RightClick

ஸ்ரீ பைரவர் சிவனின் அம்சமாகும்.


அந்தகாசூரன் என்ற ஒர் அரக்கன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தாருகாபுரத்தை எரித்த அக்னி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதை சக்தி தேவி வள்ர்த்து வந்தாள்.

தேவர்களின் துயர் துடைக்க அக்னி குஞ்சுக்கு சிவன் ஆணையிட்டார். அதன் விஸ்வருபம் தான் பைரவ பெருமான்.

முதலில் 8 பிரிவாக செயல்பட்ட ஸ்ரீ பைரவர் பின் சிவன் மாதிரி 64 மூர்த்தங்களில் 64 சக்திகளுடன் அருள்புரிகின்றார்.


பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சகணக்காண  உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தல் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

அந்தகாரத்தை நீக்கி உலகிற்கு ஒளியை கொடுப்பவர் ஸ்ரீ பைரவரே. திரிசூலத்தை மனக்கன்ணினால் எண்ணினாலே போதும். ஸ்ரீ பைரவர் உடன் வந்து அருள் செய்வார்.

பைரவரின் வாகனம் நாய் : இதுவே நான்கு வேத வடிவமாகும்.

பைரவருக்குண்டான பொது காயத்திரி :

சுவாநத்  வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்தோபைரவ பிரசோதயாத்


வழிபாடு

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி , தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம்  மற்றும் ஞாயிறு மாலை 4.30-6.00 மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.


நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லது நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.


ம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


                                                                                                                                                                        

ஆ ன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களின் தீபாவளி நல் வாழ்துக்கள் (21.10.14)


விஜய வருடத்தின் தீபாவளி 22.10.2014 புதன் கிழமை அன்று கொண்டாட இருக்கிறோம்;இந்த நன்னாளில் நாம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து,கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று மட்டும் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை நதி வரும் என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் லட்சக்கணக்கான ஆண்டு கால நம்பிக்கை!

சூரியன் உதயமாவதற்குள் காலைக் கடன்களை முடித்துவிடவேண்டும்;முதல் நாளே கடையில் வாங்கிய பிரட் பாக்கெட்டுகளை(இரண்டு) ஒரு தாம்பாளத்தில் கொட்டி சிறு சிறு துண்டுகளாக ஆக்க வேண்டும்;அத்துடன் கால் கிலோ பூந்தியை கலந்து கொள்ள வேண்டும்;வீட்டின் மொட்டை மாடி அல்லது வாசலில் மேடான பகுதியில் அல்லது வீட்டில் முன்பகுதியில் காக்கைக்கு சாதம் வைக்கும் இடத்தில் இந்த கலவையை வைக்க வேண்டும்;அதிகபட்சமாக காலை 7 மணிக்குள் வைக்க வேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதாக அர்த்தம்.அதுவும் தீபாவளித் திருநாள் அன்று செய்தால் முன்னோர்கள் மட்டுமல்ல;பித்ருக்கள் உலகத்தின் அதிதேவதைகளும்,தர்மராஜனும் மகிழ்ச்சியடைவார்கள்;நம்மை ஆசிர்வாதிப்பார்கள்!!!

பிறகு,சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்;இதைச் செய்வதற்குள் ஐந்து இட்லிகள்+எள்ளுப்பொட்டலம் கலந்த பார்சல்கள் குறைந்தது ஐந்து(வீட்டில் அம்மா/மனைவியிடம் சொல்லி) தயார் செய்து கொள்ள வேண்டும்.காலை எட்டு மணிக்குள் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கே வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு தானமாகத் தர வேண்டும்;ஐந்து சாதுக்கள் அல்லது நிராதரவான குழந்தைகளுக்கு அல்லது தனித்து வாழும் முதியவர்களுக்கு அல்லது அனாதைகளுக்குத் தர வேண்டும்;அருகில் கோவில் இல்லாவிடில்,அனாதை இல்லங்களில் தரலாம்;அல்லது அனாதையாக இருப்பவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றும் தரலாம்.குறைந்தது ஐந்து பேர்களுக்கு(அதிகபட்சமாக ஐந்தின் மடங்குகளில்= 10 பேர்கள்/15 பேர்கள்/20 பேர்கள்/25 பேர்கள்)

