RightClick

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

அனைவருக்கும் வணக்கம் ,

                                    உங்கள் அனைவருக்கும் என் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் .

விநாயகர் என்பவர் நமது பாரம்பரியமிக்க  தமிழ் கடவுள். இதற்கு சான்றாகவே நமது மூதாதையர் நமது கோவில், வியாபாரத்தளம், கல்விக்கூடம் போன்ற இடங்களில் விநாயகருக்கு இடம் அளித்து வந்துள்ளார்கள்.  இது நமது இரத்தத்தில் விதைக்கப்பட்ட நன்மை குண நலன்களில் ஒன்று . அதனால் நம் உயர்ந்த நாகரீகத்தில் இன்றளவும் இது ஆங்காங்கு பயன்பாட்டில் உள்ளது. 

விநாயகர் சதூர்த்தி 


 விநாயகர் நம் வழிபாட்டு கடவுளாக மாறியதற்கு ஒரு முக்கியமான கதை ஒன்று உள்ளது. இதை இந்த நல்ல நேரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்றைய நமது பாடசாலை என்பது காடுகள் தான், அங்கு சென்று நமது அரசன் முதல் சாமான்யன் வரை அனைவரும் சென்று கல்வி கற்றுகொள்வார்கள்.  அப்படி செல்பவர்கள் தினமும் குருவிடம் எதாவது சந்தேகம் கேட்டு கொண்டிருப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு சீடன் குருவிடம் " குருவே எனக்கு ஒரு சந்தேகம்?, மரம், செடி, போன்றவை எல்லாம் வழிபட்டு உரிய பொருளாகி வருகிறது. இதில் நாம் ஆராயிந்து பார்க்க போது பார்க்கும் போது அவற்றின் நன்மையை பொருத்து என்று எடுத்துக் கொண்டால், காடுகளில்  வேறு எதாவது  இருக்கிறதா? என்று கேள்வியை  கேட்டவுடன் அதற்கு  எப்போதும்போல் தனக்கே உரிய பாணியில் சிரித்துகொண்டே மாணவர்களைப்  பார்த்து நீங்கள் அனைவரும் இன்று கட்டுக்குள் பயணம் மேற்கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து உங்களால் பார்வையிலும், சிந்தனையிலும் பதிந்த விஷயங்களை கொண்டே உங்கள்  சக மாணவனின் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்றார். அனைவரும் எழுந்து சென்று சரியாக குரு சொன்ன மணி நேரத்திற்குள் வந்து குருவின் முன் அமர்ந்தார்கள். அந்த கேள்வி கேட்ட சீடன் மட்டும் எழுந்து குருவே என்னுடைய பயண அனுபவத்தில் என் கருத்துக்களை உங்கள் முன் எடுதுரைக்க விளைகிறேன்  என்றான். குரு இசைந்தவுடன், அவன் தன்னுடைய அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான், நான் செடிகளைப் பார்த்தேன் அதில் மூலிகை வைகைகள் இருப்பதால் அதனை தெய்வங்கள் தமது அருகில் வைத்துக்கொண்டு இருப்பதால், மனிதர்களுக்கு   செடி பற்றிய விஞஞான அறிவியல் வழிபாடு  இருப்பதை உணர்ந்தேன், மரம் நமது உடலின் சுவாச வெளிபாட்டையும், அந்த சுவாசமிக்க உடல் பிற உயிர்களுக்கு பயன் உள்ளதாக அமைய வேண்டும் என்றும் புரிகிறது , இறுதியாக மிருகங்களின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள எதுவும் இல்லையே? என்று தோன்றுகிறது, ஆனால் நான் சென்று வந்த வழியில் விநாயகரைத்தான் கண்டேன் மிருகங்கள் ஒன்றையும் நான் காணவில்லை  என்னால் அதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் திரும்பவும் சென்று மிருகம் ஏதாவது தெரிகிறதா? என்று பார்துவிட்டு வரட்டுமா? அதற்குள் தாங்கள் கால  அவகாசம் வேறு முடிந்துவிட்டது, என்னை தெளிவுபடுத்துங்கள் குருவே என்று கூறி முடித்தான், இதை கேட்டுவிட்டு குரு, சற்று எழுந்து மாணவர்களே உங்கள் நண்பன் கூறிய அனைத்தும் உண்மை. நீ வரும் வழியில் மிருகத்தையும் கண்டுவிட்டாய் என்றார், அதுதான் ஈசன் அன்றைய நாளில் நடத்திய திருவிளையாடல் புரிந்திரருக்கும் இவ்வுலகிற்கு. அதிலும் களியின் (யானை) உருவத்தில்தான்  மிக முக்கிய இரகசியம் மானவை என்று அந்த மாணவர்களுக்கு கூறினார். அதுதான் விநாயகர் உருவம்.அப்படி பட்ட இந்த உருவ அமைப்பை நாம் எப்படி வழிப வேண்டி நம்முடைய இன்னல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இரகசியத்தை அவர்களிடம் கூறினார். அந்த இரகசியம் பின்வருமாறு அதிலும் அதன் சிறப்பு விநாயகர் சதுர்த்தி அன்று மிகவும் வலிமை பெற்றதாக மாறும் என்பதை அவர் தெரிவித்தார்.

