RightClick

தினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 24

சைவ சமயத்தின் பெருமைகளை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் விதமாக வெளிப்படுத்தியவர்களே நாயன்மார்கள் என்று அழைக்கப்படுகின்றனர்;இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து வந்த நாயன்மார்கள் மொத்தம் 64 பேர்கள் ஆவர்;இவர்களில் முதன்மையானவர்கள் அப்பர்,சுந்தரர்,சம்பந்தர் என்ற திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் ஆவர்;இவர்கள் சிவபக்தியை பாடல்களாக பாடியுள்ளனர்;அவைகளே சைவத் திருமுறைகள் என்று போற்றப்படுகின்றன;

இதில் பத்தாம் திருமுறையாக இருப்பது சித்தராகவும்,அறுபத்துமூவரில் ஒருவராகவும் இருந்த திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும்;திருமந்திரம் ஒன்பது பாகங்களாக இருக்கின்றன; இந்த 9 பாகங்களை தந்திரங்கள் என்று திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார்;இந்த ஒன்பது தந்திரங்களில் மொத்தம் 232 அதிகாரங்களாகவும் உட்பிரிவாக வகுத்துள்ளார்;232 அதிகாரங்களில் 3061 பாடல்களாகப் பாடியிருக்கிறார்;


முதல் தந்திரத்தில் கல்லாமை,ஜீவகாருண்யம்,கொல்லாமை,பெண்ணின் பெருமை போன்றவைகளைப் பற்றியும்
இரண்டாவது தந்திரத்தில் அகத்தியம்,லிங்கபுராணம்,சிவநிந்தை செய்பவருக்கு ஏற்படும் பாவங்கள்,குருநிந்தை செய்பவர்களுக்கு ஏற்படும் தீராத தோஷங்கள் போன்றவைகளும்
மூன்றாவது தந்திரத்தில் அட்டாங்கயோகம்,அட்டமாசித்திகள்,ப்ராணயாமம்,காலச்சக்கரம், ப்ரியங்க கேசரி யோகங்கள் போன்றவைகளும்
நான்காவது தந்திரத்தில் சக்கரங்களை உருவாக்கும் விதம் பற்றியும்
ஐந்தாவது தந்திரத்தில் சைவத்தின் பிரிவுகளான சுத்த சைவம்,அசுத்த சைவம்,மார்க்க சைவம்,கடுஞ்சுத்த சைவம் போன்றவைகளைப் பற்றியும்,சைவ வழிபாட்டு மார்க்கங்களைப் பற்றியும்
ஆறாவது தந்திரத்தில் தவம்,துறவு,ஞானம் பற்றிய உண்மைகளையும்
ஏழாவது தந்திரத்தில் சிவலிங்க வகைகள்,அவைகளை வழிபடும் முறைகளைப் பற்றியும்
எட்டாவது தந்திரத்தில் நமது உடலை இல்லறத்தில் இருந்தவாறே சிவனடிமையாக மாற்றுவதற்குரிய விதிகளைப் பற்றியும்
ஒன்பதாவது தந்திரம் பஞ்சாட்சரமந்திரங்களின் சக்தி,அவைகளை தீட்சை பெறும் முறைகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்;


தமிழ் மொழியின் மீது உள்ளார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே திருமந்திரத்தின் பாடல்களின் உள்ளார்த்தம் புரியும்;அதனால் தான் தமிழர்களாகப் பிறந்ததாலேயே நாம் மகத்தான புண்ணிய ஆத்மாக்கள் என்று மகத்தான ரிஷிகளும்,ஜோதிட மாமேதைகளும் தனது ஆன்மீகக் கட்டுரைகளில் அடிக்கடி குறிப்பிடுகின்றனர்;

