்டாலும் அந்த இடத்தையே ஓட்டை போட்டுவிடும்;

தினமும் நாம் தாமதமாகவே தூங்கப் போகிறோம்;அதனால் தாமதமாக தூங்கி
எழுகிறோம்;காலைக் கடமைகளை முடித்துவிட்டு வீட்டைவிட்டுப் புறப்படும் போது
நேரமாகிவிட்டதே என்று நாம் தவிர்ப்பது காலை உணவு உண்பதை! சில மாதங்கள்
தொடர்ந்து இப்படி காலை உணவு சாப்பிடாமல் இருப்பதால் வயிற்றில்
சீரணத்திற்காக காத்திருக்கும் ஹைட் ரோகுளோரிக் அமிலம் தனது வேலையைச்
செய்யமுடியாமல் “ஆவி”யாகிவிடுகிறது;அப்படி ஆவியாவதால் தான் நமது வயிறு
தொப்பையாகிறது;தொந்தி மரணத்தின் தந்தி என்ற பழமொழியை இப்போதாவது
உணருவோமா?வருடக்கணக்கில் காலை உணவு உண்பதைத் தவிர்த்தவர்களுக்கு அது
அல்சராக வடிவம் எடுத்து,குடலை அரித்துவிடுகிறது;நேரமின்மையைத் தவிர்க்க
நாம் காலையில் எளிய உணவுகளை
உண்ணலாம்;பழங்கள்,தேங்காய்ச்சில்,பழச்சாறுகள்(இதில் ஐஸ் கலக்காமல்
இருப்பது அவசியம்),வேர்க்கடலை,உண்ணக்கூடிய காய்கள்,பச்சைக்
காய்கறிகள்,ஒருபோதும் டீ,காபி,குளிர்பானங்களை காலை உணவாக சாப்பிடக்
கூடாது.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதாலும்,சாப்பிட்ட உடனே தண்ணீர்
அருந்துவதாலும் உணவை சீரணிக்கக் காத்திருக்கும் அமிலம் நீர்த்துப்
போகிறது;இதனால் சீரணம் சிலருக்குத் தாமதமாகிறது;பலருக்கு சீரணமே
ஆவதில்லை;மதிய உணவு நேரத்தில் புளித்த ஏப்பம் வருகிறது;புளித்த ஏப்பம்
வந்தால் மதிய உணவை(அடுத்த வேளை உணவை) தவிர்ப்பது அவசியம்; ஒவ்வொரு
வேளையும் சாப்பிட்டப் பின்னர் சரியாக 30 நிமிடம் கழித்தப் பின்னரே
தண்ணீர் அருந்த வேண்டும்;

சாப்பிடும் போது டிவி பார்த்தால் நமது மனமும்,உடலும் உணவின் மீது கவனம்
இராது;சாப்பிடும் போது இயங்க வேண்டிய சுரப்பிகள் இயங்காமல்
போய்விடும்;நமது உடலில் 112 ஹார்மோன் சுரப்பு மையங்கள்
இயங்குகின்றன;டிவியில் அழுகைக் காட்சி வந்தால் அதற்குரிய சுரப்பிகள்
இயங்கும்;சிரிப்புக் காட்சிகள் ஒளிபரப்பானால் உரிய சுரப்பிகள்
செயல்படும்;அதிர்ச்சிகரமான காட்சிகள் தெரிந்தால் தற்காப்பு சுரப்பிகள்
சுரக்கும்;ஆனால்,ஒருபோதும் ஜீரணத்துக்குரிய சுரப்பிகள்
செயல்படாது;சாப்பிடும் போது செல்போனை அணைத்து வைப்பது பிரான்ஸ்
நாட்டினரின் வழக்கம்;ஏன் எனில்,சாப்பிடும் போது பேசினால் உமிழ்நீர்
உணவுடன் கலக்காமல் போய்விடும்;இவை அனைத்தையும் நாம் நாகரீக முன்னேற்றம்
என்று நாம் நம்புகிறோம்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