RightClick

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

அனைவருக்கும் வணக்கம் ,

                                    உங்கள் அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் .

விநாயகர் என்பவர் நமது பாரம்பரியமிக்க  தமிழ் கடவுள். இதற்கு சான்றாகவே நமது மூதாதையர் நமது கோவில், வியாபாரத்தளம், கல்விக்கூடம் போன்ற இடங்களில் விநாயகருக்கு இடம் அளித்து வந்துள்ளார்கள்.  இது நமது இரத்தத்தில் விதைக்கப்பட்ட நன்மை குண நலன்களில் ஒன்று . அதனால் நம் உயர்ந்த நாகரீகத்தில் இன்றளவும் இது ஆங்காங்கு பயன்பாட்டில் உள்ளது. 

விநாயகர் சதூர்த்தி 


 விநாயகர் நம் வழிபாட்டு கடவுளாக மாறியதற்கு ஒரு முக்கியமான கதை ஒன்று உள்ளது. இதை இந்த நல்ல நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைய நமது பாடசாலை என்பது காடுகள் தான், அங்கு சென்று நமது அரசன் முதல் சாமான்யன் வரை அனைவரும் சென்று கல்வி கற்றுகொள்வார்கள்.  அப்படி செல்பவர்கள் தினமும் குருவிடம் எதாவது சந்தேகம் கேட்டு கொண்டிருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு சீடன் குருவிடம் " குருவே எனக்கு ஒரு சந்தேகம்?, மரம், செடி, போன்றவை எல்லாம் வழிபட்டு உரிய பொருளாகி வருகிறது. இதில் நாம் ஆராயிந்து பார்க்க போது பார்க்கும் போது அவற்றின் நன்மையை பொருத்து என்று எடுத்துக் கொண்டால், காடுகளில்  வேறு எதாவது  இருக்கிறதா? என்று கேள்வியை  கேட்டவுடன் அதற்கு  எப்போதும்போல் தனக்கே உரிய பாணியில் சிரித்துகொண்டே மாணவர்களைப்  பார்த்து நீங்கள் அனைவரும் இன்று கட்டுக்குள் பயணம் மேற்கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து உங்களால் பார்வையிலும், சிந்தனையிலும் பதிந்த விஷயங்களை கொண்டே உங்கள்  சக மாணவனின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்றார். அனைவரும் எழுந்து சென்று சரியாக குரு சொன்ன மணி நேரத்திற்குள் வந்து குருவின் முன் அமர்ந்தார்கள். அந்த கேள்வி கேட்ட சீடன் மட்டும் எழுந்து குருவே என்னுடைய பயண அனுபவத்தில் என் கருத்துக்களை உங்கள் முன் எடுதுரைக்க விளைகிறேன்  என்றான். குரு இசைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான், நான் செடிகளைப் பார்த்தேன் அதில் மூலிகை வைகைகள் இருப்பதால் அதனை தெய்வங்கள் தமது அருகில் வைத்துக்கொண்டு இருப்பதால், மனிதர்களுக்கு   செடி பற்றிய விஞஞான அறிவியல் வழிபாடு  இருப்பதை உணர்ந்தேன், மரம் நமது உடலின் சுவாச வெளிபாட்டையும், அந்த சுவாசமிக்க உடல் பிற உயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்றும் புரிகிறது , இறுதியாக மிருகங்களின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள எதுவும் இல்லையே? என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று வந்த வழியில் விநாயகரைத்தான் கண்டேன் மிருகங்கள் ஒன்றையும் நான் காணவில்லை  என்னால் அதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் சென்று மிருகம் ஏதாவது தெரிகிறதா? என்று பார்துவிட்டு வரட்டுமா? அதற்குள் தாங்கள் கால  அவகாசம் வேறு முடிந்துவிட்டது, என்னை தெளிவுபடுத்துங்கள் குருவே என்று கூறி முடித்தான், இதை கேட்டுவிட்டு குரு, சற்று எழுந்து மாணவர்களே உங்கள் நண்பன் கூறிய அனைத்தும் உண்மை. நீ வரும் வழியில் மிருகத்தையும் கண்டுவிட்டாய் என்றார், அதுதான் ஈசன் அன்றைய நாளில் நடத்திய திருவிளையாடல் புரிந்திரருக்கும் இவ்வுலகிற்கு. அதிலும் களியின் (யானை) உருவத்தில்தான்  மிக முக்கிய இரகசியம் மானவை என்று அந்த மாணவர்களுக்கு கூறினார். அதுதான் விநாயகர் உருவம்.அப்படி பட்ட இந்த உருவ அமைப்பை நாம் எப்படி வழிப வேண்டி நம்முடைய இன்னல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இரகசியத்தை அவர்களிடம் கூறினார். அந்த இரகசியம் பின்வருமாறு அதிலும் அதன் சிறப்பு விநாயகர் சதுர்த்தி அன்று மிகவும் வலிமை பெற்றதாக மாறும் என்பதை அவர் தெரிவித்தார்.

சிறப்பு வழிபாட்டு முறை 

 சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை நாம் உரிய முறையில் வழிபடுவோமேயானால் நிச்சயம் நமது அனைத்துப்  பிரச்னைகளிலும் இருந்து ஒரு நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும். அந்த இரகசியத்தை உங்களிடம் 

உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். பின்வரும் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவும்,

*விரைவில் எழுந்து நீராடிவிட்டு விநாயகர் சன்னதியை சென்று அங்கு 27 தேங்காய்களை  வங்கி கொள்ளவும். அதில் ஒரு தேங்காயை கையில் வைத்து கொண்டு, விநாயகர் சன்னதியின் கன்னி மூலையில் நின்றுகொண்டு உங்கள் பிராத்தனையை  இரண்டு நிமிடம் சங்கல்பம் செய்துகொண்டு பின் வாயுவில், நெருப்பு மற்றும் குபேர மூலையிலும் சென்று வழிபட்டவுடன் பதினாறு முறை நீங்கள் சுற்றி விட்டு முதலில் கையில் உள்ள அந்த தேங்காயை உடைத்துவிடுங்கள். பின் மீதம் உள்ள தேங்காயை தேங்காயின் கண் தரையை நோக்கி இருக்குமாறு வைத்து வெடல் போட்டு விட்டு வேற எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றீனீர்கள் ஆயின் நிச்சயம் வாழ்வில் மிகப்பெரிய எற்றம் உண்டு.
                                                                           
                                                                             நமஸ்காரம் 
-சகஸ்ரவடுகர்