கி.பி.1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு,பஞ்சமி திதியும் திருவாதிரை
நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளே 04.05.2014 இந்த
நன்னாளில் மாலை 4 மணிக்கு ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வாசலில் இருந்து “கோ” வலம் செல்வதாக
அறிவித்திருந்தோம்;
இந்த நன்னாளில்,மாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் ஆன்மீக
அரசு,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் அவர்கள் வாழ்ந்து வரும் ஊரிலேயே
(வீட்டிலேயே) குளித்துவிட வேண்டும்;குளித்துவிட்டு,மாலை 4 மணிக்கு அவரவர்
வசிக்கும் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தின் வாசலுக்கு வந்துவிட
வேண்டும்;வரும் போது மறக்காமல் மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்;
கோவிலின் வாசலில் நின்றவாறு மூலவராகிய சிவபெருமானை வணங்கி விட்டு
ஆலயத்தைச் சுற்றி வர வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும் போது மனதுக்குள்
ஓம்சிவசக்திஓம் என்று ஜபித்தவாறு வர வேண்டும்;கோவிலின் வெளிப்புறத்தில்
அவ்வாறு சுற்றி வர இயலாதவர்கள் கோவிலுக்குள் இருக்கும்
வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வரலாம்;அவ்வாறு வந்தப் பின்னர்,நேராக அவரவர்
வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
இதன் மூலமாக கோவலத்தின் தெய்வீக சக்தி முழுமையாகக் கிடைக்கும்;
ஓம்சிவசக்திஓம்