காலல 10 மணி முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நமது குல தெய்வம் கோவிலுக்குச் சென்று,குலதெய்வத்தின் சன்னிதானத்தில் இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி மனப்பூர்வமாக நமது தேவைகளை/கோரிக்கைகளை/வேண்டுதல்களை வேண்டிக்கொண்டு வீடு திரும்ப வேண்டும்.
குலதெய்வம் வெகுதூரத்தில் இருந்தால் இஷ்ட தெய்வத்தின் சன்னதியில் இது போல வழிபாடு செய்ய வேண்டும்.
இதன் மூலமாக கங்கையின் ஆசி,முன்னோர்களின் ஆசி,குல தெய்வத்தின் ஆசி,குருவின் ஆசி கிட்டும்.

சொர்ணதானம் 


இந்த நாளில்  நம் மனதின்  மற்றும் வாழ்வின் உள்ள இருளையும் அகற்ற சித்தர்கள் அருளிய ஒரு   முறையே இது. நாம் நம் அருகில் உள்ள சிவன்  சன்னதியை அடைந்து  வெளி பிரகாரத்தை நம் வேண்டுதலை கொண்டு சுற்றி விட்டு ஒரு ரூபாய் நாணயங்களை (இயன்ற அளவு )  சிவன் பதத்தில் வைத்து எடுத்து பின்  உள்ள எளியோருக்கு நம் கொடுத்தால்  விரைவில் நம்  வழியில்   முன்னேற்றம் அடையலாம் .  நாணயங்கள் எண்ணிக்கை முக்கியமில்லை செயல்தான்  முக்கியம்.

 "நீங்கள் ஒவ்வொருவரும் சகல வளங்களும்,அனைத்து நலங்களும் பெற்று வளமோடு வாழ்க! உங்கள் அனைவருக்கும் எமது தீபாவளி சிவவாழ்த்துக்கள்!!!"= சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள்

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஆரோக்கிய ஆன்மீகம் பகுதி 1

நாம் வாழும் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;செவ்வாய்க்கிரகத்திற்குக் கூட விண்கலம்
அனுப்புமளவுக்கு முன்னேறிவிட்டோம்;இருந்தும் கூட நாம் ஏன் இன்னும்
ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்?


நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் செல்போன் இல்லை;டிவி இல்லை;இணையம்
இல்லை;மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் இல்லை;காது மூக்கு தொண்டைக்கு
என்று நமது உடல் உறுப்புக்களுக்கு என்று தனித்தனி மருத்துவர்களோ,தனித்தனி
மருத்துவப் படிப்போ இல்லை;இருந்தும் கூட நமது தாத்தா பாட்டி காலம் வரை
வாழ்ந்து வந்தவர்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்து வந்தார்கள்;நாமோ நாற்பது
ஆண்டுகள் வரை நோய் நொடி இன்றி வாழமுடியாமல் தவிக்கிறோமே ஏன்?

இதற்கான முழுக்காரணங்களையும் நாம் இந்தத் தொடரில் உணரப் போகிறோம்?


நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே
உணவு உண்டார்கள்;காலையில் நீராகாரம் அருந்திவிட்டு விவசாய வேலைக்குச்
செல்வர்;காலை 11 மணி முதல் 1 மணிக்குள் காலை உணவும்,மாலை 4 மணி முதல் 6
மணிக்குள் இரவு உணவும் சாப்பிடுவதோடு சரி;இடையிடையே ஆரோக்கியம் தரும்
இயற்கை தின்பண்டங்கள் சாப்பிடுவதும் உண்டு;இவர்கள் சாப்பிட்டதில் தற்போது
மிஞ்சியிருப்பது இளநீரும்,தேங்காயும் மட்டுமே.மாற்றம் என்பதே
நிலையானது;என்ற பழமொழியை நாம் படிப்படியாகவா அனுபவிக்கிறோம்?