சிறப்பு வழிபாட்டு முறை 

 சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை நாம் உரிய முறையில் வழிபடுவோமேயானால் நிச்சயம் நமது அனைத்துப்  பிரச்னைகளிலும் இருந்து ஒரு நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும். அந்த இரகசியத்தை உங்களிடம் 

உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன். பின்வரும் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவும்,

*விரைவில் எழுந்து நீராடிவிட்டு விநாயகர் சன்னதியை சென்று அங்கு 27 தேங்காய்களை  வங்கி கொள்ளவும். அதில் ஒரு தேங்காயை கையில் வைத்து கொண்டு, விநாயகர் சன்னதியின் கன்னி மூலையில் நின்றுகொண்டு உங்கள் பிராத்தனையை  இரண்டு நிமிடம் சங்கல்பம் செய்துகொண்டு பின் வாயுவில், நெருப்பு மற்றும் குபேர மூலையிலும் சென்று வழிபட்டவுடன் பதினாறு முறை நீங்கள் சுற்றி விட்டு முதலில் கையில் உள்ள அந்த தேங்காயை உடைத்துவிடுங்கள். பின் மீதம் உள்ள தேங்காயை தேங்காயின் கண் தரையை நோக்கி இருக்குமாறு வைத்து வெடல் போட்டு விட்டு வேற எந்த கோவிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றீனீர்கள் ஆயின் நிச்சயம் வாழ்வில் மிகப்பெரிய எற்றம் உண்டு.
                                                                           
                                                                             நமஸ்காரம் 
-சகஸ்ரவடுகர்                                                                                                                                             மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் தண்ணீர் சிகிச்சை


மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.தலைவலி,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,கீல்வாதம்,மூட்டுவலி,சாதாரண பக்கவாதம்,ஊளைச்சதை,காதில் இரைச்சல்,இருதய வேகமான துடிப்பு,மயக்கம்,இருமல்,ஆஸ்துமா,சளி தொல்லை,மூளைக்காய்ச்சல்,கல்லீரல் சார்ந்த நோய்கள்,சிறுநீரகக் குழாய் நோய்கள்,பித்தக் கோளாறுகள்,வாயுக்கோளாறுகள்,வயிற்றுப்பொருமல்,இரத்தக் கடுப்பு,மூலம்,மலச்சிக்கல்,பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்,ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),அளவற்ற வெள்ளைப்படுதல்,கருப்பை புற்றுநோய்,மார்புப் புற்றுநோய்,தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது?

காலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.

காலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.

ஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா?

சில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே!

சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்?

சரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.

நீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

மலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.

வயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.

சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.

இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:

மூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.

படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.

இதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.


விநாயகர் ஸ்வஸ்திக்


விநாயகர் ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும். எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.


