RightClick

கழுகுமலையில் ஈஸ்வரபட்டரின் அய்யாவின் நினைவாக எட்டாவது ஆண்டு கிரிவலம்கழுகுமலையில் ஈஸ்வரபட்டரின் அய்யாவின் நினைவாக எட்டாவது ஆண்டு கிரிவலம்

கழுகுமலையில் கடந்த சனிக்கிழமை ஆடி மாதம் 10ம் தேதி கிரிவலம் மிகவும் சிறப்பாக நமது ஆன்மீக வழிகாட்டி உயர்திரு சகஸ்ரவடுகர் அவர்களின் அருளுடனும், ஆசியுடனும் நடைபெற்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 நிகழ்ச்சிகள் நிரல்;
அருளுரை         -       உயர்திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்,
தலைமை         –        திரு.சுப்பிரமணியன் அவர்கள்,
                           சேர்மன் (ஊராட்சிஒன்றியத்தலைவர்,கழுகுமலை.
முன்னிலை       –        திரு.தமிழானந்தம் அவர்கள் EO, கழுகுமலை.
தொடங்கிவைத்தவர்-        திருமதி.சி.தனலட்சுமி சிவமாரியப்பன் அவர்கள்,
                           ஆசிரியை, அரசுப்பள்ளி முள்ளிக்குளம்.

ஒருங்கிணைப்பு       -     ஆன்மீகஅரசு மற்றும் ஆன்மீகக்கடல் குழுமம்.

குருநாதரின் அருளைரையுடன் நிகழ்ச்சி தொடக்கமாக தேவாரம் பாடல் திரு.சிந்தாமணி சிவா அவர்களினால் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. நமது அய்யா அவர்களினால் இந்த கிரிவலத்தின் நோக்கமும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தவர் பெருமதிப்பிற்குரிய திருமதி.தனலட்சுமிசிவமாரியப்பன் அவர்கள்.ஈஸ்வரபட்டர் ஸ்வாமி
இந்த கிரிவலமனது கடந்த ஏழு ஆண்டாக அய்யா ஈஸ்வரபட்டர் அவர்களின் நினைவாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் நடைபெற்று வந்தது., இந்த முறை நமது அய்யாவின் வழிகாட்டுதலின் படி சித்தபுருஷர்கள் அருளும், ஆசியும் அதிகமாக கொட்டி கிடக்கிற இந்த கழுகுமலையில் நடைபெற்றிருக்கிறது. அதில் ஈஸ்வரபட்டரின் பற்றிய சில குறிப்புகள் அய்யாவின் உரையில் கிடைத்த தகவல் பின்வருவனவை.
கன்னட பிரமாண குளத்தில் பிறந்தவர் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் ஸ்வாமி. திருமணம் செய்யமால் பல முனிவர்களை சந்தித்தித்து ஆசி பெற்று பல இடங்களில் தவமிருந்து பல அருள் நிலைகளைப் பெற்றவர். பின் கடைசி காலத்தில் போகர் இடமான பழனியம்பதிக்கு வந்து பொதுமக்களின் குறை தீர்க்க பல சித்துக்களை நிகழ்த்தியவர். கடைசியில் பழனி இடும்பன் மலை ரோட்டில் அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம் ஜீவசமதியனார். அவர் சமாதியாகி 44  வருடங்கள் ஆகிவிட்டடன. நமது சிரமமான தருணங்களில் ஓம் ஈஸ்வர பட்டாய நமஹ என்று நாம் நம்பிக்கையுடன் வேண்டினால் உறுதியாக நமது பிரச்சினைகள் முடிவை எட்டிவிடும் என்ற மிகப்பெரிய ஒரு ரகசியத்தை நமது ஆன்மீக குரு அவார்களின் வாயிலாக நம் அறிந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.
குத்துவிளக்கு பயிற்சி


நிகழ்ச்சியின் மிக்கிய அங்கமாக பெண்களுக்கான குத்துவிளக்கு பயிற்சி நமது குருநாரினால் பயிற்றுவிக்கப்பட்டது. இதில் எப்படி பெண்கள் விளக்கு ஏற்ற வேண்டும், அதில் நம் மூதாதையர்கள் ஒழித்துவைத்து உள்ள இரகசியம் மற்றும் அறிவியில் ரீதியாகவும் உள்ள விஷயத்தை அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
சொர்ணதீபம் (அ) தசக்கூட்டு எண்ணெய்


இந்த ஆன்மீகப்பயிற்சியின் இன்னொரு சிறப்பு அம்சமாக தசகூட்டு எண்ணெயின் அறிமுகம், அதனை பயன்படுத்தினால் ஏற்படும் நன்மை பற்றியும் நமக்கு தெளிவாக விளக்கினார்., நமது குருநாதர். அங்கு வந்த  அனைத்த மக்களும் அதனை  வங்கி சென்றார்கள். இந்த அறிவிப்பின் பொது சிலர் இதை பயன்படுத்தியனால் ஏற்பட்ட நன்மை பற்றியும் நம் பயிற்சி வகுப்பில் நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.