இயற்கை நலவாழ்வு விழிப்புணர்வாளர்கள் சொல்லும் ஆரோக்கியக் கருத்துக்களை
கவனிக்கும் போது நமது சமகாலத்தவர்களுக்கு நோய்கள் வருவதற்குக்
காரணகர்த்தா கருமவினை அல்ல;கவனக்குறைவும்,நமக்கு எல்லாம் தெரியும் என்ற
மனோபாவமுமே!
அந்த ஆடிட்டருக்கு வயது 41 தான்;பசித்தால் என்ன சாப்பிடுவார் தெரியுமா?
ஹால்ஸ் ஐ மெல்லுவார்;வேறு எதையும் சாப்பிட மாட்டார்;இரவில் மட்டும்
இரண்டு பரோட்டா சாப்பிடுவார்;அதையும் முழுசாக அல்ல;சந்தோஷமாக இருந்தால்
ஒரு புரோட்டா அல்லது அதில் பாதிதான்;எப்போதும் வேலை;வேலை;வேலை
தான்;வெறும் ஒன்பது ஆண்டுகளில் சில பத்து லட்சங்கள்
சம்பாதித்தார்;ஆனால்,உணவு மண்டலம் கெட்டுப்போய் 240 நாட்களாக ஐ.சி.யூவில்
இருக்கிறார்;

இன்னொருவர் நமது தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்;காலை உணவு இரண்டு
டீ,மதிய உணவு கொஞ்சம் பிஸ்ஸா;இரவு உணவு மதுபானம்;இந்தப் பழக்கத்தால்
இன்று இவர் இல்லை;இந்தப் பழக்கம் இவரை 21 வயதில் தொற்றியது;31 வது வயதைத்
தொடவில்லை;
இவர்களைப் போல் ஏராளமானவர்கள் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்;ஒடி ஒடி
உழைத்து,மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கட்டணத்தை 20 அல்லது 30
ஆண்டுகளில் சம்பாதிக்கிறார்கள்;இதைப் போன்ற நிலை இனி ஒருபோதும்
நம்மவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தொடர்.


ஒருபோதும் சாப்பிடும் போது பேசக் கூடாது;சாப்பிடும் போது இடையிடையே
தண்ணீர் அருந்தக் கூடாது;சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தக்
கூடாது;சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது அவசர
அவசரமாக உணவை அள்ளி வாய்க்குள் போட்டு விழுங்கக் கூடாது;காலை உணவு
சாப்பிட்டுவிட்டு,மதிய உணவு நேரம் வந்ததும் சாப்பிடக் கூடாது;மதிய உணவு
நேரம் வந்தாலும்,பசித்தால் மட்டுமே அடுத்தவேளை உணவைச் சாப்பிட வேண்டும்;
எப்போதும் எதையாவது மென்று கொண்டே இருக்கக் கூடாது.
இவைகளையெல்லாம் ஏன் செய்யக் கூடாது?

நமது உணவு மண்டலம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொண்டால்
மேலே சொல்லப்பட்டிருக்கும் “கூடாது”களை விடாப்பிடியாக
பின்பற்றத்துவங்குவோம்;

நாம் சாப்பிடும் பழங்கள் அல்லது அது சார்ந்த உணவுகளை நமது உணவு மண்டலம்
இரண்டு மணி நேரத்தில் சீரணிக்கிறது;
சைவ உணவு சாப்பிட்டால் அது சீரணமாக மூன்று மணி ஆகிறது. அசைவ உணவு
சாப்பிட்டால் அதை உணவு மண்டலம் சீரணிக்க ஐந்து மணி நேரம் எடுத்துக்
கொள்கிறது;
நாம் சாப்பிடும் உணவை சீரணிப்பதற்காகவே வயிற்றில் ஹைட் ரோ குளோரிக்
அமிலம் சுரந்து காத்துக் கொண்டிருக்கிறது;இந்த அமிலமானது நமது வயிற்றைத்
தவிர வேறு எந்த இடத்தில் பட்டாலும் அந்த இடத்தையே ஓட்டை போட்டுவிடும்;