ஸ்வஸ்திக் கோலங்கள்
வெற்றியைத் தரும் சின்னம் ஸ்வஸ்திக் . பண்டை காலங்களில் மன்னர்கள் போர் புரியச் சென்றபோது ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டன. பின்னர் அவை அவரவர் வீடுகளில் நடக்கும் விழாக்கள் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக போடப்பட்டன. அது மட்டும் அல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ஸ்வஸ்திக் எனக் கருதப்பட்டது. ஸ்வஸ் + அஸ்தி + கா என்பதின் வார்த்தையே ஸ்வஸ்திகா . அதாவது சுவாசம் ( ஸ்வாஸ்) நின்று நீ அஸ்தியாகப் ( அஸ்தி) போய் மோட்ஷம் பெற காத்திரு என்பதை நினைவு படுத்துவதே ஸ்வஸ்திகா . ஸ்வஸ்திகாவை பாருங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் நோக்கி குழாய் போல நீண்டு இருக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தைப் போட்டு அதன் நடுவில் வைக்கப்படும் புள்ளியின் அர்த்தம் என்ன என்றால் நடுப்புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவர்களின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே அது போடப்பட்டது. மேலும் ஸ்வாதிக் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன?
-நான்கு வேதங்கள்
- நான்கு திசைகள்
-நான்கு யுகங்கள்- சத்ய, த்ரேதா , துலாபார, கலி யுக
- நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்) -பிராமண , ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர என்பவை
-நான்கு யோகங்கள்- ஞான, பக்தி, கர்ம, ராஜ
- நான்கு மூலங்கள் - ஆகாயம்,வாயு, நீர் , நிலம்
-வாழ்கையின் நான்கு பருவங்கள்- குழந்தை, பிரும்மச்சாரி, கிரஹஸ்தன், சந்நியாசி (அனைத்தையும் துறந்தவர்)


நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச்சேவை!!!
நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஒவ்வொரு வருடமும்,பள்ளிகள் திறந்த ஒரு மாதத்திற்குள் சுமார் நூறு ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விதானம் செய்து வருகிறார்.கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பின் தங்கிய கிராமப்புறப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு தமது சொந்தச் செலவில் நோட்டுப் புத்தகங்களும்,அடையாள அட்டைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


இந்த வருடம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் தாலுகா,நகரம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஜவஹர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கிட,அந்தப் பகுதி பஞ்சாயத்துபோர்டு உறுப்பினர் முன்னிலையிலும்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் புடைசூழ 15.8.2014 சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன;ஒவ்வொரு ஆண்டும் ஜீன்,ஜீலை மாதங்களில் இவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களையும்,சிலருக்கு கல்விக் கட்டணத்தையும் தகுதியான ஏழை மாணவ,மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மூலமாகக் கண்டறிந்து செலுத்திவருகிறார்.

சுதந்திரதின சிறப்பு செய்தி
குழந்தைகளுக்காக நமது தமது கைகளினால் அடையாளஅட்டை வழங்கியதுடன் அவர்களுக்கு தனது சுதந்திரதின உரையை பேசினார். இன்றைய மாணவர்களுக்கு படிப்பின் இன்றைய நிலைமையில் நமக்கான தனிப்பட்ட கடமையும், சமூகத்தில் நாம் பின் பற்ற வேண்டிய கடைமைகளையும் பற்றியும் தெளிவாக எளிய நடையில் அந்த மாணவமணிகளிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையில்  கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அட்டை வழங்கும் விழா  நடந்ததற்கான ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை தமது உரையில் குருநாதர் தெரிவித்தார். அது அதை நாம் நம் வலைப்பூ வாசகர்களுக்காக நேரிடையாக அய்யாவின் உரையில் இருந்தே இதோ “:நான் என்னுடைய களப்பணிக்காக தினமும் செல்வேன், அப்படி ஒருநாள் நான் செல்லும் பொது நான் கண்ட காட்சி மனதை மிகவும் உருத்தியது. அது என்னென்றால் ஒரு மாணவன் தன்னுடய  அப்பாவிடம் எதோ ஒரு விசயத்திற்காக கேட்டு  அழுதுகொண்டு இருக்கிறான். நான் என்ன விஷயம் சென்று பார்த்தபோது அந்த குடும்பத்தில் உள்ள நிலைமையில்  உள்ளதையும் அந்த குடும்பத்தில் உள்ள ஏழ்மையினால் அவர்களால் ஒரு சிறிய தொகை மதிப்புள்ள ஒரு அடையாள அட்டை வாங்க முடியாத அளவுக்கு இருந்தது. இதனால் அந்த குழந்தையின் மன நிலைமை சரி செய்ய வேண்டும் எனக்கு தோன்றியது., அன்று அந்த குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று, அங்கு உள்ள தலைமை ஆசிரியரிடம் பேசியது பொழுதுதான் தெரிந்தது இது போன்ற குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தவுடன், நிச்சயம் இதற்கான ஒரு தூண்டுகோலாக நான் நிற்கவேண்டும் என்று தோன்றியது, அன்று முதல் இந்த பள்ளியில் அனைத்து குழந்தைகளுக்கும் யாம் வருடா வருடம் அடையாள அட்டை வழங்க வேண்டும். என்று முடிவு செய்தேன்”.  என்று நமது குருநாதர் கூறி முடித்ததும் அங்கு இருந்த அனைத்து ஆசிரியர்களும்,மாணவர்களும் பலத்த கரஒலி செய்தது அனைவரின்  மகிழ்ச்சி மற்றும் மனநிறைவுக்கு நமது குருநாதரின் சேவை உள்ளமே மிகமுக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை!!!. 