நமது குழந்தைகளுக்கு திருமந்திரத்தைப் போதிப்போமா?
நாமும் திருமந்திரத்தினுள் புதைந்திருக்கும் ஆன்மீகப் புதையல்களை அறிந்து கொள்வோமா?
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஒரு நாள் கழிந்தால்,நமது ஆயுளில் ஒரு நாள் குறைவதாகத் தான் அர்த்தம்;எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிக்கிறோம்;நாமும்,நமது அடுத்த தலைமுறையும் கவுரவமாக வாழ வீடு கட்டுகிறோம்;சொத்துக்கள் வாங்குகிறோம்;வங்கி,ஷேர்,மியூச்சுவல் பண்டு,உள்ளூர் அமைப்புக்களில் சேமிப்பு செய்து வருகிறோம்;இப்பிறவியில் நமக்குக் கிடைத்திருக்கும் சொத்துக்கள்,தனித்திறமை,புகழ்,நட்பு,சுகங்கள்,வாகன வசதி போன்றவைகளுக்கு நாம் முந்தைய ஐந்து பிறவிகளில் சேமித்த புண்ணியச் செயல்களே!
அதே போல இப்பிறவியில் நமக்கு ஏற்பட்ட அவமானங்கள்,இயலாமைகள்,நோய் அல்லது கடன் அல்லது எதிரி போன்றவைகளுக்குக் காரணம் கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தப்புக்கள்,வம்புகளின் தொகுப்பே!
எப்போதும் அடிதடி செய்வதையே தனது பிறவி குணமாக வைத்திருப்பவருக்கு,ஒருபோதும் இசையமைக்கும் திறன் உருவாகாது;ஏனெனில்,இசையமைக்க மென்மையான மனோபாவம் தேவை;அதேபோல,நாம் இந்த குடும்பத்தில் இத்தனாவது தலைமுறையில் பிறப்பதற்கு நாம் மட்டுமே காரணமாக இருக்கிறோம்;இதிலிருந்து மீண்டு,இந்தப் பிறவியிலேயே நாம் விரும்பும் விதமான இன்பமான,வசதியான வாழ்க்கை வாழ தினமும் பைரவ வழிபாடு அவசியமாகிறது;கடந்த நான்கு தலைமுறையாகச் செய்த கர்மவினைகளை நீக்கும் சக்தி பைரவ வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு;
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்திருகி
நில்லாப் பிழையும் துதியாப் பிழையும் நின்னைந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

என்ற சித்தர் பாடலினை நினைத்துப் பாடும் அடியவர்களும் சதாசிவன் சார்பாக பைரவப்பெருமானால் மன்னிக்கப்பட்டு ஆட்கொள்ளப்படுவர்.

