நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஒவ்வொரு வருடமும்,பள்ளிகள் திறந்த ஒரு மாதத்திற்குள் சுமார் நூறு ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விதானம் செய்து வருகிறார்.கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு தமது சொந்தச் செலவில் நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த வருடம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவஹர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் புடைசூழ 15.8.2014 சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;ஒவ்வொரு ஆண்டும் ஜீன்,ஜீலை மாதங்களில் இவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார்.
சுதந்திரதின சிறப்பு செய்தி
குழந்தைகளுக்காக நமது தமது கைகளினால் அடையாளஅட்டை
வழங்கியதுடன் அவர்களுக்கு தனது சுதந்திரதின உரையை பேசினார். இன்றைய மாணவர்களுக்கு
படிப்பின் இன்றைய நிலைமையில் நமக்கான தனிப்பட்ட கடமையும், சமூகத்தில் நாம் பின்
பற்ற வேண்டிய கடைமைகளையும் பற்றியும் தெளிவாக எளிய நடையில் அந்த மாணவமணிகளிடம்
பகிர்ந்து கொண்டார். இந்த உரையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அட்டை வழங்கும் விழா நடந்ததற்கான ஒரு சுவாரசியமான சம்பவம்
ஒன்றை தமது உரையில் குருநாதர் தெரிவித்தார். அது அதை நாம் நம் வலைப்பூ
வாசகர்களுக்காக நேரிடையாக அய்யாவின் உரையில் இருந்தே இதோ’ “:நான் என்னுடைய களப்பணிக்காக தினமும் செல்வேன், அப்படி
ஒருநாள் நான் செல்லும் பொது நான் கண்ட காட்சி மனதை மிகவும் உருத்தியது. அது
என்னென்றால் ஒரு மாணவன் தன்னுடய அப்பாவிடம் எதோ ஒரு விசயத்திற்காக கேட்டு அழுதுகொண்டு இருக்கிறான். நான் என்ன
விஷயம் சென்று பார்த்தபோது அந்த குடும்பத்தில் உள்ள நிலைமையில் உள்ளதையும் அந்த குடும்பத்தில் உள்ள
ஏழ்மையினால் அவர்களால் ஒரு சிறிய தொகை மதிப்புள்ள ஒரு அடையாள அட்டை வாங்க முடியாத
அளவுக்கு இருந்தது. இதனால் அந்த குழந்தையின் மன நிலைமை சரி செய்ய வேண்டும் எனக்கு
தோன்றியது., அன்று அந்த குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று,
அங்கு உள்ள தலைமை ஆசிரியரிடம் பேசியது பொழுதுதான் தெரிந்தது இது போன்ற குழந்தைகள்
எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தவுடன், நிச்சயம் இதற்கான
ஒரு தூண்டுகோலாக நான் நிற்கவேண்டும் என்று தோன்றியது, அன்று
முதல் இந்த பள்ளியில் அனைத்து குழந்தைகளுக்கும் யாம் வருடா வருடம் அடையாள அட்டை
வழங்க வேண்டும். என்று முடிவு செய்தேன்”. என்று நமது குருநாதர் கூறி முடித்ததும்
அங்கு இருந்த அனைத்து ஆசிரியர்களும்,மாணவர்களும் பலத்த கரஒலி செய்தது அனைவரின் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவுக்கு நமது குருநாதரின் சேவை உள்ளமே மிகமுக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை!!!.