ஜய(1.9.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!!


கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.

விஜய & ஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்(1.9.2014 முதல் 13.4.2015 வரை)

2.9.14 செவ்வாய் காலை 11.04 முதல் மதியம் 1.04வரை;

12.9.14 வெள்ளி இரவு 8.20 முதல் 10.20 வரை;

29.9.14 திங்கள் காலை 9.44 முதல் 11.44 வரை;

9.10.14 வியாழன் மாலை 6.30 முதல் 8.30 வரை;

26.10.14 ஞாயிறு காலை 7.34 முதல் 9.34 வரை;

5.11.14 புதன் மாலை 6.36 முதல் இரவு 8.36 வரை;

23.11.14 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை;

3.12.14 புதன் மதியம் 3.04 முதல் மாலை 5.04 வரை;

20.12.14 சனி காலை 4.16 முதல் 6.16 வரை;

30.12.14 செவ்வாய் மதியம் 1 முதல் 3 வரை;

16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;

27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;

13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;

23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;

11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;

23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;

8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்
`               சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 

அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் 
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம் 
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.

மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவய' என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக  விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.

       

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

 நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய  ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான்  அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே."உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே".

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின்  கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை


“வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே
நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே".

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் .   முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா?  அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா . ஆகவே அதனை அந்த
அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து
அவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.


“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே

நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே, அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து  நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ,இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!!!!மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

பூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!


அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே

மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும்
அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான்.  அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். . அது பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.


ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்!!!