கிரிவலம்
            படம்;மிளகாய் பழசித்தர் ஜீவசமாதி
பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன்  நமது குருநாதரை தொடர்ந்து நமது அன்பர்களும் கிரிவலத்தை கலந்தார்கள். இதில் மிகவும் குறிப்பிடும் விதமாக நமது குருநாதருடன் நமது கிரிவலபயணம் முதலில் மிளகாய்ப்பழ சித்தர் சன்னதியை அடைந்தது, அங்கு நமக்காகவும், நம் நன்மைக்காகவும் நமது அய்யா அவர்கள் சிறப்பு பூஜை ஒன்றை செயதார்.

தர்ப்பணம்
நமது பித்ருக்களின் தோஷமே நமது வாழ்வில் நம் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு பின்புலமாக அமைகிறது. அதனை களைந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமது அய்யா அருகில் இருந்து இதனை நமது கையாலேயே செய்ய வைத்தார்கள்.
அன்னதானம்

கிரிவலத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அணைத்து வயது தரப்பினரும் ஓம் சிவ சிவ ஓம்  என்னும் நாமத்தை இடைவிடாது முழங்கிய வண்ணம் அய்யாவை தொடர்ந்தனர்.  கிரிவலம் கழுகாசமூர்த்தி பெருமானின் சன்னதியில் முடிவுற்றவுடன் அன்னதானமும் சன்னதியிலே தொடங்கியது., இதில் நமது ஆன்மீகஅன்பர்களுடன், ஊர் பொது மக்களும் நம் அய்யாவின்
கரங்களில் இருந்தே அன்னத்தை பெற்று சென்றனர்..

கிரிவலத்தில் போது நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள் உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமை பட்டுள்ளோம்,
·         நண்பர் ஒருவர் கிரிவலம் வருவதற்குமுன் தன் வேலையில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்துகொள்ளவே கழுகுமலை நோக்கிப் பயணம் மேற்கொண்டதாகவும், கிரிவலத்தில் நடந்த கொண்டிருக்கும் போதே தன்னுடைய இரண்டு மாதம் சம்பளம் உட்பட அனைத்தும் தன் வங்கிக் கணக்கில் வந்து சேர்த்திருப்பதாக தவகல் அவரை வந்தடைந்தது. இதற்கு நம்முடைய  அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசிர்வாதமும் அவர்களினால் தான் செய்த வழிபாடுதான் கரணம் என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

·         மருத்துவர் ஒருவர், தான் மிகுந்த மன உளைச்சல் உடன் தான் குரு முகம் மட்டுமாவது பார்த்துவிட்டால் போதும், தனது பிரச்சினைக்கு முடிவு கிட்டி விடும் என்று பேருந்தில் தான் பயணத்தை தொடங்கியிருக்கிறார்., அவர் கழுகுமலையை வந்து அடயமுன்னரே தனது பிரச்சனைக்கான தீர்வை தொலைபேசி வாயிலாக பெற்றுவிட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் நம்முடன் தெரிவித்தார்.

·         இதில் இன்னொரு  சிறப்பம்சமாக உத்தரபிரதேசம், டெல்லி, பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி வந்திருந்த நம் அன்பர்பகள் தங்களின் நீண்ட காலமாக பிராத்தனை பற்றியும் தாங்கள் முழுமையான விளக்கங்கள் பற்றியும்  அறியாது இருந்ததாகவும், இங்கு வந்து குருநாதரின் அருளுரையில் தான் தாங்கள்  சரியான பிரார்த்தனை முறையை  அறிந்து கொண்டதாக நம்மிடம் தெரிவித்தனர்.


·         ஆன்மீக சிறப்புப் பயற்சியின் போது நம் குருநாதர் அவர்கள், நம்  கண்களை மூடி சிறிதுநேரம் நம்மை தியானம் செய்ய சொன்னார். அப்போது நம்முடைய முறையான பிரார்த்தனை நிச்சயம் நம்முடைய தேவைகளையும், தடங்களையும் எதிர்க்கும் வல்லமையை நமக்கு அளிக்கும் என்று நம் குருநாதர் உணர்த்தினார். இது நாம் அனுபவத்தில் உணர்ந்தவை.
நன்றி

ஈஸ்வரபட்டர் அய்யாவின் இந்த சிறப்புமிக்க கிரிவலம் மற்றும் அன்னதானம் நடக்க பொருள் உதவி கொடுத்து உதவி செய்து உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும், கழுகுமலை சேர்மன் திரு.சுப்பிரமணியின் அவர்களுக்கும்,திரு.தமிழானந்தம் அவர்கள்EO, கழுகுமலை பொதுமக்கள் அனைவருக்கும், கலந்துகொண்ட ஆயிரகணக்கான ஆன்மீக அன்பர்கள் மற்றும் கழுமலை கோவில் நிர்வாகத்தினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்  குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களின் சார்பாகவும் ஆன்மீகஅரசு மற்றும் ஆன்மீககடல் குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.