எவையெல்லாம் பைரவ வழிபாடு?
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும்;மது அருந்துவதையும் போதைப் பொருட்கள் உபயோகப்படுத்துவதையும் நிரந்தரமாகக் கைவிட்டு விட்டு பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே நமது வழிபாட்டிற்கான பலன்கள் கிட்டும்;
1.18 வயதைக் கடந்தவர்கள் தினமும் 108 முறை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று எழுதி வர வேண்டும்;ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை எழுதி வர வேண்டும்;
2.காலை 4.30 முதல் 6.00 மணிக்குள் வடக்கு நோக்கி நெய்தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;அதன் அருகே கிழக்கு நோக்கி ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை ஒருமுறை பாட வேண்டும்;இப்படிக் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சமாக ஆயுள் காலம் முழுவதும் பாடி வரலாம்;180 நாட்களுக்குப் பிறகு,நமது பணம் சார்ந்த சிக்கல்கள் படிப்படியாக குறைவதைக் காணலாம்;
3.தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் என்ற பாடலை 27 முறை மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பாட வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்தால் வடக்கு நோக்கி நெய்தீபம் ஏற்றியிருக்க வேண்டும்;வடக்கு நோக்கி அமர்ந்தால் கிழக்கு நோக்கி நெய்தீபம் ஏற்றியிருக்க வேண்டும்;இந்தப் பாடலை 27 முறை பாடுவதற்கு 90 நிமிடங்கள் வரை ஆகும்;
4.சனியின் பிடியில் இருப்பவர்கள்(கன்னி ராசியினர் 16.12.14 வரை;தனுசு ராசியினர் 17.12.14 முதல்,துலாம்,விருச்சிகம்,மேஷம் ராசியினர்) தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் செல்ல வேண்டும்;வளர்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் தான் பைரவ வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் நமக்கு வசதிப்படும் நேரத்தில் பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம்;அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்;
5.பைரவப் பெருமான் சிவலிங்க வடிவில் அமைந்து அருள்பாலித்து வரும் சிவாலயங்கள் எட்டு;இவைகளை அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கிறோம்.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,இந்த இடங்களில் பைரவப் பெருமானின் வீரதீரப் பராக்கிரமங்கள் வெளிப்பட்டன;தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டியூர்,பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் திருவதிகை,விழுப்புரத்திற்கு அருகில் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருக்கோவிலூர்,60 ஆம் கல்யாணத்திற்குப் புகழ்பெற்ற திருக்கடையூர்,(இந்தக் கோவிலில் இருந்து 1 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் இன்னொரு கோவிலுக்கும் சென்றுவருவது நமது கடமை),மயிலாடுதுறையைச் சுற்றி அமைந்திருக்கும் வழுவூர்,குறுக்கை,செம்பொனார்கோவில்,திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் உள்ளடங்கிய கிராமத்தினுள் அமைந்திருக்கும் திருவிற்குடி.இந்தக் கோவில்களுக்கு வாழ்நாளில் ஒரே ஒருமுறை சென்று வந்தீர்கள் எனில்,உங்களைப்பற்றிய பல ரகசியங்களை உணர்வீர்கள்;
மேலே கூறிய ஐந்து முறைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது பின்பற்றுவதன் மூலமாக நாமும்,நமது சந்ததியினரும் வளமோடும்,நலமோடும்,இறை அருளோடும் வாழ்வர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ருத்ராட்சத்தைக் கொண்டு முற்காலத்தில் நமது அனைத்து வாழ்வியல் சிக்கல்களையும் நமது முன்னோர்கள் தீர்த்துள்ளனர்;இலங்கேஸ்வரன் என்ற ராவணனுக்கு சிவனருள் கிட்டிட ருத்ராட்சத்தை அணிந்ததே காரணம்.ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு, பல ஆண்டுகளாக சிவவழிபாடு செய்தமையால் தான் நவக்கிரகங்களையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சர்வசக்தியை இராவணன் பெற்றான்.புராணங்கள் நெடுக ருத்ராட்சங்களின் மகிமைகளைப் பற்றி விவரித்துள்ளதைக் கண்டு வெளிநாடுகளிலும் இன்று ருத்ராட்சம் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.ப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் டபிள்யூ லி என்பவர் ருத்ராட்சம் பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.The Biology of Ruthraksha என்ற தலைப்பில் CURRENT SCIENCE என்ற மாத இதழில் ஜிலை 1988 ஆம் வெளியீட்டில் எழுதியிருக்கிறார்.இந்த மாத இதழ் பெங்களூரில் இருந்து வெளிவருகிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தினமும் காலையில் சூரியன் உதயமாகும் வேளையில் சூரியனிடமிருந்து ஆரஞ்சு நிற ஒளி புறப்பட்டு பூமி முழுக்கவும் பரவுகின்றன;இந்த ஆரஞ்சு ஒளியானது சூரியன் உதயமானது முதல் 72 நிமிடங்கள் வரையிலும் இந்த ஆரஞ்சு ஒளியானது Far Inferioritery Rays என்ற அபூர்வமான கதிர்வீச்சினை பூமி முழுக்கப் பரவச் செய்கிறது;இந்த கதிர்வீச்சானது மனிதர்களின் பார்வைக் குறைபாடு,எலும்புக் குறைபாடு,முதுகெலும்புக்குறைபாடு,இதய நரம்புக் குறைபாடு,தலையினுள் இருக்கும் நரம்புகள் குறைபாடு போன்றவைகளை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது;இந்த நேரத்தில் நாம் சூரிய நமஸ்காரம் செய்து வருவதன் மூலமாக நமது எலும்பு மண்டலமும்,நரம்பு மண்டலமும் நமது இளமைத்தன்மையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்பதை நவீன மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது;
சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் சுவாசப் பயிற்சியை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை ஜபிப்பதால் பெற முடிகிறது என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை.யாரெல்லாம் காலை 5 மணி முதல் சூரிய உதயம் வரையிலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை ஜபித்து வருகிறார்களோ அவர்கள் சூரியனின் ஆத்ம சக்தியோடு,சூரியனுக்கு பிராணனைத் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருளாசியையும் பெற்று வருகிறார்கள்.
போகர் 7000,அகத்தியர் 12000 இந்த இரண்டு சித்தர்களின் படைப்புகளையும் கல்லூரியில் பாடத்திட்டமாக வைத்தால் வெறும் 30 ஆண்டுகளுக்குள் நமது நாடு விஞ்ஞானத்துறையிலும்,மெய்ஞானம் என்ற ஆன்மீகத்துறையிலும் எந்த நாட்டாலும் எட்டமுடியாத சாதனைகளைச் செய்துவிடும்;விஞ்ஞானமும்,ஆன்மீகமும் ஒன்று சேர்ந்து நமது நாடு ஆன்மீக வல்லரசுநாடாக மாறிவிடும்;நினைத்துப் பார்க்கமுடியாத மானுடப் புரட்சியை நமது நாடே உருவாக்கிவிடும்;
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