நாம் உண்ணும் உணவும் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடவிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது;
சமையல் செய்யும் போது கோபம்,வெறுப்பு,குரோதம்,மனவருத்தம் அடைந்தால் அந்த எண்ணங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்(கணவன்,குழந்தைகள்) உறுதியாகப் பிரதிபலிக்கும்;தினமும் கவனித்துப் பார்த்தால் உண்ணும் உணவே சமைத்தவரின் எண்ண ஓட்டங்களைத் தெரிவித்துவிடும்;
ஒவ்வொரு முறை உண்ணும் போதும்(காலை,மதியம்,இரவு) அந்த உணவில் அறுசுவையும் இருப்பது முழு ஆரோக்கியத்தைத் தரும்;
ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்பு பழங்களைச் சாப்பிட்டுப் பழகுவது நன்று;(உண்டபின்னர் பழங்கள் சாப்பிடுவது தவறு)
குக்கரில் சமைக்கும் சாதத்தைத் தவிர்ப்பது அவசியம்;சாதத்தை வடித்து,அந்த வடிநீரை அருந்துவது நமது உடலுக்கு அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்;மட்டை அரிசி,பாலீஷ் செய்யாத அரிசியை வீட்டுச் சமையலுக்கு வாங்கிப் பழகுங்கள்;பூரண ஆரோக்கியம் உறுதியாகும்;சாதாரண பாத்திரத்தில் சமைக்கப் பழகுவது அவசியம்;திறந்த பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு;திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன;இந்த சக்திகள் நமது கண்களுக்குப் புலப்படாது;
மிக்ஸியில் அரைக்கப்படும் சட்னியானது விரைவில் கெட்டுப்போய்விடுகிறது;சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை;ஆனால், ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அற்புதமாகவும் நமது உடல் நலத்தை தொடர்ந்து பராமரிக்கும் விதமாகவும் இருக்கும்;
மிக்ஸியில் சட்னி அரைக்கும் போது ஜாரினுள் தேங்காய்த் துண்டுகள்,பொரிகடலை,மிளகாய்,வெள்ளைப்பூண்டு,உப்பு போன்றவைகளை போட்டு மூடியை இறுக மூடிவிட்டு அரைக்கிறோம்;அப்போது அந்த மூடியினுள் இருக்கும் காற்றுடன் தேங்காய்த்துண்டுகள்,பொரிகடலை சிலநொடிகளில் அரைபட்டு திப்பி திப்பியாக நுரை நுரையாக வந்துவிடுகின்றன;
ஆனால்,அம்மிக்கல்லில் அரைக்கும்போது இரண்டு ராட்சத கற்கள் இவைகளை அரைக்கின்றன;திறந்தவெளியில் அரைக்கும் போது பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் நமது கண்ணுக்குத் தெரியாமல் இத்துடன் கலந்துவிடுகின்றன;மேலும்,இதை அரைக்கும் நமது தாயின் பரிவு,பாசம்,விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற எண்ணங்களும் ஊடுருவி நமது உணவாகிறது;ஆக,நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்துவிடுகின்றன;
அனைத்துப் பருப்புகளையும் தோல் நீக்காமல் உண்ணப் பழகவேண்டும்;
புளிக்குப் பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தப் பழக வேண்டும்;
மிளகாய்க்குப் பதிலாக மிளகை உபயோகிக்கப் பழக வேண்டும்;
வெள்ளைச் சீனி நமது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பை மெதுவாகக் கொல்லும் ஸ்லோபாய்சன்;அதற்குப் பதிலாக கருப்பட்டி,பனைவெல்லம்,பனங்கல்கண்டு,வெல்லம்,நாட்டுச் சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்தப் பழக வேண்டும்;
எள் எண்ணையில் வாரம் ஒருமுறையாவது குளிக்க வேண்டும்;வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்;பொறித்த மேல்நாட்டு உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,நோயை இலவசமாக வாங்குவதாக அர்த்தம்;
கொழுப்பு தரும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது அவசியம்;
அதேபோல,பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;
ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு முறையும் சாப்பிடத் துவங்கும் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட வேண்டும்;இந்த பிரார்த்தனை நேரம் வீடு எனில் ஒரு நிமிடம் வரையிலும்,வெளியிடங்கள் எனில் சில நொடிகள் வரை இருக்கலாம்;
தினமும் புதிய காய்கறிகளையும்,கீரைகளையும் சாப்பிடப்பழக வேண்டும்;
சாப்பிடும் போது ஒருபோதும் புத்தகம் படிக்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒரு போதும் டிவி பார்க்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒருபோதும் போனிலோ,நேரிலோ பேசவே கூடாது;
சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பும்,பின்பும் தண்ணீர் அருந்தக் கூடாது;
