RightClick

முழுநேர ஆன்மீக ஈடுபாடு நமக்கு சாத்தியப்படுமா?

நமது முற்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களுக்கு ஏற்ப நாம் இப்பிறவியில் இந்த தொழில் அல்லது வேலை பார்க்கிறோம்;நமது முற்பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களுக்கு ஏற்பவே நாம் இப்பிறவியில் நாம் கடன்களோடு அல்லாடுகிறோம்;அல்லது நோய்களோடும்,வேதனைகளோடும் போராடுகிறோம்;அல்லது எதிர்ப்புகளை சந்திக்கிறோம்;

இருப்பினும் இறைவனது கருணையை நாம் உணர்ந்து கொண்டால் நமது விதியை,நமது ஜாதகத்தில் அமைந்திருக்கும் தோஷங்கள்,கண்டங்கள்,வர இருக்கும் பாத திசையின் போக்குகளை மாற்றிடவோ குறைத்திடவோ நம்மால் முடியும்;நாம் எந்த ஒரு சித்தர் மீது பாசம் வைத்தாலும் சரி;அல்லது எந்த ஒரு மகானை தினமுமோ அல்லது வாரம் தோறுமோ வழிபட்டாலும் சரி;நமது கர்மவினையை நீக்க அது போதுமானதாக இருக்குமா?

நிச்சயமாக இராது;ஏனெனில்,குறிப்பிட்ட சித்தர்,துறவி,சாது,மகானை தொடர்ந்து வழிபட்டு வந்தாலோ,பிரார்த்தனை செய்து வந்தாலோ நமது வேண்டுதல் அவர்களுக்கு எட்டும்;அவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே நேரில் காட்சியளித்து,வழிகாட்டுவர்;பெரும்பாலானவர்களுக்கு சூட்சுமமாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது வேறு ஒரு மனிதர் மூலமாகவோ( நண்பர்,சக ஊழியர்,பிட் நோட்டீஸ்,இணையதளத் தேடல்,செல் போன் குறுந்தகவல்) நமது கஷ்டங்களை நீக்கிட வழிகாட்டுவார்;

அப்படி வேறு ஒருவர் மூலமாக நமக்கு உரிய பரிகாரம்/பூஜை/வழிபாடு/மந்திர ஜபம்/அருள் வாக்கு கிடைக்கும் போதே நமது உள்ளுணர்வு(மனசாட்சி) இது சரியானதுதான் என்று கூறும்;அதை பின்பற்றத் துவங்குவோர் மிகவும் குறைவு;அந்த குறைவான எண்ணிக்கை உடையவர்களின் பட்டியலில் பெரும்பாலும் ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல்,அஷ்டபைரவா வாசகர்களே இருக்கின்றனர்;

ஒரு ஜோதிடரின் ஜாதக பரிகாரத்தையோ அல்லது ஒரு அருள்வாக்கு சொல்லும் குருவின் ஆலோசனையோ கேட்கும் போதே அது எளிமையாக இருந்தால் அதுதான் நமது கர்மவினையை மாற்றும்;எப்போது அது மாற்றும் தெரியுமா?

அந்த பரிகாரம் அல்லது அருள்வாக்கு ஆலோசனையை ‘அப்படியே’ கர்மசிரத்தையாகப் பின்பற்றி முடித்த 90 நாட்களுக்குப் பிறகே நமது கர்மவினையை மாற்றும்;சிலருக்கு ஓராண்டுக்குப் பிறகே மாற்றும்;அது வரை நாம் பொறுமையாக இருந்துதான் ஆக வேண்டும்;

இந்தச் சூழ்நிலையில் நமது சிக்கல்கள் தீர்ந்ததுமே,கடந்த கால வேதனைகளை நினைத்துப் பார்த்தால்,இருக்கும் வேலையோடு கொஞ்சம் ஆன்மீகத்திலும் முன்னேறலாம் என்ற எண்ணம் எழுவது இயல்பானதே!

அதற்காக இல்லறத்தை முழுமையாக தலைமுழுகிவிட்டு,முழு ஆன்மீகத்திற்கோ அல்லது முழு துறவறத்திற்கோ உடனே தயாராவது மாபெரும் தவறு;ஏனெனில்,இது மாதிரியான இல்லறவாசிகள் அல்லது டீன் ஏஜ்ஜில் இருப்பவர்கள் நேரடியாக முழு நேரத் துறவறத்திற்கு வரும் போது ‘மாயை’ அவர்களை படுகுழியில் தள்ளக் காத்துக் கொண்டு இருக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை;அப்படி துறவறத்திற்கு வேகமாக வந்து,பலருடைய கிண்டல் கேலிக்கு ஆளாகும்போது ஆன்மீகத்தின் மீதான நல்லெண்ணம் பலருக்குப் போய் விடுகிறது;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில், , , கணினியுகத்தில் இல்லறத்தில் இருந்து கொண்டே ஒரு நாளுக்கு ஒருமணி நேரம்(தினமும் ஓம்சிவசக்திஓம் ஜபித்தல் அல்லது தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ 108 முறை எழுதுதல்) அல்லது ஒரு வாரத்திற்கு 90 நிமிடம்(வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி பாடுதல் அல்லது சனிக்கிழமை ராகு காலம் தோறும் ஸ்ரீகாலபைரவர் 1008 போற்றி பாடுதல் அல்லது பைரவ சஷ்டிக் கவசம் ஒருமுறை பாடுதல்) அல்லது ஒரு மாதத்திற்கு 90 நிமிடம்(ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் அபிஷேகம் செய்தல் அல்லது கலந்து கொள்ளுதல்) என்று ஆன்மீகமுயற்சி  எடுத்தால் வெற்றியும்,புகழும்,செல்வ வளமும் தானாகவே வந்து சேரும்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் முழு நேர ஆன்மீக முயற்சி ஒரு கோடியில் ஒருவருக்கு மட்டுமே கிட்டும்;நம் ஒவ்வொருவருக்கும் முழு நேர ஆன்மீக முயற்சி அல்லது முழு நேர துறவறம் ஒத்து வராது;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