தினமும் நாம் தாமதமாகவே தூங்கப் போகிறோம்;அதனால் தாமதமாக தூங்கி
எழுகிறோம்;காலைக் கடமைகளை முடித்துவிட்டு வீட்டைவிட்டுப் புறப்படும் போது
நேரமாகிவிட்டதே என்று நாம் தவிர்ப்பது காலை உணவு உண்பதை! சில மாதங்கள்
தொடர்ந்து இப்படி காலை உணவு சாப்பிடாமல் இருப்பதால் வயிற்றில்
சீரணத்திற்காக காத்திருக்கும் ஹைட் ரோகுளோரிக் அமிலம் தனது வேலையைச்
செய்யமுடியாமல் “ஆவி”யாகிவிடுகிறது;அப்படி ஆவியாவதால் தான் நமது வயிறு
தொப்பையாகிறது;தொந்தி மரணத்தின் தந்தி என்ற பழமொழியை இப்போதாவது
உணருவோமா?வருடக்கணக்கில் காலை உணவு உண்பதைத் தவிர்த்தவர்களுக்கு அது
அல்சராக வடிவம் எடுத்து,குடலை அரித்துவிடுகிறது;நேரமின்மையைத் தவிர்க்க
நாம் காலையில் எளிய உணவுகளை
உண்ணலாம்;பழங்கள்,தேங்காய்ச்சில்,பழச்சாறுகள்(இதில் ஐஸ் கலக்காமல்
இருப்பது அவசியம்),வேர்க்கடலை,உண்ணக்கூடிய காய்கள்,பச்சைக்
காய்கறிகள்,ஒருபோதும் டீ,காபி,குளிர்பானங்களை காலை உணவாக சாப்பிடக்
கூடாது.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதாலும்,சாப்பிட்ட உடனே தண்ணீர்
அருந்துவதாலும் உணவை சீரணிக்கக் காத்திருக்கும் அமிலம் நீர்த்துப்
போகிறது;இதனால் சீரணம் சிலருக்குத் தாமதமாகிறது;பலருக்கு சீரணமே
ஆவதில்லை;மதிய உணவு நேரத்தில் புளித்த ஏப்பம் வருகிறது;புளித்த ஏப்பம்
வந்தால் மதிய உணவை(அடுத்த வேளை உணவை) தவிர்ப்பது அவசியம்; ஒவ்வொரு
வேளையும் சாப்பிட்டப் பின்னர் சரியாக 30 நிமிடம் கழித்தப் பின்னரே
தண்ணீர் அருந்த வேண்டும்;

சாப்பிடும் போது டிவி பார்த்தால் நமது மனமும்,உடலும் உணவின் மீது கவனம்
இராது;சாப்பிடும் போது இயங்க வேண்டிய சுரப்பிகள் இயங்காமல்
போய்விடும்;நமது உடலில் 112 ஹார்மோன் சுரப்பு மையங்கள்
இயங்குகின்றன;டிவியில் அழுகைக் காட்சி வந்தால் அதற்குரிய சுரப்பிகள்
இயங்கும்;சிரிப்புக் காட்சிகள் ஒளிபரப்பானால் உரிய சுரப்பிகள்
செயல்படும்;அதிர்ச்சிகரமான காட்சிகள் தெரிந்தால் தற்காப்பு சுரப்பிகள்
சுரக்கும்;ஆனால்,ஒருபோதும் ஜீரணத்துக்குரிய சுரப்பிகள்
செயல்படாது;சாப்பிடும் போது செல்போனை அணைத்து வைப்பது பிரான்ஸ்
நாட்டினரின் வழக்கம்;ஏன் எனில்,சாப்பிடும் போது பேசினால் உமிழ்நீர்
உணவுடன் கலக்காமல் போய்விடும்;இவை அனைத்தையும் நாம் நாகரீக முன்னேற்றம்
என்று நாம் நம்புகிறோம்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

மூலநோய்க்கு சித்த மருந்துகள்- piles -


 மூலநோய்க்கு சித்த மருந்துகள்- piles -

துத்தி மூலிகை

 குப்பை மேனி மூலிகை

மூல நோய்க்கு சித்த மருந்துகள்

காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும்
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே

என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .

மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.

மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.

மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
 
மூல நோய் வராமல் தடுக்க :
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும்,மலச்சிக்கல் உள்ள போது  உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.உணவில் விளக்கெண்ணை,நெய்,வெங்காயம்,தவறாது சேர்த்தல்  வேண்டும்.கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.

மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:

1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி,பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு  வர மூலம் கரைந்து விடும்.

2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை,நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள்,உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)

4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு  எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம்,பச்சை மிளகாய்,கோழிக்கறி சேர்க்கக் கூடாது.மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.

ஜய ஆண்டின் சொர்ணாகர்ஷண கிரிவலம் 20.11.2014 வியாழக்கிழமை

விதிக்கப்பட்ட கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன் மனிதன்;எல்லாம் விதிப்படி
மட்டுமே நடைபெற வேண்டும் என்று இருந்தால் நாம் அனைவரும் வாழ்க்கை நெடுக
கஷ்டங்களை மட்டும் அனுபவிக்க வேண்டியிருக்கும்;அதனால் தான் இறைவனே
விதிவிலக்காக ஆன்மீகம்,ஜோதிடம் போன்றவைகள் மூலமாக பரிகாரங்களை உருவாக்கி
அதன் மூலமாக பிராயச்சித்தம் என்பதை உருவாக்கியிருக்கிறான்;இந்த
பிராயச்சித்தத்தினால் மட்டுமே இன்று நம்மில் பெரும்பாலானவர்கள்
வசதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ்ந்து வருகின்றனர்.

பரிகாரங்கள்,வழிபாடுகள் மூலமாக நாம் படிப்படியாக வறுமை நீங்கிடவும்,கடன்
களைத்தீர்க்க முயற்சி  செய்தாலும்,அதிகரிக்கும் விலைவாசியும்,நிலையற்ற
அரசியல் சூழ்நிலையும் எதுவுமே தெரியாத அப்பாவி மக்களை அவர்களின்
வேலை,தொழிலை அடிக்கடி பாதிக்கின்றன.இதனால் கடனை சீராக அடைக்கமுடியாமல்
கோடிக்கணக்கானவர்கள் திண்டாடிவருகின்றனர்.

இதை துல்லியமாக உணர்ந்திருக்கும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் இரண்டாம்
ஆண்டாக(நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 ஆண்டுகளாக
நடைபெற்றுவந்த)ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண கிரிவலத்தை இந்த ஆண்டும் நடத்திட
ஆசி வழங்கியிருக்கிறார்.

கார்த்திகை மாதம் வரக்கூடிய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை  சரியாக 5 மணி
அளவில் அண்ணாமலையில் அமைந்திருக்கும் இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில்
ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண கிரிவலம்
துவங்க இருக்கிறது.இந்த கிரிவலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் மஞ்சள்
நிற ஆடை அணிந்து வர வேண்டும்;,ஐந்து கிலோ நவதானியங்கள்,ஒரு கிலோ டயமண்டு
கல்கண்டு போன்றவைகளுடன் வருவது அவசியம்.கிரிவலம் வருபவர்கள் குபேர
லிங்கம் அருகில் அணிதிரண்டு ஐயாவிடம் ஆசி பெற்றுக் கொள்வதால் அடுத்த
ஒராண்டுக்கு பொருளாதாரத் தன்னிறைவுடன் வாழமுடியும்;

கிரிவலம் செல்லும் போது சாலை ஒர புதர்களில் நவதானியங்களையும்,டயமண்டு
கல்கண்டுகளையும் தூவுவது நமது கடுமையான கர்மவினைகளைப்
போக்கும்;கிரிவலத்தை பூத நாராயணப் பெருமாள் கோவிலில் நிறைவு செய்துவிட்டு
அவரவர் ஊர் திரும்பலாம்.

ஒம் சிவசக்தி ஒம்