பசி இல்லாத போது ஒருபோதும் சாப்பிடக்கூடாது;அதேசமயம்,பசி உணர்வு வந்த கொஞ்ச நேரத்திலேயே சாப்பிடப் போய்விட வேண்டும்;அதிகநேரம் பசி உணர்வுடன் இருக்கக்கூடாது;பசிக்கும் போது ஒரு போதும் காபி,டீ,பால்,வடை,குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது;
நாம் உண்ணும் உணவில் கசப்பு சேர்ப்பதை ஒதுக்கிவிட்டோம்;அதனால் தான் உடலானது நோய்வாய்ப்படுகிறது;
சைவ உணவில் தானிய உணவு,பருப்பு வகை உணவு,காய்கறிகள் மற்றும் கிழங்குகள், கீரை வகைகள் என்று நான்கு வகைகள் இருக்கின்றன;இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது ஆரோக்கியமும் ஆன்மீக முன்னேற்றமும் உறுதிப்படும்;
புடலங்காய்,தேங்காய்,பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காய்,முருங்கைக்காய்,பீட்ரூட்,காரட் கிழங்கு,சேமைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,முள்ளங்கி,வெள்ளைப்பூண்டு,தூதுவளை,   தண்டுக்கீரை,சிறுகீரை,கறிவேப்பிலை,பசலைக்கீரை,பொன்னாங்கண்ணிக்கீரை,    வெங்காயம் சேர்த்த மசால்வடை,திராட்சைப் பழம்,மாதுளம்பழம்,காசினிக்கீரை,ரோஜாப்பூ,பிஸ்தாப் பருப்பு,சாதிக்காய்,கோரைக்கிழங்கு,லவங்கப்பட்டை,கிச்சிலிக்கிழங்கு,ஏலக்காய், அகிற்கட்டை,வெள்ளாட்டுப்பால்,வாதுமைப்பருப்பு,சுரைவிதை,நெல்லிக்காய்,       நாரத்தம்பழம்,இஞ்சி,சந்திஅனம்,கஸ்தூரி,முத்து,புதினா இலை,மிளகு,நாவல்பழம்,குங்குமப்பூ மற்றும் சில உணவுப்பொருட்களே காலம் காலமாக நம்மையும்,நமது முன்னோர்களையும் ஆரோக்கியமாக வாழ வைத்து வருகின்றன;
உணவு உண்பதற்கான விதிகளை இங்கே தந்திருக்கிறோம்;இந்த விதிகளை முடிந்தவரையிலும் பின்பற்றுவதன் மூலமாக வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்;இந்த உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நமது ஆன்மீக முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் உறுதிப்படும்;
இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன;இவைகளை ஆர்கானிக் ஃபுட்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு சிற்றூரிலும் கூட விற்பனை ஆகின்றன;சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இம்மாதிரியான உணவுகளையே நமது முன்னோர்கள் சாப்பிட்டுவந்துள்ளனர்;
டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்,ரெடிமேட் உணவுகளை தவிர்க்கவும்;
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக விளம்பரங்களில் வரும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம்;அந்த விளம்பரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை;
சிப்ஸ்,நொறுக்குத் தீனிகள்,எண்ணெய்ப்பலகாரங்கள் போன்றவற்றை நாமும் ஒதுக்க வேண்டும்;நமது குழந்தைகள் இந்த மாதிரியான உணவுப்பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை;இவைகளுக்குப் பதிலாக ஆர்கானிக் பழங்கள்,கொட்டைகள்,பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகவும்;குழந்தைகளுக்குப் பழக்கவும்;
இயந்திரங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கவும்;மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் இருக்கும் சுவையும் அக்கறையும் இயந்திரச் சமையலில் இராது;
அந்தந்தப் பருவகாலங்களில் விளைகின்ற பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை உண்ணவும்;கோடையின் வெப்பத்தைத் தணிக்க டிவி விளம்பரங்களில் வரும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்;மோர்,தர்ப்பூசணி,இளநீர்,செவ்விளநீர்,குல்கந்து(ரோஜாத் தேனூறல்),திராட்சைப்பழம்,திராட்சைப் பழச் சாறு,காரட்,காரட் சாறு போன்றவைகளே நமது உடலுக்கு குளிர்ச்சியைத் தருபவை;

ஆட்டுக்கறி,மாட்டுக்கறி போன்றவைகள் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும்;இவைகளை கடையில் வாங்கிச் சாப்பிடுவதையும் கைவிடவும்;ஏனெனில்,இவைகளில் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகள் நமது உடலுக்குள் செல்லும் போது நோய்களை உருவாக்கக் காரணியாக அமைந்துவிடுகிறது;
உப்பு,சர்க்கரை,காரம் கலந்த உணவுகளை அளவோடு சாப்பிடப் பழகவும்;
மருத்துவருக்கு கொடுப்பதை விட வாணிகனுக்குக் கொடு என்ற பழமொழியின் உள்கருத்து என்னவெனில்,ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நோய்கள் வராது என்பதே !!!


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