RightClick

ஞானமூலிகைகள்-சகஸ்ரவடுகர்

அனைவருக்கும் வணக்கம்.,

    உலகம் தோன்றிய உடனே அருகம் புல்லும் தோன்றிவிட்டது. அதனால் ஆதி கடவுளான விநாயகருக்கு அருகம்புல் சூட்டி வழிபாடு செய்கின்றோம். நாளாவட்டதில் அனைத்து தாவர வர்க்கங்களிலும் உலகில் தோன்றின. பூ-கனி-இலை ஆகியவைகளும் வழிபாட்டில் முக்கியபங்காக இருந்து வருகின்றன. 3௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே ராஜசாலமன் சித்தர்கள் மூலிகை ரகசியங்களை வெளியிட்டுள்னர்.

    நம் தமிழ் நாட்டில் சித்தர்கள் பாட்டில் கூட மூலிகைகள் பற்றிய குறிப்புகள் வரும். வெல்லும் மூலிகை எது கொள்ளும் மூலிகை எது என்பது பற்றியும் எழுதியுள்ளார்கள். அஷ்டகர்மமான மோகனம், வசியும்,ஸ்தபனம்,ஆகர்ஷணம்,உச்சாடனம்,பேதனம், வித்வேஷணம், மாரணம், ஆகிய எட்டு தொழிலுக்கானஎட்டுவிதமான மூலிகைகள் உண்டு. யுத்த காலத்தில் மூலிகை தடவிய அஸ்திரங்களை ஏவியுள்ளனர். தர்பை புல் அதில் பிரதான பங்கு வகித்துள்ளது. கேரளாவில் மறைவுமை மற்றும் உருமாறும் மை அபூர்வமூலிகைகளைக்கொண்டு இன்னும் சில பிரிவினர் என்னும் தயார் செய்கின்றனர்.

    மந்திர, யந்திர, தந்திரங்கள், ஆவிநிலைகள், பூதவழிபாடுகள் எல்லா மதத்திலும் உண்டு. ஆதியில் மறவழிபாடு இருந்தது. பின் காலக்கிராமத்தில் அது மறைந்துவிட்டது. அதன் நினைவாக கோவில்களில் கொடிமரம் வைக்கின்றோம். முன்காலத்தில் செடி.கொடிகள் மனிதருடன் பேசியுள்ளன. பின் எதோ ஒரு சாபத்தால் அவைகளால் பேசமுடியாமல் போய்விட்டது. மூலிகை மந்திர பிரயோகங்களில் அவைகளுக்கு சாபநிவர்த்தி

செய்து பின் காப்புக்கட்டி பொங்கலிட்டு எடுப்பர். மரங்களை வெட்டிய பாவம் நீங்க புது வீடு கட்டியுவுடன் தச்சு கழிப்பார்கள். கிராம பஞ்சாயத்து தீர்ப்புக்கு இன்றும் ஆலமரத்தடியில் வழங்கப்படுகின்றன.

       மிருகவல்விருக்கு விடுபட்டு மனித வாழ்வுக்கு வந்தபின் மனிதன் ஜீவாத்துவை பரமாத்துமாவை பற்றி சிந்திக்க தலைப்பட்டான். அதற்கு சில மூலிகைகள் தேவைப்பட்டன. அவை ஞான மூலிகைகள் என அழைக்கப்பட்டன. ஏடுகளில் இவைகளை பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. வல்லாரை, தூதுவளை, கரிசாலை என்ற மூன்று மூலிகைகளும் மனிதனின் அரவை பிரகாசப்படுதுகின்றன.

வல்லாரை

    ஆயகலைகள் அனைத்தும் நமக்கு கைவர உதவும். வடநாட்டில் இதற்கு பிரம்மி என்று சொல்வார்கள். பிரம்மி  மால்ட் ஆயர்வேத மருந்துகடைகளில் கிடைக்கின்றது. வல்லாரை மாத்திர-,சூரணம்-லேகியம் என்ற வகைளில் கிடைக்கின்றது. ஜோதிடர்கள்,ஓவியக்களை உலகில் இருப்பர்வர்கள்,புலவர்கள் மற்றும் கணிதவல்லுநர்களுக்கு இது கை தூக்கிவிடும். சிறந்த சித்த வைத்தியரோடு கலந்து சிறிது சிறிதாகஉடலுக்குள் சேர்க்கவும்.

தூதுவளை

   யோகா நிலையில் அட்டமாசித்துபெற ஒலியலைகளை வசப்படுத்த தூதுவாளை உதவும். மாத்திர-,சூரணம்-லேகியம் என்ற வகைளில் கிடைக்கின்றது. வைத்தியர் உதவியுடன் நல்ல கம்பெனி வாங்கி    உபயோக்கிகவும்.

கரிசாலங்கண்ணி என்னும் கரிசாலை

   இது ஞான சித்தருக்குண்டான மூலிகை. வள்ளலார் இதன் பெருமையை மிக புகழ்ந்து சொல்லியிருக்கிறார். உடலில் உள்ள ஒன்பது வகையான விஷத்தையும் நீக்கும். உள்ளொளியை கொடுத்து உடலை பொன் போலாக்கும். தன்னையறிமால் சித்துகளை வெளிப்படுத்தும். உயர்ஞானத்தை கொடுக்கும். இது சூரணம், நெய் என இரு ரூபத்தில் கிடைக்கும். வைத்தியரிடம் ஆலோசனை கேட்டு சாப்பிடவும்.

மேற்படி மூலிகைகளில் எதாவது ஒன்று மட்டும் சாப்பிட்டு வரவும். பச்சையாக கிடைத்தால் துவையலாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் பசும் பால் சாப்பிடவேண்டும். மனிதனுக்கு தடையாக உள்ள கபம் நீங்கி நாளாவட்டத்தில் அருள் நிலை கைகூடும். இது பெரியோர் வாக்கு.

 

-சகஸ்ரவடுகர்